Monday, September 6, 2010

நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.

சில வருடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரத்தில் வசித்தபோது,மீன் வாங்கலாம்னு நண்பர்களோடு ஆசியா மார்க்கெட் போனேன்.மீன் வாங்க போன இடத்துல பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி எனக்கு பிடிச்ச நண்டு உயிரோட கெடச்சது.

அமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை. உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது. ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.

இப்ப உயிரோட இருக்க நண்ட எப்படி உடைக்கிறது, எல்லாருக்கும் நண்டு கடிச்சுருமோன்னு பயம் , ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிங்ல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.

நண்டு சுலபமா உடைச்சாச்சு, அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயாயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.நண்டு உடைக்கிறது எப்படின்னு இப்போ அவரு சொல்லிருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்கும்.

நண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி? பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க அது மாதிரி பண்ணி பாப்போம். சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.

ஒரு வழியா நண்டு கொழம்பு வெச்சாச்சு, நண்டு குழம்பு வாசம் தூக்குது,நம்ம மக்கள் இருக்கிற பீரெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட தயார், ஒவ்வொருத்தரும் குழம்பு வாசம் கும்முன்னு இருக்கு நண்டு உடைச்சி சாப்புட்டு இன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க. எல்லாருமா சேந்து எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிள்ல வெச்சிட்ட்டோம்.

டேய் குழம்பு வாசம் ஆள தூக்குது அப்படியே இன்னோரு ரவுண்டு பீர உட்டுகிட்டே சாப்பிடுவோம் அப்படின்னு சில பேரு சொன்னாங்க.
பேசிட்டிருக்கும்போதே நம்ம டேட்டாபேஸ் நண்பர் எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட ஆரம்பிக்கிறேன்னார், சரி நீங்க குடிக்க மாட்டீங்க் சாப்பிட ஆரம்பிங்க நாங்களும் சேந்துக்கறோம்.

டேட்டாபேஸ் நண்பர் சாப்பாட்ட போட்டு ஒரு 90% நண்டு குழம்ப எடுத்து ஊத்திட்டு போயிட்டாரு. மத்தவங்களுக்கு குழம்பு தொட்டு நக்கற அளவிலதான் இருக்கு, எல்லாரும் ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாக்கிறோம்.என்னடா எல்லாத்தையும் டேட்டாபேஸ்ல லோடு பண்ணிட்டாரு.

வேற வழி, இருக்கிறத வெச்சி எல்லாரும் சாப்பிட்டோம், ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு எல்லாரும் பாராட்டுனாங்க, எனக்கும் பயங்கர சந்தோசம். என் தெறமய ரொம்ப மதிச்சு 90% குழம்ப சாப்பிட்ட டேட்டாபேசும் நம்மள கொஞ்சம் அதிகமாவே பாராட்டுனாரு.

அடுத்த நாள் அலுவலகத்தில ஒரு பதினொரு மணி போல நாங்க எல்லாரும் பேசிட்டுருந்தோம், டேய் குடுகுடுப்பை நண்டு குழம்பு வயித்த கலக்கிருச்சு அப்படின்னாங்க. அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ் நண்பர் ஆமாம் பாசு எனக்கும் வயிர கலக்கிருச்சுன்னாரு..

41 comments:

புதுகை.அப்துல்லா said...

ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.
//

தீவிரவாதி குடுகுடுப்பையார் ______

:))

புதுகை.அப்துல்லா said...

நண்டு சுலபமா உடைச்சாச்சு,

//

மீண்டும் மீண்டும் வயலன்ஸ்

புதுகை.அப்துல்லா said...

அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.

//

வன்முறைப் பாதைக்கு அடுத்து ஓரு ஆளையும் கேன்வாஸ் பண்ணியாச்சு

:))

புதுகை.அப்துல்லா said...

சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.
//

இதுல கெட்ட பசங்க சகவாசம் வேற

:))))

புதுகை.அப்துல்லா said...

இன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க.

