Wednesday, November 3, 2010

கோழி அப்டேட்ஸ் - (அசைவம்).

சமீப காலங்களில் தொப்பையை குறைக்கிறேன் என்று ஓட் மீல்ஸ், ஆஸ்பரகஸ் வாரம் இருமுறை மீன் இப்படியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், ஆனாலும் குறையவில்லை காரணம் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் கொடும்பசியில் பத்து தோசை வரை சாப்பிட்டதுதான்.

அதனால் மீண்டும் வழக்கம்போல் சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் தீபாவளி டின்னருக்கு அழைத்திருந்தார்கள், வழக்கமாக செட்டிநாடு உணவகத்திலிருந்து உணவு வரும், இம்முறை வேறு இடத்திலிருந்து வந்தது சுத்தமாக சுவையற்ற சைவ உணவு, கடுப்புடன் அடுத்தநாள் கொஞ்சம் சிக்கனை அவனில் பேக் செய்து சாப்பிட்டு, அன்றைக்கு மதியம் இருந்த ஒரு பிறந்த நாள் விருந்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகை கோழி உணவுகளையும் உண்டாயிற்று. ஞாயிற்றுக்கிழமையாகிய அன்றே ஹச் மார்ட் என்ற கடைக்கு சென்று இரால், போர்ஜி என்னும் ஒரு வகை மீன் வாங்கி ஞாயிறு இரவும், திங்களும் ஓடியது, திங்கள் இரவுக்கு இரால் செய்யும் முன் பசிக்கும் என்பதால் ,பசிக்கு ஸ்வதேசியில் மட்டன் பிரியாணி வாங்கித் தனியாக தின்றேன், எதுக்கும் இருக்கட்டும் என்று பேக்கப்புக்காக வாங்கிய சிக்கனும் இன்றோடு முடிந்துவிட்டது.

உடம்பு பற்றிய அக்கறை மீண்டும் எழுகிறது எனவே நாளை முதல் சப்வேயில் foot long வீட் பிரட்டுடன் டர்க்கி பேகன் சாண்ட்விட் சாப்பிடலாம் என்றிருக்கிறேன். சனிக்கிழமை ஹச் மார்ட்டில் ஒரு பெரிய மீனை வாங்கி சுட்டுத்திங்கவேண்டும் என்றும் தொன்றுகிறது, இப்படிப்பட்ட நினைப்புகளோடு தொப்பையைக் குறைக்கமுடியாது என்றும் தெரிகிறது.

டயட்டு டயட்டுன்னு சொல்றாங்களே அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யாராவது விளக்கம் குடுங்க சாமியளா?

22 comments:

க ரா said...

அது தெரிஞ்சா எனக்கும் நல்லா இருக்குமே :) யாராவது சொன்னா சொல்லுங்க :)

Anonymous said...

High protien, Low carb diets help to reduce weight. Try either Atkins (low carb) or Belly fat cure (medium carb). There are plenty of free info vailable on web about these diets.

Philosophy Prabhakaran said...

// டயட்டு டயட்டுன்னு சொல்றாங்களே அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யாராவது விளக்கம் குடுங்க சாமியளா? //

நான் கொடுக்குறேன் ஒரு சிம்பிள் டிப்ஸ்... எப்போல்லாம் பசிக்குதோ அப்போதெல்லாம் ஜூஸ் குடிங்க... அதாவது சத்துள்ள பிரஷ் ஜூஸ்... இப்படியே தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சாக்கூட போதும் நீங்க மாற்றத்த உணருவீங்க...

நசரேயன் said...

//High protien, Low carb diets help to reduce weight. Try either Atkins (low carb) or Belly fat cure (medium carb). There are plenty of free info vailable on web about these diets.//

யோவ் உம்ம கடைக்கு எல்லாம் இப்படி உருப்படியா பின்னூட்டம் போடுறாங்களே ?

நசரேயன் said...

//அது தெரிஞ்சா எனக்கும் நல்லா இருக்குமே :) யாராவது சொன்னா சொல்லுங்க ://

ராமசாமி ன்னு பேரு இருக்கிறவங்களுக்கு சொல்ல மாட்டாங்களாம்

ப.கந்தசாமி said...

முடியாததுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாதுங்க.

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

வருண், என்னை நெம்ப நல்லவன்னு சொல்லிட்டாரே??அவ்வ்வ்.....

sriram said...

இதெல்லாம் ஆவரதில்ல, இமேஜ மெயிண்டெயின் பண்ண வேணே டிப்ஸ் சொல்றேன் -
1. பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன எடுத்த போட்டோவை ப்ரொஃபைல்ல போடுங்க
2. இப்போ போட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது ராமசாமி மாதிரி நிக்காம மூச்சை இழுத்து பிடிச்சிக்கிட்டு நில்லுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

iniyavan said...

