Tuesday, March 10, 2009

வெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான சினிமா. கிராமத்திருவிழாக்காட்சி முதல் உள்ளூர் கபடி போட்டிகள் வரை நிறைய காட்சிகள் என் கிராம வாழ்க்கையோடு ஒத்துப்போனதால், ஒரு திருவிழா பார்க்கும் நினைப்பும்,உண்மையான கபடி போட்டி பார்க்கும் எண்ணத்தை விதைத்தது இந்த படம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஊர் நினைவுகளை கொஞ்சம் அதிகமாவே கிளறியது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கபடி விளையாடுவதை காண்பிப்பது ,கபடி என்ற விளையாட்டு தெரியாதவர்களுக்கு இது சற்றே பிடிக்காமல் போகலாம். கிராமம் சார்ந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும், முற்றிலும் நகரத்தில் வாழ்ந்த சென்னை-28 மக்களுக்கு இந்தப்படம் மற்றொரு சென்னை-28, கிரிக்கெட்டுக்கு பதிலாக ஏதோ கபடி என்ற ஒரு விளையாட்டு.படத்தின் கதை, காட்சிகளுக்குள் நான் போக விரும்பவில்லை. முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள்.

இப்போது எங்கள் ஊரின் கபடிக்குழுவிற்கு போவோம், மிகச்சிறிய ஊர் அதனால் ஒரு உருப்படியான கபடிக்குழு கூட கிடையாது, நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் இளைஞர்கள் சேர்ந்து ஒரு குழு உருவாக்கி போட்டிகள் நடத்தினர்.பெரும்பாலும் 50 கிலோவுக்க்கு உட்பட்டவர் கபடி போட்டிகளையே எங்கள் ஊரில் நடத்துவோம்.இதற்காக போட்டியாளர்கள் பட்டினி கிடந்து,லாசிக்ஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டு எடை குறைத்து,எடை போட்ட அனுமதி சீல் வைக்கப்பட்ட பின் நன்றாக சாப்பிடுவார்கள்,நன்றாக விளையாடுவார்கள்.கிட்டத்தட்ட பத்து வருடம் தொடர்ந்து இந்தப்போட்டிகளை நடத்தினோம்.கடைசியாக கோப்பை வென்றவர்கள் 2004 சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் கீச்சங்க்குப்பம் அணியினர்.வெளியூர்களிலும் 50 கிலோ எடைப்பிரிவில் ஓரளவுக்கு பரிசுகளை வாங்கும் அணி எங்கள் ஊர் அணி.

அணியின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும், கில்லாடி சகோதரர்கள்,கலாட்டா சகோதரர்கள், ஆறுமுகம் நினைவு அணி ,ஒரு ஊர் அணியின் பெயர் தமிழீழ விடுதலை விரும்பிகள்.

ஒருமுறை எங்கள் பகுதிக்குள் சாதாராணமாக நடக்கும் ஒரு போட்டியில் குழுக்கள் இடையே நடந்த பங்காளிச்சண்டையில் இருவர் பிரிந்து தனி அணியாக போட்டி போட வந்தனர். அவர்கள் இருவரும் அணிக்கு வைத்த பெயர்கள் சிவப்பிரகாசம் நினைவு அணி, பரமசிவம் நினைவு அணி என உயிருடன் இருக்கும் தங்கள் அண்ணன்களின்(கோச்சுகள் கூட) பெயரில்.(அப்பகுதியில் நிறைய நினைவு அணிகள் இருக்கும்) புரியாமல் நினைவு அணிகளை உருவாக்கிய கூத்துகளும் நடந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் முழுமையாக ஆக்கிரமித்ததால் கடைசியில் கபடி நின்றுபோனது.பின்னர் குடுகுடுப்பை இந்த அணியில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்.

ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

30 comments:

நசரேயன் said...

உள்ளேன் இப்போதைக்கு

இராகவன் நைஜிரியா said...

// ஆனால் முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள். //

நல்ல அட்வைஸ்... நல்லா இருங்கப்பு..

இராகவன் நைஜிரியா said...

// ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.//

இப்ப எப்படி இருக்கீங்க.. கொஞ்சமாவது ஏறி இருக்கிங்களா?

வெட்டிப்பயல் said...

//காட்சிகளுக்கு போக விரும்பவில்லை ஆனால் முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள்.
//

No need. இந்தியாவிலிருந்தால் தியேட்டரில் பாருங்கள். வெளிநாட்டில் இருந்தால் http://www.onlycinema.com/channels/movies/ போய் பாருங்கள்.

Its worth for the money :)

// அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.//

ஹா ஹா ஹா :)

Anonymous said...

மணம் வீசுது. வெ.க.குழுவுல வீசின அதே வாசனை.

ரொம்ப சூப்பர்.

இன்னும் படிக்கிறேன் இன்னும் எழுதறேன்.

Anonymous said...

good movie

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருந்துச்சு படம்

நானும் பார்த்துட்டேனே!

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

// ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.//

இப்ப எப்படி இருக்கீங்க.. கொஞ்சமாவது ஏறி இருக்கிங்களா?//

ஆமா ஒரு முப்பது கிலோ ஏறி இருக்கேன்

புதியவன் said...

//அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை//

அப்போ குடுகுடுப்பை வேடிக்கை பார்ப்பவர்கள் பக்கமா...?

ஷண்முகப்ரியன் said...

