Monday, January 4, 2010

பிரிந்த நண்பர்கள் சந்தித்தால்.

ஆறு வருடங்களாக ஐடி துறையில் வேலை பார்த்தாலும், முருகனுக்கு என்னமோ பெங்களூர் தாண்டி வந்த வாய்ப்புகள் , ஆன்சைட் வாய்ப்புகள் அனைத்தையுமே தவிர்த்து வந்தான், அமெரிக்காவில் இருந்த கிளையண்டுக்கும், வேலை பார்க்கும் கம்பெனிக்கும் இந்தமுறை அவனிடம் இருந்த தனித்திறமை ஆன்சைட்டில் தேவைப்பட்டதால் தவிர்க்கமுடியாத முருகன் இந்த முறை விர்ஜினியாவில் இரண்டு மாத வாசம்.

இண்டர்ன்நெட்டில் தேடிக்க்கொண்டிருக்கையில் கல்லூரி நண்பன் கருப்பனும் விர்ஜினியாவில், அதுவும் அதே நகரத்தில் குடும்பம், குழந்தைகளோடு இருப்பது கண்டு, தொடர்பு கொண்டு இப்போது கருப்பனின் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளான்,

விருந்துக்கு வந்த இடத்தில் அந்தக்காலத்து நினைவுகள் இனி உரையாடலாக.

கருப்பன் : வாடா முருகா, ஆள் அப்படியேதான் இருக்கே, பெங்களூரு காத்துக்கு கொஞ்சம் வெளுத்தது மாதிரி தெரியுது.

முருகன்: நல்லா இருக்கேன், நீ கொஞ்சம் குண்டாயிட்டே, ஆனா இவ்ளோ சிகப்பா இருக்க உணக்கு உங்கப்பன் ஏண்டா கருப்பன்னு பேருவெச்சான்.

கருப்பன்: அதுக்கென்ன பண்ண , உனக்குகூட முருகன்னு பேரு வெச்சிருக்காய்ங்க,அதுக்காக நீ வள்ளியும், தெய்வானையுமா திறியற, ஒத்தைப்பொண்டாண்டியோடதான பொட்டிப்பாம்பா இருக்க.

முருகன்: உன்னை நெனச்சாலே எனக்கு அந்த ஜட்டி ஞாபகந்தாண்டா வருது. மதுரைலேந்து கிலோ ஒன்னரை ரூபாய்க்கு உங்க வீட்ல வாங்கி கொடுப்பாங்களே எப்ப நினைசாலும் சிரிப்பு வரும்டா, பரவாயில்லே ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கி வாங்கி போட்டதெல்லாம் அந்தக்காலம், இப்போ வசதியா இருக்க அதுதான் முக்கியம்.

கருப்பன் : ஆமாண்டா இப்பவெல்லாம் கிலோ இருபத்தி அஞ்சி ரூபா ஆக்கிட்டாங்க, ஆளும் பெரிசாயிட்டதால கிலோவுக்கு 25 ஜட்டிதாண்டா இருக்கு.

முருகன்: டேய் கருமம் , இன்னமும் அந்த நாடா வெச்சத்துணியத்தான் போடறீயா, வெட்கமா இல்லை, கொஞ்சமா சம்பாதிக்கிற எழுத்தாளர் சாருநிவேதிதாவே ஒரு கால்வின் கிளைன் ஜட்டி ரூ-1200க்கு வாங்கி போடுறார். லட்சக்கணக்குல சம்பாதிக்கிற இன்னும் கிலோ கணக்கில ஜட்டி வாங்கி போடுற படுபாவி.

கருப்பன்: இந்த நாடா ஜட்டி இங்கே பயங்கர பேமஸ்டா, பெட் அனிமல்ஸ் சாரிட்டி காரங்க துணி டோனேசனுக்கு வீட்டு வாசல்ல பேக் வெச்சிட்டு போவாங்க, நம்ம பழைய துணியெல்லாம் அதுல போட்டா டாக்ஸ் பர்பஸூக்கே ரெசிப்ட் வெச்சிட்டு போவாங்க, அதுல எல்லாத்தையும் வருடம் ஒருக்கா போட்டிருவேன், இரண்டாவது முறை பேக் கூட ஒரு நோட்ஸ் வெச்சிட்டான், தயவு செய்து எலி ஜட்டியை டொனேட் செய்யவேண்டாம், நாங்கள் எலி வளர்ப்பதில்லை, வளர்த்தாலும் எலிக்கு ஜட்டி தேவையில்லைன்னு. நாம எங்கடா எலி ஜட்டிய டொனேட் பண்ணோம், ஏதோ தப்பா நோட் வெச்சிட்டான்னு நெனச்சி திரும்பவும் இந்த வருடம் இரண்டு கிலோ டொனேட் பண்ணினேன். சாரிட்டிலேந்து வந்து அவளோ ஜட்டியையும் கொட்டிட்டு எலி ஜட்டி மட்டுமல்ல உங்கள் வீட்டு டொனேசனே எங்களுக்கு வேண்டாம்னு போயிட்டான்,அவனுக்கு தெரியல , அது அப்படி சுருங்கி இருக்கு, நாடாவ இழுத்தா யானைக்கு கூட போடலாம்கிற விசயம்.

