நாஞ்சில் பிரதாப்™ 24 நவம்பர், 2010 7:11 pm
//தங்களின் தொண்டையில் மாட்டிய முள்ளாகிப்போனதை உணர்த்துகிறது.//
:))
சிலபேரு ஓபாமா ஊர்ல வேலைபார்க்கறதுனால தங்களையும் ஒபாமான்னே நினைச்சுட்டு இருக்காங்க அதான் பிரச்சனை... ஏன் அவங்களே இங்கவந்து இப்படி வாழ்ந்து காட்டட்டுமே...அதுக்கு மட்டும் கப்சிப்...இவங்கல்லாம் கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் பண்ற கோஷ்டிகள்...
//
ஒபாமா அதிபராக உள்ள் அஊரில் வேலை பார்ப்பவர்களின் ஒருவராகிய நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நானும் திருமணம் செய்துதான் வாழ்கிறேன் எனக்கும் லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகள் புரிகிறது, ஆனால் நான் சொல்வது என்னவென்றால் ஒருவன் லிவிங் டுகெதரில்(எந்த நாட்டிலும்) வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு இல்லை என்கிறேன். ஆனால் சிலர் "விபச்சாரம் விபச்சாரி" என்று கலாசாரத்தோடு பேசுகிறார்கள். இந்திய சுப்ரீம் கோர்ட் லிவிங் டுகெதர் தனிப்பட்டவர்களின் உரிமை/ தவறில்லை என்று கூறியிருப்பதாக அறிகிறேன், அந்த நீதிபதிகளும் திருமணம் ஆனவர்களாக இருக்கக்கூடும், லிவிங் டுகெதரில் நம்பிக்கை இல்லாதவர்களாவும் இருக்கக்கூடும், அதனை எப்படி அழைப்பார் நாஞ்சில் பிரதாப், மேலும் அவரிடம் இன்னொரு கேள்வி லிவின் டுகெதரில் இந்தியாவில் வாழும் யாரோ ஒருவரை எப்படி தடுப்பீர்கள்? அதற்கான செயல்முறை என்ன?
//கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் //
லிவிங் டுகெதர் விசயத்தில் எனக்கு உபதேசம் செய்யும் உரிமை இல்லை என்பதே என் நிலை? உபதேசம் செய்வது யார்? சொல்லலாமே?
ஜோதிஜி என்ற பதிவர் கூறுகிறார்
செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !
பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)//
எனக்குத் தெரிந்து லிவிங் டுகெதருக்கு ஆதரவாகவோ அல்லது அதை எதிர்க்க எமக்கு உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்தவர்கள் யாரும் யாரையும் விபச்சாரி/விபச்சாரம் செய்கிறவன் என்று கூறவில்லை, உலகத்தின் முகம் காட்டாமல் நப்பாசைகள் என்று கூறியிருக்கிறீர்கள். என்ன மாதிரி நப்பாசை என்று கூறலாமே.? தலையிட உரிமையில்லை என்பது நப்பாசையா?
லிவிங் டுகெதர் என்ற ஒரு ஒப்பந்ததில் வாழ்பவர்கள் உரிமையில் தலையிட எனக்கு உரிமையில்லை, அது எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் என் நிலை, தலையிட உரிமை இருக்கிறது என்பவர்களில் சிலர் விபச்சாரி/விபச்சாரம் என்று பிரச்சாரம் செய்வேன் என்று நாகரிகத்துடன் கூறி விட்டார்கள், மற்றவர்கள் எப்படி தலையிடுவீர்கள் என்று தெளிவாக விளக்கவும். ஜெயந்தி அமுதா கிருஷ்ணா போன்ற பதிவர்கள் மிகத்தெளிவாக லிவிங் டுகெதரில் வரும் ஆபத்தை விளக்கியிருந்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றி.
தனி மனித தாக்குதல் யாருடைய பெயரைக்குறிப்பிட்டும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவே இது பற்றிய என்னுடைய கடைசிப்பதிவு.
தொடுப்புகள்.
http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_2071.html
http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_24.html
22 comments:
/செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !
பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)///
நானும் படிச்சேன். லிவிங் டுகெதர் 25 வயசுக்காரங்கதான் பண்ணனும்னு எங்கயாச்சும் சட்டமா?
வானம்பாடிகள் said...
/செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !
பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)///
நானும் படிச்சேன். லிவிங் டுகெதர் 25 வயசுக்காரங்கதான் பண்ணனும்னு எங்கயாச்சும் சட்டமா?
//
நீங்க முகமும் காட்டிட்டீங்க, உங்களுக்கு 25 வயசும் இல்லை.
இந்த படம் எப்ப முடியும் ?
//நசரேயன் said...
இந்த படம் எப்ப முடியும் ?
//
முடியாதுன்னு சொல்லிட்டார் நசரேயன். நாம வேற பக்கம் போய் கமெண்ட் போடலாம் :))
இப்பிரச்சினையில் கபீஷ் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்!
//நாம வேற பக்கம் போய் கமெண்ட்
போடலாம் :))//
ஒரு கவுஜ போடுங்க கபீஷ் கும்மி அடிக்க வாரேன்
//உங்களுக்கு 25 வயசும் இல்லை.//
உமக்கே வயசு 25 இல்ல
// கபீஷ் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்!//
என்ன கருத்து சொன்னாங்க கருத்து கபீஷ் ?
