Wednesday, January 6, 2010

நசரேயனின் அட்டூழியம் - HOT

திணமனி ,குங்குமம், விகடன் வரை பிரபலமான பதிவர் நசரேயன், நேற்று இலக்கியவாதி யார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார், முற்றிலும் எள்ளல் மிகுந்த அந்தப்பதிவில், முடிவில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி நான் தான் அந்த இலக்கியவாதி என்று முடித்திருக்கிறார். இலக்கியவாதி அப்படின்னு அவரு என்னைப்புகழந்ததா சிலர் நினைக்கலாம். ஆனால் நசரேயனின் நோக்கமே வேறு, அதனை நீங்கள் அந்தப்பதிவில் பின்னூட்டமிட்ட கோவி.கண்ணன் பின்னூட்டம் மூலம் அறியலாம். கோவி.கண்ணன் பின்னூட்டம் சொல்வது இலக்கியவாதி என்பவர் ஒரு வரைமுறைக்குள் எழுதுபவர். இதன் மூலம் தெரிவது என்னவென்றால் என்னை வரைமுறைக்குள் எழுதும் பதிவர் என்று சிறுமைப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான முயற்சியே. எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று நடுவீதியில் நின்று சொல்வதே இதன் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேற அவர் கோவி.கண்ணனை பயன்படுத்திக்கொண்டுள்ளார். இவரது பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.

அது மட்டுமில்லாமல் நான் இலக்கியவாதி என்பதற்கு சான்றாக ஒரு பதிவை தந்துள்ளார், அவரது நோக்கம் அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நாய்ப்பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பை என்று குற்றச்சாட்டு என்மேல் வைக்கப்பட்டது, அதனை வைத்தவர் அது சரி என்னும் பதிவர், அவர் நீண்ட நாட்களாக என்னுடைய கு.ஜ.மு.க வில் சேர்ந்து கட்சியை கைப்பற்ற நினைப்பவர். ஆனால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான். அந்தப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து உண்மையாகவே நான் நாய் பத்திர ஊழல் செய்ததாக நம்மவைக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.

இந்த துவேஷம் நேற்றைய என்னுடைய பதிவில் அவருடைய பதிவில் 75% பதிவுகளில் வரும் "நான் கருப்பன் " என்ற கதாபாத்திரத்தை விமர்சித்ததற்காக என நீங்கள் நினைக்கலாம், ஆனால் அப்படி இல்லை, நான் ஒரு நல்ல நண்பனாக அவருடைய பதிவை விமர்சித்தேன், அதே சமயத்தில் அவர் எழுதிய பிளாக்கர் எக்ஸ்போர்ட் டூலை படுபயங்கரமாக பாராட்டியும் இருந்தேன். ஆனால் இவர் என் மேல் இதற்கு முன்னமேயே காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்பதை என்னுடைய "பிரிந்த நண்பர்கள் சந்திந்தால்" பதிவில் அவர் இட்ட பின்னூட்டம் மூலம் அறிந்துகொண்டேன், அந்தப்பின்னூட்டம் " அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை" அப்படின்னா என்ன சொல்லவருகிறார்.

இவர் என்னை கிறிஸ்துமஸூக்கு நியூயார்க வரச்சொன்னார், நான் போகவில்லை ஆனால் வில்லனை என்னுடைய உளவாளியாக அனுப்பி வைத்தேன், ஆனால் என்னுடைய நேரம் அவருடைய உளவாளியாக மாறிவிட்டார். வில்லன் டாலஸில் இருந்து நியூயார்க்குக்கு குடும்பத்தோடு பிளைட் டிக்கெட் வாங்கித்தரச்சொன்னார்,என்னால் முடியவில்லை இதனை நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார் என்றே அறியமுடிகிறது, இப்போது நான் வில்லனுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை.

இதிலும் முத்தாய்ப்பாக அந்தப்பதிவில் முடிவில் "இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார்" என்று முடித்திருக்கிறார், "வாழும்" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து அவர் வன்மத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

44 comments:

பிரபாகர் said...

முடியல.... வேணாம்... வலிக்குது.... அழுதுடுவேன்...

அழும்பு தாங்க முடியலடோய் சாமி...

