Wednesday, August 12, 2009

யாரு வெட்டிப்பய?

வாடா வாத்தி மவனே, ரொம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையேக்காணோம்.

இல்லடா கணேசா இப்பதான் மெட்ராஸ்லேந்து வந்தேன், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கணேசனின் அண்ணன் முருகேசன் வருகிறார்.

வாங்க தம்பி எப்ப வந்தீங்க, நல்லா இருக்கீங்களா, பேசிட்டு இருங்க நான் வயலுக்கு போயிட்டு வரேன்.

புதுக்கல்யாண மாப்பிள்ளை என்ன வயல் கியல்னு சொல்லிட்டு இருக்கீங்க.

அதுசரி அதெல்லாம் பாத்தா முடியுமா, அவசரமா ஒரு வேலை இருக்கு இந்தா வந்துர்றேன்.

அண்ணன்காரர் வயலுக்கு கிளம்பியவுடன், கணேசன் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபடியே... சத்தமாக

ஏய் நீலாவதி தீப்பெட்டி எடுத்துட்டு வா.

என்னடா அம்மாவ பேரு சொல்லி கூப்புடுற, அதுவும் சிகரெட்டு பத்த வைக்க தீப்பெட்டி கேக்கிற.

கணேசனின் அம்மா வருகிறார்.

"இந்தாடா, நீங்க எப்ப தம்பி வந்தீங்க, இவன பாத்தியளா ஒரு வேலையும் செய்யாம அம்மாவ தீப்பெட்டி எடுத்துட்டு வரச்சொல்லி சிகரெட் பதத வைக்கிறான். அவங்க அண்ணன் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல வயலுக்கு கெளம்பிட்டான்."

சரி சரி நீ உன் வேலையப்பாரு, ஒரு ஆளு மாட்டுனா போதுமே உடனே உன் பாட்டை ஆரம்பிச்சிருவியே.

சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..
..........

என்னடா கணேசா உங்க அத்தை மகன் கண்ணா பின்னான்னு பெருத்து போயிட்டான்.

அது ஒரு பெரிய கதைடா, படிப்பு சரியா வரலைன்னு படிப்ப நிறுத்திட்டு வயல் வேலைய பாத்துக்க சொன்னாங்க, வீட்டுக்கு வந்தப்புறம் அவன் டயட்டே மாறிப்போச்சு, இதுதான் அவனோட தினசரி டயட்டு

காலைல அஞ்சு மணிக்கு ஒரு குண்டான் பழைய சோறு, அப்புறம் அப்படியே பல்லு விளக்கிட்டு கடைவீதிக்கு வந்து முருவன் கடையில டிபன் பண்ணுவான். ஒரு இருவது புரோட்டா, 4 ஸ்பெசல் தோசை, கெட்டிச்சட்னி, சால்னாவெல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி சாப்புடுவான்.

அப்புறம் பதினோரு மணி வாக்குல முருவன் கடையில 10 வடை 10 போண்டா சாப்புடுவான். முருவன் கடைல காராசேவு, பக்கோடாவெல்லாம் சரியா இருக்காதுன்னு, கிட்னன் கடைல ஒரு 10-15 பொட்டலம் சாப்புடுவான். அவ்வளவுதான் காலை சாப்பாடு.

மத்தியானத்துக்கு இவந்தான் வயலுக்கு சாப்பாடு கொண்டு போறது,எங்கத்தை அம்பது பேருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா , தொட்டுக்க குடுக்கற கூட்டு/பொறியல்ல நாப்பது ஆள் தொட்டுக்கய இவனே சாப்புட்டுருவான், மிச்சம் உள்ளதைதான் வேலையாளுங்க சாப்புடனும், எல்லாரும் எங்கத்தைதான் கொஞ்சமா கொடுத்துவிடுதுன்னு நெனச்சிட்டு இருக்காங்க, ஒரு நாளைக்கு எங்கத்தை குடுமிய அறுக்காம விடுறதில்லைன்னு வெறிகொண்டு அலையுறாங்க.பாவம் எங்கத்தை உருளைக்கிழங்கு,கத்தரிக்காய்,கொத்தரங்காய்,வாழக்காய்னு மலிவா கிடைக்கிற காய்கறிய வாங்கி நல்லா தொட்டுக்க பண்ணி கொடுக்குது, நீலாவதி மாதிரி ஓசில கிடைக்கிற திருமாங்கீரையும்,ஆளக்கீரையும் உப்பு போட்டு அவிச்சி குடுத்தாதான் அவங்களுக்கு தெரியும்.கொஞ்சம் காரம்,புளிப்பு சேத்தா கஞ்சி கூட குடிச்சிருவாங்கன்னு அதைக்கூட சேக்கறதில்லை.

இருந்தாலும் உனக்கு உங்க அத்தை பாசம் அதிகமாதாண்டா இருக்கு, சரி அவ்வளவுதான் உங்காளு சாப்பாடா?

அப்புறம் வெள்ளரிக்காய், மாம்பழம் அப்படி ஏதாவது கடைவீதில வித்துச்சுன்னா அதுல ஒரு பத்து பாஞ்சு சாப்பிடுவான், ஒரு பத்து பாஞ்சு டீ குடிப்பான்.ராத்திரிக்கு ஒரு பருக்கை கூட சாப்பிடமாட்டான்,ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு தூங்கிருவான், காலைல அஞ்சு மணிக்கு எந்திருச்சு மூத்திரம் பேஞ்சிட்டு, பழைய சோத்துலேந்து ஆரம்பிச்சிருவான்.

நல்ல டயட்டுதாண்டா!!!!!!!!!!!!
......................

