எனது 50 வது பதிவு. தொகுப்பில்லாத செய்திகளை தொகுத்து பார்க்கும் ஒரு முயற்சி.
வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் என்னுடடைய சில பதிவுகள் முடிந்தால் பாருங்கள்
------------------------------------------------------------------------------------------------------
இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2
இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.
-------------------------------------------------------------------------------------------------
ஆத்திகர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒரு நூலில் மனித வாழ்க்கைக்கு கடவுளால் சொல்லப்பட்ட சில நல் வழி இவைகள், இதனை நம்பி நடக்கும்போது ஒருவன் தவறு செய்ய பயப்படுவான் ஒழுக்கமுடன் இருப்பான் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இதில் எது ஒழுக்கம் தவறு என்பதில் நிறைய குழப்பம் நிகழ்வதை நிகழ்கால வாழ்க்கையில் காணலாம்.
ஒரு வகையில் பார்க்கும் போது சாமி கும்பிடுகிறோம், மன அமைதியை நாடுகிறோம், பல தரப்பட்ட மக்கள் நல்ல எண்ணத்துடன் கூடும் ஒரு இடத்தில் சந்திக்கிறோம்,மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆத்திகத்தில் பெரும்பாண்மை நம்பிக்கை என்பது சொர்க்கம்,நரகம் சார்ந்தே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது, (கோவிலுக்கு போவதை தவிர எனக்கு எந்த மத அறிவும் கிடையாது ). நீ இன்றைக்கு பூமியில் செய்யும் நறபலன்/கெடுபலனை பொறுத்து நாளைக்கு நீ சொர்க்கமோ நரகமோ செல்வாய். நரகத்தில் எண்ணெய் சட்டியில் வருத்தெடுக்கபடுவாய்,ஆனால் சொர்க்கத்தில் நினைத்தெல்லாம் கிடைக்கும். சொர்க்கம் செல்லும் நம்பிக்கையில் ஏகதாசியில் தற்கொலை செயவது உட்பட இன்னும் பல துயரமான சம்பவங்கள் நடக்கிறது.
நாத்திகம் சொல்வது கடவுள் என்று ஒருவன் இல்லை,அதன் சொர்க்கம் நரகம் போலித்தனம், இதனால் விளையும் நன்மையை விட தீமையே அதிகம்.மனிதனின் பகுத்தறிவின் மூலம் சரி/தவறுகள் வரையறை செய்யப்படவேண்டும் , இதில் கடவுளை கூப்பிட வேளை இல்லை.ஆன்மீகம் போலிகளுக்கு வழி வகுக்கிறது.இன்னும் பல...
சரி இந்த நாத்திக வாதிகள் சொல்லும் பகுத்தறிவு பெரும்பாலும் கடவுள் சம்பந்தப்பட்டது, இந்த பகுத்தறிவை புகுத்த முடியுமா?
என் அம்மாவின் அப்பா ஒரு திராவிடர் கழக செயல்வீரர். தந்தை பெரியாரால் தண்டவாளம் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர்.இவர் குழந்தைகளுக்கு கருப்பு சட்டை போட்டே வளர்த்தார். என் அம்மா திருமணம் வரையில் கருப்பு உடைகளைத்தான் அணிய வேண்டுமாம். ஆனால் இன்று என் அம்மா போகாத கோவில் இல்லை, பாக்காத ஜோசியன் இல்லை. இங்கு பகுத்தறிவை புகுத்தமுடியவில்லை. காரணம் பகுத்தறிவு புகுத்த முடியாது. ஆனால் பயத்தை ஏற்படுத்தி நிறைய விசயங்களை புகுத்துவது எளிது என்பதற்கு சொர்க்கம்,நரகமே உதாரணம்.
மிக எளிதாக சொன்னால் திருக்குறள் கடவுளால் எழுதப்பட்ட ஒரு வாழ்வியல் ஒழுக்க நூல் என்று புகுத்தப்பட்டிருந்தால் நிறைய பேரால் படிக்கப்பட்டிருக்கும் நான் உட்பட..
பெண்கள் எப்படி/எப்போது வழிபடுவது என்ற விதிமுறைகளை கூட ஒரு ஆண்தான் உருவாக்குகிறான்.இங்கே பேசப்படும் பெண்ணுரிமை கூட ஆண்களால் உருவாக்கப்பட்டது என்பதே ஒரு வியப்பான உண்மை.இதிலெல்லாம் மாற்றம் வருமா?.இங்கே ஒரு ஆண்மகன் பெண்ணுரிமை பேசுவது ஒரு மகளின் தந்தையாக இதுவும் பகுத்தறிவுதான்.
