Thursday, March 26, 2009

தங்கமணி தந்த அதிர்ச்சியும், பட்டேலின் டிவிடி விளக்கமும்

தங்கமணி தந்த அதிர்ச்சியும், பட்டேலின் டிவிடி விளக்கமும்

அலுவலகத்துக்கு கார் ஓட்டிட்டு போய் பார்க்கிங் லாட்ல நிறுத்தி கார பூட்டிட்டு போறதுன்னா ரொம்ப போரடிக்கிற விசயம் எனக்கு இல்லீங்க, அப்புரம் யாருக்குன்னெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அந்த மாதிரி அலுப்பா இருக்கிற நாளெல்லாம் நாந்தான் அவுங்க கம்பெனி வாசல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவேன், மாலை 4.50 லேந்து போன் வரும் எப்ப கெளம்புறீங்க , இன்னும் என்னா பண்றீங்க, லேட்டாகுது போய் பாப்பாவை பிக் அப் பண்ணனும் அப்படின்னு, சரின்னு நானும் உடனே கிளம்பி போய் அவங்க ஆபிஸ் வாசல்ல அரை மணி நேரம் வெயிட் பண்ணி கூட்டிட்டு போறது அடிக்கடி நடக்கறது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது, கார்ல போகும் போது இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டாங்க. ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க. நான் அந்த அதிர்ச்சிலேர்ந்து எப்படி விலகுறதுன்னு யோசிச்சு ஏதாவது நல்ல தமிழ்ப்படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி வழக்கமா போற இந்தியன் குரோசரிக்கு போய் எதுனா புதுப்பட தமிழ் டிவிடி இருக்கான்னு கேட்டேன்.

அதுக்கு பட்டேல்காரு சொன்னாரு ,தமிழ்கி , மேரா இண்டர்னெட்கி டவுண்லோடுகி, ஒன்லி ஹிந்திகாருதான் ஒரிஜினல் டூப்ளிகேட் டிவிடி வாங்குராங்கன்னு ரொம்ப ஆதங்கப்பட்டாரு. ஆனா நிறைய பழைய தமிழ்படம் ரெண்டலுக்கு இருக்கு அதுல போய் பாருங்கண்ணார்.நான் போய் தேடிப்பாத்தேன் முதல்ல என் கண்ணுல பட்டது ஸ்ருதிலயம் டிவிடியோட 2 in 1 டிவிடி ஒன்னு.

அதுல இருந்த படங்கள்

வல்லரசு
சிட்டிசன்.

இதுக்கு பேருதான் 2 in 1 அட்டாக்கா?

34 comments:

நசரேயன் said...

ரெட்டை அதிர்ச்சியே தான் இது

நசரேயன் said...

வீட்டிலே இன்னைக்கு அதிர்ச்சி வைத்தியம் தான்

Tech Shankar said...

s u p e r

//தமிழ்கி , மேரா இண்டர்னெட்கி டவுண்லோடுகி, ஒன்லி ஹிந்திகாருதான் ஒரிஜினல் டூப்ளிகேட் டிவிடி வாங்குராங்கன்னு

அது சரி(18185106603874041862) said...

///
வல்லரசு
சிட்டிசன்.

இதுக்கு பேருதான் 2 in 1 அட்டாக்கா?
//

இல்ல இல்ல இல்ல...

//
நான் அந்த அதிர்ச்சிலேர்ந்து எப்படி விலகுறதுன்னு யோசிச்சு ஏதாவது நல்ல தமிழ்ப்படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி
//

இப்பிடி ஒரு உண்மைய சொல்லியிருக்கீங்கள்ள, இதை அவங்க படிச்சாங்க, அதுக்கப்புறம் இருக்கு இரட்டை அதிர்ச்சி, ட்ரிபிள் அதிர்ச்சில்லாம்....எதுக்கும் நாளைக்கு ஆஃபிஸுக்கு லீவு சொல்லிடுங்க :0))

கீழை ராஸா said...

நல்ல படங்கள் தானே...

மணிகண்டன் said...

உங்க 2 in 1 அட்டாக் சூப்பர்.

