Friday, November 5, 2010

நனவில் நிற்காதவை..

பெய்யாமழையில் நனைந்தாடும் ஈச்ச மரத்தின்
உதிராத இலைகளில்
வறண்டும்...
காய்க்கிறது காய்..

பாலையில்
புழுதி மண்ணாட்டி
புலர் பொழுதில்
அடித்து சென்ற காற்று
வரைந்து விட்டுப் போன
மணலோவியங்களில்
காலப் புள்ளிகளாக
ஒட்டகத் தடங்கள்

மெச்சுவதாயின் எனை மெச்சு
மணல் காற்றுக்கு ஈடு கொடுத்து
அடுக்காக நிமிர்ந்து நிற்கும்
ஒற்றை கள்ளி..

பேரீத்தம் பழத்திடம்
நெருங்கியமர்ந்து
பேரம் பேசும்
இரட்டை தேனீக்கள்..

வெப்பம் சுமந்த மண்ணில்
பெய்யாது நகர்ந்து போன
பொய் மேகம்..

இன்றோ
இந்தப் பிறவியில்..
நான் உண்ட பேரீச்சை..

பேரீத்தம் கொட்டை தாண்டி இலை வருகிறது
பனிமழை கொட்டியதும்
கொட்டியது இலை...



9 comments:

க ரா said...

இது எதிரா புதிரான்னுலாம் தெரியலிங்க.. ஆனா நல்லா இருக்குது :)

ILA (a) இளா said...

அது சரி உங்க ஊர்ல வெயில் எப்படிங்க?

வருண் said...

அதென்ன பொய்மேகம்? மழை கொடுக்காத மேகம் பொய் மேகமா?

ஆனா, பால்கொடுக்காத மார்பகத்தை பொய்னு சொல்ல மாட்டீக இல்லையா? இந்த மனுஷங்க இருக்காங்களே அவங்களுக்கு தேவையானத தரலைனா உடனே "பொய்" பட்டம் கட்டிருவாக! :(

யார் அந்த மனிதர்கள்னு கேக்காதீக,
நீங்களும், நானும், இளாவும் தான் :)

அந்த தேனிக்கள் ரெண்டு வேலைக்கார தேனிக்கள்தானே? டூயட் எதுவும் பாடலையே?

vasu balaji said...

அட அட. மெச்சுவதாயின் எனை மெச்சு..ஒற்றைக் கள்ளி... எளக்கியம்!! உமக்கொரு சவால்:))

வருண் said...

இதுல என்ன விஷேசம்னா ஒரிஜினல் கவிதைக்கும் 6 மதிப்பெண்கள்தான். நீங்க் அல்ரெடி 6 வாங்கியாச்சு! :)))

நசரேயன் said...

//இதுல என்ன விஷேசம்னா ஒரிஜினல் கவிதைக்கும் 6 மதிப்பெண்கள்தான். நீங்க் அல்ரெடி 6 வாங்கியாச்சு! :)))//

கு.ஜ.மு.க தலைவர்

கலகலப்ரியா said...

ஆகா... உருப்படியா ஒரு எதிர்க்கவுஜ... எனக்குப் புடிச்சிருக்கு...

sriram said...

எதுவும் புரியாததனால கவுஜன்னு ஒத்துக்கறேன், நெக்ஸ்ட் மீட் பண்றேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராஜ நடராஜன் said...

எதிர்க்கவிதையா இருக்குமோன்னு படிச்சிகிட்டே வந்தேன்.ஏமாத்தல:)