Friday, February 5, 2010

பம்பரம் விளையாடுவது எப்படி

முகு: எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்பர விளையாட்டில் கரைகண்டவன் இல்லை, எனக்குத் தெரிந்த பம்பர விளையாட்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் தரும் ஆதரவைத் தொடர்ந்து, கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்டு ரகசியங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

பம்பரம் சுற்றும் முறைகள் எனக்குத் தெரிந்தவை மூன்று.

மூன்றுக்கு பொதுவான விதிகள்.
1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.
2. பம்பரம் சுழற்றத் தேவையான கயிறு.

மேலே உள்ள இரண்டையும் வைத்து, பம்பரத்தின் சுற்றி கயிறு சுற்றத் தெரிந்திருக்கவேண்டும்.

முதல்முறை: இழுப்பு

பம்பரம் கற்றுக்கொள்ளும் முதல் தலைமுறையினருக்கான எளிய வழி, பம்பரக்கயிறு சுற்றியபின், பம்பரத்தை நேராக கையில் பிடித்து, பம்பரக்கயிறின் ஒருமுனையை கட்டைவிரலுக்கும், தொடுவிரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ளவேண்டும், கீழே குனிந்த நிலையில் நின்று, பம்பரம் உள்ள கையை முடிந்த அளவு முன்பக்கம் வேகமாக கொண்டு சென்று அதே வேகத்தில் கையை பின்பக்கம் கொண்டுவரவேண்டும், பின்பக்கம் கையை இழுக்கும்போது, பம்பரக் கயிற்றை மட்டும் கையில் வைத்துக்கொள்ளவேண்டும், பம்பரம் தரையில் பட்டு , கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும்.

இரண்டாம் முறை: சாட்டை

தோலுக்கு மேலே ஆனால் உடலுக்கு வேளியே, கையை இழுத்து பம்பரம் உள்ள கையை சுழற்றவேண்டும், இந்த முறையில் பம்பரத்திற்கு கொஞ்சம் கூடுதல் விசை கிடைக்கும், கீழே விழுந்த பம்பரம் சற்று கூடுதல் நேரம் சுற்றும்.

மூன்றாம் முறை: குத்து

தலைக்கு மேலே பம்பரம் உள்ள கையை கொண்டு சென்று, முடிந்த அளவு வேகமாக பம்பரத்தை விடவேண்டும், இதன் வேகம் அதிகமாதலால், பம்பரம் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் சுத்த ஆரம்பிக்கும், பம்பரப் போட்டியில் எதிரியின் பம்பரத்தில் ஆக்கூறு அடித்து உடைக்க குத்து முறை மட்டுமே உதவும். சாட்டை, இழுப்பு முறைகள் உதவாது. குத்து முறை பம்பரம் விளையாடும் போது வேடிக்கை பார்ப்பவர்கள் மேல் காயப்படவும் வாய்ப்பு அதிகம்.

பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்பராக சுற்றும் வைகோவின் பம்பரம் போல் மொட்டைக்கட்டை அடிக்க வாய்ப்பு அதிகம். அதனால் பம்பர போட்டிகளில் கலந்து கொள்ளுமுன் திறமையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.உணர்ச்சி வசப்பட்டால் பம்பரமும் கயிறும் வழுக்குமாதலால் ஒழுங்காக பம்பரம் சுற்றமுடியாது.

23 comments:

தமிழ் அமுதன் said...

சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?

நசரேயன் said...

யோவ் என்ன உள்குத்தா ?

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?//

அது முரசு கொட்டி அறிவிப்போம்.

குடுகுடுப்பை said...

Blogger நசரேயன் said...

யோவ் என்ன உள்குத்தா ?//

இல்ல ஆக்கூறூதான்

நசரேயன் said...

சோளகஞ்சி கஞ்சி குடிச்சா சோழனா?

Unknown said...

கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?? :))))

இந்த சோழனுங்க தொல்லை தாங்கலப்பா....

vasu balaji said...

கோந்து மரத்துல பம்பரத்த குத்தி பதப்படுத்தறது, தொகுறாம ஆணி, அப்பீட்டு,சவுக்கு போன்ற தொழில் நுட்பங்களை சொல்லாதது ஏன்?:))

Unknown said...

இந்த ஆட்டைக்கி நான் வரல... (நன்றி: நசரேயன்)

வில்லன் said...

என்ன ஆபீஸ்ல வேலை இல்லையா??????? பம்பரம் வலியடி பழகிட்டு இருகீரா?????? வேலைவெட்டி இல்லாம ஆபீஸ்ல நேரத்த போகுரீருன்னு மட்டும் நல்லா தெரியுது..... கோலிகுண்டு வேலையடுவது எப்படி அண்ணாச்சி.... வெவரமா ஒரு பதிவு போடுங்க.....புண்ணியமா போகும்....

