Tuesday, August 25, 2009

வெள்ளை அண்டாத பல்

செங்கல்லை குழைத்துக் குழைத்து
பல்லில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த பல்லொன்றும்
வெள்ளையாகிவிடவில்லை ...

அன்று மட்டுமல்ல
என்றென்றும்
காவி தாண்டி
வெள்ளை நுழைவதில்லை ...

வெத்திலைக்கு ஒரு நிறம்
பாக்குக்கு ஒரு நிறம்
புகையிலைக்கு ஒரு நிறம்
சுண்ணாம்புக்கு ஒரு நிறம்
பான்பராக்கிற்கு ஒரு நிறம்
வெள்ளை தவிர எல்லாமுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய பல்
வண்ணங்கள் நிறைந்த இந்தப்பல்
நாற்றம் அடிக்காததில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சாராயக் குடுவையில்
பொங்கிச் சிந்திய கள்,பீர்,வண்ணமடித்த
நாட்டுச்சரக்கு குழப்பி
அடித்த பின்
சொத்தென்று கீழே விழுந்தேன்
தெளிந்து எழுந்து
செங்கல் தேடி குழைத்து
தேய்க்கப்பல் தேடினேன்
எங்கோ விழுந்து காணாமல் போயிருந்தது
வர்ணக் கலவைகளில் ...
வதைப்பட்டிருந்த
அந்த பல் செட்?!

ஒரிஜினல் பல் இங்கே

16 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Anonymous said...

//வர்ணக் கலவைகளில் ...
வதைப்பட்டிருந்த
அந்த பல் செட்?//

பொய்ப்பல்லுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம். :)

பித்தனின் வாக்கு said...

good and nice. sensedent potta nalla vellaiyakum, anna puthu pal set vangi podunga.

Unknown said...

இதுக்குப் பேர்தான் நக்கலா?

நட்புடன் ஜமால் said...

ஏன் ராஸா ஏன் ...

சந்தனமுல்லை said...

avvvvvv......

அடுத்த ட்ரெண்ட் இதுதானா!! :)))

Anonymous said...

ஒரு மனிதனின் அழகிய அடையாளம் சிரிப்பு...அதை மிளிரச் செய்வதில் பெரும் பங்கு இந்த பற்களுக்கு உண்டு... நல்லாயிருந்தது கவிதை புதுசாய்....

ஷண்முகப்ரியன் said...

:-)))!!

வால்பையன் said...

ப்ளீச்சிங் பவுடர் யூஸ் பண்ணி பாருங்க!,
கக்கூஸே வெள்ளையாகுதாமா!?

(பங்காளி படத்தில் மனோரமா சொன்னது)

அமிர்தவர்ஷினி அம்மா said...

you toooooo

:))))))))))))))

வெற்றி-[க்]-கதிரவன் said...

kavuja kavuja

Sanjai Gandhi said...

hehehe.. nalla irunga saami :)

சீமான்கனி said...

//தேய்க்கப்பல் தேடினேன்
எங்கோ விழுந்து காணாமல் போயிருந்தது
வர்ணக் கலவைகளில் ...
வதைப்பட்டிருந்த
அந்த பல் செட்?! //

haa....haa....hi...hi...:))))...
anne...nalla irukku anne....

குடுகுடுப்பை said...

நன்றி டிவியார்.
நன்றி சின்ன அம்மினி
நன்றி பித்தன்
நன்றி முகிலன்
நன்றி ஜமால்
நன்றி முல்லை
நன்றி தமிழரசி
நன்றி ஷண்முகப்பிரியன்
நன்றி வால்

குடுகுடுப்பை said...

நன்றி அமித்து அம்மா
நன்றி பித்துக்குளியார்
நன்றி சஞ்சய்
நன்றி சீமான்கனி

அது சரி(18185106603874041862) said...

வித்யாசமா இருக்கு....எங்கடா குடுகுடுப்பை பஞ்ச்சை காணோமேன்னு பார்த்தேன்...கடைசில் இருக்கு அது :0))