Friday, November 21, 2008

குடுகுடுப்பை கோல்கீப்பரான கதை.

எனக்கு 10 வயசுக்குள்ள இருக்கும்னு நெனக்கிறேன்.எங்க கிராமத்தில உள்ள இளைஞர்கள் எல்லாம் சேந்து புட்பால் ஆடலாம்னு முடிவு பண்ணி காசெல்லாம் சேத்து ஒரு பந்து வாங்கிட்டாங்க.

இப்ப வெளயாட பெரிய கிரவுண்ட் கோல் போஸ்ட்டுக்கு மரம் எல்லாம் தேவைப்பட்டுச்சு. எங்க ஊரு காட்டாத்துக்கு பக்கத்துல இருக்கிற ஒரு பெரிய கிரவுண்ட கண்டு பிடிச்சாச்சி, கோல் போஸ்ட்டுக்கு மரம் வேணும், இருக்கிற இளைஞர்கள் எல்லாம் சேந்து கிரவுண்டுக்கு பக்கத்துல பக்கத்து ஊர சேந்த மங்கான் சவுக்கு தோட்டத்தில போயி சவுக்கு வெட்டி கோல் போஸ்ட் போட முடிவாச்சு.

வெற்றிகரமா ஒரு ஏழெட்டு சவுக்கு வெட்டியாச்சு, கோல்போஸ்ட்டும் ரெடி பண்ணியாச்சு. புட்பால் டீம் ரெண்டா பிரிச்சு டீமும் ரெடி, நான் சின்ன பையன் அதுவும் எலும்பன் ஓட முடியாது அப்ப்டின்னு சொல்லி கோல்கீப்பரா எனக்கு இட ஒதுக்கீடு குடுத்திட்டாங்க, நானும் கோல்கீப்பரா என்னால முடிஞ்ச வரைக்கும் ஆர்வமா விளையாடினேன்.

தீடீர்னு ஒரு பெரிய கூட்டம் நாங்க வெளயாடுர இடத்தை நோக்கி வந்தாங்க, நாங்களும் வேடிக்கை பார்க்கவோ இல்ல மாடு மேக்கிறவங்களோன்னு நெனச்சோம். ஆனா வந்தது மங்கான் தன் ஆட்களோட சவுக்கு வெட்டுன எங்கள புடிக்க வந்தாரு. எல்லாரும் ஒரே ஒட்டம். எனக்கு ஓட முடியாதுன்னு சொல்லித்தான் கோல்கீப்பர் போஸ்ட் குடுத்தாங்க, ஆனா யாருக்கும் சலைக்காம வேகமாதான் ஓடினேன். அப்புறம் ஊருல வந்து பஞ்சாயத்தெல்லாம் பேசி சின்ன பசங்க அப்படின்னு சொல்லி ஒரு வழியா மன்னிச்சு விட்டாங்க.

இப்ப காலேஜ், காலேஜ்ல புட்பால் வெளயாடும்போது,நான் ஏற்கனவே கோல்கீப்பரா இருந்த அனுபவத்த சொன்னேன், சரி நில்லுன்னாங்க, எதிர் டீம்ல வெளாண்ட நண்பன் ரிக்சா மாமா ஒரு பெரிய புட்பால் பிளேயர், ஒரு சாட் கோல் நோக்கி அடிச்சான், சரியா என் நெஞ்சு நோக்கி வந்த பந்த நானும் லாவகமா கையால பிடிச்சிட்டேன். ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.

30 comments:

rapp said...

me the 1ST?

rapp said...

//எனக்கு 10 வயசுக்குள்ள இருக்கும்னு நெனக்கிறேன்//

எப்போங்கண்ணே ஒரு முப்பது வருஷம் முன்ன இருக்குமா:):):)

குடுகுடுப்பை said...

rapp said...

//எனக்கு 10 வயசுக்குள்ள இருக்கும்னு நெனக்கிறேன்//

எப்போங்கண்ணே ஒரு முப்பது வருஷம் முன்ன இருக்குமா:):):)


ஏன் இந்த கொலவெறி. நான் ரொம்ப சின்னவன் அக்கா.

நசரேயன் said...

மாடு மேய்சுகிட்டே இவ்வளவு வேலையும் நடந்திருக்கா?

கபீஷ் said...

//தீடீர்னு ஒரு பெரிய கூட்டம் நாங்க வெளயாடுர இடத்தை நோக்கி வந்தாங்க, நாங்களும் வேடிக்கை பார்க்கவோ//
என்ன ஒரு தன்னம்பிக்கை! உங்க வெளயாட்ட பாக்க ஒரு பெரிய கூட்டம்?

நசரேயன் said...

/*
பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.
*/
என்னை விட எலும்பனா ஒரு ஆளா?

கபீஷ் said...

//ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்//

ஹா ஹா

பழமைபேசி said...

அதான் இன்னமும் இடுப்புல கல்லை கட்டிகிட்டு அலையுற சூட்சுமமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நான் ரொம்ப சின்னவன் ///

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ என்னால சிரிப்ப அடக்க முடியலை. என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம், படிக்கும் போது அப்படியே அத கற்பனை வேற செஞ்சுப்பேன்.

என்னத்த சொல்றது,

http://urupudaathathu.blogspot.com/ said...

கி க்கி க்கி ..........
ஹா ஹா ஹா
ஹி ஹி ஹி
போங்க சிரிப்பு தாங்கல

http://urupudaathathu.blogspot.com/ said...

///rapp said...