நண்பரே!!,

இதைப்பற்றி நான் எழுதிய கட்டுரையை படித்து பாருங்கள்:

http://www.iniyavan.com/2010/10/abs.html

Ravichandran Somu said...

//பத்து தோசை வரை சாப்பிட்டதுதான்.//

நல்ல டயட் பிளான்... இப்படியே மெயிண்டன் பண்ணுங்க. தொப்பை தானா குறைஞ்சிடும்:)))

a said...

பிரபல பதிவராவது எப்படினு கேட்டா சொல்லுவாங்க.......... அத்த விட்டுட்டு..........

vasu balaji said...

அட! என்னுங் தலைவரே! இது ரொம்ப சிம்பிள். எப்பல்லாம் கோழி சாப்டணும்னு தோணுதோ அப்பல்லாம் வாங்கி நசரேயனுக்கு கொடுங்க. கண்ணுகொட்டாம பார்த்துட்டிருந்தா வயத்தெரிச்சல்ல கலோரியெல்லாம் கரைஞ்சிடும். நசரேயன் பழமைக்கு. பழமை சேதுவுக்குன்னு மாத்தி மாத்தி விளையாடிக்கலாம். :))

கலகலப்ரியா said...

பார்த்து... மனம் ஒரு குடுகுடுப்பைன்னு யாராவது சொல்லி வைக்க போறாய்ங்க...

வருண் said...

***டயட்டு டயட்டுன்னு சொல்றாங்களே அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யாராவது விளக்கம் குடுங்க சாமியளா? ***

உங்களுக்கு டயட் ஒத்து வராது போல இருக்கு! பேசாமல் ஒரு நாளைக்கு ஒரு 8 மைல் ரெகுலரா ஓடுங்க! (ட்ரெட் மில் ல னாலும் பரவாயில்ல ஒரு 600 காலரி எரிங்க!)

ILA (a) இளா said...

ஓஹ், யூ டோண்ட் நோ டயட்? யூ சீ.. ஐ சீ.. யா... லெட்ஸ் டூ திஸ்.. ஹ்ம்ம். காட் இட்.. பை தி வே.. லெட் யூ நோ சம்திங்க்., யெஸ்.. காட்ச்சா?

ILA (a) இளா said...

யோகேஸ், நாம எப்படி போட்டோவுக்கு போஸ் குடுத்தோன்மு தெரிஞ்சா எல்லாரும் முயற்சி பண்ணிருவாங்க. அப்புறம் நம்ம ரகசியம் வெளியே தெரிஞ்சிரும். நசரேயன் நீங்களும் சொல்லாதீங்க

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் நன்றி.

குடுகுடுப்பை said...

என். உலகநாதன் said...
நண்பரே!!,

இதைப்பற்றி நான் எழுதிய கட்டுரையை படித்து பாருங்கள்:

http://www.iniyavan.com/2010/10/abs.html//

குரோம் வானிங் கொடுக்கிறார். சரி பண்ணுங்க

ILA (a) இளா said...

//எல்லாருக்கும் நன்றி//
என்னத்தை கையப் புடிச்சி இழுத்தியா?

பித்தனின் வாக்கு said...

அது ஒன்னும் பெரிய விஷய இல்லிங்க சார், காலை எழுந்தவுடன் ஒரு சொம்பு தண்ணி குடிச்சுட்டு ஆபிஸ் போகனும், இரண்டு பிஸ்கட் ஒரு கப் பால் போதும், பின்னர் மதியம் நேர கேஃப் சிக்கு போயி அங்க கோழி திங்கறவங்களை வேடிக்கை பார்த்து விட்டு, சுடு சோத்துல கொஞ்சம் எதாவது ஒரு கீரையும் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு மாலை கொறிக்க ஒரு அஞ்சு ரூவா வேர்க்கடலை மட்டும் கொறித்துப் பின்னர் இரவு நாலு இட்டிலி அல்லது ரெண்டு சப்பாத்தியும் சாப்பிட்டு ரொம்ப தாராளமா ஒரு சொம்பு தண்ணி குடித்து படுக்கலாம். இவ்வளவுதாங்க டயர்ட்,

பின் குறிப்பு: என்னால இருக்க முடியலை, அதான் உங்களுக்கு சொல்லி விட்டேன். உங்களுக்கு அசைவம் மாதிரி எனக்கு பானி பூரி, போல் பூரி, சென்னா சுண்டல், பட்டாணி சுண்டல், மசால பொறி, காரப் பொறி, நேந்திரம் சிப்ஸ் என்று எதையாவது கொறித்து வயிறு வளர்க்கின்றேன்.