Tuesday, August 11, 2009

அறிவு.

ஹாஸ்டலில் போரடித்துப்போன அறிவு ஒருநாள் எங்களிடம் ,டேய் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒரு வாட்டி வாங்கடா, ரெண்டு மணி நேரத்தில வீட்டுக்கு போயிரலாம் .

சரிடா ஹாஸ்டல் சாப்பாடும் கடுப்பா இருக்கு நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் வரோம்டா,சாப்பாடு வெயிட்டா இருக்கனும். நான், ஷேக், மதிமாறன்,ஸ்டீபன் உட்பட ஆறு பேர் மேலூருக்கு அருகில் உள்ள அறிவின் குக்குக்குகிராமத்திற்கு சனி,ஞாயிறு சாப்பாட்டுகான பயணம்.

மேலூரில் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், அறிவு எங்களிடம் சொன்னான் பக்கத்து ஊருக்கு போற பஸ் போயிருச்சு நடந்துதான் போகனும், ஏழு கிலோமீட்டர்தான் ஒரு மணிநேரத்தில போயிரலாம்.

என்னடா சொல்ற?

அந்த நேரத்தில் அங்கே வந்த அறிவின் அப்பா, என்னடா அறிவு நீ எப்ப வந்த?

இப்பதான் வந்தேன் ,இவங்கெல்லாம் என்னோட படிக்கிறாய்ங்க, நம்ம ஊரை சுத்திக்காட்டலாம்னு கூட்டியாந்தேன்.

நல்லது , நான் மாட்டு வண்டிலதான் உரம் எடுக்க வந்தேன், உரத்தை ஏத்திட்டு நீங்க எல்லாரும் வண்டில போங்க தம்பிகளா வயசான நான் உங்க கூட வந்த நல்லா இருக்காது,நான் அப்புரமா வரேன்.
----------------------------------
அறிவின் ஊர் மொத்தம் 25 குடும்பங்களே உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம். அறிவு வீட்டு வாசலில் வண்டி நின்றவுடன் அறிவின் தம்பி நிலவும் அவங்க அம்மாவும் எங்களை வரவேற்றனர்.

ஏண்டா அறிவு சொல்லிட்டு வந்திருக்கலாம்லடா? காலை சாப்பாட்டுக்கு இட்லி தோசைக்கு ஊற வெச்சிருக்கலாம்லடா?

பரவாயில்லைம்மா நாங்க இருக்கிறத சாப்பிட்டுக்கறோம்.

என்னடா அறிவு இவ்வளவு சின்ன ஊரா இருக்கு.?

இப்ப இருட்டிருச்சு காலைல எந்திரிச்சி ஊர் சுத்தி பாப்பம்டா, நிறைய வயல் இருக்கு பெரியாத்துப்பாசனம் பச்சப்பசேல்னு இருக்கும்டா? அப்ப பாரு ஊரு பெரிசுன்னு சொல்வீங்கடா.!

அடுத்த நாள் காலையில் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.

எல்லாரும் செருப்ப கையில எடுத்துக்கங்கடா , கம்மாங்கரைலதான் சாமி இருக்கு செருப்பு போட்டு நடக்கக்கூடாது?

சரளைக்கல்லா இருக்கு குத்துமேடா?

அதெல்லாம் குத்தாது எல்லாம் சாமி நடக்கிற பாதை, நீ நடந்து பாரு குத்தாது...

என்ன நிலவு ஓரளவு விவசாயம் பண்றீங்க ? ஆனால் எல்லார் வீடும் குடிசை வீடாவே இருக்கே ஏன்?

வசதியெல்லாம் பரவாயில்லை, இங்க யாரும் அவ்வளவா படிக்கலை, அண்ணன் தான் முதன்முதலா இஞ்சினியரிங்க் படிக்குது, இந்த ஏரியாவில அடிக்கடி சாதி சண்டை வரும், அதுக்கு கோர்ட் கேஸ்னு செலவுக்கே நிறைய செலவு ஆகும், அதுக்காக மட்டுமே எங்க ஊரு சார்பா 25 லட்சம் ஃபண்டு இருக்கு.