மணிகண்டன் said...

ராஸா - உங்க காமெடியும் சூப்பர்.

குடுகுடுப்பை said...

கீழை ராஸா said...

நல்ல படங்கள் தானே...
//
ராசா உடனே வாங்கி பாருங்கண்ணே. பாத்து முடிச்சிட்டு உங்கூர்லேந்து எட்டு கிலோ மீட்டர் மேற்கால போயி எனக்கு ஒரு கமெண்டு போடுங்க.

வில்லன் said...

//கார்ல போகும் போது இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டாங்க. ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க. நான் அந்த அதிர்ச்சிலேர்ந்து எப்படி விலகுறதுன்னு யோசிச்சு ஏதாவது நல்ல தமிழ்ப்படம் பாக்கலாம்னு முடிவு பண்ணி வழக்கமா போற இந்தியன் குரோசரிக்கு போய் எதுனா புதுப்பட தமிழ் டிவிடி இருக்கான்னு கேட்டேன்.//

எங்க வீட்டு தங்கமணிக்கு ஒரே சந்தேகம். ஒரு வேலைய ஒழுங்கா செய்ய மாட்டிங்க எப்படி எல்லாரும் உங்கள புகளுரங்கன்னு. அப்பப்ப கிளையன்ட் அப்ரைசல் மெயில் வரும். எங்க மேனேஜர் ஒரே புகழாரம் பாடுவாரு அது அவங்களுக்கு பொறுக்காது.

வீட்டுக்கு வீடு வாசப்படி..... கேட்டா நீங்க என்ன வேல செஞ்சி கிளிகிங்க... அதவிட நாங்க நல்ல செய்வோம்னு டயலொக் வேற... எல்லாம் நேரம். நம்ம எவளவு வேல செய்றோம்னு அவங்களுக்கு என்ன தெரியும்.

அ.மு.செய்யது said...

//கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது, கார்ல போகும் போது இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டாங்க.//

நான் குண்டுன்ன வுடனே ஏதோ தீவிரவாத தாக்குதல்னு நினைச்சிட்டேன்.

இது அத விட அபாயகரமாவுல்ல இருக்கு.

அ.மு.செய்யது said...

//
வல்லரசு
சிட்டிசன்.//

த‌ர‌மான‌ க‌லைச் சித்திர‌ங்க‌ள்.

கொச்சைப் ப‌டுத்திய‌ குடுகுடுப்பையாருக்கு என் க‌ண்ட‌ன‌ங்க‌ள்.

அ.மு.செய்யது said...

//கீழை ராஸா said...
நல்ல படங்கள் தானே...
//

அதானே !!!!!

நிகழ்காலத்தில்... said...

\\ராசா உடனே வாங்கி பாருங்கண்ணே. பாத்து முடிச்சிட்டு உங்கூர்லேந்து எட்டு கிலோ மீட்டர் மேற்கால போயி எனக்கு ஒரு கமெண்டு போடுங்க.\\

மேற்கால எதுக்குங்ன்னா..?

பழமைபேசி said...

இப்பத் தெரியுது!

புதியவன் said...

//ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க. //

நல்ல விசயம் தானே...

நட்புடன் ஜமால் said...

தங்கமணி அதிர்ச்சிக்கு பயந்து

டிவிடில மாட்டிக்கிட்டியளா ...


படமாவாது பார்த்து ஒரு நாள் அல்லது ஒரு வார எஃப்க்ட்டோட போயிடும் ...

சாக்கிரதை ...

SK said...

உங்க ஆபீஸ்ல வேல வாங்கி கொடுக்குற அந்த தப்ப மட்டும் பண்ணிறாதீங்க சாமி ......... எப்பவுமே தூரத்து பச்ச தான் கண்ணுக்கு அழகு

ஷண்முகப்ரியன் said...

//ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க. //

சார் தயவு செஞ்சு இந்த வேலையை வாங்கி குடுத்துட்டு, அதுக்கப்புறம் என்னாச்சுன்னு ஒரு பதிவு போடுங்களேன்.நன்றாகச் சிரித்து ரொம்ப நாளாகிறது குடுகுடுப்பை சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Unknown said...