பிரபாகர்.

நசரேயன் said...

//திணமனி ,குங்குமம், விகடன் வரை பிரபலமான பதிவர் நசரேயன்//

யாருன்னே தெரியலையே !!!!

நசரேயன் said...

//எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று நடுவீதியில் நின்று சொல்வதே இதன் நோக்கமாகும்//

ஏன் சாலை ஓரத்திலே நின்று சொல்லக்௬டாதா?

நசரேயன் said...

//பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.//

எங்களை கேட்டா ? நீங்கதான் சொல்லணும்

நசரேயன் said...

//ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான்//

ஜக்கம்மா யாரு ?

நசரேயன் said...

//" அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை" அப்படின்னா என்ன சொல்லவருகிறார். //

அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை சொல்ல வருகிறேன்

நசரேயன் said...

//நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார்//

வங்கி கணக்கு எல்லாம் முடக்கிட்டாங்க

vasu balaji said...

கோவி. விதூஷின் பின்னூட்டங்களை உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்காக நான் நேற்றே அண்ணாச்சியின் இடுகையில் குரலெழுப்பினேன். ஆதாரம் இதோ
/வானம்பாடிகள் said...

வருங்கால முதல்வர்ல எலக்‌ஷன் வருதா என்ன? நேத்து குடுகுடுப்பை பழமைய கோத்து வாங்கினாரு. இன்னைக்கு நீங்க அவரை கோத்து வாங்கறீங்க. முகிலன் சுயேச்சயா நிக்கிறாரு.:)).என்னமோ பண்ணுங்ண்ணாச்சி./

இது மட்டுமன்றி நசரேயனின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய நெருக்கடியையும் உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தேன். உங்களுக்கும் வாக்களித்துவிட்டேன்.

கு.ஜ.மு.க. கட்சியிலும் இணைந்து விட்டேன். பார்த்து ஒரு போஸ்டிங் போட்டு கொடுங்க தலைவா. :))

Anonymous said...

சாரு-ஜேமோ எல்லாரும் தோற்றுவிட்டார்கள்.

அது சரி(18185106603874041862) said...

//
எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று நடுவீதியில் நின்று சொல்வதே இதன் நோக்கமாகும்
//

தானைத் தலைவன் தளபதி நசரேயன் நடுத்தெருவில் நின்று கூச்சல் போடுகிறார் என்று சொல்கிறீர்களா??

என்னதான் கட்சிக்குள் பதவி சண்டை இருந்தாலும் தளபதியை இப்படி சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்...

அது சரி(18185106603874041862) said...

//
அவரது நோக்கம் அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நாய்ப்பத்திர ஊழல் செய்த குடுகுடுப்பை என்று குற்றச்சாட்டு என்மேல் வைக்கப்பட்டது, அதனை வைத்தவர் அது சரி என்னும் பதிவர், அவர் நீண்ட நாட்களாக என்னுடைய கு.ஜ.மு.க வில் சேர்ந்து கட்சியை கைப்பற்ற நினைப்பவர்.
//

நீங்கள் நாய்ப் பத்திர ஊழல் செய்ததும், அதன் விளைவாக உங்கள் மீது ஐ.ஆர்.எஸ் விசாரணை நடப்பதும், உங்கள் மொபைல் ஃபோன் உட்பட, உங்களின் கணக்கிலடங்கா சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் சரித்திர உண்மை....சந்தடி சாக்கில் உங்கள் ஊழலை மறைக்க முயற்சிக்காதீர்கள்...ஆண்டவன் நின்று கொல்வான்...ஐ.ஆர்.எஸ். அடுத்த வருஷமே கொல்லும்!

கட்சியை கைப்பற்ற நான் நினைத்தேன் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு....அப்படியே இருந்தாலும் அது குஜமுகவின் உட்கட்சி பிரச்சினை...ஊழல் செய்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நீங்கள் அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது...

அது சரி(18185106603874041862) said...

