Tuesday, January 5, 2010

பழமைபேசிக்கு ஒரு எச்சரிக்கை.

"அண்ணே நல்லா இருக்கீங்களா" ன்னு பெரிய சித்தப்பா வயசுக்காரரான நீங்க போன் பண்ணி பேசறத கேக்கமுடியாத தவிப்பிலும், நீங்கள் செய்யும் காரியத்தின் மேல் உள்ள கோபத்திலும் , உங்கள் மேல் உள்ள அக்கறையிலும், கிட்டத்தட்ட அனைத்துப்பதிவுமே மீள்பதிவு போட்டுவிட்ட நிலையில் புதிதாக ஒரு பதிவுக்காக ஆபத்தில்லாத உங்களை எச்சரித்து இப்படி ஒரு பதிவு எழுதுகிறேன்.

ஒன்னும் இல்லீங்க பழமையாரே நீங்க ஊருக்கு கிளம்பின நேரத்தில ஐந்து வருடம் முன்னால் வாங்கிய என்னுடைய நோக்கியா செல்போன் காணாமல் போச்சு, அதனால் உங்க குரல கேக்கமுடியல, அதுக்கப்புறம் உங்கள மாதிரி ஐபோன் வாங்கலாம்னு பிளான் பண்ணி கடைக்கு போய் ஆட்டுக்கறி வாங்கி சமைச்சு சாப்பிட்டு, திரும்பவும் ஒரு ஓட்டை போனு வாங்கினேன் அப்படியே உங்க குரலையும் கேக்கமுடிஞ்சதுங்க வாய்ஸ்மெயிலில் அப்படியே உங்க ஞாபகம் வந்திருச்சு, உங்களுக்கு பேச்சி ஞாபகம் வந்த மாதிரி.

இந்தியாவில நீங்க போய் பெரிய பேச்செல்லாம் பேசி கலக்கிட்டு இருக்கீங்க.யாரும் படத்தை வலையில போடவேண்டாம்னு சொல்லிட்டு நீங்க மட்டும் ஒரு தொப்பிய தலையில போட்டுட்டு, பழங்காலத்து ஓலைசுவடி படிச்சு சிகப்புச்சாயமெல்லாம் பூசி செயற்கை இளமையா அழகா போஸ் கொடுக்கறீங்க. இந்தப்போட்டோவா பாத்துட்டு உங்க வாயால தளபதி பட்டம் வாங்கின நசரேயன் தன்னோட பதிவுகளில் 75% நான் கருப்பு, அட்டைக்கருப்பு,கறுப்பு,ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட கரிப்பு, குறுப்பு, கரிபால்டி, துண்டு போட்டுக்கறேன் இப்படியே பதிவ போட்டு ரஜினிகாந்த ரேஞ்சுக்கு ஒரு இமேஜ் பில்டப் பண்ணி வெச்சிருக்காரு. இவரோட பதிவெல்லாம் 1MB ய தாண்டி பெரிசா போனதுக்கு தானே கஷ்டப்பட்டு GWT பயன்படுத்தி ஒரு எக்ஸ்போர்ட் டூல் எழுதிருக்காரு. அதுல பாருங்க அந்த டூல அவரோட தளத்தில டெஸ்ட் பண்ணிருக்காரு, அது ஒரு மெஸேஜ் கொடுத்திருக்கு இப்படி

"நீங்கள் , கருப்பு, கறுப்பு,கரிபால்டி, துண்டு போன்ற வார்த்தைகளை நீக்கினால் உங்கள் பதிவு 40 மெகா பைட்டில் இருந்து 2 கிலோ பைட்டா குறைந்துவிடும்"," குறைக்க விருப்பமா?" அப்படின்னு கேக்குதாம். உங்களால் எந்த அளவுக்கு உங்க தளபதி பாதிக்கப்பட்டிருக்கார் பாருங்க.

இதனாலதான் அவரோட போட்டோவ தன் பதிவில போட பயப்படுறாரு, தினமும் என்கிட்ட போன் பண்ணி பழமையார அந்தத்தொப்பியில்லாமல் போட்டோவ போடச்சொல்லுங்கன்னு பாடாப்படுத்துறார். நீங்க தொப்பியில்லாமல் போட்டோவ போட்டவுடன் அவரும் தன்னுடைய முகத்தை தன் பதிவில் இடும் எண்ணத்தில் இருக்கிறாராம். எனக்குத்தெரிந்து நான் முன்னமே சொன்னது இது ஒரு நல்ல தருணம் , அப்படியே பழனிக்கு போய் தொப்பிய கழட்டி சந்தனத்தை தலையில தடவி ஒரு போட்டோ எடுத்து உங்க பதிவில போடுங்கண்ணே, "பழனியில் முடி எடுத்தபின்" அப்படின்னு பதிவும் போட்டிரலாம். என்னதான் கழுதை படத்தை போட்டு திருஷ்டி கழிச்சாலும் இப்ப இருக்கிற மாதிரி கவர்ச்சித் தொப்பியோட படமெல்லாம் போட்டா உங்களுக்கு ஆபத்து, காலம் கெட்டுப்போய் கெடக்கு பெண்கள் எல்லாம் வேற வேலை சோலி இல்லாம உங்க போட்டோவப்பாத்து உருகிப்போறாங்களாம்.