என்ன சொல்றீங்க இதை வெச்சே எல்லாரும் ஒரு நல்ல ஓட்டு வீடு கட்டிக்கலாம், ரோடு போட்டுக்கலாம் வசதியை பெருக்கிக்கலாமே, ஏன் அந்த சாதி காரங்க கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இரண்டு பேரும் சேந்தே முன்னேறலாமே?

அது அப்படியே ஆகிப்போச்சு, நாங்க படிச்சு பெரிய ஆளாகி எதாவது நடந்தாதான் உண்டு.

'பாரதிராஜா இந்த ஊரை வெச்சி ஒரு படம் டிரெக்ட் பண்ணலாம்' - எங்களில் ஒருத்தன்

என்ன தம்பி இஞ்சினியருக்கு படிக்கறீங்க டிரெக்ட் அப்படிங்கறீங்க அது டைரக்ட், டைரக்சன்னு சொல்லனும்- அறிவின் பங்காளி வீட்டு அண்ணன்.

அவரு நல்லா இங்கிலீஸ் பேசுவாரு ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு-- நிலவு..

அது ஒரு கதை தம்பி மலேசியா அனுப்பறேன்னு ஒரு திருட்டு கும்பல் கிட்ட காச குடுத்து , கடைசில ஜெர்மனி ஜெயிலில் இரண்டு வருசம் இருந்தேன்.

----------------

மீண்டும் அறிவின் வீடு.

அறிவின் அம்மா எல்லாருக்கும் பசுமாட்டுத்தயிருடன் பழையசோறு கலந்து சிறிய வெங்காயத்துடன் எல்லாருக்கும் காலை உணவு தந்தார், அமிர்தமாக இருந்தது, மதியம் அறிவு வீட்டில் இருந்த சில நாட்டுக்கோழிகள் எங்களுக்கு உணவாகின, இரண்டு நாளும் இப்படியே கழிந்தது.

தம்பிகளா தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வாங்க? நம்ம நிலவு மேலூர்ல வெடிக்கடை போடுறான் அவன் கூட இருந்து பாருங்க.சும்மா படிச்சா மட்டும் போதாது நாலு விசயம் கத்துக்கனும் என்று அறிவின் அப்பா எங்களை தீபாவளிக்கு அழைத்தார்.

சரிங்க கண்டிப்பா வர்றோம். தீபாவளிக்கும் சென்றோம்,வெடிக்கடையில் நின்று நிலவோடு வியாபாரம் பார்த்தோம், இது போல பலமுறை அறிவு வீட்டில் பழைய சோறு,நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி என்று அடிக்கடி விருந்து வாடிக்கையாகிப்போனது எங்களுக்கு.

----

கல்லூரி இறுதியாண்டு முடிந்து ரிசல்ட் வந்து மார்க் சீட் வாங்கிக்கொண்டு வந்து பஸ் ஸ்டாப்பில் உள்ள கணேசன் கடையில் டீ சொல்லி விட்டு திரும்பினேன். அறிவும் அவங்க அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். என்னைப்பாத்து அறிவின் அப்பா கேட்டார் ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

19 comments:

நட்புடன் ஜமால் said...

ஜெர்மனியருதி போயி ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்காரு]]ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு.

(ம்)

கோவி.கண்ணன் said...

//ஏன் தம்பி வருசா வருசம் வீட்டூக்கு வந்தீங்க அறிவு ஒரு பரிட்சை கூட எழுதைலைங்கிற விசயத்தை எங்க காதுல ஒரு வாட்டி போட்டிருக்கலாமே என்றார்.