//

ச்சே என்ன ஓரு வெறி பிடித்த கூட்டம்

:)))

புதுகை.அப்துல்லா said...

அட மீ த ஃபர்ஸ்டு, செகந்து, மூணு, நாலு, பிப்த்து எல்லாம் நாந்தானா?

ஓ.கே ஓ.கே போய்ட்டு வர்றேன்

:))))))

பழமைபேசி said...

படிச்ச ஒடனே வயிறு குலுங்குச்சு....இப்ப கலங்குது...போய்ட்டு வாறேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவை படிச்ச எனக்கும் வயித்த கலக்குது

அட சிரிச்சு சிரிச்சுங்க.

வெண்பூ said...

செம காமெடி.. ஆனா ரொம்ப சுருக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு..

குடுகுடுப்பை said...

வாங்க புதுகை.அப்துல்லா

ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.
//

தீவிரவாதி குடுகுடுப்பையார் ______

:))

//

அய்யா என்ன விட்டுருங்கோ.

நசரேயன் said...

சாப்பிட்டவங்களுக்கு மட்டும் வயறு கலக்களை, படிச்சா எங்களுக்கும் தான் ..

நசரேயன் said...

குடுகுடுப்பையார் ஊருக்கு வந்த உடனே விலங்குகள் வன்முறை சட்டத்துல கைது செய்ய மேனகா காந்தி ஏற்ப்பாடு பண்ணிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-))))

குடுகுடுப்பை said...

//புதுகை.அப்துல்லா said...

சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.
//

இதுல கெட்ட பசங்க சகவாசம் வேற

:))))//

நான் ஹாட் மட்டும் தான் அடிப்பேன்:)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி
// படிச்ச ஒடனே வயிறு குலுங்குச்சு....இப்ப கலங்குது...போய்ட்டு வாறேன்...//

சீக்கிரம் வாங்க.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA
//பதிவை படிச்ச எனக்கும் வயித்த கலக்குது

அட சிரிச்சு சிரிச்சுங்க.//
நன்றிங்க.

அது சரி said...

//
அமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை.
//

அப்பிடின்னா, சமைக்காம அப்படியே சாப்டிருக்கீங்களா??

//
உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.
//

என்னா ஒரு கொலை வெறி!

//
ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.
//

மாஸ் மர்டர்! இதை தான் குரூப்பா சேந்து கொலை செய்றதுன்னு சொல்வாங்க!

//
முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.
//

பண்றது கொலை. இதுல எதுகை மோனை வேறயா??

//
அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ்
//

அது என்ன உங்க நண்பர்கள் எல்லாம் வித்தியாசமா டிரஸ் பண்றாங்க? அன்னைக்கி ஒருத்தர் பச்ச ஜீன்ஸு, இன்னிக்கி சாக்லேட் கலர் பேன்டு!

உங்கள சுத்தி எப்பவும் கலர் ஃபுல்லா இருக்கும்னு சொல்லுங்க!

//
நண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி? பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க ..
//

இவ்வ‌ள‌வு சொன்னீரு..அந்த‌ ரெசிப்பியை சொன்னா நாங்க‌ளும் நாலு ந‌ண்டை வாங்கி ஒடைப்ப‌ம்ல‌? ஏன் இப்பிடி ர‌க‌சிய‌ம்??

உங்க‌ எல்லாருக்கும் இன்னொரு விஷ‌ய‌ம்.. பொது எட‌த்துல‌ ந‌ண்டு பிடிக்கிற‌து, ந‌ண்டு வாங்கிற‌து எல்லாத்தையும் த‌டை ப‌ண்ண‌ போறாங்க‌ளாம்..சினிமாவுல‌யும் இனிமே மீன் பிடிக்கிற‌து, ந‌ண்டு பிடிக்கிற‌ காட்சி எல்லாம் காட்ட‌க்கூடாதாம்...

அது சரி said...

யோசிச்சி பார்த்தா... நான் இதுவரை நண்டே சாப்பிட்டதில்லை..இங்க நண்டும் எங்கயும் விக்கிறதில்ல..என்ன பண்ணலாம்?

