Monday, January 18, 2010

டயட் பொங்கல்.

குக்கர் பொங்கல் வைத்து சாப்பிட்டாலும், உடல் உழைப்பில்லாத இந்தக்காலத்தில், பொங்கலில் உள்ள இனிப்பு,நெய் முந்திரி பொன்றவை உடல் எடை கொலஸ்டிராஸ், கார்பொஹைட்ரேட் எல்லாவற்றையும் அதிகரித்து உடல் பருமனை அதிகரித்துவிடும். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு டிரெட் மில்லில் தினம் ஒரு மணி நேரம் ஓடவேண்டும். இதற்கு மாற்றாக ஒரு புதுவகை டயட் பொங்கல் எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம்.

தேவையானவை

ஓட்ஸ் முடிந்த அளவு (குவேக்கர் ஒன் மினிட் ஓட்ஸ் உபயோகப்படுத்தலாம்.) 2 கப்
0 கலோரி ஸ்வீட்னர் 20 பாக்கெட்
பிரவுன் கலர் பொடி(சக்கரை கலரில் கலோரி இல்லாத ஏதோ உண்ணக்கூடிய ஒரு பொடி, மிளகாய்த்தூள் அல்ல).
உலர் திராட்சை 10
பாதாம் பருப்பு(முந்திரிக்கு பதிலாக, இதில் ஒமேகா 3 கொழுப்பு இருப்பதால் கொலஸ்டிராலை குறைக்க உதவும்)
ஆலிவ் ஆயில் ஒரு மேசைக்கரண்டி.
ஸ்கிம் மில்க்(கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால்) ஒரு டம்ளர்.

செய்முறை:

அடுப்பை மெதுவான தழலில் எரியவிட்டு, எவர் சில்வர் பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றவும், பால் பொங்கியவுடன், போங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு, ஓட்ஸ் போட்டு இரு நிமிடம் வேகவைக்கவும், பின்னர் சீரோ கலோரி ஸ்வீட்னர் சேர்த்து கலக்கவேண்டும், அத்துடன் உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதம்பருப்பை சிறிது ஆலிவ் ஊற்றி ஒரு நிமிடம் வறுத்து பொங்கலில் சேர்க்கவும், தேவைக்கேறப் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம், முடிந்த அளவு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் உபயோகபடுத்தவும். பொங்கல் இப்போது தயார். நேரமில்லாதவர்கள் இதையே மைக்ரோவேவ் ovenலும் செய்யலாம். பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றி பொங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு மேலே கூறிபடி செய்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்தால் சூடான ஓட்ஸ் பொங்கல் தயார்.

இந்தப்பொங்கல் இதுவரை நான் செய்யவில்லை ஆதலால் அதன் சுவை எனக்குத்தெரியாது, யாராவது செய்து எப்படி இருந்தது என்று சொல்லவும்.

15 comments:

தாரணி பிரியா said...

ஹை மீ தி பர்ஸ்ட், சாப்பிடற விஷயத்தில மட்டும் எப்படி வரேன் பாருங்க :). நன்றி குடுகுடுப்பை :). செஞ்சு பார்த்துட்டு சொல்லறேன்

குடுகுடுப்பை said...

கண்டிப்பா செய்யுங்க தாரணி, என்னோட ரெசிப்பீ எப்படி இருக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும்.

கலகலப்ரியா said...

நான் செய்ஞ்சு சாப்ட்டு இருபது நிமிஷமாவுது.... இன்னும் உசிரோட இருக்கேன்... இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு பதில் வரலேன்னா நீங்க பண்ணிச் சாப்டலாம் குடுகுடுப்பை.... (இப்டியாவது நான் உங்க வாசகர்களை காப்பாத்த ட்ரை பண்றேன்..) Thyaagi Priyaa... vaazhga...

//

கல்கலப்பிரியா என்ன ஆச்சு?

கலகலப்ரியா said...

psst.. innum usirodathan.. u dun hv to taste that.. =))

Anonymous said...

யாராவது செஞ்சு சாப்பிட்டு பாத்து உயிரோட இருந்தால் சொல்லவும் :)

நசரேயன் said...

ரெம்ப பொங்கிட்டீங்க போல ....

அடுத்து என்ன டூயட் பொங்கலா ?

அது சரி(18185106603874041862) said...

//
அடுப்பை மெதுவான தழலில் எரியவிட்டு, எவர் சில்வர் பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றவும், பால் பொங்கியவுடன், போங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு, ஓட்ஸ் போட்டு இரு நிமிடம் வேகவைக்கவும், பின்னர் சீரோ கலோரி ஸ்வீட்னர் சேர்த்து கலக்கவேண்டும், அத்துடன் உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதம்பருப்பை சிறிது ஆலிவ் ஊற்றி ஒரு நிமிடம் வறுத்து பொங்கலில் சேர்க்கவும், தேவைக்கேறப் ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்ளலாம், முடிந்த அளவு எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் உபயோகபடுத்தவும். பொங்கல் இப்போது தயார். நேரமில்லாதவர்கள் இதையே மைக்ரோவேவ் ovenலும் செய்யலாம். பாத்திரத்தில் ஸ்கிம் மில்க்கை ஊற்றி பொங்கலோ பொங்கல் சொல்லிவிட்டு மேலே கூறிபடி செய்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்தால் சூடான ஓட்ஸ் பொங்கல் தயார்.
//

தற்கொலைக்கு தூண்டுவதும், தற்கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை சொல்வதும் சட்டப்படி தவறு...:0)))

நட்புடன் ஜமால் said...

கடைசி லைன்ல வச்சீங்க பாருங்க ட்விஸ்ட்டு :)

Unknown said...

//தற்கொலைக்கு தூண்டுவதும், தற்கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை சொல்வதும் சட்டப்படி தவறு...:0))//

ரிப்பீட்டேய்...

கலகலப்ரியா.. உயிரோட இருக்கீங்க தான?

சந்தனமுல்லை said...

போக்கிரி பொங்கல் போடுவீங்கன்னு பார்த்தா ...அவ்வ்வ்..ஓட்ஸ் பொங்கலாம்..தளபதியாரே..முதல்வருக்கு என்ன ஆச்சு..:-))

sathishsangkavi.blogspot.com said...

எப்படியோ எங்கள பொங்க வைக்கறதுன்னு முடிவு பண்ணீட்டிங்க.....

vasu balaji said...

அது சரி said...

/ தற்கொலைக்கு தூண்டுவதும், தற்கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை சொல்வதும் சட்டப்படி தவறு...:0)))//

அதுக்காக ஜெயிலுக்கு போனா அங்க குடுக்கிற களியும் இப்படித்தான் இருக்கும்னு பின் நவீனத்துவத்துல ஜக்கம்மா சொல்லியிருக்கா:)). சார் இப்பவாவது சேத்துப்பீங்களா?

வில்லன் said...

/டயட் பொங்கல். //

என்ன உங்க வீட்டுல இந்த பொங்கல் தான் பண்ணிநீரா???????????????

வீட்டுல நீங்கதான் சமையல்னு ஊருக்கே தெரியுமே.......அதுல நான் வேற சொல்லி நாத்தனுமாக்கும்.....

வில்லன் said...

//தற்கொலைக்கு தூண்டுவதும், தற்கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை சொல்வதும் சட்டப்படி தவறு...:0)))///

அநியாயமா என்ன கொலைகாரன் ஆகிடாதிங்க....... கொலைக்கு தூண்டுவதும் கொலை செய்து கொள்வதற்கான வழிமுறைகளை சொல்வதும் சட்டப்படி தவறு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!