Sunday, November 2, 2008

என் புருசன் சொல்லப்பன்.

என் புருசன் சொல்லப்பன்.

சொல்லப்பன் ஒரு விவசாயக் கூலித்தொழிலாளி, மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தனது வாழ்க்கையை மிகவும் சிரமப்பட்டு ஒட்டிக்கொண்டிருந்தான்.கணவனும் மனைவியும் கூலி வேலை செய்து வசதியாக வாழமுடியாது என்று முடிவெடுத்து, ஊரில் ஒரு பெரிய கள்ளச்சாரய காய்ச்சும் பெரிய மனிதனிடம் காய்ச்சியாக வேலைக்கு சேர்ந்தான். விவசாயக்கூலியை விட பல மடங்கு சம்பளம். தனக்கு மட்டும் பிரத்தியோகமாக உயர்தர காய்ச்சி குடித்தல் என மகிழ்ச்சியான வாழ்க்கை.

தானும் முதலாளியாக ஆசைப்பட்டான், தனியே தொழில் ஆரம்பித்தான். நிறைய சம்பாதித்தான். நிலங்கள் வாங்கினான், விவசாயம் செய்தான்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மட்டும் இல்லை.அவர்களும் அப்பாவின் கள்ள /நல்ல தொழிலுக்கு உதவியாக இருந்தனர்.

ஒருமுறை வழக்கம் போல மார்கழி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தான். கோவிலில் சாமி கும்பிடுவதற்கு குளிப்பதற்கு கேணிக்குள் இறங்கி குளிக்கையில் இலுப்பு வந்து யாரும் கேணியில் இல்லாத நிலையில் காப்பாற்ற ஆளில்லாமல் மரணமடைந்து விட்டான்.

இறக்கும் போது சொல்லப்பன் வயது 40 இருக்கலாம். இறந்த கணவனின் உடலை பார்த்து கதறிய சொல்லப்பன் அவர் மனைவி செயத காரியம் தான் இது.

என் புருசன் சம்பாதிச்சவரு, அவருக்கு ரேடியா செட்டு கட்டனும், குறவன் குறத்தி டான்ஸ் வைக்கனும். இதுதான் அவர் அழுகையின் ஒரே லட்சியம்.

40 வயது சொல்லப்பன் மரணத்திற்கு ரேடியோ செட்டு வச்சாச்சு,புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.

இதனையெல்லாம் விட ஊரே கேட்குமளவுக்கு மைக்கில் சொல்லப்பன் மனைவியின் பெருமையான அழுகை, நீ சம்பாதிச்ச உனக்கு ரேடியா வெச்சிட்டேன், குறவன் குறத்தி டான்ஸ் வெச்சிட்டேன். உன் சாவுக்கு நீயே நெனக்காத அளவுக்கு கூட்டத்த கூட்டிட்டேன்.

40 வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்த ஒரு பாசமான கணவனை இழந்த இந்த பெண்ணின் அழுகையை அறியாமையில் சேர்ப்பதா? இல்லை பாசத்தில் சேர்ப்பதா?

17 comments:

பழமைபேசி said...

ஆகா! ஆகா!! ஆகா!!!

Anonymous said...

இந்த பதிவிற்கு வேறு அர்த்தம் ஏதும் இருக்கா? புரியவேயில்லை

குடுகுடுப்பை said...

வேறு அர்த்தம் எல்லாம் இல்லை, நடந்த/பார்த்த ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் பாசம் கலந்த பகட்டுதனம். காரணம் கல்வியறிவு இல்லாமை. அதை மட்டுமே சொல்கிறேன்.

குடுகுடுப்பை said...

Thooya said...

இந்த பதிவிற்கு வேறு அர்த்தம் ஏதும் இருக்கா? புரியவேயில்லை
/
உங்களின் துயரமே புரியாத எங்களுக்கு, எங்களின் பகட்டுத்தனம் புரியாமல் போவதில் வியப்பில்லை சகோதரி
/

விலெகா said...

புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி............

வன்மயாக கண்டிக்கிறோம்:-)))))))))))))

நசரேயன் said...

இது வரை காய்ச்சுன கள்ள சாராயம் வீணாக போக ௬டாதுனு ஊரில் இருக்கிற எல்லோரையும் ௬ப்பிடிருப்பா சொல்லப்பன் மனைவி.

தமிழ் அமுதன் said...

புதுக்கோட்டை ல எந்த
கரகாட்ட செட்டுன்னே?
''திலகவதி'' செட்டா ?

மன்மதக்குஞ்சு said...

இன்றைய காலகட்டத்தில் சில சமூகத்தில் உள்ள ஆடம்பர (கல்யாண) சாவு கொண்டாட்டங்களுக்கு இது தான் மூல காரணமோ?

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி said...

// ஆகா! ஆகா!! ஆகா!!!//

அப்படின்னா?

குடுகுடுப்பை said...

வாங்க விலெகா

// புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி............

வன்மயாக கண்டிக்கிறோம்:-)))))))))))))//

வேற எங்கேர்ந்து கூப்பிட முடியும்

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன் /

புதுக்கோட்டை ல எந்த
கரகாட்ட செட்டுன்னே?
''திலகவதி'' செட்டா ?/

அதெல்லாம் நமக்கு தெரியாது, ஆனா திலகவதி செத்த வீட்ல எல்லாம் ஆடாதாம்

குடுகுடுப்பை said...

வாங்க மன்மதக்குஞ்சு

/றைய காலகட்டத்தில் சில சமூகத்தில் உள்ள ஆடம்பர (கல்யாண) சாவு கொண்டாட்டங்களுக்கு இது தான் மூல காரணமோ?/

ஆடம்பர மோகம்தான் இந்த பெண்ணின் ஆட்டத்திற்கு மூல காரணம் என நினைக்கிறேன்

பழமைபேசி said...

வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பதிவு. இப்படியும் இருக்காங்க மக்கள் என்று தெரிந்துகோண்டேன்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.

கூட்ட்த்தில மொத ஆளா இருந்த் பார்த்து ரசித்ததா கேள்விப்பட்டேன். நிசமாவா

குடுகுடுப்பை said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

புதுக்கோட்டைலேர்ந்து குறவன்,குறத்தி ஆபாச நடனம், அதனை வேடிக்கை பார்க்க சொல்லப்பனுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத மக்கள் கூட்டம் சிரித்து , ஜொள் விட்டு ரசிக்கும் கூட்டம்.

கூட்ட்த்தில மொத ஆளா இருந்த் பார்த்து ரசித்ததா கேள்விப்பட்டேன். நிசமாவா//

ஆமாங்க இந்த பதிவு எழுதறதுக்கு ரிப்போர்ட் எடுத்துட்டு இருந்தேன். போதுமா?

rapp said...

அருமை, அறியாமை என்பதே என் கருத்து :(:(:(