Saturday, January 14, 2012

த்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரமும்

இந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.

மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------------

அவதார் படம் பார்க்க என் மகள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்(?) ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.


17 comments:

Unknown said...

//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்//

வாவ் டாலஸில் இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள். இங்கேயும் தமிழ்சங்கம் இருக்கிறது. நானும் என் மனைவியும் அதை தமிழர்கள் சோறு திங்கும் சங்கம் என்று தான் அழைப்போம். வருடத்திற்கு 4 விழாக்கள், மறந்தும் கூட தமிழ் பேசி விட மாட்டார்கள். பிள்ளைகள் தமிழ் என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பார்கள். உடையில் மட்டும் தான் தமிழ்நாடு இருக்கும். அதிலும் வேட்டி கட்டி யாரையும் பார்த்ததில்லை. ஒரு முறை நான் போய் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் போல ஆனேன். இன்னொரு விழாவில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். என்னையும் தங்கமணியையும் தவிர யாரும் எழுந்து நிற்கவில்லை. அதுகூட பரவாயில்லை, எழுந்து நின்ற எங்களைப் பார்த்து பலர் சிரித்ததுதான் கடுப்பு. அதுதான் எங்கள் கடைசி அட்டெண்டன்ஸ் என்று சொல்லவும் வேண்டுமா?

நசரேயன் said...

// விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்//

யோவ்..எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க

நட்புடன் ஜமால் said...

நசரேயனுக்காக நான் யாரையும் டீ குடுக்க சொல்லுவேன்

அவசியம் செய்ங்க - நாங்க ஓட்டுறோம் உங்க படத்தை ...


-------------

முன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)

நசரேயன் said...

///-------------

முன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)//

அண்ணே அங்கே இருக்கிறது ஒரே கதை தான், அந்த கதை இன்னும் பல நூறு வருசங்களுக்கு வரும்

பழமைபேசி said...

பொங்கள் கொண்டாடும் யுகத்தில், பொங்கல் விழா கண்ட கு.கு வாழ்க!

vasu balaji said...

:)

சந்தனமுல்லை said...

பொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும்! அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா!! :-)


கூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்! :-)

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...
பொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும்! அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா!! :-)


கூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்! :-)
//

ஆயிரத்தில் ஒருவன் படப்பெட்டி வரல , இல்லாட்டி அதுக்கு சேர்த்துதான் விமர்சனம் எழுதிருப்பேன்.

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாதுங்க.எப்பவுமே வருங்கால முதல்வர்தான்.

குடுகுடுப்பை said...

வாவ் டாலஸில் இல்லையே என்று ஏங்க வைத்து விட்டீர்கள். இங்கேயும் தமிழ்சங்கம் இருக்கிறது. நானும் என் மனைவியும் அதை தமிழர்கள் சோறு திங்கும் சங்கம் என்று தான் அழைப்போம். வருடத்திற்கு 4 விழாக்கள், மறந்தும் கூட தமிழ் பேசி விட மாட்டார்கள். பிள்ளைகள் தமிழ் என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேட்பார்கள். உடையில் மட்டும் தான் தமிழ்நாடு இருக்கும். அதிலும் வேட்டி கட்டி யாரையும் பார்த்ததில்லை. ஒரு முறை நான் போய் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் போல ஆனேன். இன்னொரு விழாவில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். என்னையும் தங்கமணியையும் தவிர யாரும் எழுந்து நிற்கவில்லை. அதுகூட பரவாயில்லை, எழுந்து நின்ற எங்களைப் பார்த்து பலர் சிரித்ததுதான் கடுப்பு. அதுதான் எங்கள் கடைசி அட்டெண்டன்ஸ் என்று //

பொதுவாக குறையும் சொல்லமுடியாது, என் மகள் தமிழ் வகுப்பு செல்கிறால், ஆனால் தமிழில் பேசுவதில்லை. சன் டிவி பார்க்கவிடுவதில்லை.என்ன செய்வது?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...
பொங்கள் கொண்டாடும் யுகத்தில், பொங்கல் விழா கண்ட கு.கு வாழ்க//

நீங்கள் எல்லா விழாவிலும் இளமையான நாயகன்

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...
நசரேயனுக்காக நான் யாரையும் டீ குடுக்க சொல்லுவேன்

அவசியம் செய்ங்க - நாங்க ஓட்டுறோம் உங்க படத்தை ...


-------------

முன்னா பாயோடு நல்ல கம்பேரிசன் :)
//

படம் பாருங்க இன்னும் நிறைய ஒற்றுமை இருக்கு

ராஜ நடராஜன் said...

//ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர்.//

முதல்வரே எப்படி இருக்கீக?

அடைப்பான் கலாச்சார காவலர்கள் வாழ்க.

நானுந்தான் இருக்கேனே!ஒரு பொங்கலுக்கு வேட்டி,தலைப்பாகையோட KFC க்குள்ள போனேன்.

ராஜ நடராஜன் said...

//// விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்//

யோவ்..எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க////

இருந்தா கொடுக்கிறதுதானே:)அப்படியாவது எசப்பாட்டு பாடாம இருப்பாரில்ல!

வில்லன் said...

//விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.//

என்னோட ரோலுக்கு யாரையும் ரெகமண்டு பண்ணலியே..... நல்ல வேலை என் தல தப்பிச்சு..... வச்சீங்க பாரு நசரேயன் ரோலுக்கு........

நமக்கு புடிச்ச, ஏத்த ரோல் கண்டிப்பா வைக்க சொல்லிருங்க நண்பா.....

வில்லன் said...

//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். //

பாத்தீரா தமிழ் சங்கத்துக்கு வழி சொன்ன என்ன பத்தி ஒரு வரி கூட சொல்லல....... இருட்டடிப்பு செய்த உம்மை புறக்கணிப்பு செய்கிறேன்??????????

வில்லன் said...

//நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். //

பாத்தீரா தமிழ் சங்கத்துக்கு வழி சொன்ன என்ன பத்தி ஒரு வரி கூட சொல்லல....... இருட்டடிப்பு செய்த உம்மை புறக்கணிப்பு செய்கிறேன்??????????

வில்லன் said...

//சந்தனமுல்லை said...

பொங்கல் - அட..ஆச்சரியமாக இருக்கிறது.....சந்தோஷமாகவும்! அப்புறம் சினிமா - ல்லாம் பார்த்தா ஒவ்வொரு சினிமாவுக்கும் தனித்தனியா ரெவ்யூ போடணும்..இந்த மாதிரி கூட்டெல்லாம் நஹி சலேகா!! :-)


கூடிய விரைவில் டல்லாசுக்கு முதல்வர் ஆக வாழ்த்துகள்! :-)//
ஹலோ சந்தனமுல்லை, அப்ப நாங்க எல்லாம் எங்க போறது.... அவர நொங்கு சாப்பிட சொல்லிட்டு எங்கள அவரு தின்னுட்டு போட்ட கூந்தல நக்கவா சொல்லுரிங்க....நண்பர் குடுகுடுப்பைக்கும் நசரேயனுக்கும் வில்லனே நான்தான்.... குடுகுடுப்ப மட்டும் முதல்வருக்கு நிக்கட்டும் அப்புறம் வச்சுக்கறேன்..... என்ன செலவானாலும் எதுத்து வில்லத்தனம் பண்ணுவோம்ல.....