Monday, April 26, 2010

கொண்டியார(ன்)கள்ளி இறுதி பாகம்


ரவி விபத்தில் இறந்த செய்திகேட்டு இரண்டு குழந்தைகளுடன் தவித்த ரவியின் மனைவியையும், கிறுக்கனாய்போன சந்திரனின் மனைவியையும் கொண்டியாரகள்ளி தனக்கே உரித்தான பாணியில் விளாசினார்

“ஏண்டி குச்சிகாரி முண்டைகளா, வீட்டுக்கு வந்து பெரியவன தூக்கிபோட்டு முழுங்கினிய, அடுத்தவன கிறுக்கனாக்குனிய இன்னம் இங்கே எதுக்குடி இருக்குறிய தட்டுவாணி செறுக்கியளா கெளம்புங்கடி”

இவ்வளவு பேச்சையும் பொறுக்கமுடியாமல் தட்டிக்கேட்க வந்த ஊர்பெரிசுகள் குச்சிகாரன்கள் ஆக்கப்பட்டதில் அவர்களும் ஒதுங்க , ரவியின் மனைவியும் , சந்திரனின் மனைவியும் ஆளை விட்டால் போதுமென்று ஊரை விட்டே சென்றுவிட்டனர்.

சந்திரன் சாப்பிடுவதை மட்டும் சரியாக செய்தான், மற்ற எந்த காரியத்திலும் அவன் சராசரி மனிதனாக தெரியவில்லை. கொண்டியாரகள்ளியும் வீட்டைப்பிடித்த சனியன்கள் தொலைந்ததால் என்றாவது ஒருநாள் சரியாகும் என்று இருந்தால்.

திருப்பதியின் மேல் குடும்ப பாரம் விழுந்தது, அண்ணன்களின் இந்த நிலையினால் சரிந்த குடும்பத்தை அவனும் தன்னுடைய போக்கில் சம்பாதித்து முன்னுக்கு கொண்டு வந்தான். திடீரென ஒருநாள் வீட்டிற்கு போலிஸ்காரர்கள் வந்தார்கள்.

“டேய் இந்த வண்டிமாடு எங்கடா வாங்கின என்று ”பலமாக தட்டியதில் உண்மையை கக்கினான் , இதுவரை ஐம்பது சோடி மாடுகள் களவாடியிருப்பதாக சொன்னான், இந்த சோடி நல்லா பலமா இருந்துச்சு அதான் நானே வெச்சிக்கலாமின்னு வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தேன் என்றான்.

ஒருவழியாக மிச்சமிருந்த சொத்துக்களையும் விற்று மாட்டுக்காரர்களுக்கு கொடுக்கவேண்டிய காசை அடைத்தனர். திருப்பதியும் திருட்டுக்கேஸில் சிறை சென்றான்.

”சம்பாதிச்சு போட்டவங்க எல்லாம் ஒன்னுமன்னா போயித்தாங்க , நீ இப்படியே குந்தி இருந்தா யாரு சோறு போடுறது , யாரு அந்த புள்ளைய ஒருத்தன் கிட்ட புடிச்சிக்கொடுக்கிறது, போய் எப்படியாவது சம்பாதிச்சினு வாய்யா ” என்று கொண்டியாரனிடம் கத்தினால் கள்ளி.

“நான் இருக்கிறதும் உனக்குப்பொறுக்கல என்ற படியே”

இப்போது பத்தினி செத்துக்கிடந்தாள் ஒரு XXXயும், எழவுக்கு வரவில்லை, உத்திரத்தில் தொங்கிய கொண்டியாரன் உட்பட.

முற்றும்.

பணம் எப்படியும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியை மட்டுமே வளர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து எழுத நினைத்த தொடர். எனக்கு தற்போது இருக்கும் வேலைப்பளுவில் தொடரை தொடர்வது சிரமம் என்று தோன்றியதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

8 comments:

கலகலப்ரியா said...

//பணம் எப்படியும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியை மட்டுமே வளர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து எழுத நினைத்த தொடர். எனக்கு தற்போது இருக்கும் வேலைப்பளுவில் தொடரை தொடர்வது சிரமம் என்று தோன்றியதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்//

அடப்பாவிங்களா.. வேலைப்பளுன்னு இவ்ளோ அவசரமா "கதை"யை முடிச்சிட்டீங்களே..

கிணத்துப்படில புள்ளைய கிடத்திட்டு வந்துட்டேன்... இந்தா போறேன்... இந்தா போறேன்னு அவசரம் அப்பட்டமா தெரியுது...

vasu balaji said...

அட! இதுக்கு பேருதான் ’கதைய’ முடிக்கறதா:))

Vidhoosh said...

அநியாயமா கதைய முடிச்சுட்டீங்களே... :(

இவ்ளோ நாள் காத்திருந்தோம். இன்னும் கொஞ்சம் காத்திருக்க மாட்டோமா? சரி...

Mahesh said...

நல்லா இருந்தது... ஆனா மெட்டிஒலி சீரியல் நாலெ வாரத்துல முடிஞ்ச மாதிரி இருக்கு :)

நசரேயன் said...

//Vidhoosh(விதூஷ்) said...
அநியாயமா கதைய முடிச்சுட்டீங்களே... :(

இவ்ளோ நாள் காத்திருந்தோம். இன்னும் கொஞ்சம் காத்திருக்க மாட்டோமா? சரி...

April 27, 2010 2:59 AM//
ஆமா உங்களை வேலையை விட்டு தூக்குற வரைக்கும் காத்திருக்கத்தான் செய்வோம்

அது சரி(18185106603874041862) said...

குச்சிக்காரின்னா என்ன அர்த்தம்?

அது சரி(18185106603874041862) said...

எப்படியோ எல்லாரோட கதையையும் முடிச்சிட்டீங்க :)))...அடப்பாவிங்களா...கதைல வந்த ஒரு கேரக்டர் கூட கடைசி வரைக்கும் வரலியே...க்ளீனா முடிக்கிறதுன்னா இதானா?

Unknown said...

முடிஞ்சிருச்சா? இதை ஏன் நான் பாக்கலை??


மெகா சீரியல்ல யாராவது நடிகருங்க எடக்கு பண்ணினா டப்புனு ஃபோட்டோவுக்கு மாலை போட்டு அவங்க கேரக்டரை முடிக்கிற மாதிரி ஆயிடுச்சே.. :(((