Thursday, February 19, 2009

ஒரு நகைச்சுவை உரையாடல்

மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.

மு:கு2:செந்தழல் ரவி ஏற்கனவே what the hell is it brother ? அப்படின்னு கமெண்ட் போட்டாரு அதான் தூக்கிட்டேன் அன்னிக்கே,
ஆனாலும் மீண்டும் இங்கே.


-----------------------------------------
டேய் கணேசா ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுறா,-- பண்பரசன்
சரி மாப்பிள்ளை போட்டா போச்சு, என்ன மாப்பிள்ளை இப்படி திராசு படிக்கல்லோட திரியற....

அது ஒன்னும் இல்லடா , நெல்லு போட சென்டருக்கு வந்தேன், அந்த ஆபிசர் பயகிட்ட காலைல கையெழுத்து போட்டு ஒரு நூறு ரூபாய் வெட்டிட்டு நூறு சாக்கு வாங்கிட்டு போனேன், நெல்லும் சாக்குல புடிச்சு 71 கிலோ கலத்துலயே எடை போட்டு ஏத்திட்டு வந்தாச்சு,இப்போ நெல்லை பாத்துட்டு ஈரப்பதம் 24 க்கு மேல இருக்கு, எடுக்க முடியாதுன்னு சட்டம் பேசறான்,காய வெக்க சொல்றான், என்கிட்டே இதெல்லாம் நடக்குமா, அதான் திராசு படிக்கல்ல கையோட எடுத்துட்டு வந்திட்டேன், என் நெல்ல வாங்காம மத்தவன் நெல்ல எப்படி வாங்கிறான்னு பாத்துபுடறேன்.

ஏற்கனவே நெல்லுக்கு வெல இல்ல, இந்த டவுண்காரங்க ஒரு மயிறுக்கும் போறாத படத்தை குடும்பத்தோட 1000 ரூவா குடுத்து பாக்ஸ்ல உக்காந்து பாப்பாங்க ஆனா மாசம் 1000 ரூவா குடுத்து அரிசி, காய்கறி வாங்கறதுக்கு கால் ..லுன்னு கத்துவாங்க. வெவசாயின்னா எல்லாருக்கும் எலக்காரம் ஆயி போச்சி.

ஆபிசர் சொல்ற மாதிரி நீ கொஞ்சம் நெல்ல காய வெச்சு கொடுக்க வேண்டியது தான மாப்பிள்ளை ஏன் பிரச்சினை பண்ணிக்கிட்டு ......

நீ டீய ஒழுங்கா போடுறா வெண்ண, பொழக்க வந்த நாய் எனக்கு அட்வைஸ் பண்ணது போதும், சும்மா பேசின பால் குண்டானெல்லாம் பறந்துரும் பாத்துக்க, நான் இருக்கிற வெறில நீ வேற கடுப்ப கெளப்புற , அவன் எல்லாம் ஒரு ஆளா, மூணு மாசத்துக்கு தான் அவன் ஆபிசர், சென்டரு மூடுனா வேல கோயிந்தா அப்புறம் சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிறவன், அவன் சொல்றத நான் கேட்கமுடியுமடா? நாங்க வெவசாயம் பண்றவன் எல்லாம் கேண்க்.... இப்ப வருவான் பாரு கெஞ்சிகிட்டு.

ஆமா டீத்தூள் போடுறியா இல்ல மரத்தூள்ல டீ போடுறியா நீ, காசு மட்டும் வாங்குங்கடா நல்லா , இதை குடிக்கறதுக்கு,வீட்ல கொஞ்சம் வடிச்ச கஞ்சிய குடிச்சிட்டு வந்திருக்கலாம்.

அங்கே வந்த பெரிய மனிதன் கோவிந்தராஜன், என்னடா பண்பு, நெல் கிட்டங்கில எதோ பிரச்சினை பண்ணியாமே? அவர் உன் மேல கேசு கொடுக்க போறேன் சொல்றார் ஏன்டா இப்படியெல்லாம் பண்ற?

என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.

டேய் பண்பு டீக்கு காச கொடுத்திட்டு போடா?

இது ஒரு மறுபதிவு

18 comments:

நட்புடன் ஜமால் said...

இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

அப்ப எனக்கில்லையா

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

அப்ப எனக்கில்லையா//

எனக்கில்லை....எனக்கில்லை...

குடந்தை அன்புமணி said...

விவசாயிகளின் வயிற்றெரிச்சல் புரிகிறது!

Poornima Saravana kumar said...

விவசாயியின் கஸ்டங்கள் அரிசியை வெறும் காசு கொடுத்து மட்டும் வாங்கித் தின்பவனுக்கு தெரிவது அரிதே!!

பழமைபேசி said...

காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசமிகு அண்ணன் "குடுகுடு" குடுகுடுப்பையார் வருக! வாழ்க!!