மாற்றம் பற்றி பேச நினைக்கும் போது பிள்ளையார் சாமி நினைவுக்கு வருகிறார். எனக்கு விநாயகரை பிடிக்கும் விநாயகர் உருவத்தில் அந்த தும்பிக்கை, பெரிய வயிறு மற்றும் அந்த எலிக்குட்டியை, கால மாற்றத்திற்கேற்ப ஓவியர்கள்,ஆத்திகர்கள் வரைந்தும் வழிபடுவதையும் பார்க்கலாம். காய்கறி தும்பிக்கை முதல் , கம்பியூட்டர் மவுஸ் வரை, இன்றைய அறிவியல் மாற்றம், உலகம் சூடாதல் போன்றவற்றை பிள்ளையார் உருவமாக மாற்றிக்கொள்வார். இதன் மூலம் பிள்ளையார் தெரிவிக்கும் செய்தியாக நான் எடுத்துக்கொள்வது மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள் என்பதே.
மாற்றம் அனைவரும் விரும்பும் ஒன்றே ஆனால் பயம் மாறவிடாது ஆனாலும் மாற்றம் நம்மையும் அறியாமல் நம் பகுத்தறிவையும் அறியாமல் நாம் எதிர்பார்க்காத விரும்பாத மாற்றமாயினும் அது நடந்தே தீரும்.
ஆத்திகம் கொடுத்த யோகா பொன்ற நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், நாத்திகம் சொல்லும் மூட நம்பிக்கைகள் பகுத்தறிவின் முலம் ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல வாழ்க்கை முறை கண்டுபிடிப்பது சாத்தியமே.
முரண்பாடுகள் நிறைந்த இந்த உலகில் மனித இனம் முரண்பாட்டோடுதான் இருக்கும், முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்வோம்.(மாற்றம் இதை மாற்ற முடியாதென்றே கருதுகிறேன்.)
நாம் வாழும் இந்த பூமிதான் சொர்க்கம், இதில் நரக வாழ்க்கை வாழாமல் இருக்கும் பகுத்தறிவை வைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழுவோம்.மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும் என நம்புவோம்.
இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மையாக விமர்சிக்க முடியுமா? இல்லை ஏனென்றால் நம்மிடம் இருக்கும் இந்த அறிவு நேர்மையானது இல்லை என்று நண்பன் ஒருவன் சொன்னது சரியோ என தொன்றுகிறது.
என்ன குழப்பிட்டனா? ஆமா ஏன் குழப்பினேன் தெரியல. இது மாறும்.
24 comments:
நான் தன் முதல்ல
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
/*
மாற்றம் நம்மை நல்ல வழிக்கு மாற்றிக்கொண்டு போகும் என நம்புவோம்
*/
நம்புவோமாக
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
//நசரேயன் said...
நம்புவோமாக
//
அப்ப, அண்ணன் சொன்னதை இத்தினி நாள் நம்பவே இல்லியா? அடக் கடவுளே!!!
/*
அப்ப, அண்ணன் சொன்னதை இத்தினி நாள் நம்பவே இல்லியா? அடக் கடவுளே!!!
*/
அரச கவி ஒரு முடிவோடதான் இருக்கார் :)
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
//இங்கே நான் உளறியிருப்பதை என்னால்/நம்மால் நேர்மையாக விமர்சிக்க முடியுமா? இல்லை ஏனென்றால் நம்மிடம் இருக்கும் இந்த அறிவு நேர்மையானது இல்லை என்று நண்பன் ஒருவன் சொன்னது சரியோ என தொன்றுகிறது//
பதிவை விமர்சிக்க வேண்டாம்னு indirect ஆ சொல்றீங்களா? :-)
smily போட்டுருக்கேன். கலாய்க்கறேன்னு direct and indircect ஆ சொல்றேன். ஆட்டோ அனுப்பிடாதீங்க
//நசரேயன் said...
அரச கவி ஒரு முடிவோடதான் இருக்கார் :)
//
சரியாச் சொன்னீங்க. டெக்சாஸ் பக்கமே போவக் கூடாது. அப்படியே போனாலும் மாறு வேசத்துலதான் போவனும். ஒதை வாங்க என்னால ஆவதுப்பா....
முதலில், இந்தாங்க ... இந்த 50 க்கு வாழ்த்து(க்)களைப் பிடிங்க.
சொர்க்கம் நரகம் எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. மனசு அமைதியா ஆனந்தமா இருந்தா சொர்க்கம். பிடுங்கி எடுத்தா நரகம்.
