Friday, September 24, 2010

பாநிதாவுக்கு ஒரு மொக்கை வேண்டுகோள்.

முதலில் இந்த வேண்டுகோளை தமிழ்ப் பத்திரிகைகளில் தான் எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இந்த எழவெடுத்த பத்திரிகைகாரங்க யாரும் என்னை ஏறெடுத்துக்கூட பாக்கமாட்றாங்க, அதுனால நவ்வி மொழில நான் முதன்முதலில் பாநிதாவைப்பற்றி எழுதி விமர்சனக்கட்டுரை பண்டோரா தேசத்தில வெளியானது. நவ்வி மொழி என்று நான் கருதி எழுதியதை இதுவரை யாருமே படிக்காததால், எனக்கே எனக்குன்னு இருக்குற கு.ஜ.மு.க விலேயே தமிழ்ப்படுத்தி எழுதவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

விமர்சனத்துக்கு போகுமுன் ஒரு விசயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கனும், என்னை பண்டோரா தேசத்திற்கு கூட்டிட்டு போன பாண்டா ஒரு உலகத்தரமான இலக்கிய ரசிகன் என்று அறியமுடிந்தது, தமிழ் வாசகனை நினைக்கும்போது எனக்கும் வாந்தியும் வந்தது, சாராயம் கிடைக்காதுன்னு வந்த வாந்தியை அடக்கிக்கிட்டேன்.பண்டோரா தேசத்தில வாரிஸ்னு ஒரு நகரம், அங்கேதான் என்னைப்போன்ற இலக்கிய விமர்சகர்களை ரவுண்டு கட்டி உட்கார வைச்சி சரக்கு ஊத்திகுடுத்து லக்கியத்தை பத்தி உளறச்சொன்னாங்க, நகரம்னா அதுதான் நகரம், சாராயம்னா அதுதான் சாராயம், அதுலேயும் உப்பே இல்லாத அந்தக்கருவாட்டு ருசி சொல்லி மாளாது, அனுபவிச்சாதான் தெரியும்.

இப்ப விசயத்துக்கு வரேன், உங்களோட இந்தக்கால எழுத்துக்களை படிக்கும் போது நீங்களும் ரிட்டையரான தமிழ்பிளாக்கர் மாதிரி பொதுக்கழிப்பிடத்துக்கு போகாம வாய்க்கா வரப்புல கக்கா போகிற மாதிரி உங்கள் எழுத்துக்கள் இருக்குன்னு எனக்கு தோனுது, இதையெல்லாம் படிக்கும்போது, உங்களோட ஜீரா டிகிரில நீங்க எப்படியெல்லாம் டிகிரி காப்பில சீனி போட்டு சுவையாக்கனும்னு எழுதிருந்தத நெனச்சா, தஞ்சாவூர் காபி பேலஸ்ல கடன் வெச்சு குடிச்ச காப்பி எனக்கு இன்னைக்கு ஞாபகம் வருது, அதுவுமில்லாம மூனாவது அத்தியாயத்தில கருப்பட்டி காச்சி ஜீரா காப்பி போடுறது எப்படின்னு சொல்லிருந்தீங்க அன்னையிலேந்து கள்ளு குடிக்கறதையே விட்டுட்டேன் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட கூடாதுன்னு, அந்த அளவிற்கு பாதித்த உங்கள் எழுத்துக்கள் எங்கே?

பாம்புக் கவிதைகளில் வருமே ஒரு வரி, இப்ப நினைச்சாலும் மனசு படம் எடுக்குது

சட்டையவுக்கும் பாம்பே
நீ ஏன் ஜட்டி அவுப்பதில்லை
கலாச்சார காவல் பாம்புகளும் உண்டா?

இந்த மாதிரி வீர வரிகளை உங்களைத் தவிர வேறு யாரல் எழுதமுடியும், எங்கே தொலைந்தது உங்கள் எழுத்து?

முந்தாநாள் ஒரு கன்னட நண்பன் கூப்பிட்டான், பாரு கன்னடாவில உங்கள் எழுத்து வந்திருக்குன்னு சொன்னான், நானும் படிச்சிப்பாத்தேன், எடியூரப்பாவை திட்டி குமரசாமி திட்டுன எழுத்தும்,நீங்கள் எழுதிருந்ததும் ஒரே மாதிரி இருந்தது, அப்புறந்தான் தெரிஞ்சது எனக்குக் கன்னடம் படிக்கத்தெரியாதுங்கிற விசயமே. அப்புறம் எப்படி அது இன்னாரு எழுதுனாங்கன்னு தெரியும்னு கேக்கறீங்களா? அதான் பெரிசா படம் போட்டிருந்தாங்கள்ள.

எது எப்படியோ எழுத்துலக வாசிப்பே இல்லாமல் நானும் ஒரு விமர்சனம் எழுதிட்டேன். ஏன் எழுதினேன்னா ரொம்ப நாளா கடை தொறக்கலை சும்மா கூட்டம் சேக்கத்தான்னு சொல்லித்தெரியுற நிலைமையிலேயா தமிழ் வலை வாசகன் இருக்கிறான்.

7 comments:

vasu balaji said...

ஏன் எழுதினேன்னா ரொம்ப நாளா கடை தொறக்கலை சும்மா கூட்டம் சேக்கத்தான்னு சொல்லித்தெரியுற நிலைமையிலேயா தமிழ் வலை வாசகன் இருக்கிறான்.//

அதானே:)). தளபதியோட தீவிர இலக்கியவெறிக்கு எதிர் வெறின்னு வச்சிக்கலாமா?

நசரேயன் said...

// ஏன் எழுதினேன்னா ரொம்ப நாளா கடை தொறக்கலை சும்மா கூட்டம் சேக்கத்தான்னு சொல்லித்தெரியுற நிலைமையிலேயா தமிழ் வலை வாசகன்
இருக்கிறான்//

இதெல்லாம் ஒரு பொழைப்பா ?

ILA (a) இளா said...

//இதெல்லாம் ஒரு பொழைப்பா ?//
இப்படி கேட்குறதெல்லாம் ஒரு பொழப்பா?

Unknown said...

தலைவரே நம்ம பொதுக்குழுவுல பேசின மாதிரியே செய்யறீங்களே.. கூடிய சீக்கிரம் அவரை கட்சிய விட்டு கட்டம் கட்டிரலாம்..

குடுகுடுப்பை said...

முகிலன் said...
தலைவரே நம்ம பொதுக்குழுவுல பேசின மாதிரியே செய்யறீங்களே.. கூடிய சீக்கிரம் அவரை கட்சிய விட்டு கட்டம் கட்டிரலாம்..

//

நான் வாயத்தொறந்தது சாப்பிட மட்டும்தானேய்யா , அதுக்கே இப்படி புரளிய கெளப்பி விடுறீங்களே. தி.கு.ஜ.மு.க விலேந்து எந்தப்பதவியும் இப்போதைக்கு பறிக்கப்படாது. விஜய டி ராஜேந்தர் மற்றும் சமக கட்சியுடன் விரைவில் கூட்டனி பேச்சு வார்த்தை தொடங்கும் நேரத்தில் உட்கட்சி பூசல் வேண்டாம்

ஜோதிஜி said...

நண்பா தொடர்பு கொள்க.

நீங்களுமா?

texlords@gmail.com

Unknown said...

என் இனிய நல்வாழ்த்துக்கள்!