நீங்கள் தொப்பிய கழட்டி உங்கள் கவர்ச்சியை இழந்து போட்டோ போட்ட அடுத்த நாள், தளபதி தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய திருமுகத்தை ஏற்றுவார். கூடுதலாக குடுகுடுப்பையாரும் இணைந்து மிரட்டும் எண்ணம் உள்ளது. நசரேயனின் துண்டுக்கு ஒரு அர்த்தம் கிடைக்க நீங்கள்தான் மனசு வைக்கவேண்டும் பெரியவரே.

இப்படிக்கு உங்கள் பேச்சி போல் யார் பேச்சையும் கேக்காத ஒரு அப்பிராணி.


பிகு: ஆளாளுக்கு எச்சரிக்கை பதிவ ஆரம்பிச்சிராதீங்கப்பா.

22 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா ..

vasu balaji said...

/நீங்கள் தொப்பிய கழட்டி உங்கள் கவர்ச்சியை இழந்து போட்டோ போட்ட அடுத்த நாள், தளபதி தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய திருமுகத்தை ஏற்றுவார். கூடுதலாக குடுகுடுப்பையாரும் இணைந்து மிரட்டும் எண்ணம் உள்ளது. நசரேயனின் துண்டுக்கு ஒரு அர்த்தம் கிடைக்க நீங்கள்தான் மனசு வைக்கவேண்டும் பெரியவரே./

ஆண்டவா. 2010 இந்த ரூபத்துல நிஜமாக போகுதா:))

Thekkikattan|தெகா said...

குடுகுடு, இந்த வீட்டில இது மாதிரி காமெடி பீஸ்தானா... :)) பழம, தொப்பியை கழட்ட இப்படியெல்லாம் கஷ்டப்படுறீயளே ...

குடுகுடுப்பை said...

Thekkikattan|தெகா said...
குடுகுடு, இந்த வீட்டில இது மாதிரி காமெடி பீஸ்தானா... :)) பழம, தொப்பியை கழட்ட இப்படியெல்லாம் கஷ்டப்படுறீயளே ...

//
ஒரு ஊர்க்காரங்களான நமக்குள்ளேயே எவ்வளவோ முரண்பாடு பாருங்க.ஒருவேளை நம் மூதாதையரின் பரிணாமக்குரங்கு வேறவேற போல.:-)

இயற்கையை மட்டும் நேசிச்சா பத்தாது இந்த மாதிரி செயற்கையும் நேசிக்கனும் சொல்லிப்புட்டேன்.

பிரபாகர் said...

எங்க அருமை அண்ணனை இந்த மாதிரி கிண்டலடிப்பதை வன்மையாக.....(யப்பா கொஞ்சம் பொத்து, பிரண்ட்ஸுக்குக்குள்ள பேசிக்கிறாங்கப்பா!).... ம்.... ஒன்னுமில்ல... ஹி... ஹி....

பிரபாகர்.

கலகலப்ரியா said...

அட்டென்ட்டன்சு போட்டுடுவோம்...

கலகலப்ரியா said...

//பிகு: ஆளாளுக்கு எச்சரிக்கை பதிவ ஆரம்பிச்சிராதீங்கப்பா. //

unga face publish pannunga... echcharichiduvom.. :>

நசரேயன் said...

அண்ணே இளகிய மனம் படைத்தவர் எல்லாம் கொஞ்ச நாள் நல்லா இருக்கட்டும், எனக்கெல்லாம் ஒரு ஆயிரம் வாட்ஸ் தேவைப் படும் போட்டோ எடுக்கத்தான்.

Unknown said...

கேபிள் சங்கர் வேற பாக்க சின்ன வயசு அமீர்கான் மாதிரி இருக்காருன்னு கமெண்ட் அடிச்சிட்டாரு. இதுக்கப்புறமும் தொப்பியக் கழட்டுவாருன்னு நெனக்கிறீங்க?

Anonymous said...