முருகன்: சரிடா நான் ஹோட்டலுக்கு கிளம்பறேன், டின்னருக்கு ரொம்ப நன்றிடா.

கருப்பன் : இருடா நாளைக்கு லீவுதான , அப்படியே இங்கியே தூங்கிட்டு காலைல டிபன் சாப்பிட்டு அப்புறம் கிளம்புடா.
------------

அடுத்தநாள் காலை

முருகன்: டேய் உன் வீட்டு பேக்யாட்ல இருக்கிறது வேப்ப மரமாடா? வேப்ப மரம் மாதிரியே இருக்கு.

கருப்பன்: இல்லடா வேப்பமரம் மாதிரிதான் இருக்கும், ஆனா வேப்பமரம் இல்லைடா.

முருகன்: பரவாயில்லை , நான் ஒரு குச்சி உடைச்சி பல் விளக்கிக்கறேன்.

கருப்பன்: என்னது குச்சில பல் விளக்குறியா, காலேஜ்ல நிறைய வேப்பமரம் இருந்துச்சு ஏதோ பேஸ்ட் இல்லாத நேரத்துல உதவுச்சு, அதுக்காக இப்பவுமாட முயற்சி பண்ணனும்.

முருகன்: டேய் காலேஜ் படிக்கும்போது என் டூத் பிரஷூம் , ஜட்டியும் காயவெக்கும்போதோ , இல்லை பாத்ரூம்லயோ மூனு நாளு காணா போச்சு, அப்பயே நான் வேப்பக்குச்சிக்கு மாறிட்டேன், ஜட்டி வாங்குறதையும் விட்டுட்டேன், இப்பயும் பெங்களூர்ல இருக்கறதே அங்க நிறைய மரம் இருக்கிறதால, வேம்புன்னு இல்லை ஏதோ ஒரு குச்சிய ஒடிச்சு பல் விளக்கிருவேன், ஆன் சைட் , வேற ஊருக்கு டிரான்ஸ்பர் எதையும் நான் இதுக்காகத்தான் ஒத்துக்கறதில்லை, இங்கே வந்து பிரஷ் வாங்கி விளக்கிப்பாத்தேன், வாயெல்லாம் எரியுது, மரத்துலேந்து குச்சி ஒடிக்கலாம்னாலும் பயமா இருக்கு, அதுனால சும்மா கம்ம மென்னு துப்பி காலத்த ஓட்டுறேன், இன்னிக்குதான் நிம்மதியா பல் விளக்கனும். அப்படியே கொஞ்சம் குச்சி உடைச்சி பார்சல் எடுத்துட்டு போகனும்

கருப்பன்: அடப்பாவி அப்ப இப்பயும் நீ பல்லு மட்டும் தான் விளக்குறீயா?

23 comments:

நசரேயன் said...

அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை

Anonymous said...

:)

//நசரேயன் said...

அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை//

தளபதி, எங்கப்பன் குதிருக்குள் இல்லை மாதிரியா :)

Thekkikattan|தெகா said...

:)) இங்கயும் இருப்பாய்ங்க, இருப்பாய்ங்க...

Unknown said...

// சின்ன அம்மிணி said...
:)

//நசரேயன் said...

அந்த ஜட்டி கருப்பன் நான் இல்லை//

தளபதி, எங்கப்பன் குதிருக்குள் இல்லை மாதிரியா :)
//

இதுதான் பின்னூட்டம் போட்டு புண்ணாக்கிக்கிறதுங்கிறது.

Unknown said...

ஊரு பேர மாத்திட்டா நாங்க அந்தக் கருப்பன் குடுகுடுப்பை இல்லனு நம்பிருவோமா?

அது சரி(18185106603874041862) said...

