Wednesday, February 25, 2009

சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு, நானும் பதிவுலகத்தில் இருக்கேன் சொல்லிக்க.என்னுடைய வலைப்பதிவும் 25000க்கு மேற்பட்ட வருகை தந்திருக்கிறார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

சாம்பர்க்,சிகாகோவில் வசித்த நாட்களில் ஒரு ஆசை எத்தனை நாளைக்கு இப்படி குளிரூட்டப்பட்ட கோழிய சாப்பிடறது,எங்காவது பக்கத்துல பண்ணைல போய் உயிரோட கோழி வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி, நானும் பல்லவர்களுடன் அனுபவத்தில் வரும் நண்பன் மண்டையனும் ஹாம்ப்சையர்னு ஒரு ஊருல உள்ள சில பண்ணைகளை அலசினப்போ, ஒரு பண்ணையில நம்மூரு நாட்டுக்கோழி மாதிரி கலர் கலரா நிறைய கோழிகள் இருந்தது.

பண்ணைக்காரார் இப்போ அதெல்லாம் முட்டை போடுது இப்போ விற்க மாட்டோம்னு சொல்லிட்டார்.வேணும்னா வெள்ளாடு இருக்கு வாங்கிக்கங்க அப்படின்னு சொன்னார்,எல்லாம அருமையான உருப்படிதான், வெட்டித்தரமாட்டேன் நீங்கதான் வீட்ல போயி வெட்டனும் அப்படின்னு சொல்லிட்டார்.ஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.

எதிரே இன்னொரு பண்ணை கண்ணில்பட்டது, அங்கும் கோழி இல்லை ஆனால் முயல் இருக்கிறது என்றார் அங்கிருந்த 90ஐத்தாண்டிய கிழவியார் 10$ கேட்டார் அந்த முயலுக்கு. முயல் வாங்கிவிட்டோம். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து ட்ரங்கில் வைத்து வீட்டுக்கு வந்தோம்.

நான் தங்கியிருந்தது எங்கள் கம்பெனியின் கார்ப்பரேட் அபார்ட்மெண்ட், நண்பன் பக்கத்தில் வேறு வீட்டில் இருந்தான்.
என்னுடைய அபார்ட்மெண்டில் சமைக்க முடிவெடுத்தோம் என்னோடு தங்கியிருந்த இன்னொரு சென்னைக்காரரும் கலந்து கொண்டார்.இப்போது முயலை எப்படி எங்கே வெட்டுவது, இருக்கவே இருக்கு பாத்டப்,அங்கே வைத்து வெட்டி சுத்தம் செய்து,பாத்டப்பையும் சுத்தம் செய்துவிட்டு சமைத்து சாப்பிட்டோம். ஒரு மாதிரி புல் வாடையுடன் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தது.சரியாக சமைக்கத்தெரியாததால் சுவை சரியில்லை.

எப்படியாவது கோழி வாங்கியே ஆவது என்ற வெறியில் மீண்டும் அதே பண்ணைக்கு இன்னொரு நாள் சென்றோம், இந்தமுறையும் அவர் விற்கவில்லை,ஆனால் வாத்து வாங்கிக்கொள்ள சொன்னார்.வெறுங்கையோட திரும்புவது பிடிக்காத நாங்கள் வாத்தை வாங்கினோம். அதே போல என் வீட்டு பாத்டப்பில் வைத்து வெட்டி சுத்தம் செய்தோம். ஆனால் இம்முறை வாத்தின் நாத்தம் சகிக்கவில்லை.கிட்டத்தட்ட அந்த புளோர் முழுவதும் நாற்றம். ஆனாலும் ஒரு ஆந்திரா நண்பரின் உதவியுடன் சமைத்து சாப்பிட்டோம்.

இந்தக்கதையை ஒருநாள் எங்களுடன் தங்கியிருந்த ஒரு கன்னட நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தோம், இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்.இவர் ஒரு சைவர், அவரிடம் பாத்டப்பில் வைத்து முயல்,வாத்து வெட்டியது பற்றி சொல்லிவிட்டு ,வெட்டியது நண்பர் மண்டையன் வீட்டில் என்றும் சொல்லிவிட்டோம்.மனிதர் இதை அப்படியே போய் நண்பர் மண்டையன் வீட்டில் உள்ள மற்றொரு நண்பனிடம் சொல்லி உங்க பாத்டப்பில வெச்சி முயல், வாத்தெல்லாம் வெட்டி இருக்காங்க உனக்கு தெரியாதன்னு கேட்டிருக்காரு, அவரு ஒரு பெரிய டேட்டாபேசு, வெட்டினதெல்லாம் தெரியும் ஆனா இடம் உங்க பாத்டப்பு எங்க வீட்ல இல்ல அப்படின்னு எடுத்துரைக்க, கன்னட நண்பர் என்னிடம் காவிரி தண்ணீர் கேட்ட தஞ்சாவூர்காரன்காரன் மேல உள்ள கோபத்தோட என்னை எரிச்சிட்டார்.

