Monday, September 20, 2010

வகுக்காத வியூகம்...

பாம்புமுகம் கொண்ட
இரு விலாங்குமீனை
சாம்பலில் உருட்டி
வறுவறு பன்னிரண்டு
துண்டுகளாக்கும்
சாத்தியக்கூறுகளைக்
கணக்கிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்..

ஏரியை விடப் பலமடங்கு
அதிகப் பாம்புமீன் கொண்ட
குட்டைக்குள ஒரத்தில்
கோரப்பற் துவாரத்தில்
மண்புழு புகுத்தி
தூண்டில் வீசி
தூண்டிலின்
தக்கையை கூர்ந்து
நோக்குகிறேன் நான்..

மண்புழு
அனைத்தையும்
உபயோகித்து
எனக்கேயான
பாம்புமீனை பிடித்துக்கொள்(ல்)ள(ல)
என் தூண்டிலின் தக்கை
மேலும் கீழுமாய்
கட்டுக்குள் அடங்காது
தூண்டியையும் சேர்ந்திழுக்க
நானும் இழுக்க
இனங்காணமுடிநத சாரப்பாம்பு
நகர்ந்தபடியே தூண்டிலில்.

சேற்று மீன்
தூண்டிலில் மாட்டாதென
தெரியாமல் பிடித்த
பாம்பில் நடுக்கண்டமும்
எனக்கே என திருப்தியுடன்.


5 comments:

கலகலப்ரியா said...

$%^&^%... பாம்புக்கறி சாப்ட்டா எதிர்க்கவுஜ எழுதலாமா...

vasu balaji said...

ஆஹா. ரொம்ப நாளாச்சு எதிர் கவுஜ வந்து:)). நடுக்கண்ட நாயகன்:))

கலகலப்ரியா said...

சார்... டைட்டிலே தப்பு... வகுக்காத வியூகமுக்கு எதிர்ப்பதம் கண்டுபுடிக்கத் தெரியல... இவங்க எல்லாம் என்ன எதிர்க்கவுஜரு...

நசரேயன் said...

//இவங்க எல்லாம் என்ன
எதிர்க்கவுஜரு//

தலைவரை கண்டிக்கும் பிரியாவுக்கு நன்றி

ILA (a) இளா said...

பொரட்டாசி மாசம் கறி திங்கிறதில்லை ஆமாம். அதனால நாலாங்கிழமைக்கு அப்புறமா பார்த்துக்கலாம்