Wednesday, February 3, 2010

வில்லன் வீட்டு பிரியாணி மற்றும் வடை.

இந்தப்பதிவு இடுவதா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது, ஆனால் விருந்து கொடுத்து சிறப்பித்தவர்களை பாராட்டினால்தானே அடுத்தடுத்து விருந்து கிடைக்கும் என்ற சுயநலத்திலும், பிரியாணி செரித்துவிட்டமையாலும் , வார இறுதி நெருங்கிவிட்டமையால் அடுத்த விருந்தை எதிர் நோக்கி அவசரமாக இந்த சிறு பதிவு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்திற்கு அழைத்திருந்தார் , நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர். யார் நான் வெஜ் சாப்பிடக் கூப்பிட்டாலும் தவறாது செல்வது என்னுடைய வழக்கம். வில்லன் சர்ச்சுக்கு போய்விட்டு மதியம் பணிரெண்டு மணிக்குள் வீடு திரும்புவேன், பணிரெண்டு மணிக்கு மேல் வரவும் என்று சொல்லிவிட்டார், எங்கே காலை சாப்பாட்டுக்கும் வந்துவிடுவாரோ என்ற பயமாகவும் இருக்கலாம். வீட்டில் இருந்து கிளம்பி ஜிபிஸ் சொல்லியபடி கேட்டதில்,அது டோல் ரோடு வழியாக செல்லச்சொல்லிவிட்டது, இரண்டு டாலர் டோல் கொடுத்தேன், பிரியாணி இரண்டு டாலருக்கு வொர்த்தா இருக்குமா இல்லை , மட்டன் புளிசாதமாக இருக்குமா என்று வயிற்றில் புளியைக்கரைத்தது.ஒரு வழியாக என்னுடைய பென்ஸ் காரில் அவருடைய வீட்டை அடைந்தேன்.

குழந்தை இருக்கும் வீட்டுக்கு வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது என்பதால், கோள்ஸுக்கு சென்று 99% டிஸ்கவுண்டில் அவருடைய மகளுக்கு ஒரு உடையையும் மரியாதை நிமித்தம் வாங்கி சென்றேன். வீட்டுக்குள் நுழைந்தால் பிரியாணி வாசமே வரவில்லை, எதற்கும் ஜாக்கிரதையாக வாங்கிச்சென்ற டிஸ்கவுண்ட் துணியை கொடுக்காமல் பத்திரமாக நானே வைத்துக்கொண்டேன், மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது, சிக்கன் கிரேவியுடன். சும்மா சொல்லக்கூடாது பிரியாணி சுவை அலாதியாக இருந்தது, சிக்கன் குருமாவும் அருமை. ஐந்து அல்லது ஆறு ரவுண்ட் வெட்டினேன். வில்லன் பிரியாணியில் இருந்த கரியை சாப்பிடக்கூடாது என்று வில்லி கட்டளை இட்டபடி இருந்தார். அவருக்கு கொலஸ்டிரால் , கொழுப்பெல்லாம் அதிகமாகிவிடும் என்று காரணம் சொன்னார். பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இருக்கார். வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். வில்லன் முகத்தில் ஒரு பளபளப்பு ஏற்பட்டது புரிந்தது.

பிரியாணி நன்றாக இருந்ததால் டிஸ்கவுண்ட் துணியையும் வில்லனிடம் கொடுத்துவிட்டேன். பின்னர் சற்றே இளைப்பாறிவிட்டு நான்கு மணியளவில் பருப்பு வடை செய்து தந்தார்கள், சுவை கூடுதலாக இருந்ததால் பத்து வடை சாப்பிட்டேன். மகளுக்கு தமிழ் வகுப்பு இருந்ததால் 4:30 மணியளவில் கிளம்பினேன், மறக்கமால் மிச்சமிருந்த பிரியாணியையும் வடையும் கேட்டு வாங்கி வந்துவிட்டேன்.

