Wednesday, May 30, 2012

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.


இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.

12 comments:

Unknown said...

ஒரு சாதிக்காரன திட்டுறது மூலமாக சாதி ஒழிந்து விடும்னு நினைகிரீங்களா ???
செஸ் விளையாட்டை பார்பனன் தான் கண்டுபிடித்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
பார்பனீயம் மட்டுமல்ல எல்லா சாதியையும் ஒழிக்க வேண்டும் ...இவன் அவன ஆட்சி செஞ்சா அவன் இன்னொருத்தன ஆட்சி செய்றான் ..இது தான் நம்ம நாடோட இன்றைய நிலைமை ......நல்ல கற்பனை வளம் பாராட்டுக்கள் ........பாருங்க....... விஸ்வநாத ஆனந்த கூட பார்பனர் என்று கூறி ஒரு சாதி வளையத்துக்குள கொண்டு வரீங்க ...முதலில் இது போன்ற குறுகிய பார்வையை விட்டு வெளியே வாருங்கள் .........

? said...

சூப்பர், சிரித்து மாளவில்லை.

ஆனாலும் பாருங்க,நம்மாளுகளுக்கு அநியாயத்துக்கு நகைச்சுவையுணர்வு கம்மி. முதல் பின்னூட்டமை உம்மை காலி செய்திட்டுது.

வருண் said...

***பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.***

///நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான்.//

இந்த கேடுகெட்ட என்கிற வார்த்தை வந்து உங்க ட்ரேட் மார்க் ஆச்சே? ஆனா காப்பி பேஸ்ட் பதிவுனு சொல்றீங்க. என்னவோ போங்க! :)

சார்வாகன் said...

அருமை சகோ,

அப்படியே,அதே மாதிரி ,அச்சு அசலா
கலக்கல்
இதனால்தான் முதல் பின்னூடம் சகோ ஏமாந்து விட்டார்!

நன்றி

தமிழ்சேட்டுபையன் said...

ஓ......செஸ் ஆனந்த் பார்ப்பனர் என்பதால்தான் யாரும் வரவில்லையா? வரவேற்க.......சச்சின் 100கோடிக்கு வீடு கட்டுவான், வெளிநாட்டு கார்க்கு வரிவிலக்கு கேட்பான் இருந்தாலும் பணம் வாங்கிட்டு தோத்தாங்குளி ஆவான் அவன் நல்லவன்னு ஒலகம் சொல்லும்.

vijay said...

oru matamana pathivu. Ipadi ellam pathivu poda room potu yosipeengalo. Ongaluku chess vilayada varati viturunga...athukaga epadiya. FYI am a non-brahmin.

KANTHANAAR said...

நான் உடனே என்னை குஜமுகவில் இணைத்துக் கொள்கிறேன்... காரணம் சமுதாயத்தில்
நிலவும் அக்கிரமம் தான்... செஸ் ஒரு பார்ப்பன விளையாட்டு என்பதால்தான் ஆனந்தை
சேர்க்கிறார்கள் அது ஒருபுரம்... போன வாரம் பாருங்கள் பவர் ஸ்டார் என்கிற உன்னதக்
கலைஞனுக்கு ஏற்பட்ட அவமானம்... அவர் பார்ப்பனர் இல்லையாம்... ஆனால் சமூகத்திற்கு
தேவைப் படும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு குட்டிகளோடு சல சலசல என்று
டூயட் பாட்டி நாட்டை திருத்துகிறார்.. நாளை சிஎம் ஆகப் போகிறவரை, பார்ப்பன விஜய்டிவி
பார்ப்பன கோபிநாத் இருவரும் கலாய்த்திருக்கிறார்கள்.. கமல் பவரின் கால் அளவுக்கு வர
மாட்டார்.. அவரை கொண்டாடுகிறார்கள்.. என்ன காலக் கொடுமை.. காரணம் கமல் பார்ப்பனர்
என்பதால்... அதே போல பெட்ரோலை அரபு பார்ப்பனர்க்ள்... அமெரிக்க பார்ப்பனர்கள் சேர்ந்து
டாலர் பார்ப்பனர் மூலம் வியாபாரம் நடக்கவேண்டும் என்பதால் உயர்த்துகிறர்ர்கள் அதனால்
பார்ப்பனரல்லாதோருக்கு எத்தனை சுமையை ஏற்றுகிறார்கள்..அதே போல சமீபத்தில் விலைவாசி
உயர்வுக்குக் கூட பார்ப்பன.................................................................................

சிந்திக்க உண்மைகள். said...

• சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க.

அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது

”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.


.

KANTHANAAR said...

ஏங்க.. வர்ணாஸ்ரமம் பார்ப்பன பெண்களகூட ஏத்துக்கறதில்ல.. அதனால என்ன... எவன் இந்து யிசத்தின் கோளாறுகள கவலை படுறான்.. அது அது அப்படியே பெரும் பகுதி பெரிதாகக் கவலைப் படுவதில்லை... உங்களைப் போன்ற சிலர் படித்துச் சொன்னாலும் அது பெரும்பான்மை மக்களை பாதிக்காத வரை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.. அப்படி பொருட்படுத்தினால் இந்துயிசம் இருக்காது...ஆக பெரும்பான்மை மக்களின் மனோவோட்டத்திலிருந்துதான் உங்கள் தியரியை வைத்துக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் நீங்கள் தான் மைனாரிட்டியாவீர்கள்.

பழமைபேசி said...

உம்ம பதிவைவிட ஓரிரு பின்னூட்டங்கள்?! முடியலைடா சாமி!! இன்னும் நசர் போன்ற ஆட்கள்.... அதான்... தலைப்பை மட்டுமே..... இஃகி இஃகி!!

பழமைபேசி said...

//ஆனா காப்பி பேஸ்ட் பதிவுனு சொல்றீங்க. என்னவோ போங்க! :)//

12 ஆண்டுகளுக்கு முன்னாடி தான் பதிவு செய்ததை இப்ப காப்பி டீன்னு சொல்றாரு குகு..

குடுகுடுப்பை said...

சிலருக்கு என் பதிவு புரியாமல் எழுதியிருக்கிறேன் என்பது என் எழுத்தின் தோல்வி.