எப்போங்கண்ணே ஒரு முப்பது வருஷம் முன்ன இருக்குமா:):):)///

முப்பது வருஷம் எல்லாம் சும்மா? அது இருக்கும் ஒரு அறுவது வருசத்துக்கு முன்னாடி..
என்ன தலைவா உண்மை தானே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///குடுகுடுப்பை கோல்கீப்பரான கதை."///

இது ஒரு கருப்பு சரித்திரம் ...
சரிதானே ??

விஜய் ஆனந்த் said...

:-)))...

தமிழ் அமுதன் said...

//இப்ப காலேஜ், காலேஜ்ல புட்பால் வெளயாடும்போது,நான் ஏற்கனவே கோல்கீப்பரா இருந்த அனுபவத்த சொன்னேன்//

இப்போவே பாலோட உள்ள போய்ட்டிங்க

அப்படின்னா அப்போ?

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்,
இப்போ நான் 75 கிலோ. அசைக்கமுடியாது.

குடுகுடுப்பை said...

வாங்க கபீஷ்

//தீடீர்னு ஒரு பெரிய கூட்டம் நாங்க வெளயாடுர இடத்தை நோக்கி வந்தாங்க, நாங்களும் வேடிக்கை பார்க்கவோ//
என்ன ஒரு தன்னம்பிக்கை! உங்க வெளயாட்ட பாக்க ஒரு பெரிய கூட்டம்?

ஹிஹீ

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி
அதான் இன்னமும் இடுப்புல கல்லை கட்டிகிட்டு அலையுற சூட்சுமமா?

//

அப்படின்னா?

குடுகுடுப்பை said...

வாங்க T.V.Radhakrishnan

///நான் ரொம்ப சின்னவன் ///

நீங்களுமா?????????

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ என்னால சிரிப்ப அடக்க முடியலை. என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம், படிக்கும் போது அப்படியே அத கற்பனை வேற செஞ்சுப்பேன்.

என்னத்த சொல்றது,//

கற்பனைல வர்ற அந்த உருவத்தை நெனச்சு ரொம்ப பரிதாபப்படவேண்டியத்துதான்:)

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

///rapp said...

எப்போங்கண்ணே ஒரு முப்பது வருஷம் முன்ன இருக்குமா:):):)///

முப்பது வருஷம் எல்லாம் சும்மா? அது இருக்கும் ஒரு அறுவது வருசத்துக்கு முன்னாடி..
என்ன தலைவா உண்மை தானே ??

//

ஏன் இந்த கொலவெறி?

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

///குடுகுடுப்பை கோல்கீப்பரான கதை."///

இது ஒரு கருப்பு சரித்திரம் ...
சரிதானே ??

இது மட்டுமா???????

குடுகுடுப்பை said...

வாங்க விஜய் ஆனந்த்
வாங்க ஜீவன்


/இப்ப காலேஜ், காலேஜ்ல புட்பால் வெளயாடும்போது,நான் ஏற்கனவே கோல்கீப்பரா இருந்த அனுபவத்த சொன்னேன்//

இப்போவே பாலோட உள்ள போய்ட்டிங்க

அப்படின்னா அப்போ?//

காலேஜ் படிக்கும்போது அமபது கிலோ, அப்போ எப்படியும் இருபது இருக்கனும்.

அது சரி(18185106603874041862) said...

//
ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.

//

இதுக்கு பேரு தான் சேம் சைட் கோலா?

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.

//

இதுக்கு பேரு தான் சேம் சைட் கோலா?

//

இல்லங்க வலிதாங்காத கோலு, இப்பயும் ஞாபகம் இருக்குது நான் விழுந்த வேகம் ............

நட்புடன் ஜமால் said...

\\இப்ப காலேஜ், காலேஜ்ல புட்பால் வெளயாடும்போது,நான் ஏற்கனவே கோல்கீப்பரா இருந்த அனுபவத்த சொன்னேன், சரி நில்லுன்னாங்க, எதிர் டீம்ல வெளாண்ட நண்பன் ரிக்சா மாமா ஒரு பெரிய புட்பால் பிளேயர், ஒரு சாட் கோல் நோக்கி அடிச்சான், சரியா என் நெஞ்சு நோக்கி வந்த பந்த நானும் லாவகமா கையால பிடிச்சிட்டேன். ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன்.\\

ஹா ஹா ஹா.

ரொம்ப வலிச்சிதோ

நாநா said...

//*

//எனக்கு 10 வயசுக்குள்ள இருக்கும்னு நெனக்கிறேன்//

எப்போங்கண்ணே ஒரு முப்பது வருஷம் முன்ன இருக்குமா:):):)


ஏன் இந்த கொலவெறி. நான் ரொம்ப சின்னவன் அக்கா.

*//

ஆமா ஆமா. ரொம்ப பச்ச புள்ள. வாயில விரலு வச்சா கடிக்க கூட தெரியாது

Anonymous said...

கிகிகிகி

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நாநா
அதிரை
தூயா

Anonymous said...

//ஒரு சாட் கோல் நோக்கி அடிச்சான், சரியா என் நெஞ்சு நோக்கி வந்த பந்த நானும் லாவகமா கையால பிடிச்சிட்டேன். ஆனாலும் கோளாயிருச்சு எப்படின்னா பந்தோட வேகத்துல நானும் கோலுக்குள்ள ஒரு மீட்டர் உள்ள போய் விழுந்துட்டேன். //

சரியானபடி பாத்தா இது டபுள் கோல். இதை தான் சேம் சைடு கோல்ன்னு சொல்வாங்களோ