இப்போது வில்லனுக்கு என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி இந்த விருந்து இந்த வாரம் மட்டும்தானா இல்லை வாரா வாரம் இப்படி பிரியாணி போடுவாரா என்பதுதான்? இரண்டு முறை மட்டுமே பார்த்திருப்பதால் நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்படி பதிவின் மூலம் கேட்கிறேன். நீங்கள் வீட்டுக்கு அழைக்கவேண்டாம் பிரியாணி செய்து எங்கள் வீட்டு வாசலில் வாரம் ஒருமுறை பார்சலாக போட்டால் கூட போதும்.

பிகு: நசரேயனின் போட்டோ வில்லியின் தயவில் பார்த்தேன். தளபதியின் படம் விரைவில் வலையேற்றப்படலாம்.

46 comments:

வில்லன் said...

என்ன பதிவு போட்டாலும் தலைகீழ நின்னாலும் பிரியாணி ஓசில கெடைக்காது இனிமேல்...... வேனும்ன புளியோதரை கெடைக்கும். அதுவும் சும்மா இல்ல காசுக்கு.... மனுஷன் ஒரு வாரத்துக்கு செஞ்சத ஒரே நாளுல காலி பணிட்டீறேய்யா.... எதுல வேற இன்னொரு அழைப்பா!!!!!!!!!!!!!!!! போதுமட சாமி.....

வில்லன் said...

//பிரியாணி இரண்டு டாலருக்கு வொர்த்தா இருக்குமா இல்லை , மட்டன் புளிசாதமாக இருக்குமா என்று வயிற்றில் புளியைக்கரைத்தது.// இதுக்காக நசரேயன் கிட்ட காலைல என் வீட்டுக்கு வருறதுக்கு முன்னால போன் பண்ணி கேட்டதெல்லாம் ரொம்ப ஓவரு.... அவரு என்னோட ஆளு தெரியும்ல.... ஒடனே மெசேஜ் வந்துட்டு.. பிரியானியும் கெடையாது ஒன்னும் கெடையாதுன்னு வீட்ட பூட்டிட்டு போயடலம்ம்னு தான் நெனச்சேன் அது "தமிழர்" பண்பாடு இல்லையேன்னு போன போகுதுன்னு குடுத்தோம் ஆமா!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

/கோள்ஸுக்கு சென்று 99% டிஸ்கவுண்டில் அவருடைய மகளுக்கு ஒரு உடையையும் மரியாதை நிமித்தம் வாங்கி சென்றேன்.//

ஒன்னு தெரியுமா..... நீறு வீட்ட விட்டு புறப்பட்ட அடுத்த நிமிடம் நாங்க கோள்ஸுக்கு போயிடோம்ல ....என்ன வேலைக்கு வாங்குநீருன்னு செக் பண்ண.....போயும் போயும் என்னோட பொண்ணுக்கு ஒரு ஜட்டி வாங்குற வெலைக்கு அவளுக்கு சட்டை வாங்கிட்டு வந்திருக்கீறேய்யா.... அந்த நாய் பத்திர ஊழல் பணத்துல ஒரு நல்ல சட்டைய வாங்கிருக்கலாம்ல.....

வில்லன் said...

இப்ப தெரியுதுவே நீறு ஒரு சோத்துக்கு அளஞ்சான்னு....... அந்த பிரியாணி ஒரு வாரத்துக்கு முன்னால பண்ணினது..... வட பண்ணி ரெண்டு வாரம் ஆச்சு....சும்மா சூடு பண்ணி ஒப்பேதிட்டோம்.....வெளில போட வேண்டியது உமக்கு போட்டுட்டோம்...... ஒடம்புக்கு ஒன்னும் ஆகலையே?????.... அதான் எங்க வீட்டு தங்கமணி பாப்பாவுக்கு கொடுக்க வேண்டாம்னு அடிச்சுகிட்டாங்க....அவளுக்கு தனியா பாயசம் பண்ணி கொடுத்தாங்க...

