Wednesday, March 25, 2009

பாகம் 2 : குடுகுடுப்பை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன கதை

பாகம் 1.

லாக் அவுட் பண்ணாமல் வீட்டிற்கு சென்று , அங்கே நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள நண்பர்களிடம் என்னமோ நான் சரியா பண்ண்லைன்னு சொன்னேன். அவர்கள் யாருக்கும் கம்பியூட்டர் அவ்வளவு பரிச்சயமில்லை. அதில் ஒரு நண்பர் கவலையை விடுங்க போ பில்லராண்ட ஒரு பீர போட்டு அப்படியே ரோட்டுக்கடையில ஒரு தோசையை சாப்பிட்டு வருவோம்னார். அப்படியே செய்து தூங்கிப்போனேன்.

சில நாட்களில் நான் என்ன படிக்கிறேன் என்பது புரிய ஆரம்பித்தது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் SSI சென்று கம்பியூட்டர் லேப் பயன்படுத்தினேன்.அங்கு எனக்கு சொல்லிக்கொடுத்த பிரகாஷ் என்ற ஒரு ஆசிரியர் நீங்க நல்லபடியாக வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்.ஒரு வழியாக நன்றாக கற்றுக்கொண்ட பின் வேலை தேடுவது எப்படி என்ற பிரச்சினை எழுந்தது. சரியான படி ஆலோசனை சொல்ல ஆளில்லை. நான் தங்கியிருந்த இடத்தில் யாரும் சாப்ட்வேர் துறையிலும் இல்லை அதுதான் நான் செய்த தவறு.

வேலை தேடிக்கொண்டிருந்தபோது திடீரென என் முதுகுவலி படுத்த ஆரம்பித்தது அதற்கு இயற்கை முறை சிகிச்சை பெறுவதற்காக அரும்பாக்கத்தில் உள்ள ஒரு இயற்கை மருத்துவமனையில் 15 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன்.

அந்த மருத்துவமனையில் முதுகுத்தண்டுவட பிரச்சினைக்கென்றே வடிவமைக்கப்பட்ட யோகாசனங்கள் உட்பட , நீராவிக்குளியல், இயற்கை உணவுகள் என மருத்துவம் நன்றாக சென்றது. அங்கே நான் தங்கியிருந்த பொது அறையில் நான்கு நபர் தங்கலாம். என்னுடன் தங்கியிருந்தது 5 பெண்களை பெற்ற 50 வயது மதிக்கதக்க தந்தை மற்றும் இரண்டு தாத்தாக்கள்.

அந்த தாத்தாக்களோடு பேச திவ்யா என்ற ஒரு அழகிய பெண் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தப்பெண்ணை நானும் யோகா செய்யும் அறையில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதில்லை.இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் அந்த 5 பெண்களை பெற்ற தந்தை என்னிடம் சொன்னார், திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்.

நான் அப்படியெல்லாம் இருக்காதேன்றேன், அவர் நான் 5 பெண்களை பெற்றவன் அவர்களின் மனநிலை புரிந்தவன், நீங்கள் பேசுங்கள் அதைத்தான் அந்தப்பெண் எதிர்பார்க்கிறாள் என்றார். அந்தப்பெண் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிருக்கிறாள்/அல்லது படித்து முடித்தவள் என்பது அவர் எங்க ரூம் தாத்தாவிடம் பேசுவதில் இருந்து புரிந்தது.

நானும் அடிக்கடி பார்ப்பேன் அந்தப்பெண்ணும் அடிக்கடி பார்ப்பாள், யோகா செய்யும் போது அவள் என்னையே பார்த்ததை நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஒருநாளும் பேசும் துணிச்சல் மட்டும் வரவில்லை.

சிகிச்சை முடிந்து வெளியேறும் நாளில் மருத்துவமனை வரவேற்பறையில் நான் நண்பர்களுக்காக காத்திருந்தேன் அவளும் அங்கேயே என் முன்பாக உட்கார்ந்திருந்தாள் ஆனால் இருவரும் இப்போதும் பேசவில்லை ஒரு வழியாக நண்பர்கள் வந்தார்கள் என்னைக்கூட்டி சென்று விட்டார்கள் நான் கடைசி வரை பேசவில்லை.

சரி சாப்ட்வேர் இஞ்சினியர் ஆன கதைன்னு சொல்லிட்டு இப்படி என்னமோ கதை சொல்லிட்டிருக்கியேன்னு நீங்க பின்னூட்டமிடலாமின்னு யோசிக்கறது புரியுது, அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.