வில்லன் said...

இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா............

நாளர வருஷம் கழிச்சி வில்லன் ரெண்டு வாரத்துல ஊற பாத்து (தாய் நாட்ட பாத்து) திரும்பி போறாரு...... ஊருக்கு போயி மத்த விவரம் சொல்லுவாரு.

நசரேயன் said...

மறு பின்னூட்ட்டம்

வில்லன் said...

//இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்\\

என்ன நக்கலா..... எங்கலெல்லாம் பாத்தா சரியான பட்டிக்கட்டனா தெரியுரோமா!!!
கொஞ்சம் கூட நல்லா இல்ல. எதோ கடைய தேரந்திருகிறேருன்னு வந்தா பட்டிக்காட்டான்னு சொல்லி போட்டீரே நீறு.

வில்லன் said...

இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண்ணாச்சி குடுகுடுப்பையா!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரியான உண்மைங்க. கண்டிப்பா இதைபத்தி நிகழகால வருங்கால சந்ததி மக்கள் சிந்திக்க வேணும். இல்ல சொத்துக்கு பதிலா மாத்திரைய தான் சாப்பிடனும்...........

நானே ஊருக்கு போயி வெவசாயம் பாக்க ஆரம்பிக்கனும்னு ரொம்ப ஆசை. பாக்கலாம். லாபமோ நட்டமோ நம்ம விட்டுல வேலஞ்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்.

வில்லன் said...

பழமைபேசி said...
காணாமற் போய்த் திரும்பியுள்ள பாசமிகு அண்ணன் "குடுகுடு" குடுகுடுப்பையார் வருக! வாழ்க!!


இதை நான் வழி மொழிகிறேன்

அது சரி(18185106603874041862) said...

//
மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும்.
//

எனக்குன்னு இஸ்பெசலா ஒரு பதிவு உட்டதுக்கு டேங்சுண்ணே :0))

அது சரி(18185106603874041862) said...

ஆமா, என்ன ஆச்சி...ரொம்ப நாளா ஆளைக் காணோம்?? ஆஃபிஸ்ல எதுனா வேலைப் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா? :0))

KarthigaVasudevan said...

வாங்கண்ணே...வாங்க...வந்துட்டீங்களா?! திராசு நல்லா தான் இருக்கு,
//என்னது கேசு கொடுக்கிறானா? நெல்லு உங்களுது ,உங்க கையெழுத்து போட்டுதான் சாக்கு எடுத்திருக்கு, போலீஸ் வந்தா உங்களைத்தான் பிடிச்சுட்டு போவான், இந்தாங்க திராசு படிக்கல்லு நான் வரேன்.//
நியாயமான பேச்சு தான்.விவசாயிகளின் கவலை எப்பவும் தீராதோ? இடைத் தரகர்கள்(ஏஜெண்டுகள்) விலை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கும் வரை?!

புதுகை.அப்துல்லா said...

இது ஒரு மறுபதிவு

//


இருப்பு உறுதி செய்யப்பட்டது :)

RAMYA said...

//
மு:கு:இந்த பதிவு முற்றிலும் பட்டிக்காட்டானுக்கு மட்டும். ஒரு பட்டிக்காட்டு உரையாடலை எழுதியிருக்கிறேன், ஆனாலும் உயிர் கொண்டு வர முடியவில்லை.
//


என்னாதிது அப்போ நாங்க எல்லாம் யாரு?

குடுகுடுப்பையாரே ஒரே வில்லங்கமா இருக்கு ?

RAMYA said...

இது சிரிக்கமட்டும் இல்லைங்க
சிந்திக்கவும் வைக்குது.

நகரத்தில் இருக்கின்றோம்.

அங்கே விவசாயிகளின் கஷ்டம்
என்னவென்று நாம் அனைவரும்
புரிதல் அவசியம் என்பதையும்
உணர்த்தி இருக்கிறீர்கள்!!

RAMYA said...

//
வில்லன் said...
இந்த படத்துல ஹீரோ யாரு?????? அண்ணாச்சி குடுகுடுப்பையா!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரியான உண்மைங்க. கண்டிப்பா இதைபத்தி நிகழகால வருங்கால சந்ததி மக்கள் சிந்திக்க வேணும். இல்ல சொத்துக்கு பதிலா மாத்திரைய தான் சாப்பிடனும்...........

நானே ஊருக்கு போயி வெவசாயம் பாக்க ஆரம்பிக்கனும்னு ரொம்ப ஆசை. பாக்கலாம். லாபமோ நட்டமோ நம்ம விட்டுல வேலஞ்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்.

//

ரொம்ப நல்லா வில்லன் சொல்லி இருக்காங்க.

இதை படிக்கும் போது அந்த உணர்வுதான் வருகின்றது குடுப்பையாரே

Anonymous said...

புரியலேயேப்பா?