நசரேயன் said...

//விருந்து கொடுத்து சிறப்பித்தவர்களை பாராட்டினால்தானே அடுத்தடுத்து விருந்து கிடைக்கும்//

ஆமா எத்தனை நாளைக்கு நீங்க சமைக்கதையே சாப்பிடுவீங்க

நசரேயன் said...

//நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர்//

அருவா கம்போட அலையுற பின்னூட்டார் சொல்லுங்க

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்ப தெரியுதுவே நீறு ஒரு சோத்துக்கு அளஞ்சான்னு....... அந்த பிரியாணி ஒரு வாரத்துக்கு முன்னால பண்ணினது..... வட பண்ணி ரெண்டு வாரம் ஆச்சு....சும்மா சூடு பண்ணி ஒப்பேதிட்டோம்.....வெளில போட வேண்டியது உமக்கு போட்டுட்டோம்...... ஒடம்புக்கு ஒன்னும் ஆகலையே?????.... அதான் எங்க வீட்டு தங்கமணி பாப்பாவுக்கு கொடுக்க வேண்டாம்னு அடிச்சுகிட்டாங்க....அவளுக்கு தனியா பாயசம் பண்ணி கொடுத்தாங்க...
//

வில்லன் மெய்யாலுமே... சிரிப்ப அடக்கமுடியல வில்லன் செமத்தியான பதிலடி....!

நசரேயன் said...

//இரண்டு டாலர் டோல் கொடுத்தேன், பிரியாணி இரண்டு டாலருக்கு வொர்த்தா இருக்குமா இல்லை//

காக்கா பிரியாணி போட்டு இருக்கணும்.. அதற்கு முன்னாடி ரெண்டு நாளா சாப்பிடாம இருந்ததை சொல்லவே இல்லை

நசரேயன் said...

//ஒரு வழியாக என்னுடைய பென்ஸ் காரில் அவருடைய வீட்டை அடைந்தேன்//

யோவ் உண்மை கார் படத்தைப் போட்டால் கல்லாலே அடிப்பாங்க

வில்லன் said...

நசரேயன் said...

///ஒரு வழியாக என்னுடைய பென்ஸ் காரில் அவருடைய வீட்டை அடைந்தேன்//

யோவ் உண்மை கார் படத்தைப் போட்டால் கல்லாலே அடிப்பாங்க

தலைவரே!!! அது உண்மைலேயே பென்ஸ் காரு தான்... ஆனா நீங்க நெனைக்குற பென்ஸ் கம்பெனி தயாரிப்பு இல்ல... அண்ணாச்சி குடுகுடுப்பை தயாரிப்பு... அவரே கையாள பெயிண்ட் வச்சு பென்ஸ்ன்னு எழுதிருக்காரு.. அந்த கார பாத்தா அது என்ன மேகுன்னு (மேக்) ஒருவனும் சொல்லவே முடியாது....அப்படி ஒரு வண்டி....எங்கதான் புடிசாரோ அண்ணாச்சி....

நசரேயன் said...

//கோள்ஸுக்கு சென்று 99% டிஸ்கவுண்டில் அவருடைய மகளுக்கு ஒரு உடையையும் மரியாதை நிமித்தம் வாங்கி சென்றேன்//

ரெம்ப மரியாதை தெரிஞ்சவருதான்

நசரேயன் said...

//சிக்கன் கிரேவியுடன். சும்மா சொல்லக்கூடாது பிரியாணி சுவை அலாதியாக இருந்தது, சிக்கன் குருமாவும் அருமை. ஐந்து அல்லது ஆறு ரவுண்ட் வெட்டினேன்//

ஒன்டரை சட்டி ன்னு கேள்விபட்டேன்

நசரேயன் said...