நினைவுகள் தொடரும்

37 comments:

குடந்தை அன்புமணி said...

இதோ வந்திட்டேன் முதல்ல...

குடந்தை அன்புமணி said...

அப்புறம் என்னதான் நடந்திச்சு... பார்ட் - 3 எப்போ?

நட்புடன் ஜமால் said...

கதையா!

வேத்தியன் said...

மீ த 3rd..
:-)

வேத்தியன் said...

அந்த தாத்தாக்களோடு பேச திவ்யா என்ற ஒரு அழகிய பெண் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தப்பெண்ணை நானும் யோகா செய்யும் அறையில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதில்லை.இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் அந்த 5 பெண்களை பெற்ற தந்தை என்னிடம் சொன்னார், திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்//

இது கொஞ்சம் உதைக்குதே...
:-)

வேத்தியன் said...

அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.
//

இது சூப்பர் பாஸு...

ஷண்முகப்ரியன் said...

//திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்//

இது நிஜமென்றால் நீங்கள் பாக்கியசாலி.கற்பனை என்றால் அந்தத் திவ்யா பாக்கியசாலி.LONG LIVE YOUR SWEET MEMORIES,KUTUKUTUPPAI SIR.

ராஜ நடராஜன் said...

//தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.

நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு.//

உங்கள் சீனாப் பதிவிலும் முதுகுவலி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.எனக்குத் தெரிந்து முதுகு வலி,தசைப் பிடிப்புக்கு சிறந்த மருத்துவம் மாலை நீண்ட நடை,காலை யோகாசனப் பயிற்சிகள் என நினைக்கிறேன்.

மருத்துவரை தேடும் அனுபவித்தில் சொல்கிறேன்.

இனி மொக்கைப் பின்னூட்டத்திற்கு ஏதாவது தேறுமான்னு பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் மருத்துவரை இதுவரை தேடாத என்றிருக்க வேண்டும்.மொக்கையப் பற்றி நினப்புல தவறான தட்டச்சு:)

ராஜ நடராஜன் said...

//நான் அப்படியெல்லாம் இருக்காதேன்றேன், அவர் நான் 5 பெண்களை பெற்றவன் அவர்களின் மனநிலை புரிந்தவன்,//

என்னுடைய கல்லூரி HRD கூட சொல்வார்.எனது மகள்களுக்கு சொந்தமா லவ் பண்ற தைரியமெல்லாமில்லை.இருந்தால் சந்தோசப்படுவேன் என்று.

ராஜ நடராஜன் said...

//நானும் அடிக்கடி பார்ப்பேன் அந்தப்பெண்ணும் அடிக்கடி பார்ப்பாள், யோகா செய்யும் போது அவள் என்னையே பார்த்ததை நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஒருநாளும் பேசும் துணிச்சல் மட்டும் வரவில்லை.//

எனக்கெல்லாம் நேர் எதிர்மறை.யாருக்காவது பிராக்கெட் போட்டா அதுக்கு அப்புறம்தான் தெரியும் எவனாவது முந்திகிட்டானுன்னு.

ராஜ நடராஜன் said...

//அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.//

நசரேயன் அண்ணாவின் கனவு காணும் பதிவுரிமையில விரலை விடுறீங்களே:)

ராஜ நடராஜன் said...

பதிவுக்கு வந்தா ஓட்டுப்போடணுமின்னு பழமை சொல்லிட்டுருந்தாரு.ஓட்டுன்னா என்னன்னு பார்க்கிறேனே!

சந்தனமுல்லை said...

அப்போ சொன்னதெல்லாம் கனவா?!!

சந்தனமுல்லை said...

//இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் SSI சென்று கம்பியூட்டர் லேப் பயன்படுத்தினேன்//

கடமை கண்ணியம் காட்பாடியாத்தான் இருந்திருக்கீங்க!!

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

அப்போ சொன்னதெல்லாம் கனவா?!!
//

கண்டுபிடிக்கவேண்டியது உங்கள் திறமை

புல்லட் said...

அடுத்து என்ன நடந்தது என அறிய ஆவலாக உள்ளேன்..
அடுத்த பதிவு பாகம் 3 விரைவில் வரவேண்டும் :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

பொன்னியின் செல்வன் ல வர மாதரி கிளைக்கதை எழுத ஆரம்பிசிட்டிகளே..