//
ஆனால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான்.
//

உங்களையும், ஜக்கம்மாவையும் கட்சியிலிருந்து நீக்கி பல மாதங்களாகிறது...இனியும் நீங்கள் இப்படி ஸ்டேட்மென்ட் விடுப்பதை நிறுத்தாவிட்டால் உங்கள் மீது கட்சி மோசடி வழக்கும் பாயும் என்பதை உங்களின் முன்னாள் தொண்டனாக எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...

//
அந்தப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து உண்மையாகவே நான் நாய் பத்திர ஊழல் செய்ததாக நம்மவைக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.
//

உண்மை உலகறியும்...நாய்பத்திர ஊழலில் வந்த பணத்தில் நீங்கள் சிட்டி க்ரூப்பிலும், வாஷிங்டன் ம்யூச்சுவலிலும் பங்குகளை வாங்கி குவித்ததை SEC...ஆராய்ந்து கொண்டிருப்பதை ஏன் மறைத்தீர்கள்??

லீமன் ப்ரதர்ஸ் திவாலனதில் உங்கள் பங்கு என்ன?? பியர் ஸ்டர்ன்ஸின் வராக் கடன்களில் பெரும்பகுதியை தர வேண்டியது யார்???

அது சரி(18185106603874041862) said...

//
அதே சமயத்தில் அவர் எழுதிய பிளாக்கர் எக்ஸ்போர்ட் டூலை படுபயங்கரமாக பாராட்டியும் இருந்தேன்
//

பொய் சொல்வது உங்களுக்கு நன்றாக வரும் என்பதை அந்த டூலை நீங்கள் பாராட்டியதில் இருந்தே எல்லாருக்கும் தெரிந்திருக்கும்....

அது சரி(18185106603874041862) said...

//
இவர் என்னை கிறிஸ்துமஸூக்கு நியூயார்க வரச்சொன்னார், நான் போகவில்லை
//

எந்த விசாரணைக்கு தான் ஒழுங்கா போயிருக்கீங்க?? வயித்தை வலிக்குது, பல்லு வலி, கண்ணு வலி, நெஞ்சு வலின்னு எல்லாத்துக்கும் ஒரு காரணம்....

கலகலப்ரியா said...

முடியல... முடியல... :((... (இதுக்கு எதிர்ப்பதிவு போட முடியல..)

ambooottu work... avvvv..

அது சரி(18185106603874041862) said...

//
அந்தப்பின்னூட்டம் " அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை" அப்படின்னா என்ன சொல்லவருகிறார்.
//

அவரு பட்டா பட்டி அன்ட்ராயர் (ராமராஜன் படத்தில பார்த்திருப்பீங்களே) தவிர வேறு எதுவும் போட்றதில்லைன்னு சொல்ல வர்றார்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
முடியல... முடியல... :((... (இதுக்கு எதிர்ப்பதிவு போட முடியல..)

ambooottu work... avvvv..

//

வொர்க்கா?? எப்பலருந்து அதையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சீங்க??? :0)))

கபீஷ் said...

நாட்டாமை வித் சொம்பு needed?

கோவி.கண்ணன் said...

//இதிலும் முத்தாய்ப்பாக அந்தப்பதிவில் முடிவில் "இப்படி ஒரு அடையாளமாக வாழும் மனிதர் குடுகுடுப்பையார்" என்று முடித்திருக்கிறார்,//

இதை நிபந்தனை இன்றி வழிமொழிகிறேன். :)

// "வாழும்" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து அவர் வன்மத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.//

:) ஆமாம் ஆமாம் ரொம்ப வன்மம்

Mahesh said...

2010 ஜூப்பரா ஆரம்பிச்சுருக்கே.... :)))))))))))))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இலக்கியவாதி சண்டைய ஆரம்பிச்சாச்சா!?

கத்தி இன்றி இரத்தம் இன்றி அடித்துக்கொள்ளுங்கள்!

நாங்கள் வேடிக்கை பார்க்க தயாராக இருக்கிறோம்!

வருகையாளர்களுக்கு மோர் கொடுக்க சிங்கை இலக்கியவாதிகளின் சார்பாக கோவி.கண்ணன் மோர் கொடுத்து தாகம் தீர்ப்பார்!

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்....பிரபல பதிவர்களுக்குள் இலக்கியவாதி சண்டை..எப்பூடி?!
:-))))

Unknown said...