//வில்லன் பிரியாணியில் இருந்த கரியை சாப்பிடக்கூடாது என்று வில்லி கட்டளை இட்டபடி இருந்தார்//

அவருக்கு இருக்க கொழுப்பு போதுமுன்னு இருக்கும்

நசரேயன் said...

//வில்லன் முகத்தில் ஒரு பளபளப்பு ஏற்பட்டது புரிந்தது.//

அதான் என்னை விட நிறமாகிட்டாரு

நசரேயன் said...

// நீங்கள் வீட்டுக்கு அழைக்கவேண்டாம் பிரியாணி செய்து எங்கள் வீட்டு வாசலில் வாரம் ஒருமுறை பார்சலாக போட்டால் கூட போதும்.//

ஒரு பார்சல் 100 டாலர்

நசரேயன் said...

//பிகு: நசரேயனின் போட்டோ வில்லியின் தயவில் பார்த்தேன். தளபதியின் படம் விரைவில் வலையேற்றப்படலாம்//

யோவ் நீர் பார்த்த ஆள் வேற நான் வேற

Unknown said...

எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

பாண்டிநாட்டுத் தங்கம் அண்ணன் வில்லன் வாழ்க வாழ்க...

வில்லன் said...

//ஆனால் விருந்து கொடுத்து சிறப்பித்தவர்களை பாராட்டினால்தானே அடுத்தடுத்து விருந்து கிடைக்கும் என்ற சுயநலத்திலும், பிரியாணி செரித்துவிட்டமையாலும் , வார இறுதி நெருங்கிவிட்டமையால் அடுத்த விருந்தை எதிர் நோக்கி அவசரமாக இந்த சிறு பதிவு.//

இந்த வாரம் வருவதை இருந்தால் உடனே தெரியபடுத்தவும்..... அந்த காஞ்சுபோன பிரியாணியையும் ஊசிப்போன வடையையும் எடுத்து வைக்க சொல்லுகிறேன்.. ஏன்னா நாளைக்கு "குப்பை நாள்" வெளில போட்டுற போறாங்க........

வில்லன் said...

// முகிலன் said...


எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..
//
அப்படி போடுங்க முகிலன்....

குடுகுடுப்பை said...

வில்லன் said...
// முகிலன் said...


எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..
//
இதுக்கு மேல உள்ள உம்ம பின்னூட்டத்த பாருமய்யா, இதுதான் பாண்டிய நாட்டு பணபாடா?

வில்லன் said...

//நீங்கள் வீட்டுக்கு அழைக்கவேண்டாம் பிரியாணி செய்து எங்கள் வீட்டு வாசலில் வாரம் ஒருமுறை பார்சலாக போட்டால் கூட போதும்.//

அட என்னங்க நீங்க?????? இதுல என்ன கூச்சம் வேண்டி கெடக்கு!!!! எங்க வீட்டுக்கு வெளில குப்பைக்கு வைக்குறத உங்க வீட்டுக்கு வெளில வச்சுட்டா போச்சி!!!.... என்ன கொஞ்சம் பெட்ரோல் (காஸ்) செலவு அத பத்தி ஒன்னும் கவலை படல.... இருந்தாலும் நீங்க ரொம்ப விரும்பினா பணமா கொடுத்துருங்க.......

வில்லன் said...

//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். //

நீறு சொன்னத உங்க வீடு தங்கமணி வேணும்னா நம்பிருக்கலாம்... எங்க வீட்டுல அந்த பருப்பு வேகல....தடை உத்தரவு நீக்கப்படலை....... தொடருகிறது....

வில்லன் said...

//நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர்//

இது மட்டும் எங்க வீட்டு தங்கமணி மற்றும் தலைவர் நசரேயன் வீட்டுல தெரிஞ்சுதுன்னு வையுங்க..... நீங்க உங்க வீடு ரெண்டும் காலி டோய்.... ஆடோல வந்து வூடு புகுந்து அடிப்பாங்க ரெண்டு பேரும் சேந்து.... இதனால தலைவருக்கு பிளைட் டிக்கெட் செலவு வேற...