குடுகுடுப்பை said...

வருகக்கும் கருத்துக்கும் நன்றி வெண்பூ
// செம காமெடி.. ஆனா ரொம்ப சுருக்குன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு..//

கடைசி ஒரு வரியை வெச்சுதான் இத ஒரு பக்கம் எழுதினேன். ஒருவேளை உரையாடல் போல எழுதியிருந்தால் நன்றாக இருந்து இருக்குமோ?

முயற்சிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
//
சாப்பிட்டவங்களுக்கு மட்டும் வயறு கலக்களை, படிச்சா எங்களுக்கும் தான் ..//

ஏன் என்ன ஆச்சு:)

// குடுகுடுப்பையார் ஊருக்கு வந்த உடனே விலங்குகள் வன்முறை சட்டத்துல கைது செய்ய மேனகா காந்தி ஏற்ப்பாடு பண்ணிருக்கு.//

நண்டு விலங்கே அல்ல அப்படினு கேசு போடுவேன். 60 வருடம் ஆயிரும் முடிவு தெரிய

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி said...

//யோசிச்சி பார்த்தா... நான் இதுவரை நண்டே சாப்பிட்டதில்லை..இங்க நண்டும் எங்கயும் விக்கிறதில்ல..என்ன பண்ணலாம்?//

எதுக்கும் வேதாளத்துகிட்ட கேளுங்க, பதில் சொல்லாட்டி வேதாளத்தையே...

நசரேயன் said...

/*நண்டு விலங்கே அல்ல அப்படினு கேசு போடுவேன். 60 வருடம் ஆயிரும் முடிவு தெரிய */
அறுபது வருஷம் ரெம்ப குறைவு அறு நுறு வருஷம் ஆகும் :):)

நாநா said...

வத்தக்குழம்பு வச்ச கதை ஒண்ணு இருக்கு நம்ம கை வசம். சீக்கிரம் எடுத்து உடுறேன்.

குடுகுடுப்பை said...

வாடா நாநா

//வத்தக்குழம்பு வச்ச கதை ஒண்ணு இருக்கு நம்ம கை வசம். சீக்கிரம் எடுத்து உடுறேன்.//

சீக்கிரம் போரதுக்கு முன்னாடி உடு.

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
அமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை.
//

அப்பிடின்னா, சமைக்காம அப்படியே சாப்டிருக்கீங்களா??

//

இனிமே முயற்சி பண்ணி பாக்கறேன்

உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.
//

என்னா ஒரு கொலை வெறி!

//

ஏன்யா பேய பலகாரம் பண்ணி சாப்புடுர நீரு என்ன பாத்து இப்படி சொல்றீர்

ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.
//

மாஸ் மர்டர்! இதை தான் குரூப்பா சேந்து கொலை செய்றதுன்னு சொல்வாங்க!

//
என்னத்த சொல்ல


முதல்ல நண்ட ஒரு சிஙல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.
//

பண்றது கொலை. இதுல எதுகை மோனை வேறயா??

//

இப்பதாம் கத்துக்கிறோம்.

அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ்
//

அது என்ன உங்க நண்பர்கள் எல்லாம் வித்தியாசமா டிரஸ் பண்றாங்க? அன்னைக்கி ஒருத்தர் பச்ச ஜீன்ஸு, இன்னிக்கி சாக்லேட் கலர் பேன்டு!

உங்கள சுத்தி எப்பவும் கலர் ஃபுல்லா இருக்கும்னு சொல்லுங்க!

//

நான் எப்பவுமே மஞ்சள் ஜீன் தான் போடுவேன்.