அப்படியே ஒருநாள் hampshire farms அப்படின்னு கூகிள் பண்ணினா, அங்க உள்ள பண்ணை விலங்குகளுக்கு ஏதோ வைரஸ் அட்டாக், அதை சாப்பிடுவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது, வயித்தில புளிய கரைச்சிட்டாங்க... நல்லவேளை ஒன்னும் ஆகல.

26 comments:

லேகா பக்க்ஷே said...

உங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.
But முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வேற முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது??

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி லேகா பக்க்ஷே

உங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.
But முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வேற முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது??//

சிலபேரு மனுசனையே போட்டுத்தாக்குறாங்க...

அது சரி(18185106603874041862) said...

//
எப்படியாவது கோழி வாங்கியே ஆவது என்ற வெறியில் மீண்டும் அதே பண்ணைக்கு இன்னொரு நாள் சென்றோம், இந்தமுறையும் அவர் விற்கவில்லை,ஆனால் வாத்து வாங்கிக்கொள்ள சொன்னார்.வெறுங்கையோட திரும்புவது பிடிக்காத நாங்கள் வாத்தை வாங்கினோம்.
//

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கோழி தரும்!

கோழி தராட்டியும், வைரஸ் அட்டாக்கான வாத்தாவது தரும் :0))

அது சரி(18185106603874041862) said...

//
லேகா பக்க்ஷே said...
உங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.
But முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வேற முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது??
//

என்னங்க லேகா இப்படி சொல்றீங்க...இப்படியே எல்லாரும் நினைச்சா அப்புறம் யார் தான் வெட்றது??

நீங்க சொல்றது உண்மை தான்...வெட்டும் போது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு...ஆனா சாப்பிடும் போது கஷ்டம் எல்லாம் மறந்துடுது :0))

சும்மாவா சொன்னாங்க, கஷ்டப்பட்டாதான் நல்லாருக்கலாம்னு :0))

அது சரி(18185106603874041862) said...

//
ஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.
//

அடுத்த தடவை எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க...ஆடு, மாடு, கோழி, வாத்து, கங்கரு, மானு, மீனுன்னு எல்லாத்தையும் கைமா பண்றது நமக்கு சைட் பிஸ்னஸ்...நல்லா எழுதறவங்களுக்கு புலிட்சர் விருது தர்றாங்க...நமக்கு யார்னா ஒரு புட்சர் விருது தரமாட்டாஙக்ளா? :0))

Anonymous said...

//சிகாகோவில் உயிருடன்,

கோழி வாங்க அலைந்த கதை. //

இப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.

அதனாலே, தலைப்பை,

சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.

எனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.


என்னது என் பேர் என்னவா ? அது எதுக்கு கழுத ?

நசரேயன் said...

கோழி சாப்பிட கொலை வெறியோட கிளம்பி இருக்கீங்க. வெள்ளைக் கோழி ஏதும் சிக்கலையா?

நசரேயன் said...

தலைப்பு தொலுங்கு பட டப்பிங் மாதிரி இருக்கு

குடுகுடுப்பை said...

Anonymous said...

//சிகாகோவில் உயிருடன்,

கோழி வாங்க அலைந்த கதை. //

இப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.

அதனாலே, தலைப்பை,

சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.

எனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.


என்னது என் பேர் என்னவா ? அது எதுக்கு கழுத ?
//

ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பழமைபேசி said...

//Anonymous said...
//சிகாகோவில் உயிருடன்,

கோழி வாங்க அலைந்த கதை. //

இப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.

அதனாலே, தலைப்பை,

சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.

எனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.
//

Superu...

RAMYA said...

நல்லா தான் சாப்பிட்டு இருக்கீங்க.

ஆனா சும்மா சொல்லக் கூடாது
தங்கமணி வரதுக்குள்ளே ரொம்ப
அழிச்சாட்டியம் பண்ணி இருக்கீங்க போல இருக்கே??

RAMYA said...

ஆமா அந்த database இப்போ எங்கே இருக்காரு?

இன்னும் பண்ணை பண்ணையா அலையறாரா??

Anonymous said...

In L.A, we go to East Hills area (405-118 freeway junction) where Mexican/Latino shops sell 'Naatu Kozhi' live. After buying them, they chop it then and there, cut, clean and pack for us.

நட்புடன் ஜமால் said...