குடுகுடுப்பை said...

வில்லன் said...
//வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். //

நீறு சொன்னத உங்க வீடு தங்கமணி வேணும்னா நம்பிருக்கலாம்... எங்க வீட்டுல அந்த பருப்பு வேகல....தடை உத்தரவு நீக்கப்படலை....... தொடருகிறது........................பாவமய்யா நீர் இப்படி காஞ்சுப்போயி கெடக்கீர்.வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிடு ஓய்

அது சரி(18185106603874041862) said...

//
பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இருக்கார்
//

இல்லாட்டி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாராக்கும்???

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

பாண்டிநாட்டுத் தங்கம் அண்ணன் வில்லன் வாழ்க வாழ்க...
//

எதிராளியை சந்திக்க போகும் போதும் அன்பளிப்புடன் செல்லும் சோழநாட்டு சிங்கத்தை பாருங்கய்யா! சிங்கம் சிங்கிளா போனாலும் சும்மா போகாது...டிஸ்கவுன்ட்ல வாங்கின அன்பளிப்போட தான் போகும்!

சோழ நாட்டு சிங்கம் குஜமுகவின் நிரந்தர தலைவர் "டெக்ஸாஸ் கொண்ட சோழன்" குடுகுடுப்பையார் வாழ்க வாழ்க வாழ்க!

(எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பாண்டிய நாட்டான்களுக்கு முன்னாடி சோழ நாட்டானை விட்டு கொடுக்க மாட்டோம்! சோழம்! சோழம்! சோழம்!)

வில்லன் said...

??குடுகுடுப்பை said...


வில்லன் said...
// முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..
//
இதுக்கு மேல உள்ள உம்ம பின்னூட்டத்த பாருமய்யா, இதுதான் பாண்டிய நாட்டு பணபாடா???

சோழ நாடுகாரருக்கு இந்த அளவு தான் உபசரிப்பு... இதுவே பாண்டிய நட்டுகாரரா இருந்தா கதையே வேற..... நாட்டுகோழி கொழம்பு..... பிரெஷ் கடாகரி (நீறு எங்கயோ உயிரோட கடா வாங்க போயி வெறும் கையோட வந்ததா சொன்னீரே அது போல இல்ல... உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....

வில்லன் said...

/


அது சரி said...

//
முகிலன் said...
எதிராளியையும் கூப்பிட்டு சோறு போடும் பாண்டிய நாட்டுப் பண்பைப் பாருங்கய்யா..

பாண்டிநாட்டுத் தங்கம் அண்ணன் வில்லன் வாழ்க வாழ்க...
//

எதிராளியை சந்திக்க போகும் போதும் அன்பளிப்புடன் செல்லும் சோழநாட்டு சிங்கத்தை பாருங்கய்யா! சிங்கம் சிங்கிளா போனாலும் சும்மா போகாது...டிஸ்கவுன்ட்ல வாங்கின அன்பளிப்போட தான் போகும்!

சோழ நாட்டு சிங்கம் குஜமுகவின் நிரந்தர தலைவர் "டெக்ஸாஸ் கொண்ட சோழன்" குடுகுடுப்பையார் வாழ்க வாழ்க வாழ்க!

(எங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பாண்டிய நாட்டான்களுக்கு முன்னாடி சோழ நாட்டானை விட்டு கொடுக்க மாட்டோம்! சோழம்! சோழம்! சோழம்!)//


என்ன பெரிய சோழ பண்பாடு??????? ஜட்டி வாங்குற காசுல சட்டை வாங்குறது தான் உங்க சோழ பண்பாடா.........

இப்படி எங்கள (பாண்டியர்கள) இழிவு படுத்துறதுக்கு சும்மாவே வந்துருக்கலாம்....