பின்குறிப்பெல்லாம் யாரும் கடைப்பிடிக்காதீங்க. ஆளாளுக்கு எச்சரிக்கைப்பதிவு போடுங்க :)

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...
பின்குறிப்பெல்லாம் யாரும் கடைப்பிடிக்காதீங்க. ஆளாளுக்கு எச்சரிக்கைப்பதிவு போடுங்க :)

//

ஏங்க அம்மிணி இப்படியெல்லாம்.

குடுகுடுப்பை said...

பிரபாகர் said...
எங்க அருமை அண்ணனை இந்த மாதிரி கிண்டலடிப்பதை வன்மையாக.....(யப்பா கொஞ்சம் பொத்து, பிரண்ட்ஸுக்குக்குள்ள பேசிக்கிறாங்கப்பா!).... ம்.... ஒன்னுமில்ல... ஹி... ஹி....
//

என்னாதுப்பா இது கவிதை மாதிரி இருக்கு, ஒன்னும் புரியல.

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
/நீங்கள் தொப்பிய கழட்டி உங்கள் கவர்ச்சியை இழந்து போட்டோ போட்ட அடுத்த நாள், தளபதி தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய திருமுகத்தை ஏற்றுவார். கூடுதலாக குடுகுடுப்பையாரும் இணைந்து மிரட்டும் எண்ணம் உள்ளது. நசரேயனின் துண்டுக்கு ஒரு அர்த்தம் கிடைக்க நீங்கள்தான் மனசு வைக்கவேண்டும் பெரியவரே./

ஆண்டவா. 2010 இந்த ரூபத்துல நிஜமாக போகுதா:)//

அண்ணன் சந்தனம் தடவறது உறுதியா?

குடுகுடுப்பை said...

கலகலப்ரியா said...
//பிகு: ஆளாளுக்கு எச்சரிக்கை பதிவ ஆரம்பிச்சிராதீங்கப்பா. //

unga face publish pannunga... echcharichiduvom.. :>//

அப்புறம் எதுக்கு எச்சரிக்கை வேற, இன்னாதுமா ஒன்னும் புரியாம இருக்கீர்.

நட்புடன் ஜமால் said...

இதுக்கு மேலே உள்ள கமெண்ட் ஜூப்பரு ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

present sir

தாராபுரத்தான் said...

பெரியவரே.கேலி நல்லா ,இல்லை.

பித்தனின் வாக்கு said...

உள்ளேன் அய்யா. நான் இன்று ஒரு படங்களுடன் வெள்ளியங்கிரி மலை நிறைவுப் பகுதி போட்டுள்ளேன். அற்புதமான படங்கள் பார்க்கவும். நன்றி அய்யா.

சந்தனமுல்லை said...

:-)))) /தளபதி தன்னுடைய வலைப்பதிவில் தன்னுடைய திருமுகத்தை ஏற்றுவார். கூடுதலாக குடுகுடுப்பையாரும் இணைந்து மிரட்டும் எண்ணம் உள்ளது. /

ரணகளமா இருக்கும் போல இருக்கே! அவ்வ்வ்!

பழமைபேசி said...

ஆகா, அண்ணே! நல்லா இருக்கீயளா? நடத்துங்க, நடத்துங்க... இஃகிஃகி!

தளபதியார் பேரும் புகழும் தமிழகம் எங்கும் படரப்போவுது சீக்கிரமே!! இது சத்தியம்! சத்தியம்!!

vasu balaji said...

பழமைபேசி said...

//ஆகா, அண்ணே! நல்லா இருக்கீயளா? நடத்துங்க, நடத்துங்க... இஃகிஃகி!

தளபதியார் பேரும் புகழும் தமிழகம் எங்கும் படரப்போவுது சீக்கிரமே!! இது சத்தியம்! சத்தியம்!!//

ஆமாம் சத்தியம் சத்தியம் சத்தியம். நீங்க கேட்ட புகைப்படம் இங்க பின்னூட்டத்தில இருக்கு
http://varungalamuthalvar.blogspot.com/2008/10/blog-post_8408.html.:))

Unknown said...

//குடுகுடுப்பை said...
பிரபாகர் said...
எங்க அருமை அண்ணனை இந்த மாதிரி கிண்டலடிப்பதை வன்மையாக.....(யப்பா கொஞ்சம் பொத்து, பிரண்ட்ஸுக்குக்குள்ள பேசிக்கிறாங்கப்பா!).... ம்.... ஒன்னுமில்ல... ஹி... ஹி....
//

என்னாதுப்பா இது கவிதை மாதிரி இருக்கு, ஒன்னும் புரியல.
//

அதான் கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லிட்டிங்கல்ல, அப்புறம் என்ன மறுபடி ஒன்னும் புரியல?