மக்களாட்சி, ஊழல் முதலாளித்துவம் எல்லாம் பிரிக்க முடியாத புளிக்குழம்பு மாதிரி ஆகிவிட்ட நிலையில், ஊழலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, இந்த வருடத்திற்கான ஊழல் இவ்வளாக இருக்கும் என்று கண்காணிப்புக்குழு வைத்து அதற்குத் தகுந்தாற்போல் ஊழல் பணத்தில் தேர்தல் நடத்தி, ஒரு ஓட்டுக்குக்கான குறைந்த தொகை இவ்வளவு, அதிகமாக வேட்பாளரின் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானலும் கொடுக்கலாம் என்று அரசே நிர்ணயம் செய்தால், ஊழல் பணத்தை வெளிநாட்டில் பதுக்குவதை தடுக்கலாம்.
ஊழல் பணமும் மக்களுக்கே அளிப்பதன் மூலம் இது மக்களாட்சி என்றும் மார்தட்டிக்கொள்ளலாம். ஊழல் பணம் மக்களிமே வந்து சேர்வதால் அவர்களில் சிலர் முதலாளி ஆகலாம், தொழில் தொடங்கலாம், அவர்களில் திறமையானவர்கள் மக்களாட்சியை ஊழல் மூலம் நிர்ணயிக்கலாம், சிலர் வேட்பளாரகலாம் இப்படியான ஒரு சுழற்சித்தததுவமே நாட்டின் இன்றைய தேவை என்று கூறி என் சீரிய சிந்தனையை உங்கள் முன் வைக்கிறேன்.
4 comments:
சொ.கா.சூ. சட்டம் வந்து நாய்பேர ஊழல் பணம் பங்கு குடுங்கன்னு வருவாரு:))
இந்தாள் என்னங்க, எங்கியோ போட வேண்டிய பின்னூட்டத்தையெல்லாம் இடுகையாத் தேத்துறாரு?!
எதனா கழிவு விலையில குடுக்குறாய்ங்களா பாருங்க... வூட்டுக்கு வேணுங்றதை வாங்கிப் போடுங்க....போங்க..போங்க...
இந்த மாதிரி பதிவு போடுறதுக்கு ட்விட்டருக்கு வந்துருங்களேன்
ILA(@)இளா said...
இந்த மாதிரி பதிவு போடுறதுக்கு ட்விட்டருக்கு வந்துருங்களேன்
//
பரிசீலனைல இருக்கு, ஆனால் பெரிய ஆட்களெல்லாம் இருங்காங்க அதான் யோசிக்கறேன், வம்பு இலவசமா கிடைக்கும் போல தோனுது.
Post a Comment