குடுகுடுப்பை said...

(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

பட்டத்தை நானும் என் பதிவில் சேர்த்துவிட்டேன்.

அது சரி(18185106603874041862) said...

//
வில்லன் said...
உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....

//

என்ன பண்ணுவீங்க?? எதையாவது பொலி போட்ருப்பீங்க..தயாரா ஒரு அருவா முதுகுல வச்சிருப்பீங்களே..முதுகை அருவா ஸ்டாண்டா யூஸ் பண்றதை மொதல்ல நிறுத்துங்கய்யா...

அது சரி(18185106603874041862) said...

//
வில்லன் said...

என்ன பெரிய சோழ பண்பாடு??????? ஜட்டி வாங்குற காசுல சட்டை வாங்குறது தான் உங்க சோழ பண்பாடா.........
//

ஐடியாவே அது தான்....அப்பாடா பாண்டியருக்கு ஒரு வழியா புரிஞ்சிடிச்சி...ஸ்ஸ்ஸ்ஸப்பா....இவங்களுக்கு புரிய வக்கிறதுக்குள்ள....

//
இப்படி எங்கள (பாண்டியர்கள) இழிவு படுத்துறதுக்கு சும்மாவே வந்துருக்கலாம்....
//

வரிசல் அறிந்து தான் பரிசல் :0)))...இதுவே சோழ நாட்டானை சந்திக்க போயிருந்த வேற பரிசலோட போயிருப்பார்...

வில்லன் said...

குடுகுடுப்பைக்கு சமைக்க தெரிந்தது புளியோதரை மட்டுமே..... இது அவர்கள் வீட்டு தங்கமணி அவர்கள் வாயால் சொன்னது.... அண்ணாச்சி இத நீங்க சும்மா மறுக்க முடியாது நாய் பத்திர ஊழல் போல.........

வில்லன் said...

// குடுகுடுப்பை said...


(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

பட்டத்தை நானும் என் பதிவில் சேர்த்துவிட்டேன்.///

குடுகுடுப்பை ஒரு சரியான அலைஞ்சான்.... சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லீற கூடாதே!!!!! உடனே அத தன்னோட பதிவில் போட்டுக்குற குறுகிய மனப்பான்மை படைத்தவர்...

அது சரி!!!!
இப்ப தெரிந்ததா சோழ நாட்டார் புத்தி....... பட்டம் பட்டம்னு அலையுறத...... எனக்கு ஒரு சந்தேகம் அணாச்சி குடுகுடுப்பை உண்மைலேயே சோழர் தானா??? என்று ........

அப்ப நாங்க என்ன "டெக்ஸாஸ் கொண்ட பாண்டியரா"?????? நசரேயன் என்ன "நியூயார்க் கொண்ட பாண்டியரா"???????முகிலன் என்ன "அமெரிக்கா கொண்ட பாண்டியரா"????????

வில்லன் said...

// அது சரி said...

//
வில்லன் said...
உண்மைலேயே கடாவ வாங்கி வெட்டி பொழி போடுருவோம்ல... ) சோறு தான்.... விருந்து தடபுடலா இருக்கும்ல ரெண்டு பாண்டிய நாட்டு சிங்கங்கள் சந்திச்சா.....
//
என்ன பண்ணுவீங்க?? எதையாவது பொலி போட்ருப்பீங்க..தயாரா ஒரு அருவா முதுகுல வச்சிருப்பீங்களே..முதுகை அருவா ஸ்டாண்டா யூஸ் பண்றதை மொதல்ல நிறுத்துங்கய்யா...//
அப்படி அலைஞ்சே சோழ நாடுகாரங்களுக்கு பயம் இல்லாம போச்சே??????? அருவாவ வீசுனாதான் பயம் வரும் போல..... அமெரிக்கா வந்ததும் சோழர்களுக்கு பாண்டியர்கள பத்தின பயம்/குளிர் விட்டுபோச்சு.... சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது....அமெரிக்கா வாழ் பாண்டியர்களே விழித்தெழுங்கள் இந்த சோழர்களின் கொட்டத்தை அடக்க.......