//திணமனி ,குங்குமம், விகடன் வரை பிரபலமான பதிவர் நசரேயன், நேற்று இலக்கியவாதி யார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார், முற்றிலும் எள்ளல் மிகுந்த அந்தப்பதிவில், முடிவில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி நான் தான் அந்த இலக்கியவாதி என்று முடித்திருக்கிறார். இலக்கியவாதி அப்படின்னு அவரு என்னைப்புகழந்ததா சிலர் நினைக்கலாம். ஆனால் நசரேயனின் நோக்கமே வேறு, அதனை நீங்கள் அந்தப்பதிவில் பின்னூட்டமிட்ட கோவி.கண்ணன் பின்னூட்டம் மூலம் அறியலாம். கோவி.கண்ணன் பின்னூட்டம் சொல்வது இலக்கியவாதி என்பவர் ஒரு வரைமுறைக்குள் எழுதுபவர். இதன் மூலம் தெரிவது என்னவென்றால் என்னை வரைமுறைக்குள் எழுதும் பதிவர் என்று சிறுமைப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான முயற்சியே//

ஆமா ஆமா

Unknown said...

// இவரது பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.//

அய்யோ பாவம்.

Unknown said...

//இதனை நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார் என்றே அறியமுடிகிறது, இப்போது நான் வில்லனுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை.//

அழகிரி பாலிடிக்ஸ விட மோசமா இருக்கே..

Unknown said...

// "வாழும்" என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து அவர் வன்மத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
//

அதானே. ஒற்றை வார்த்தையில் அடக்க முடியுமா எங்க தானைத் தலைவனின் வாழ்க்கையை.

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
கோவி. விதூஷின் பின்னூட்டங்களை உங்கள் இடுகையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்காக நான் நேற்றே அண்ணாச்சியின் இடுகையில் குரலெழுப்பினேன். ஆதாரம் இதோ
/வானம்பாடிகள் said...

வருங்கால முதல்வர்ல எலக்‌ஷன் வருதா என்ன? நேத்து குடுகுடுப்பை பழமைய கோத்து வாங்கினாரு. இன்னைக்கு நீங்க அவரை கோத்து வாங்கறீங்க. முகிலன் சுயேச்சயா நிக்கிறாரு.:)).என்னமோ பண்ணுங்ண்ணாச்சி./

இது மட்டுமன்றி நசரேயனின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய நெருக்கடியையும் உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தேன். உங்களுக்கும் வாக்களித்துவிட்டேன்.

கு.ஜ.மு.க. கட்சியிலும் இணைந்து விட்டேன். பார்த்து ஒரு போஸ்டிங் போட்டு கொடுங்க //

கட்சியின் கொள்கைப்படி நான் மட்டுமே உறுப்பினராக இருக்கமுடியும்.எனக்கு கொள்கை மிகவும் முக்கியம் வானம்பாடி அய்யா.

ஆமா முகிலன் மேல என்ன கொலவெறி உங்களுக்கு.

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...
சாரு-ஜேமோ எல்லாரும் தோற்றுவிட்டார்கள்//

என்னமோ கொரியன் கார் மாதிரு பேரு சொல்றீங்க என்னங்க இது

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
ஆனால் கு.ஜ.மு.க ஒரு ஓர் உறுப்பினர் கட்சி, ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான்.
//

உங்களையும், ஜக்கம்மாவையும் கட்சியிலிருந்து நீக்கி பல மாதங்களாகிறது...இனியும் நீங்கள் இப்படி ஸ்டேட்மென்ட் விடுப்பதை நிறுத்தாவிட்டால் உங்கள் மீது கட்சி மோசடி வழக்கும் பாயும் என்பதை உங்களின் முன்னாள் தொண்டனாக எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...

//
அந்தப்பதிவிற்கு இணைப்பு கொடுத்து உண்மையாகவே நான் நாய் பத்திர ஊழல் செய்ததாக நம்மவைக்கும் முயற்சியே அன்றி வேறல்ல.
//

உண்மை உலகறியும்...நாய்பத்திர ஊழலில் வந்த பணத்தில் நீங்கள் சிட்டி க்ரூப்பிலும், வாஷிங்டன் ம்யூச்சுவலிலும் பங்குகளை வாங்கி குவித்ததை SEC...ஆராய்ந்து கொண்டிருப்பதை ஏன் மறைத்தீர்கள்??