நண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி? பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க ..
//

இவ்வ‌ள‌வு சொன்னீரு..அந்த‌ ரெசிப்பியை சொன்னா நாங்க‌ளும் நாலு ந‌ண்டை வாங்கி ஒடைப்ப‌ம்ல‌? ஏன் இப்பிடி ர‌க‌சிய‌ம்??//


அதுல வேதாளத்த சமைக்க முடியாதுஉங்க‌ எல்லாருக்கும் இன்னொரு விஷ‌ய‌ம்.. பொது எட‌த்துல‌ ந‌ண்டு பிடிக்கிற‌து, ந‌ண்டு வாங்கிற‌து எல்லாத்தையும் த‌டை ப‌ண்ண‌ போறாங்க‌ளாம்..சினிமாவுல‌யும் இனிமே மீன் பிடிக்கிற‌து, ந‌ண்டு பிடிக்கிற‌ காட்சி எல்லாம் காட்ட‌க்கூடாதாம்...

//
அதுனால இன்மே பேய் சினிமாதான்.
//

அது சரி said...

//
நான் எப்பவுமே மஞ்சள் ஜீன் தான் போடுவேன்.
//

நீங்க தி.மு.க வா? அப்ப ஜீன்ஸ் என்ன, உள்ள போட்ற ஜட்டி கூட மஞ்ச கலர்ல போடலாம்..உங்களுக்கு அதுக்கான சகல உரிமையும் இருக்கு!

ஆங்.மஞ்ச கலரு ஜிங்குச்சா..பச்ச கலரு ஜிங்குச்சா..

//
அதுல வேதாளத்த சமைக்க முடியாது
//

உங்க‌ளுக்கு அந்த‌ வேதாள‌ம் யார்னு தெரியாது. அத‌னால‌ ஈஸியா சொல்லிட்டீங்க‌...உண்மையில‌ அந்த‌ வேதாள‌ம் மாதித்த‌ன‌ ச‌மைச்சி சாப்பிடாம‌ இருந்தா பெரிய‌ அதிர்ஷ்ட‌ம்!

மன்மதக்குஞ்சு said...

//அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு//.
அப்பவே தெரியவேணாம் நெறய சுடப்போறார் என்று. ரொம்ப நல்ல பதிவு.

கயல்விழி said...

கொலைவெறியோட சமைப்பீங்க போல?

குடுகுடுப்பை said...

வாங்க மன்மதன்

//அப்பவே தெரியவேணாம் நெறய சுடப்போறார் என்று. ரொம்ப நல்ல பதிவு.//
நன்றி

குடுகுடுப்பை said...

வாங்க கயல்விழி

//கொலைவெறியோட சமைப்பீங்க போல?//

ஆனா சாப்பிட முடியலயே?

RAMYA said...

"நண்டார் மாண்டார்" அருமையான எதுகை மோனை வேறே. நண்டு சாப்பிட ஒரு கூட்டமே அலையுது போல. பாத்துப்பா நண்டை நீங்கள் பிடிப்பதற்கு முன்னாள் அது உங்களை பிடித்து விடபோவுது. யோசித்து பிடிக்கவும். நண்டு பிடி கிடிக்கி பிடித்தான். அப்புறம் எங்கே நண்டார் மாண்டார்? வென்னீர் போட்டு கொலை வேறே பாவிங்களா. நியாயமா? வாங்க இந்த பக்கம் ஏர்போர்ட் வாசலிலேயே நண்டை வச்சு கடிக்கி வைக்கிறோம். ஹா ஹா ஹா ஹா.

ரம்யா

RAMYA said...

நண்டார் பிறப்பார்
குடுகுடுப்பையாரை கடிப்பார்

ரம்யா

குடுகுடுப்பை said...

வாங்க RAMYA எப்படி இருக்கீங்க

// நண்டார் பிறப்பார்
குடுகுடுப்பையாரை கடிப்பார்

ரம்யா//

என் மேல என்ன கோபம்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

படிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு.
எச்சில் ஊருற மாதிரி எப்படி எழுதுறேள்!
ஓ! நண்டும் ஊருறத்த வாங்குனீங்களா?
அப்ப செத்து தண்ணில/ஐஸ்ல ஊருனதா?
உயிரோட ஊருனுச்சா?
குழம்புதா? ஆம். எப்படி இருந்தாலும் குழம்புதான்!