ஒரு மூன்று பேர் கணேசனின் அண்ணன் முருகேசனை கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு வந்தனர், பின்னாடியே ஒருவர் யமகாவை தள்ளிக்கொண்டு வந்தார்.

ஒன்னுமில்லை குட்டைகுளத்துக்கரைல ஓட்டிட்டு போகும் கப்பிக்கல்லு தடுக்கி வண்டிலேந்து விழுந்துட்டாப்ல கால்ல நல்லா அடிபட்டிருச்சு.
............
ஏண்டா என்னமோ வயலுக்கு போறேன்னு கெளம்புன, கக்கூஸ் போறதுக்கு குட்டைக்குளத்துக்கரைக்கு போறதுக்கு உனக்கு யமகா தேவைப்பட்டிருக்கு, உனக்கு அம்மா வேற சப்போட்டு. உன்னை சொல்லி குத்தம் இல்லை. உனக்கு ஒருத்தன் பொண்ணு குடுத்து ஒரு யமகா வேற வாங்கி கொடுத்துருக்கான் பாரு அவன சொல்லனும். நீலாவதி காச எடு உன் பெரிய மவன் கக்கூஸ் போயி காலை உடைச்சிட்டு வந்திருக்கான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவனும்.

நீ கெளம்புடா வாத்தி மவனே, ஒருநாள் கூட சும்மா ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா, இது மாதிரிதான் எதாச்சும் வேலை வந்துட்டே இருக்கு.

22 comments:

Nathanjagk said...

எளிமையான நடை, ஏகப்பட்ட நக்கல், சிக்கனமான ​சொற்கள், சிரிப்பூட்டுகிற வசனங்கள்.. அருமை!

Unknown said...

//.. சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..//

:-)

ஒரு நகைச்சுவை கதை!(அனுபவம்) முழுவதும் இழையோடிக்கொண்டே இருந்தது..

மருதநாயகம் said...

பூரா மண்வாசனையா இருக்கு

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//வாடா வாத்தி மவனே//
சுர்ன்னு இருக்குங்க.
வாத்தியார் மவனே என்று
சொல்லி இருக்கலாம்.
அவுங்க இல்லாம எப்படி நாம?
இல்லையா?
but nice story. keep it up

Unknown said...

பாஸூ நீங்க பேசாம வடிவேலுவுக்கு டயலாக் எழுத போவலாம்.. கலக்குரியலேப்பு..

Anonymous said...

//ஒருநாள் கூட சும்மா ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா,//

:)

அது சரி(18185106603874041862) said...

:0))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

நட்புடன் ஜமால் said...

சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..]]


யப்பா முடியல ...

குடுகுடுப்பை said...

ஜெகநாதன் said...
எளிமையான நடை, ஏகப்பட்ட நக்கல், சிக்கனமான ​சொற்கள், சிரிப்பூட்டுகிற வசனங்கள்.. அருமை//

நன்றி ஜெகநாதன்.

குடுகுடுப்பை said...

பட்டிக்காட்டான்.. said...
//.. சரி தம்பி நீங்க மெட்ராஸ்ல என்ன பண்றீங்க?

சும்மாதான் இருக்கேன்.

அப்ப நல்ல கூட்டாளிதான் இவனுக்கு நீங்க, என்னமோ போங்க..//

:-)

ஒரு நகைச்சுவை கதை!(அனுபவம்) முழுவதும் இழையோடிக்கொண்டே இருந்தது.//

நன்றி பட்டிக்காட்டான்

குடுகுடுப்பை said...

மருதநாயகம் said...
பூரா மண்வாசனையா இருக்கு

August 12, 2009 1:55 PM//

கருவாட்டு வாசனை பதிவு ஒன்னு போட்டுருவமா?

குடுகுடுப்பை said...

நன்றி அம்மிணி
அது சரி
டிவீயார்

சந்தனமுல்லை said...

:-))

ஆயில்யன் said...

//நீ கெளம்புடா வாத்தி மவனே, ஒருநாள் கூட சும்மா ரெஸ்ட் எடுக்க விடுறாங்களா, இது மாதிரிதான் எதாச்சும் வேலை வந்துட்டே இருக்கு. //

ரியல்லி ஊர்ல சும்மா இருக்கோண்ணுத்தான் பேரு ஆனா 24 ஹவர்ஸ் பத்தாது அம்புட்டு பிசியாயிருக்கும் :)

இது மாதிரி வெட்டிபய கேரக்டர்ஸ் பண்றவங்க கூடிய சீக்கிரம் பெரிய அரசியல் வியாபாரிகளும் ஆகிடுவாங்க அப்படிங்கறது நம்ம ஹிஸ்டரி :))))


ஊர் பேச்சு வழக்கு அருமை !

KarthigaVasudevan said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜெகநாதன் said...
எளிமையான நடை, ஏகப்பட்ட நக்கல், சிக்கனமான ​சொற்கள், சிரிப்பூட்டுகிற வசனங்கள்.. அருமை!


வழிமொழிகிறேன் :)))))))

Anonymous said...

:) :) :) :) :)...................

Jawahar said...

பர்சனலா பேசிக்கிற மாதிரி இருக்கு. அதனால எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்.

http://kgjawarlal.wordpress.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

நட்சத்திர வாழ்த்துக்கள்..

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி.

ரெட்மகி said...

ஒன்னுமில்லை குட்டைகுளத்துக்கரைல ஓட்டிட்டு போகும் கப்பிக்கல்லு தடுக்கி வண்டிலேந்து விழுந்துட்டாப்ல கால்ல நல்லா அடிபட்டிருச்சு.
//
சொந்த அனுபவுமோ (ஹி ஹி )