அறிவு வீட்டில் சாப்பிட்ட பழையசோறு புளித்த ஏப்பமாய் என்னமோ செய்தது எனக்கு//

:(

இது போல் நடப்பது உண்மைதான் என்று இந்தப் பதிவைப் படித்ததும் உணர்கிறேன்.

Anonymous said...

அறிவோட அப்பா எத்தனை கனவுகளோட இருந்திருப்பார்.

KarthigaVasudevan said...

நடந்த சம்பவங்களை விவரித்த விதம் நன்று;அண்ணே ரொம்பத் தேறிட்டிங்க,ஒரு நாவல் எழுதலாம் ...

:)

மதிபாலா said...

:((((

அறீவின் அப்பா போல் மிகப் பலர் இருக்கவே செய்கிறார்கள்...அனுபவப் பூர்வ உண்மை.

யாசவி said...

:-(

my collegemate too an arivyu

சந்தனமுல்லை said...

:(

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

இப்போ அறிவு என்ன செய்துக்கிட்டிருக்காருன்னு தெரியுமா குடுகுடுப்பை சார்?

வால்பையன் said...

//அனுபவம், கல்லூரி சாலை, சிறுகதை, புனைவு//

அனுபவம் சிறுகதையாகலாம், புனைவு எப்படி ஆவும்!

அப்போ அந்த அறிவு நீங்கதானா!?

Manjari said...

Very good Story!

நாஞ்சில் நாதம் said...

இப்போ அறிவு என்ன செய்துக்கிட்டிருக்காருன்னு தெரியுமா குடுகுடுப்பை சார்?

புல்லட் said...

ரொம்ப சோகம்... தின்ன பாவத்துக்கு அந்த பெடியனுக்கு படிக்க ஏதாவது வழி செஞ்சிருக்கலாமே? இப்பிடித்தான் நம்ம கம்பசிலயும்ஒரு கும்பல் இருந்தாங்க வீடுவீடூய் பொய் திண்டுட்டு இப்ப 2 பெர தவிர மிச்சம் எல்லாம் பாசாகி வெளில போட்டாங்க.. கெட்ட கொவம் வரும் எனக்கு

மருதநாயகம் said...

கடைசி வரியில் நெஞ்சை தொட்டுவிட்டீர்கள்

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//அனுபவம், கல்லூரி சாலை, சிறுகதை, புனைவு//

அனுபவம் சிறுகதையாகலாம், புனைவு எப்படி ஆவும்!

அப்போ அந்த அறிவு நீங்கதானா!?
//

ஐ லக் திஸ் கொஸ்டின்..இப்படி நுட்பமா கேள்வி கேட்டா நீங்க என்ன செய்வீங்க..??

Unknown said...

அறிவின் அப்பாவை நினைத்தால் அவன் வீட்டில் சாப்பிடாத எனக்கே புளித்த ஏப்பம் வருகிறது.. இது போல நிறைய பேர் உண்டு. பி.காம். படிப்புக்கு லேப் பீஸ் வாங்கி செலவு செய்தவன், எக்ஸாம் பீஸ், தேர்வுக் கட்டணம், லேப் பீஸ், சோதனைக்கூட கட்டணம் என்று பல வகைகளில் காசு வாங்கி செலவு செய்தவர்களை, பார்த்திருக்கிறேன் (அதில் ஒருவனை தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன்).

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி. அறிவு ஒரு கற்பனை அல்ல. ஆனால் பல விசயங்கள் கற்பனை. குறிப்பாக நிலவிற்கு அனைத்தையும் வருடா வருடம் எடுத்துச்சொன்னது இங்கே சொல்லவில்லை. அறிவு என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

ஷண்முகப்ரியன் said...

யதர்த்ததின் சோகத்தில் கூட எவ்வளவு வலிக்கும் கவிதை.வாழ்த்துக்கள்,சார்.

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...
யதர்த்ததின் சோகத்தில் கூட எவ்வளவு வலிக்கும் //

நன்றி ஷண்முகப்பிரியன் சார்