குடுகுடுப்பை said...

ஜோதிபாரதி said...

படிக்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு.
எச்சில் ஊருற மாதிரி எப்படி எழுதுறேள்!
ஓ! நண்டும் ஊருறத்த வாங்குனீங்களா?
அப்ப செத்து தண்ணில/ஐஸ்ல ஊருனதா?
உயிரோட ஊருனுச்சா?
குழம்புதா? ஆம். எப்படி இருந்தாலும் குழம்புதான்!//


அத்திவெட்டி காரருக்கு நண்டுன்னா நாக்கு ஊறத்தான் செய்யும்

http://urupudaathathu.blogspot.com/ said...

நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மீண்டும் பிறகு வருகிறேன் ..

( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)

குடுகுடுப்பை said...

வாங்க அணிமா சீக்கிரம் வந்து வருங்கால முதல்வர்ல ஒரு கலக்கல் பதிவு போடுங்க

ராஜ நடராஜன் said...

//உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது.//

:)))). கொஞ்ச நாளைக்கு முன்னால மீன் பிடிக்கிறேன் பேர்வழின்னு மீனுக்குச்சியத் தூக்கிகிட்டுக் கிடந்தேன்.இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனுங்க நல்லாத்தான் நண்டு பிடிக்கிறானுங்க.ஒண்ணுமில்ல ஒரு பெரிய வலைக்கம்பிப் பெட்டிக்குள்ள ஆட்டு எலும்பப் போட்டு விட்டு கயித்தக் கட்டி தண்ணிக்குள்ள விட்டுட்டு மீன் பிடிக்கப் போயிறானுங்க.ஒரு மணி நேரம் கழிச்சுப் பார்த்தா உயிரோட நண்டு.இந்தப் பய மவன் மவ புள்ளைக கூட அதெயெல்லாம் தின்னும் தீத்தாச்சு.நண்ட அப்படியே போட்டு வேகவச்சு அப்படியே துண்ணாலும் நண்டு நண்டுதான்.

அப்புறம் நண்டுக் குழம்புக்கு கறிக் கொழம்பு மசாலாவே போதும்.புளிக்குப் பதிலா மிக்சி தக்காளி.

குடுகுடுப்பை said...

வாங்க ராஜ நடராஜன்
//
:)))). கொஞ்ச நாளைக்கு முன்னால மீன் பிடிக்கிறேன் பேர்வழின்னு மீனுக்குச்சியத் தூக்கிகிட்டுக் கிடந்தேன்.இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனுங்க நல்லாத்தான் நண்டு பிடிக்கிறானுங்க.ஒண்ணுமில்ல ஒரு பெரிய வலைக்கம்பிப் பெட்டிக்குள்ள ஆட்டு எலும்பப் போட்டு விட்டு கயித்தக் கட்டி தண்ணிக்குள்ள விட்டுட்டு மீன் பிடிக்கப் போயிறானுங்க.ஒரு மணி நேரம் கழிச்சுப் பார்த்தா உயிரோட நண்டு.இந்தப் பய மவன் மவ புள்ளைக கூட அதெயெல்லாம் தின்னும் தீத்தாச்சு.நண்ட அப்படியே போட்டு வேகவச்சு அப்படியே துண்ணாலும் நண்டு நண்டுதான்.

அப்புறம் நண்டுக் குழம்புக்கு கறிக் கொழம்பு மசாலாவே போதும்.புளிக்குப் பதிலா மிக்சி தக்காளி.

//

நானும் தூண்டில் எல்லாம் வாங்கி கொஞ்ச நாள் மீன் பிடிக்கலாம்னு பாத்தேன். இப்ப எனக்கு சரியான மீன்பிடித்துணை இல்லை,

நண்டு குழம்பு இப்போ நீங்க சொன்ன மாதிரிதான் தங்கமணி வைக்கிறாங்க.

நட்புடன் ஜமால் said...

அப்ப வச்ச குழம்பையா இப்பவும் சாப்பிட்டீங்க :P