லீமன் ப்ரதர்ஸ் திவாலனதில் உங்கள் பங்கு என்ன?? பியர் ஸ்டர்ன்ஸின் வராக் கடன்களில் பெரும்பகுதியை தர வேண்டியது யார்???
//

நீங்கதான் தரனும். வேற யாரு

ஹேமா said...

நல்லா குடுங்க.
நல்லாவே குடுங்க.
வேணும் வேணும்.
இன்னும் பத்தாது நசரேயருக்கு.

KarthigaVasudevan said...

அடடா...என்ன ஒரு இலக்கிய விவாதம்? ! :))))

உங்க கிட்ட இலக்கியத்தை எதிர்பார்த்தா என்ன? நீங்களும் இலக்கியவாதி தான்னு கடல்ல குதிச்சு நிரூபிச்சிடுங்க குகு அண்ணா. :)))

நாங்க வேணா கரைல நின்னுக்கிட்டு கயித்தைப் பிடிசிக்கிறோம் .பயந்தா வேலைக்காகுமா அப்பறம் வேற யார்னாச்சும் வருங்கால முதல்வர் பதவியை அபகரிச்சுடப் போறாங்க ,என்ன நான் சொல்றது அதுசரி தான ! !!!(ஒரு படத்துல் கவுண்டமணி நீச்சல் பழக செந்தில் கரைல கயித்தைப் பிடிச்சிட்டு நிற்கற மாதிரி விட்டுடுவாறே கயித்தைஅப்படின்னு மட்டும் நினைச்சிடாதீங்க .)

தாரணி பிரியா said...

ஹை ரெண்டு பேரும் நல்லா சண்டை போடறீங்களே :)

Vidhoosh said...

//இவரது பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.//

குடுகுடு-ன்னு முடிவெடுத்துட்டா எப்படி. உங்கள் இலக்கிய ஆர்வத்தை முந்தைய பதிவுகளில் எல்லாம் பார்த்து விட்டுத்தான் பாலோ பண்ணு முடிவையும் கிடுகிடு-ன்னு ஆடிப் போய்ட்டேன். :))

Vidhoosh said...

///அது சரி said... ///

இவரது பின்னூட்டங்கள் பின்நவீனத்துவ இலக்கியத்தையே ஓட ஓட விரட்டும் அளவுக்கு இலக்கியத தரம் வாய்ந்தது. :))

Vidhoosh said...

ஹாட்ட்டுன்னு போட்டும் கும்மிகள் குறைவாகவே இருக்கே. இன்னும் ப்ராபளம் i mean பிரபலம் ஆகலையோ??? :))

வாழ்க இலக்கிய விவாதங்கள்.

குடுகுடுப்பை said...

Vidhoosh said...
ஹாட்ட்டுன்னு போட்டும் கும்மிகள் குறைவாகவே இருக்கே. இன்னும் ப்ராபளம் i mean பிரபலம் ஆகலையோ??? :))
//

பதிவுத்தலைப்புதான் ஹாட், நான் இன்னும் பிரபலம் ஆகலை அதுக்கான முய்ற்சிதான் இது.

வில்லன் said...

//எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று நடுவீதியில் நின்று சொல்வதே இதன் நோக்கமாகும்//
வேணும்னா ஒரு மைக்செட் வாங்கி அனுப்பவா...... நாடு ரோட்டுல நின்னு கத்த.......

வில்லன் said...

//இதனை நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார் என்றே அறியமுடிகிறது, //

ஆமா நீறு ஒரு நேரம் சோத்த போட்டுட்டு அம்புட்டு வேல வாங்குநீறு.... உம்மோட பதிவு வில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு. என்னோட பின்னூட்டத்த பாரும்... தல சொன்னவுடனே டிக்கெட் போட்டு ஈமெயில் பண்ணிட்டாருள்ள.... அவரு மனுசம்பா....

வில்லன் said...