//அலுவலகத்துக்கு கார் ஓட்டிட்டு போய் பார்க்கிங் லாட்ல நிறுத்தி கார பூட்டிட்டு போறதுன்னா ரொம்ப போரடிக்கிற விசயம் எனக்கு இல்லீங்க, அப்புரம் யாருக்குன்னெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அந்த மாதிரி அலுப்பா இருக்கிற நாளெல்லாம் நாந்தான் அவுங்க கம்பெனி வாசல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு வருவேன், மாலை 4.50 லேந்து போன் வரும் எப்ப கெளம்புறீங்க , இன்னும் என்னா பண்றீங்க, லேட்டாகுது போய் பாப்பாவை பிக் அப் பண்ணனும் அப்படின்னு, சரின்னு நானும் உடனே கிளம்பி போய் அவங்க ஆபிஸ் வாசல்ல அரை மணி நேரம் வெயிட் பண்ணி கூட்டிட்டு போறது அடிக்கடி நடக்கறது.//

Allaaru voottulayum nadakkurathuthangunga

குடந்தை அன்புமணி said...

//keerthi said...
உங்க ஆபீஸ்ல வேல வாங்கி கொடுக்குற அந்த தப்ப மட்டும் பண்ணிறாதீங்க சாமி ......... எப்பவுமே தூரத்து பச்ச தான் கண்ணுக்கு அழகு//
//சார் தயவு செஞ்சு இந்த வேலையை வாங்கி குடுத்துட்டு, அதுக்கப்புறம் என்னாச்சுன்னு ஒரு பதிவு போடுங்களேன்.நன்றாகச் சிரித்து ரொம்ப நாளாகிறது குடுகுடுப்பை சார்.//

:-))))

சந்தனமுல்லை said...

:-))

Bhuvanesh said...

கேக்குற என்னாலையே தாங்க முடியலையே? நீங்க எப்படி சார் தாங்கறீங்க ??

வால்பையன் said...

//வல்லரசு//

உண்மையிலேயே நீங்க ரொம்ப தைரியசாலி தான்!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரே கல்லுல ரெண்டு அதிர்ச்சி!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

எ.கொ.சா இது??

புல்லட் said...

முடிவா என்னதான் சொல்லுறீங்க பாஸ்?கலியாணம் பண்ணிக்கலாமா வேணாமா? பயங்கரமான சாமான்களோடயெல்லாம் (அதாங்க சிட்டிசன் வல்லரசு இன்னோரன்ன பொருட்கள்) ஒப்பிடுறீங்க ...
நடுங்குது... :(

குடுகுடுப்பை said...

அனைவரின் கருத்துக்கும் நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

//அதுல இருந்த படங்கள்

வல்லரசு
சிட்டிசன்.

//

யோவ் அண்ணே....என்னையும் அறியாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)

வில்லன் said...

எங்க அந்த "பட்டாம் பூச்சி ஹரிணி". காக்கா தூக்கிட்டு போயிடுச்சா

தமிழ் மதுரம் said...

வணக்கம் நண்பரே....! என்ன நலமா? அமெரிக்காவிலும் இப்படிக் கவிழ்க்கிறாங்களோ?? சரி நடக்கட்டும் நடக்கட்டும்?
அப்ப 3 இன் 1 என்றால்??

kudukuduppai said...

Thanks to all

ராஜ நடராஜன் said...

//கார்ல போகும் போது இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டாங்க. ஏங்க எனக்கும் உங்க ஆபிஸ்லேயே ஒரு வேலை கெடச்சா நல்லா இருக்கும்லன்னு கேட்டாங்க.//

சிரிச்சிக்கிறேன் முதலில்.அப்புறம் வீட்டுப் பக்கம் வாங்க!வந்து சில பதிவுகள் மற்றும் மறுமொழிகள் நோட்டம் விடுங்க:)

ராஜ நடராஜன் said...

//இதுக்கு பேருதான் 2 in 1 அட்டாக்கா? //

வல்லரசு,சிட்டிசன் டபுள் அட்டாக்:)