Tuesday, January 26, 2010

ஆ.ஒ அல்லக்கை கார்த்தியும், சிக்கன் புளிசாதமும்.

ஆயிரத்தில் ஒருவனும் ஒரு வழியாக நானும் பார்த்துவிட்டேன், சந்தனமுல்லையின் பதிவின் சொன்னதுபோல் பிரபல தமிழ்/தெலுங்கு படங்களில் (கட்டிப்புடி , கட்டிப்புடிடா என்ற பாடலை விட ,ஒரு உதாரணத்துக்கு) உள்ள ஆபாசத்தை விட, இந்தப்படத்தில் எங்கே ஆபாசம் இருக்கிறது என்று எனக்குத்தெரியவில்லை, வன்முறை இருக்கிறது ஆனால் தேவைப்பட்டதாகத்தான் இருக்கிறது.தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக்கொள்வதும் , அதனை ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதும் அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம், அதற்கேற்றப் புனைவு தான் இது எனவும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். பலருக்கு இந்த வன்முறை அதிகமாக தோன்றியிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.இந்தப்படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இப்படத்தில் கார்த்திக் ஏற்று நடித்திருக்கும் வேடமான எடுபிடி வேலை செய்பவர்களின் தலைவன் வேடத்தில்(தலையாரி) சிறப்பாக செய்திருக்கிறார், தமிழ் சினிமாக்களில் வழக்கமாக நடிகைகளுக்கு வேலை இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் இரண்டு நடிகைகளுக்கும் வேலை இருக்கிறது, ரீமா சென்னுக்கு பழிவாங்கும் பாண்டியத்தி வேடமென்பதால் ஆதிக்கம் செலுத்துகிறார், சோழர்களுக்கு சேதி கொண்டு போக தலையாரியாக சென்ற அவருடைய வேடத்தை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்.அல்லக்கையோ , தலையாரி வேடமோ ஒரு ஹீரோவுக்கு உரிய கதாபாத்திரம் என்பதை நாம் என்றுக்கொள்ளும் போது இன்னும் நல்ல படங்கள் வரலாம். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் நல்ல நடிகராக வலம் வருவார்.

சிக்கன் புளிசாதம்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நானும் மனைவியும் வந்துகொண்டிருந்தோம் , என் வீட்டுக்கு வெகு அருகில் புதிதாக ருசி என்று ஒரு இந்திய உணவகம் திறந்திருந்தார்கள், இன்றுதான் என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் சொன்னேன், அவரும் உடனடியாக இன்று இங்கேயே சாப்பிடுவோம் என்றார். மாலை ஆறரை மணிக்கு நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் ஆர்டர் செய்தோம், சில்லி சிக்கன் என்ற பெயரில் வேகவைத்த சிக்கனுடன் ரெடிமேட் சில்லி சாஸை சிக்கனில் ஊற்றி வெங்காயமும் எலுமிச்சையும் வெட்டி வைத்து கொடுத்தனர். அடுத்து வந்தது சிக்கன் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் புளிசாதம் பொடியை கலந்து சிக்கனையும் சேர்த்து செய்தது போன்ற சுவையுடன், பக்கத்தில் உள்ள குரோசரி கடையில் நான்கு டாலருக்கு மட்டன் பிரியாணி பார்சல் கிடைக்கும் சுவையும் அருமை. இவன் புளிசாதத்தில் சிக்கனைப் போட்டு அதை வேற உட்காந்து சாப்பிட வெச்சிட்டான். ஆனாலும் ஒரு நன்மை என் மனைவிக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டார். மிச்சமுள்ள சி.புளி சாதத்தை பார்சல் செய்து கொண்டோம் , நாளைக்கு என் மனைவிக்கு அதுதான் மதிய உணவு. எனக்கு ஞாயிறு அன்று வைத்த பழைய மீன் குழம்பு இருக்கிறது அதை வைத்தே அரைபடி அரிசி சோறு இறங்கும். வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்,(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) இனி அந்த சிரமம் இல்லை, நடந்தே சென்று ருசியில் சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினா போதும் அலைச்சல் மிச்சம்.

20 comments:

நட்புடன் ஜமால் said...

அல்லக்கை மேட்டர் நல்லா சொல்லியிருக்கீங்க

இதால தான் “இந்தியன்” கூட பெரும் வெற்றி அடையலையோன்னு தோனிச்சி அப்போ

(மகன் கமல் கொல்லப்படுவது)

------------------

அதே நாம் ஹிந்தி படம் பார்க்கையில் 3முட்டாள்ஸ் - மாதவனை ஏற்று கொள்கிறோம் - ஏன் இந்த முரன் - தெரியலை.

-----------------

நல்ல புளி சாதம்

அலைச்சல் மிச்சம்

ஹா ஹா ஹா

vasu balaji said...

அட அட. சிக்கன் புளிசாதத்தில எவ்வளவு நல்ல விஷயம். எட்டு மைல் போற பெட்ரோல் மிச்சம். 2+2 கி.மீ.நடை நல்லது. நல்லா பசிக்கும். இன்னும் கால் படி சேர்த்து சாப்பிடலாம். முக்கியமா டமில் லேடி இடிச்சா பட்டர்ஃப்ளை எஃபெக்ட் வருமான்னு டென்ஷன் இல்லை. :))

பாசிடிவா ஒன்னு, நெகடிவா ஒரு விமரிசனமோன்னு பார்த்தா அதும் பாசிடிவ்தான். சூப்பர்ப்:))

Unknown said...