வில்லன் said...

// அது சரி said...
வரிசல் அறிந்து தான் பரிசல் :0)))...இதுவே சோழ நாட்டானை சந்திக்க போயிருந்த வேற பரிசலோட போயிருப்பார்...//

குளம் குட்டை ஆறு இல்லாத ஊருல பரிசல் வழங்கி என்ன பிரயோஜனம்....... நல்ல வேல பரிசலோட வராம போன்று அணாச்சி குடுகுடுப்பை இல்ல "கதை" கந்தலாகி போயிருக்கும்....அத கொண்டுபோய் குப்பைல வைக்க நெறைய செலவாகிருக்கும்......

அது சரி(18185106603874041862) said...

//
வில்லன் said...

அப்ப நாங்க என்ன "டெக்ஸாஸ் கொண்ட பாண்டியரா"?????? நசரேயன் என்ன "நியூயார்க் கொண்ட பாண்டியரா"???????முகிலன் என்ன "அமெரிக்கா கொண்ட பாண்டியரா"????????

//

எதுக்கு இத்தினி கேள்வி? ஒரே பதில்...இல்ல!

வேணும்னா, டெக்ஸாஸ் "சென்ற" பாண்டி, நியூயார்க் சென்ற பாண்டின்னு வச்சிக்குங்க...யாரு வேணாம்னா??

அது சரி(18185106603874041862) said...

//
வில்லன் said...

அப்படி அலைஞ்சே சோழ நாடுகாரங்களுக்கு பயம் இல்லாம போச்சே??????? அருவாவ வீசுனாதான் பயம் வரும் போல.....
//

சோழ நாட்டான் எதுக்கும் பயப்பட மாட்டான்வே...ரொம்ப நாளா ஆண்டுக்கிட்டு இருக்கமே, போரடிக்குதேன்னு தான் நாங்க மதுரைய விட்டு வெளிய வந்ததே....வரலாறு தெரியாம தகராறு பண்ணப்படாது!

//
அமெரிக்கா வந்ததும் சோழர்களுக்கு பாண்டியர்கள பத்தின பயம்/குளிர் விட்டுபோச்சு.... சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது....அமெரிக்கா வாழ் பாண்டியர்களே விழித்தெழுங்கள் இந்த சோழர்களின் கொட்டத்தை அடக்க.......
//

அய்ய...எங்காளு எப்படி உங்க வீட்டுக்கு தனியா வந்தாரு...அது மாதிரி தனியா வாங்கப்பு...எதுக்கு கும்பல் சேக்கறீங்க?? பயமாருந்தா சொல்லுங்க...பாதுகாப்புக்கு சோழ நாட்டிலருந்து ஒரு பொடியனை அனுப்பி வைக்கிறோம்...

குடுகுடுப்பை said...

என்னமோ ஜட்டி விலை ஜட்டி விலைன்னு கூவுறீர். ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கு வாங்கின பாண்டியர்தானே நீரெல்லாம்.

பழமைபேசி said...

இஃகிஃகி!

வில்லன் said...

// குடுகுடுப்பை said...

என்னமோ ஜட்டி விலை ஜட்டி விலைன்னு கூவுறீர். ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கு வாங்கின பாண்டியர்தானே நீரெல்லாம்.//


அண்ணாச்சி நீரே ஒத்துகிட்டேறு நாங்க ஜட்டி போடுவோம்னு.... நீங்க!!!! ஜட்டின்னா என்னன்னு கேக்குற கோவணம் கட்டுற ஆளுங்கதானையா....

வில்லன் said...