வில்லன் said...

// குடுகுடுப்பை சோழன் said...

ஜீவன் said...

சின்ன கவுண்டர் போல எப்படி பம்பரம் விடுறது ...?//

அது முரசு கொட்டி அறிவிப்போம்.//
ஓ!!!!!!!!!!!!! இப்படியெல்லாம் வேற அனுபவம் இருக்கா..... அந்த மாதிரி பதிவு போடா நசறேயனுக்கு மட்டுமே உரிமை உண்டு.....உமக்கு சோறு பத்தி பதிவு போட மட்டுமே உரிமை.... அடுத்தவர் உரிமையை பறிக்காதிங்க....உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண வேண்டாம்....

வில்லன் said...

//முகிலன் said...


கிரிக்கெட்டுக்கு எதிர் பதிவா?? :))))
இந்த சோழனுங்க தொல்லை தாங்கலப்பா....//

இங்கதான் நிக்குறார் பாண்டியர்.....அண்ணாச்சி!!!! சோழர்களின் "சோம்பேறி" வெளையாட்டு பம்பரம்.... அதான் அதபத்தி ஒரு பதிவு போடுருக்க்காறு "சோம்பேறி" அண்ணாச்சி குடுகுடுப்பை சோழன்....

வில்லன் said...

/எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்பர விளையாட்டில் கரைகண்டவன் இல்லை, //
"ஆப்பெடுக்க" தெரியுமா...... அப்படின்னா எனன்னு கேட்டீறு உமக்கு பம்பரம் விடவே தெரியாதுன்னு அர்த்தம்...

வில்லன் said...

/1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.//

ரெண்டுபக்கம் ஆணி இருக்குற பம்பரம் பாத்ததில்லையோ?? ஐயோ பாவம்... கொண்டைல ஒரு ஆணி வச்சு கயறு கட்டி இருப்பாங்களே தெரியாதா....

வில்லன் said...

//பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்பராக சுற்றும் வைகோவின் பம்பரம் போல் மொட்டைக்கட்டை அடிக்க வாய்ப்பு அதிகம்.//


பம்பரம் சரியாக விடப்படாத நிலையில் தலைகீழா ஆடும்...அந்த மாதிரி பாத்ததில்லையா??????

குடுகுடுப்பை said...

/1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.//

ரெண்டுபக்கம் ஆணி இருக்குற பம்பரம் பாத்ததில்லையோ?? ஐயோ பாவம்... கொண்டைல ஒரு ஆணி வச்சு கயறு கட்டி இருப்பாங்களே தெரியாதா.... //

அது பாண்டியர்கள் விளையாடும் , சோம்பேறி பம்பரம்.

கலகலப்ரியா said...

mudiyala saamiiii... =))

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...

கோந்து மரத்துல பம்பரத்த குத்தி பதப்படுத்தறது, தொகுறாம ஆணி, அப்பீட்டு,சவுக்கு போன்ற தொழில் நுட்பங்களை சொல்லாதது ஏன்?:))
//

வெச்சுகிட்ட வஞ்சனை பண்றேன். எங்க வீட்டில போட்ட கட்டுப்பாடுகள் தாண்டி நான் வெளாண்ட திருட்டு பம்பரம் இவ்வளவுதான்.

Anonymous said...

குடுகுடுப்பை தெரியும். குடுகுடுப்பை சோழன் யாரு புதுசா?

sathishsangkavi.blogspot.com said...

நண்பரே எல்லாம் சரி...

பம்பரம் எந்த இடத்துல விட்டா ரொம்ப நேரம் சுத்தும்னு சொல்லவே இல்லையே...

மதுரை சரவணன் said...

vettikkai parthaalum neengkal pamparam itumpothu kaayam pataamal thappiththavan naan mattume.

க.பாலாசி said...

அடடா...அடுத்தடுத்த ரகசியங்களையும் சொல்லிக்கொடுங்க...

Unknown said...

//.. கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்டு ரகசியங்களும் ..//
இது வேறயா..??

வில்லன் said...

/Sangkavi said...


நண்பரே எல்லாம் சரி...

பம்பரம் எந்த இடத்துல விட்டா ரொம்ப நேரம் சுத்தும்னு சொல்லவே இல்லையே...//

"சின்ன கவுண்டர்" போல பம்பரம் தொப்புள்ள விட்டா ரொம்ப நேரம் சுத்தும்.