பழமைபேசி said...

நல்லாக் கதை வுடுறீங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

அடுத்த பாகம் எப்போ?

http://urupudaathathu.blogspot.com/ said...

ரீல் நம்பர் 2.. ( இஃகி இஃகி)

குடுகுடுப்பை said...

நிறைய நெகடிவ் ஓட்டு விழுகுது, சரியா எழுதலைன்னு நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

பித்தன் said...

பொன்னியின் செல்வன் ல வர மாதரி கிளைக்கதை எழுத ஆரம்பிசிட்டிகளே..//

இது நிறைய கிளைக்கதைகளோடுதான் செல்லும் என நினைக்கிறேன்.பதிவெழுதுவதில் நான் விதிமுறைகளோ, வரைமுறைகளோ வைத்துக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதுவதால் கூட இருக்கலாம்.

RAMYA said...

குடுகுடுப்பையாரே உடல் நிலை சரி இல்லைன்னு போனீங்க, அதே சரி பண்ணிட்டு வராமே, இது என்னா கிளைக்கதை.

முதுகுவலின்னு போயி என்ன இது அந்த பெண்ணிற்கு அண்ணன் யாரவாது இருந்து உங்க விஷயம் தெரிஞ்சி இருந்தால் பின்னி இருப்பாங்க :))

சரி இப்போ மறுபடியும் அரும்பாக்கம் போகலையா??

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
//இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் SSI சென்று கம்பியூட்டர் லேப் பயன்படுத்தினேன்//

கடமை கண்ணியம் காட்பாடியாத்தான் இருந்திருக்கீங்க!!

//

ஹா ஹா சூப்பர் அப்புறம் அரக்கோணம் இல்லையா :))

RAMYA said...

//
குடந்தைஅன்புமணி said...
அப்புறம் என்னதான் நடந்திச்சு... பார்ட் - 3 எப்போ?

//

விரைவில் வரும் :))

RAMYA said...

//
ஷண்முகப்ரியன் said...
//திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்//

இது நிஜமென்றால் நீங்கள் பாக்கியசாலி.கற்பனை என்றால் அந்தத் திவ்யா பாக்கியசாலி.LONG LIVE YOUR SWEET MEMORIES,KUTUKUTUPPAI SIR.
//

சரியா சொல்லி இருக்காரு ஷண்முகப்ரியன்,

வாழ்க நீடுழி வாழ்க குடுகுடுப்பையாரே!

RAMYA said...

//நானும் அடிக்கடி பார்ப்பேன் அந்தப்பெண்ணும் அடிக்கடி பார்ப்பாள், யோகா செய்யும் போது அவள் என்னையே பார்த்ததை நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஒருநாளும் பேசும் துணிச்சல் மட்டும் வரவில்லை.
//

அந்தப் பொண்ணுக்காவது துணிச்சல் வந்திருக்கனுமே அதுவும் இல்லையா??

அது சரி பாவம் நீங்க குடுகுடு :))

RAMYA said...

//அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.//


அவரு இதை படிச்சாரு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நிறைய நெகடிவ் ஓட்டு விழுகுது, சரியா எழுதலைன்னு நினைக்கிறேன்.
//

அரசியல்லே இதெல்லாம் சகஜம் அப்பு :))

நசரேயன் said...

காதல் கதை.. அடுத்த படுத்து தயார்

அது சரி(18185106603874041862) said...

அடுத்த பாகம் எப்ப?

புதியவன் said...

//அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.//

ஹா...ஹா..கனவு நல்ல இருக்கு...ஆனா, இது கனவு மாதிரி தெரியலியே...

SK said...

யப்பா... உன் அலும்பு தாங்க முடியலப்பா

வில்லன் said...

இந்த பாழப்போன பொண்ணுங்க வெட்டியா வேல இல்லாம இருக்கும் போதுதான் லவ் பண்ணுவாங்க. இதுவே வேலை கெடச்ச அப்புறம் பாத்திருந்தா லவ் பண்ணி (நசரேயன் காதல் இல்லை. உண்மையான காதல்) கல்யாணம் பண்ணி இருபிங்கள்ள.......

வில்லன் said...

இத வாசிச்சா எனக்கு இந்த பாடல் தன் ஞாபகம் வருது.

"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"
முதல் முதலாக மலர்ந்த காதல்.........................................

வில்லன் said...

////அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.//

ஏன் உண்மைனு சொன்னா விட்டுல சோறு கெடைக்காதா