//
ஒரு கவுஜ போடுங்க கபீஷ் கும்மி அடிக்க வாரேன்
//
இருங்க யார்கிட்டயாவது எழுதி வாங்கிட்டு வரேன்
அகில உலக முட்டாள் சங்கத்தின் அனுமதி இன்றி முட்டாள் என்ற சொல்லை தலைப்பில் உபயோகித்ததை வன்மையாக கண்டிகேறோம் .
இவன்,
செயலாளர்
அ உ மு ச
சிகாகோ
ஓபாமா நாடு
யாருக்கோ ரெண்டு பேருக்கு பெரிய சண்டை போலயிருக்கு! ஒபாமா இருக்க ஊர் எனக்கு சரியாத்தெரியாது. சிகாகோவா? இல்லை வாஷிங்டன் டி சி யா?
ரெண்டுபேருக்கு இடையில் உள்ள தனிப்பட்ட பிரச்சினையில் நான் என்ன சொல்ல முடியும்? :)
please take as "No comments!" as my conclusive comment here! :)
வருண் said...
யாருக்கோ ரெண்டு பேருக்கு பெரிய சண்டை போலயிருக்கு!//
யாருக்கும் சண்டையில்லை இங்கே, யாருடனும் சண்டை போடும் எண்ணமும் இல்லை என்பதை இந்தப்பதிவு என்னுடையது என்பதால் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த படம் எப்ப முடியும் ?
"இந்த படம் எப்ப முடியும் ?"
'முடிஞ்சாலும் முடியலாம், முடியாமலும் போலாம்.
ப்ளீஸ் டேக் இட் ஈசி.
ஆஹா! இங்குமா? திரும்பவுமா?? அதுவும் இவ்வளவு குரூடா எப்படித்தான் பேச முடியுதோ??!! என்ன ஏதென்னு கூட தெரியாம இன்னிக்கு பேசிட்டு நாளக்கி விளங்க ஆரம்பிக்கும் போது, எங்கே கொண்டு போயி வைச்சிக்கிறது அப்போ அப்படி பேசின வாய? சரி... சரி வளர்ச்சி ரெக்கார்ட்க்கு உதவும்னு எடுத்துக்க வேண்டியதுதான்.
குடுகுடு... ஒரு பர்சனல் ரெக்வெஸ்ட்... எல்லாத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை. தெரிந்ததை புரிந்து கொண்ட வாக்கில் முன் வைத்தோம். பயன்படுறப்போ படுத்திக்கட்டுமின்னு அடுத்த விசயத்திற்கு நகர்ந்திடுறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
குடுகுடு... ஒரு பர்சனல் ரெக்வெஸ்ட்... எல்லாத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை. தெரிந்ததை புரிந்து கொண்ட வாக்கில் முன் வைத்தோம். பயன்படுறப்போ படுத்திக்கட்டுமின்னு அடுத்த விசயத்திற்கு நகர்ந்திடுறது நல்லதுன்னு நினைக்கிறேன்.//
கண்டிப்பாக, நான் பொதுவாக எதிர்வினை ஆற்றுவதில்லை. இன்றே இப்படம் கடைசி.
//இன்றே இப்படம் கடைசி//
இப்படம் இன்றே கடைசின்னுதான வரும்?!
கொசுறு
//பழமைபேசி said...
//இன்றே இப்படம் கடைசி//
இப்படம் இன்றே கடைசின்னுதான வரும்?! //
நான் சின்ன வயசுல மாட்டுவண்டி பின்னாடி ஓடி கெஞ்சி கெஞ்சி வாங்கின நோட்டீசுல இன்றே இப்படம் கடைசின்னுதான் போடுவாங்க:))
http://thaniyan-thaniyan.blogspot.com/2010/11/blog-post_21.html
தங்கள் தாயை விபச்சாரி என்று அழைக்கும் லிவிங்-டுகெதர் பார்ட்டிகள் நன்றாக இருக்கட்டும்.//
இப்படி ஒரு கமெண்ட் எனக்கு .. நான் கீழே உல்லது போல் பதிலிட்டேன்..:) டேக் இட் ஈஸி.. புரியாமல பேசுகிறார்கள்.. அவ்வளவே..
------
Thank you Guys.. Keep criticising..Kindly dont stop..
Thats the only way women can outgrew..all these abuses.. Is it not?..
Carryon your wonderful job..:)
@ பயணங்களும் எண்ணங்களும்-
தனித்தனியாகவெல்லாம் வகுப்பு எடுக்க முடியாது. அப்படி இப்படின்னு குதிச்சிட்டு இருந்தாலும் மாற்றம் என்பது indispensable உருட்டித் தள்ளிக்கொண்டு கொண்டு போயி சேர்க்கிற இடத்தில சேர்த்திடும்...
லூசில விடுங்க!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தில் ஒரு மலைப்பிரதேசத்தில் கிராமவாசிகள் இன்னும் குகையில் வசிப்பதாகவும், திருமணம் என்று ஒன்னும் இல்லை அவர்கள் சமூகத்தில் என்றும் சொன்னார்கள்.
மாற்றம் என்பது indispensable உருட்டித் தள்ளிக்கொண்டு கொண்டு போயி சேர்க்கிற இடத்தில சேர்த்திடும்...//
Very true.
Post a Comment