இந்தக் கணக்குலே பார்த்தால் எல்லார் மனசும் எதுக்காவது பிடுங்கி எடுக்கத்தான் செய்யுது.
அனைவரும் தற்சமயம் நரகத்தில் தான் இருக்கோம். அதில் அப்பப்பக் கிடைக்கும் சின்ன ஆசுவாசம் தப்பித்தவறி நம்ம கண்ணில் படும் நல்ல காட்சிகள். பதிவுகள்ன்னும் வச்சுக்கலாம்:-)
/*
சரியாச் சொன்னீங்க. டெக்சாஸ் பக்கமே போவக் கூடாது. அப்படியே போனாலும் மாறு வேசத்துலதான் போவனும். ஒதை வாங்க என்னால ஆவதுப்பா....
*/
சொல்ல முடியாது தேடி வந்தும் உதைப்பார்
//நசரேயன் said...
சொல்ல முடியாது தேடி வந்தும் உதைப்பார்
//
உங்களைத்தானே?!
/*
உங்களைத்தானே?!
*/
நியூஜெர்சி டு சார்லெட் கனைடிங் பிளைட்
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்னதெல்லாம் ஏற்கனவே ரொம்ப சிந்திச்சி, என்னோட சிற்றறிவுக்கு எட்டினவரை ரொம்பவும் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சி ஏதோ ஒரு கொழப்பத்தில தெளிவு அடைஞ்சவங்களில் நானும் ஒருத்தர்...ஏதோ நம்மை மாதிரி சிந்தனையாளர்களால தான் இந்த உலகம் கொஞ்சம் பொழச்சிருக்கு......
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!! நீங்க சொன்னதெல்லாம் ஏற்கனவே ரொம்ப சிந்திச்சி, என்னோட சிற்றறிவுக்கு எட்டினவரை ரொம்பவும் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சி ஏதோ ஒரு கொழப்பத்தில தெளிவு அடைஞ்சவங்களில் நானும் ஒருத்தர்...ஏதோ நம்மை மாதிரி சிந்தனையாளர்களால தான் இந்த உலகம் கொஞ்சம் பொழச்சிருக்கு......
அம்பதுக்கு வாழ்த்துக்கள்!
அண்ணே!
குடுகுடுப்பையரே ஐம்பதாவது வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா விரைவில் நூறாவது வலைப்பதிவை எதிர்பார்கிறேன்.
ரம்யா
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஆமா இப்ப என்னதான் சொல்ல வறீங்க.
என்ன குழப்பிட்டனா? ஆமா ஏன் குழப்பினேன் தெரியல. இது மாறும்.
குழப்புல சாமி, குழம்புன குட்டையில மீன் பிடிக்க சொல்றீங்க.
வாங்க நசரேயன், பழமைபேசி.
உங்களுக்குள்ள என்ன பெரிய சண்டை நடக்குது,கவலைப்படாதீங்க நான் தீத்து வைக்கிறேன். டெக்ஸாசுக்கு கொஞ்சம் புண்ணாக்கு வாங்கிட்டு வாங்க.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நசரேயன்
பழமைபேசி
T.V.Radhakrishnan,
கபீஷ்
துளசி டீச்சர்.
selwilki
ஜீவன்
ரம்யா
அமித்து அம்மா.
பகுத்தறிவு, பெண்ணுரிமை, பேரின்பம் அனைத்தையும் தன் ஆஸ்த்தியாகக் கொண்டுள்ளதே ஆஸ்திகம் என்பது.
உடல் நலனுக்கும் மனநலனுக்கும் அருந்துணையாக இருப்பது ஆன்மீகமே.
ஆன்மீகத்தின் அடிபடையான நல்லொழுக்கம், நற்பண்புகளுமே நமக்கு வேண்டிவற்றை அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியாகும்.
காஞ்சிமுனிவரின் அருளுரை "தெய்வத்தின் குரல்"லில் மூழ்கினால் அரிய பெரிய விஷயங்களை அள்ளிக்கொள்ளலாம்,
யாம் பெற்ற இன்பம் அனைவருக்கும் கிடைத்திட.......
http://www.kamakoti.org/tamil/
அண்ணே நார்மலா நீங்க 90 தான அடிப்பீங்க . 50 அடிச்சேஞ்குறீங்க???
:)))
வாழ்த்துகள் அண்ணே.
குடுகுடுப்பையாரே சூப்பர்.
நான் இன்று எழுதிய பதிவும் இதைப் படிக்காமல் எழுதியதுதான். இரண்டிலும் எண்ண ஒற்றுமைகள் நிறைய உள்ளன.
நம்புங்கள் நாரயணனை
Post a Comment