//அது சரி said...
அய்ய...எங்காளு எப்படி உங்க வீட்டுக்கு தனியா வந்தாரு...அது மாதிரி தனியா வாங்கப்பு...எதுக்கு கும்பல் சேக்கறீங்க?? பயமாருந்தா சொல்லுங்க...பாதுகாப்புக்கு சோழ நாட்டிலருந்து ஒரு பொடியனை அனுப்பி வைக்கிறோம்...//

அப்பு நாங்க பண்டிநாட்டு சிங்கங்கள்.... சிங்கம் சிங்கிளா (குடும்பமா) இறைஎடுக்க (சோத்துக்கு) உங்க சோழநாட்டுகாரற அவரு குகைலையே (வீட்டுலே) சந்திச்சவங்க..... உண்மை தெரியாம பேசக்கூடாது... வேனும்ன உங்க சோழ நாட்டுக்காரர் "அண்ணாச்சி" குடுகுடுப்பைய கேட்டுபாரும்...

Vidhoosh said...

குடுகுடுப்பை: நீர் என்னதான் சமாளிச்சாலும் பப்ளிக் டேமேஜ் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. :))

Unknown said...

//அப்பு நாங்க பண்டிநாட்டு சிங்கங்கள்.... சிங்கம் சிங்கிளா (குடும்பமா) இறைஎடுக்க (சோத்துக்கு) உங்க சோழநாட்டுகாரற அவரு குகைலையே (வீட்டுலே) சந்திச்சவங்க..... உண்மை தெரியாம பேசக்கூடாது... வேனும்ன உங்க சோழ நாட்டுக்காரர் "அண்ணாச்சி" குடுகுடுப்பைய கேட்டுபாரும்...
//

சோழ நாட்டவர்கள் எந்த குகைக்குள்ள பதுங்கி இருந்தாலும் தேடிபோயிப் பழிவாங்கிருவோம் பாண்டியர்கள் தெரியுமில்ல?

இனிமே சோழர்கள் ரொம்ப பேசினீங்கன்னா, விஜய ராஜேந்தரச் சோழன் எடுத்த வீராசாமி படத்த பத்து தடவைப் பாக்கணும்னு நாட்டாமை தீர்ப்பு சொல்லிருவாரு... ஆமா..

பித்தனின் வாக்கு said...

// இது மட்டும் எங்க வீட்டு தங்கமணி மற்றும் தலைவர் நசரேயன் வீட்டுல தெரிஞ்சுதுன்னு வையுங்க..... நீங்க உங்க வீடு ரெண்டும் காலி டோய்.... ஆடோல வந்து வூடு புகுந்து அடிப்பாங்க ரெண்டு பேரும் சேந்து.... இதனால தலைவருக்கு பிளைட் டிக்கெட் செலவு வேற... //
எங்கள் இனமானத் தலைவர் குடுகுடுப்பையாருக்கு ஆபத்து அறிவிப்பு உள்ளதால் கறுப்பு எலிப்படை அனுப்புமாறும் எக்ஸ் வைடு பாதுகாப்பு வழங்குமாறு பிரியானி உண்ணும் விரதம் இருக்கப் போகின்றேன் என வில்லன் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

நல்ல காமொடி, நல்ல நட்பு. நன்றி அனைவருக்கும்.

(டெக்ஸாஸ் கொண்ட சோழன்)
எனும் பட்டத்தை நான் சொன்னபடி எனக்கே அளித்த அது சரிக்கு நன்றி.

இது டெக்ஸாஸ் கவர்னருக்கே அல்லது மக்களுக்கே தெரியுமா?

Unknown said...

//.. நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்படி பதிவின் மூலம் கேட்கிறேன். ..//

:-))))

அரங்கப்பெருமாள் said...

அடுத்த வாட்டி நம்பளயும் கூப்பிடுங்க. நமக்கு கூச்சமெல்லாம் கெடையாது. ‘மானம்,ரோஷம்’ பார்த்தா போதை ஏறுமா?