பரவாயில்ல தல, நம்ம ரெண்டு பேருக்கும் சோழ பாண்டியர் மாதிரி சண்டை வரலைன்னாலும் ஒரே மாதிரி கருத்து ஆ.ஒ பத்தி..

ருசியில ருசியில்லன்னு சொல்லுங்க.

Anonymous said...

//படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு //

படத்தில கார்த்திக்கு சண்டை சீன் இருக்கே.

Sanjai Gandhi said...

1. உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு. கோவையில் மட்டும் இன்னும் கூட்டம் குறைந்தபாடில்லை.. டிக்கெட் கிடைக்காமல் படம் பார்க்காமலே இருக்கிறேன்.

2. ஹய்யோ.. ஹய்யோ.. அரைபடி அரிசி சோறு பத்தி படிச்சதும், பொங்கல் அன்று ஒகேனக்கல் சென்றிருந்த போது நான் சாப்பிட்ட சோறின் அளவை நினைத்தேன். :))

பித்தனின் வாக்கு said...

அய்யா என்ன அய்யா சொல்றீங்க. சிக்கன் உடம்புக்கு சூடு,அதைவீட புளியும் சூடு அதிகம். இரண்டும் சேர்ந்து உண்பதால் உடல் நலம் கெட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். நன்றி.

குடுகுடுப்பை said...

பித்தனின் வாக்கு said...
அய்யா என்ன அய்யா சொல்றீங்க. சிக்கன் உடம்புக்கு சூடு,அதைவீட புளியும் சூடு அதிகம். இரண்டும் சேர்ந்து உண்பதால் உடல் நலம் கெட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். நன்றி//

கூலா ஒரு பீரும் , கொஞ்சம் ஒயினும் கூட சாப்பிட்டா சரியாயிடும்னேன்

துபாய் ராஜா said...

ஆயிரத்தில் ஒருவன் - '-'வான தலைப்பு கொடுத்து '+'வான விமர்சனம் அருமை.

சிக்கன் புளி சாதம் - இங்கேயும் இப்படித்தான்,இந்திய உணவுன்னு பேரைப் போட்டிருக்கிறதை பார்த்து போனா உள்ளூர் உணவுல ஏதேதோ மசாலா மிக்ஸ் பண்ணியிப்பாங்க. இட்லி,தோசை,பூரி,பொங்கல் சாப்பிட்டு எவ்வளவோ நாள் ஆச்சு. :))

சந்தனமுல்லை said...

/படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்./

LoL! அக்மார்க் குடுகுடுப்பை டச்!


/(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) /

அவ்வ்...அதை நாங்க வறுத்தலும் புசித்தலும்லியே நல்லா தெரிஞ்சுக்கிட்டோம்! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

sathishsangkavi.blogspot.com said...

//இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்//

நானும் தான் நண்பா...

kudukuduppai said...

2. ஹய்யோ.. ஹய்யோ.. அரைபடி அரிசி சோறு பத்தி படிச்சதும், பொங்கல் அன்று ஒகேனக்கல் சென்றிருந்த போது நான் சாப்பிட்ட சோறின் அளவை நினைத்தேன். :))

//
pazhamaiyaar bill pay panninaara

வில்லன் said...

அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை....... கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..........

வில்லன் said...

//ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...... அல்லக்கை வேடம் என்றால் சும்மாவா........ இங்கே (அமெரிக்காவுல) வேலை பாக்குற அநேகம் பேர் அல்லக்கையாக தான் வேலை பாக்குறோம்...... அதுக்காக நம்ம எல்லாம் சப்பையா???? இல்லையே.......நம்ம வூருல MTECH படிச்சுட்டு இங்க அல்லக்கையாக தான் வேலை பாக்கணும்....

"யாரு என்ன வேலை பாக்குறோம்னு முக்கியம் இல்ல..... எப்படி பாக்குறோம்னு தான் முக்கியம்....."

வில்லன் said...

//வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்//

இத மொதல்லே சொல்லிருக்கலாம்ல எங்க வீடு தங்கமணி நல்லா புளி சாதம் பண்ணுவாங்க.... வாங்கத்தான் ஒரு இழிச்சவாயனும் கெடைக்கல.... இப்பவும் ஒன்னும் கெட்டுபோகல எப்ப எவளவோ வேணும்னு சொலுங்க (காசுக்கு தான்).... ரெடி பண்ணி கொடுத்துருவோம்....

அது சரி(18185106603874041862) said...

கவுண்டமணி ஒரு படத்துல புளியம் பிரியாணி சாப்பிடுவாரு...அந்த ஞாபகம் வருது...

அது சரி(18185106603874041862) said...

அப்ப சிக்கன் ஊறுகா இப்ப சிக்கன் புளிசாதம்...எப்படி சாமி இப்படி வகை வகையா பிடிக்கிறீங்க??

தாரணி பிரியா said...

m :)

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் அருமை.

சிக்கன் புளிசாதம். அந்த ஹோட்டல் காரங்களுக்கு தெரிஞ்சா விலையை ஏத்திடா போறாங்க.

RAMYA said...

ஒரே இடுகையில் ரெண்டு மேட்டர்.

1. ஆயிரத்தில் ஒருவன் நானும் அந்த படம் பார்த்தேன். அதிகமாக வன்முறை!

எனக்கு ஒண்ணும் முடியலை.

பாதியிலே எழுதும் வர முடியல. மொத்தத்தில் எனக்கு புடிக்கல :(

2. புளிசாதம் மட்டும் சிக்கன் பிரியாணி சூப்பர்.. ம்ம் நல்லாத்தான் சாப்பிடுறீங்க போல :)