உங்கள் ஊர் எது என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லையே குடுகுடுப்பையாரே.அது தெரிந்தால் அந்த மண்ணின் மணத்தைத் தெரிந்து கொண்டிருப்போம் இல்லையா? Ineresting nostalgia.

Mahesh said...

ஆஹா... நீங்களும் ஃபிஃப்டி கேஜி சார்மினாரா இருந்துருக்கீங்களா? அப்பிடி கபடி வெளயாண்டுதான் இப்ப பின்னூட்டங்கள்ல இந்த வாரு வாரறீங்க.. :)))))))))))))))))

ராஜ நடராஜன் said...

பதிவை இப்பொழுதுதான் சினிமா பகுதியில் பார்க்கிறேன்.ஆனால் நீங்க சொன்னீங்கன்னு இல்லாம திருட்டு விடியோவில் நேற்று படம் பார்த்தேன்.சொன்னாப்ல ஊர் நினைவுகளையெல்லாம் கிளறி விட்டது.நானும் கூட கோதாவில் குதித்திருக்கிறேன்.ஆனால் போட்டிக் குழுக்களில் அல்ல.எனக்குப் புடிச்ச விளையாட்டுகளில் கபடியும்,கால்பந்தும் அடங்கும்.காலம் யாரை விட்டது?கில்லி அடிக்கிற கிரிக்கெட் வந்து முதல் இடத்துல நின்னுகிச்சு.அப்படியும் விடுவேனா நான்?20,30 பேர் மூட்டை மாதிரி அடஞ்சிகிட்டு இந்தியாவுக்கு ஜே சொன்னால் நான் அத்தனை பேரையும் உசுப்பேத்தி இதோ டெண்டுல்கர் அவுட்,இதோ கங்குலி அவுட்டுன்னு சொல்லி வெறுப்பேத்தி கிட்டே இருப்பேன்.இஃகி!இஃகி(பழமை பக்கத்துல இருக்குறாரா:))

தமிழ் அமுதன் said...

/// அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ///

;;;)))same blood

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

RAMYA said...

// ஆனால் முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள். //


சூப்பர் குடுக்டுப்பையாரே!!!

சமந்தப்பட்டவங்க பார்த்தால் நீங்க குடுகுடு இல்லே சடு குடு!!

RAMYA said...

//
ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம்
//

இதுதான் ஒரு டர்னிங் பாயிண்ட் உங்க கதைக்கு சரி சரி தாமதமா வந்துட்டு என்ன இது பின்னூட்டம் அப்படின்னு திட்டறீங்க??

என்ன செய்யறது ? தாமதமானாலும் வந்துட்டேன் நண்பா!!

நல்ல நகைச்சுவையோட எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

அது சரி(18185106603874041862) said...

//
கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் முழுமையாக ஆக்கிரமித்ததால் கடைசியில் கபடி நின்றுபோனது.பின்னர் குடுகுடுப்பை இந்த அணியில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்.
//

கபடில ஏது விக்கெட் கீப்பர்? ;))

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் முழுமையாக ஆக்கிரமித்ததால் கடைசியில் கபடி நின்றுபோனது.பின்னர் குடுகுடுப்பை இந்த அணியில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்.
//

கபடில ஏது விக்கெட் கீப்பர்? ;))
//

கடைசிக்கோட்டில நின்னு கபடி வீரர் கால கோட்ல வெச்ச புடிச்சி இழுக்கிறது.

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம்
//

இதுதான் ஒரு டர்னிங் பாயிண்ட் உங்க கதைக்கு சரி சரி தாமதமா வந்துட்டு என்ன இது பின்னூட்டம் அப்படின்னு திட்டறீங்க??//

அது மட்டும் தான் பாயிண்டு.

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

உங்கள் ஊர் எது என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லையே குடுகுடுப்பையாரே.அது தெரிந்தால் அந்த மண்ணின் மணத்தைத் தெரிந்து கொண்டிருப்போம் இல்லையா? Ineresting nostalgia.
//
தஞ்சாவூர் பக்கம் ஒரு குக்கிராமம்.

Anonymous said...

தாங்கள் செயராம் முன்னோடியா ?

குடுகுடுப்பை said...

செயராம் பின்னோடி said...

தாங்கள் செயராம் முன்னோடியா ?
//
ஒன்னும் புரியல

முரளிகண்ணன் said...

:_))

சந்தனமுல்லை said...

சுவாரசியமாக இருக்கிறது பதிவு!
//.(அப்பகுதியில் நிறைய நினைவு அணிகள் இருக்கும்) புரியாமல் நினைவு அணிகளை உருவாக்கிய கூத்துகளும் நடந்தது.
//

அவ்வ்வ்வ்வ்!

//கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.//

:-))))

Anonymous said...

செயராம் கல்லூரியில் படித்தவரா

குடுகுடுப்பை said...

செயராம் பின்னோடி said...

செயராம் கல்லூரியில் படித்தவரா//

நான் செயராம் கல்லூரியில் படிக்கவில்லை. ஆனால் செயராம் கல்லூரியில் படித்தாரான்னு எனக்கு தெரியாது

Unknown said...

நானும் படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன். நல்ல நேரம் வர மாட்டிங்குது..

Poornima Saravana kumar said...

நல்ல படம்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க.. எனக்கு தான் பார்க்க நேரம் இல்லை:((

அமிர்தவர்ஷினி அம்மா said...

அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆஹாஹா.

மாதேவி said...

எனக்கும் படம் பிடித்தது."கிராமம் சார்ந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும்"..."அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்". நன்று.