Thursday, October 2, 2008

குடுகுடுப்பைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம்.

வலையுலகில் அவருக்கு இவர் எச்சரிக்கை கடிதம்,இவருக்கு அவர் எச்சரிக்கை கடிதம் எழுதி விசாரித்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் சில நல்ல நட்பும் , பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. பிரச்சினை இல்லாத எச்சரிக்கை கடிதமாக என்னை எச்சரித்து நானே எழுதிக்கொண்ட கடிதம்.

கடவுளுக்கே ஒரு மொக்கை கடிதம் எழுதினாய், உனக்கு ஒரு கடிதம் எழுதி அதை படித்துப்பார்.

வீட்ல,அலுவலகத்தில ஆயிரம் வேலை இருக்கும் போது உனக்கு எதுக்கு வலைப்பதிவு எழுதுர வேலையெல்லாம். இதுவரைக்கும் எதையாவது உருப்படியா எழுதியிருக்கியா அப்படின்னு என்னைக்காவது சுய விமரிசனம் பண்ணி பாத்தியா?

ஒரு எழுத்தாளனுக்குள்ள எந்த அறுகதையும் உனக்கு இல்லைன்னு நண்பர் நாநா சொல்றது சரிதான்னு உனக்கு தோனலயா?

உன்னோட பதிவு இப்படியே தொடர்ந்தா வீட்ல சும்மா குழம்பு கூட கெடக்காம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கே அதை உணர்ந்தாயா?

மடிக்கணினியை மடியில் வெச்சு தமிழ்மணத்தில மேஞ்சு பின்னூட்டம் போடலாம். ஆனா நடு ராத்திரியில படுத்துக்கிட்டே நெஞ்சு மேல வெச்சி பின்னூட்டம் போடுறது, பதிவெழுதுறதெல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியலயா குடுகுடுப்பையாரே.

தங்கமணி உங்களுக்கு கிறுக்கு பிடிச்சுருக்கு கீழ்பாக்கத்தில சேக்கனும் அடிக்கடி சொல்றாங்களே அது உண்மையா இருக்குமோ.

“எனக்கு கிறுக்கு பிடிச்சா நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்”
“கிறுக்கு பிடிச்சா பிடிச்ச மாதிரி” (நம்பர் வேற தேவையா இதுக்கு).

இது தொடருமா? முற்றுமா? என்ன நடக்கும்னு எனக்கே தெரியலயே…

17 comments:

பழமைபேசி said...

நேத்து வரை அண்ணன் நல்லாத்தான் இருந்தாரு.... யாரோ பில்லி சூனியம் வெச்சிட்டாமாரித்
தெரியுது..... அண்ணே, பாத்து சூதானமா இருங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

;))))

செல்வ கருப்பையா said...

//“எனக்கு கிறுக்கு பிடிச்சா நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்”
“கிறுக்கு பிடிச்சா பிடிச்ச மாதிரி” (நம்பர் வேற தேவையா இதுக்கு).//
;-)))

//இது தொடருமா? முற்றுமா? என்ன நடக்கும்னு எனக்கே தெரியலயே…//
தொடர்ந்தா முட்டும். முட்டினா முற்றும். ஆண்டவா குடுகுடுப்பையாரை தமிழ்மணத்தில் இருந்து காப்பாற்று. அவர் தன்னை தங்கமணிகிட்ட இருந்து தன்னைக் காப்பாத்திக்குவாரு!

http://urupudaathathu.blogspot.com/ said...

அட இத பார்ரா ??

ஒ.. இப்படி கூட பதிவு போடலாமா??
தெரியாம போச்சே??
அண்ணன் முந்திகிட்டரே??

அது சரி said...

எல்லாருக்கும் நல்ல வாக்கு சொல்ற ஒங்களுக்கே இப்பிடியா?

எதுக்கும் ஒரு நல்ல டாக்டரை பாக்குறது? :0)

http://urupudaathathu.blogspot.com/ said...