குஜமுக தலைவருக்கும், தளபதிக்கும் கொஞ்ச நாளா புகைச்சல்னு சொன்னாங்க...இப்ப வெளிய வந்துருச்சி போலருக்கே...:0)))

ஆமா, தலைவரே, எலி எந்த காலத்துல ஜட்டி போட்டுச்சி?? எங்கூர்ல எல்லாம் கோவணம் தான்...:0)))

குடுகுடுப்பை said...

ஒரு புனைவு எழுதினா ஒத்துக்கனும், ஆராயக்கூடாது.

vasu balaji said...

குடுகுடுப்பை said...

/ஒரு புனைவு எழுதினா ஒத்துக்கனும், ஆராயக்கூடாது./

காலேஜ் படிச்சதெல்லாம் வரதால வரலாற்றுப் புனைவு. ஆராயாம எப்புடீ

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

கண்ணகி said...

:).....:)...:)

KarthigaVasudevan said...

:))))

சந்தனமுல்லை said...

போஸ்ட்டும் நசரேயன் கமெண்ட்டும்...ஹிஹி!! :-))))

வால்பையன் said...

//உனக்குகூட முருகன்னு பேரு வெச்சிருக்காய்ங்க,அதுக்காக நீ வள்ளியும், தெய்வானையுமா திறியற, ஒத்தைப்பொண்டாண்டியோடதான பொட்டிப்பாம்பா இருக்க.//

அப்படி என்ன உங்களுக்கு அவரு மேல கொலைவெறி!

வால்பையன் said...

//உன்னை நெனச்சாலே எனக்கு அந்த ஜட்டி ஞாபகந்தாண்டா வருது. //

இங்கேயும் ஜட்டியா?

வால்பையன் said...

//ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கி வாங்கி போட்டதெல்லாம் அந்தக்காலம், இப்போ வசதியா இருக்க அதுதான் முக்கியம்.//

ஹலோ ஒரு ஜட்டி 1300 ரூவா!
சோத்துக்கு இல்லாட்டியும் இதுல கரைக்டா இருப்போமாக்கும்!

வால்பையன் said...

// ஆமாண்டா இப்பவெல்லாம் கிலோ இருபத்தி அஞ்சி ரூபா ஆக்கிட்டாங்க//

நம்ம ஊர்ல கிலோ அரிசி ஒருரூவா தான்!

Unknown said...

//.. அடப்பாவி அப்ப இப்பயும் நீ பல்லு மட்டும் தான் விளக்குறீயா? ..//

:-))))))))

குடுகுடுப்பை said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

குடுகுடுப்பை said...

முகிலன் said...
ஊரு பேர மாத்திட்டா நாங்க அந்தக் கருப்பன் குடுகுடுப்பை இல்லனு நம்பிருவோமா?
//

ராச்செஸ்டர் நியூயார்க்குனு நச்சுனு எழுதிருக்கலாம்.

குடுகுடுப்பை said...

வால்பையன் said...
//ஒரு கிலோ ஜட்டி ஒன்னாருவாக்கி வாங்கி போட்டதெல்லாம் அந்தக்காலம், இப்போ வசதியா இருக்க அதுதான் முக்கியம்.//

ஹலோ ஒரு ஜட்டி 1300 ரூவா!
சோத்துக்கு இல்லாட்டியும் இதுல கரைக்டா இருப்போமாக்கும்!
//

சோத்துக்கு ஒகேன்னே ஆனா ...

குடுகுடுப்பை said...

அது சரி said...
குஜமுக தலைவருக்கும், தளபதிக்கும் கொஞ்ச நாளா புகைச்சல்னு சொன்னாங்க...இப்ப வெளிய வந்துருச்சி போலருக்கே...:0)))

ஆமா, தலைவரே, எலி எந்த காலத்துல ஜட்டி போட்டுச்சி?? எங்கூர்ல எல்லாம் கோவணம் தான்...:0)))

// டொனேட் பண்ணிருவோம்

கலகலப்ரியா said...

omg... =)))...

பித்தனின் வாக்கு said...

// நம்ம ஊர்ல கிலோ அரிசி ஒருரூவா தான்! //
ஆமா ஆமா ஆனா இதை சாப்பிட்டு விட்டு கழிவறைக்குப் போனா அங்க இரண்டு ரூபாய். நல்ல லாஜிக் இல்லையா.
அய்யாவுன் பதிவு மிகவும் அருமை. நல்லவேளை லங்கோடு போடம இருக்குற வரைக்கும் சரி. நன்றி அய்யா.