//வில்லனை என்னுடைய உளவாளியாக அனுப்பி வைத்தேன், ஆனால் என்னுடைய நேரம் அவருடைய உளவாளியாக மாறிவிட்டார். வில்லன் டாலஸில் இருந்து நியூயார்க்குக்கு குடும்பத்தோடு பிளைட் டிக்கெட் வாங்கித்தரச்சொன்னார்,என்னால் முடியவில்லை இதனை நசரேயன் தன் பணவலிமையால் செய்து வில்லனை தன்வசப்படுத்தியுள்ளார் என்றே அறியமுடிகிறது, இப்போது நான் வில்லனுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை.//

தல (நசரேயன்) எப்பவுமே பொறவாசல் வழிய வந்து தான் பழக்கம்.... தன் சொந்த வீட்டிலும் கூட............

வில்லன் said...

//இப்போது நான் வில்லனுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை//
போன் எடுக்க கூடாதுன்னு, உங்க கூட பேசகூடாதுன்னு "தல - நசரேயன்" (பேர சொல்ல கூடாது "தல"ன்னு தான் சொல்லனும்னு "அன்பு" கட்டளை போட்டுருக்காரு.... உங்கள மாதிரி அராஜகம் எல்லாம் இல்ல தெரியுமா.....) சொல்லிருக்காரு.... நீங்க அவருகிட்ட கேளுங்க குடுகுடுப்பை....

வில்லன் said...

//பதிவின் மூலம் விதூஷ் என்ற பதிவர் என்னுடைய பதிவை பாலோ செய்கிறார், அவர் என்னிடம் இலக்கியம் எதிர்பார்த்தால் நான் எங்கே போவது.//

அதன நமக்கு தெரிஞ்சதெல்லாம் கட்ட பீடி, கஞ்சா, சாராயம்.....நம்ம கிட்ட போயி அவரு எப்படி இலக்கியம் எதிர் பாக்கலாம்.... லேகியம் வேணும்னா கெடைக்கும்..... இலக்கியம் கெடைக்காதுபா... தப்பான எடத்துல தப்பானத தேடுற பாவம் நீ....

வில்லன் said...

?????? நசரேயன் said...


//ஜக்கம்மா சொல்வதை கேட்டு அப்படியே வழிநடத்தும் ஒரு பொதுச்செயலாலர் மட்டுமே நான்//

ஜக்கம்மா யாரு ?????


இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு... எத்தன் போட்டு வந்கல்னு சொல்லுறதோ......வெரல் சப்புற பிள்ள கூட பதில் சொல்லும் அது அவங்க வீடு "தங்கமணின்னு".....

வில்லன் said...

// அது சரி said...

கட்சியை கைப்பற்ற நான் நினைத்தேன் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு....அப்படியே இருந்தாலும் அது குஜமுகவின் உட்கட்சி பிரச்சினை...ஊழல் செய்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நீங்கள் அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது...///

அமைதி அமைதி.... தயவு செய்து இதற்காக யாரும் குடுகுடுப்பை கோவணத்தை கிழிக்க வேண்டாம் (அவரு சட்டை கிழிஞ்சி கோவணம் ஆனது தனி கதை.... அதை சபையில் சொல்லி என்னையே நான் பெருமைபடுத்திக்கொள்ள விருப்பம் இல்லை)....இந்த வார சந்திப்பின் போது எடுத்து சொல்லி அந்த பதவியை உங்களுக்கு விட்டுதர சிபாரிசு செய்கிறேன்... சற்று பொறுமை காக்கவும்.....

வில்லன் said...

????அது சரி said...

//
இவர் என்னை கிறிஸ்துமஸூக்கு நியூயார்க வரச்சொன்னார், நான் போகவில்லை
//

எந்த விசாரணைக்கு தான் ஒழுங்கா போயிருக்கீங்க?? வயித்தை வலிக்குது, பல்லு வலி, கண்ணு வலி, நெஞ்சு வலின்னு எல்லாத்துக்கும் ஒரு காரணம்....??????
இந்த முறை முதுகு வலி........ என்ன மாய வலியோ.... கடைசி வரை வேறேன்னு சொல்லி கால வாரிட்டாறு.... இப்ப சும்மா முதலை கண்ணீர் வடிக்காறு.... நேருல பதின் வெட்டி பொழி போட்ருவேன்....