கடவுளுக்கே ஒரு மொக்கை கடிதம் எழுதினாய், உனக்கு ஒரு கடிதம் எழுதி அதை படித்துப்பார்.///////


இது என்னங்க நியாயம்?? கடவுளுக்கு மட்டும் மொக்கை கடிதம், உங்களுக்கு நீங்க எழுதுறது மட்டும் நல்ல கடிதமா??? அதுவும் மொக்கையாக தான் இருக்கணும்.. இப்பவே சொல்லிப்புட்டேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

இது தொடருமா? முற்றுமா? என்ன நடக்கும்னு எனக்கே தெரியலயே…///////எனக்கு தெரியும் .. இது முத்திடுச்சு... முற்றும் தான்.. வேற என்ன??

http://urupudaathathu.blogspot.com/ said...

“எனக்கு கிறுக்கு பிடிச்சா நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்”///////

நீங்க கேக்க மாட்டீங்கன்னு தெரியும், ஆனா அதுனால பாதிக்க படுவது நாங்க தானே??

நசரேயன் said...

யாருக்குத்தான் கிருக்குப்பிடிசுருக்குனே தெரியலையே :)

Unknown said...

Anna r u alright?? ;))))

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணாத்த.. பின்னூட்டம் போட்டா அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டும்..

பண்ணலனா அப்புறம் பின்னோட்டம் போட மாட்டேன்..

இது எச்சரிக்கை... அது

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி

//நேத்து வரை அண்ணன் நல்லாத்தான் இருந்தாரு.... யாரோ பில்லி சூனியம் வெச்சிட்டாமாரித்
தெரியுது..... அண்ணே, பாத்து சூதானமா இருங்க....//

சொந்தமா வெச்சுகிட்டாதான் உண்டு

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி டிவிஆர்,செல்வ கருப்பையா
/தொடர்ந்தா முட்டும். முட்டினா முற்றும். ஆண்டவா குடுகுடுப்பையாரை தமிழ்மணத்தில் இருந்து காப்பாற்று. அவர் தன்னை தங்கமணிகிட்ட இருந்து தன்னைக் காப்பாத்திக்குவாரு!/

ஜக்கம்மாகிட்ட சொல்லிருகேன் என்ன நடக்கிதுன்னு பாப்போம்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
உருப்புடாதது_அணிமா
/அட இத பார்ரா ??

ஒ.. இப்படி கூட பதிவு போடலாமா??
தெரியாம போச்சே??
அண்ணன் முந்திகிட்டரே??//
நாம என்னா கருத்து கந்தசாமியா,அதுனால எனக்கே ஒரு லெட்டர் போட்டு உங்களுக்கி ரெண்டு பஞ்சு டயலாக் விட்டேன். மத்தபடி நீங்க எழுத நெரய இருக்குன்னா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அது சரி
//எதுக்கும் ஒரு நல்ல டாக்டரை பாக்குறது? :0)//

கோபே கட்ட காசு இல்லண்ணா. அதான் உங்கள மேரி இலவச டாக்டராண்ட வந்தேன்

குடுகுடுப்பை said...

“எனக்கு கிறுக்கு பிடிச்சா நான் சொல்றத நானே கேக்கமாட்டேன்”///////

நீங்க கேக்க மாட்டீங்கன்னு தெரியும், ஆனா அதுனால பாதிக்க படுவது நாங்க தானே??

இந்த் பஞ்சி டயலாக்க நீங்களும் use பண்ணிக்கலாம்னா, நான் கவலைப்படமாட்டேன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ஸ்ரீமதி,நசரேயன்
//Anna r u alright?? ;))))//
அண்ணி நல்லா இருக்காங்க போதுமா.


//யாருக்குத்தான் கிருக்குப்பிடிசுருக்குனே தெரியலையே :)
//
அதேதான் பதிலும்

//அண்ணாத்த.. பின்னூட்டம் போட்டா அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டும்..

பண்ணலனா அப்புறம் பின்னோட்டம் போட மாட்டேன்..

இது எச்சரிக்கை... அது
//
பின்னூட்டம் போடலண்ணா நைஜீரீயால நம்ம நண்பர்கள் ஆட்டோல வருவாங்க சொல்லிப்புட்டேன் ஆமா