எவ்வளவு அலைந்தாலும் இங்கே கிடைக்காது ... :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெட்டும் போது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு//
கொன்றால் பாவம் தின்றால் போச்சு
:-)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
ஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.
//

அடுத்த தடவை எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க...ஆடு, மாடு, கோழி, வாத்து, கங்கரு, மானு, மீனுன்னு எல்லாத்தையும் கைமா பண்றது நமக்கு சைட் பிஸ்னஸ்...நல்லா எழுதறவங்களுக்கு புலிட்சர் விருது தர்றாங்க...நமக்கு யார்னா ஒரு புட்சர் விருது தரமாட்டாஙக்ளா? :0))

//

அது இந்த வருடம் வேற ஒருத்தருக்கு போச்சி, நான் மீன் பிடிக்க போறேன் இந்த கோடையில் வேணும்னா கலந்துக்கங்க..

வேத்தியன் said...

ஐயையோ...
நான் வெஜிடேரியனுங்க...
இதைப் படிக்கலாமா??
:-)

வேத்தியன் said...

என்னங்க இது வெவகாரமாப் போச்சு...
ஒரு முறையாவது கோழி வாங்கி சாப்பிட்டீங்களா???

வேத்தியன் said...

ஏங்க அந்த பாத் டப்பை ஒவ்வொரு முறை பாக்கும் போதும் அந்த கோழியைப் பாக்கிற ஃபீலிங் வராது???
:-)))

சந்தனமுல்லை said...

:-)))

//இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்.//

ஆகா!

KarthigaVasudevan said...

//அப்படியே ஒருநாள் hampshire farms அப்படின்னு கூகிள் பண்ணினா, அங்க உள்ள பண்ணை விலங்குகளுக்கு ஏதோ வைரஸ் அட்டாக், அதை சாப்பிடுவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது, வயித்தில புளிய கரைச்சிட்டாங்க... நல்லவேளை ஒன்னும் ஆகல. //

"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் "

முயல் ஒரு சின்ன உயிர் ...அதைப் போய் பாத் டப்ல வச்சு வெட்டி ரத்தம் ரத்தமா கொட்ட வச்சு ...உரிச்சு உப்பு போட்டு வேக வச்சு...fry பண்ணிலாம் எப்படித்தான் சாப்பிட மனசு வந்ததோ கண்ணால இத்தனையும் பார்த்துட்டு செஞ்சு சாப்பிடறதுக்கு பதிலா கடைல சாப்பிட்டுக்கலாம்.
இப்போ என்ன ஆச்சு?
கொலைக் குற்றவாளியா இல்ல ஆயிட்டீங்க?!(முயலும் ஒரு உயிர் தானே!).
நான் முயல் எல்லாம் சாப்பிட்டதில்லை. சும்மா கோழி தான் .அதுவும் கடையில தான் குடுகுடுப்பை அண்ணா.இனிமேலாச்சும் கொலை எல்லாம் பண்ணாம நல்ல ரெஸ்டாரெண்ட் தேடிப் போங்க.

Anonymous said...

Hi, This is Ubaidullah from UAE.

Kaveri pathi sonneenga. Actual aaga vellam varum podu yaar athigama bathikkapadurangalo avargalukku than first preference. So kaveri aathula vellam vantha karnatakala just avrgaloda anayai open panniduvanga. aana athanala pathikka padurathu nammaloda vivasayigalthan. Athanala nammalukku yevvalavu thanni thevayo atha karnataka kudukkanum. appadi illaina vellam varum podu thanni thirakka koodadunnu solla sollunga.

Anonymous said...

//வெட்டினதெல்லாம் தெரியும் ஆனா இடம் உங்க பாத்டப்பு எங்க வீட்ல இல்ல அப்படின்னு எடுத்துரைக்க, கன்னட நண்பர் என்னிடம் காவிரி தண்ணீர் கேட்ட தஞ்சாவூர்காரன்காரன் மேல உள்ள கோபத்தோட என்னை எரிச்சிட்டார்.
//

Oh... he might have had 'gangasnan' in the bathtub without knowing it's nathi-moolam.

Anonymous said...

//இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்//

Do you really beleive asking water from Karnataka is wrong? If yes, it is not correct. Please don't get influenced by your kannda friend. Actually Tamil nadu has more rights than Karnataka, which is defined by British Govt and that time supply of water is 750TMC per year, but now, we are fighting for 210TMC water and can't get even this small qty. Karnataka is increased it cultivation land by utilisisng cauvery water and refused to give us specified qty. I can say British rule is better than Indian rule in this case.
Renga

Anonymous said...

அட பாவி நீ ஒண்ணையும் வாழ விடமாட்டியா?
அடுத்த பிறப்பில கொரியாவில பிறக்க சாபம் போடனும் போல இருக்கு.

ஆனா! வெள்ளாட்டை மிஸ் பண்ணினது கொஞ்சம் வேதனைதான்.

புள்ளிராஜா

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.