Monday, September 28, 2009

நிலாவில் தண்ணீர் - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பும் மதங்களும்.

நிலாவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக, இந்தியாவின் சந்திராயன் எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் ஆராய்ந்து நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தண்ணீர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மதங்கள்(மதத்தை அறிவியலோடு இணைக்கும் சிலர்) அவற்றின் அறிவியல் உரிமையை தாங்கள் சார்ந்த மதங்களுக்கு கொடுப்பர் அவை இப்படியெல்லாம் இருக்கலாம் என்ற கற்பனை.

மதம் 1:

"சந்திரஜலம் கொண்டு ஒரு காலம் அந்தணன் பூஜித்தான்" மறை: 1.2.21 இதிலிருந்து நிலாவில் தண்ணீர் இருந்தது தெரிகிறது.

மதம் 2 :

"நிலாவைப்படைத்தோம், அதற்கு ஒளியைப்படைத்தோம் அது சூடாகும் போது ஆற்றிக்கொள்ள தண்ணீரையும் படைத்தோம்" : மறை : 2.1.21

மதம் 3:

"நிலாவைப்படைத்தோம், அதில் குண்டு,குழிகளை படைத்தோம், நிலாமழை படைத்தோம், குண்டு குழிகளில் நிரம்பச்செய்தோம்" : மறை 3.2.4

பழந்தமிழர் பழமொழி:

நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கன்னிப்பெண்.
கண்டதும் மையல் கொண்டான்
பழமைபேசி நிலாநீர் மேல் --- பழமை 3.4.1

ஷீப்ரமணியசாமி பேட்டி:

நாந்தான் அப்பவே சொன்னேனே , மூன்ல தண்ணி இருக்கு, இங்கே யாரும் நதிநீர் பிரச்சினைக்கு அடிச்சிக்காதேள்னு, நானே நாளைக்கு நிலாவுக்கு போய் நிலா நதி, பூமி நதி நீர் இணைப்பை உறுதிப்படுத்துகிறேன். நிலாவிலேந்து நேரடியா எல்லா நதியிலும் இணைச்சிட்டா சுற்றுப்புறச்சூழல் பத்தி ராகுல் காந்தி அறிக்கை விடாம பண்ணிறலாம், அறிக்கைன்னா அது நான் மட்டும்தான் விடனும்.

நாகம்மாள்: அதுதான் உப்புண்டா மாரி மாதிரி ஒருத்தி நிலாக்குளத்துள துணி துவைக்கிறது நீ அன்னாந்து பாத்தாலே தெரியுமே, இதை அமெரிக்கா ”நாசா”மான போனவங்க
இப்பதான கண்டுபிடிச்சாங்களா, நீ சீக்கிரம் கெளம்பி ஊரப்பாக்கா வாப்பா உங்க தாத்தன் மாதிரியே உங்கப்பனும் சரியா வெள்ளாமை போட மாட்டேங்குறான் நீயாவது வந்து நல்லா வெள்ளாமை பண்ணு.

பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு.மதங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடையாது ஆர்குட் போன்ற தளங்களில் மதத்தையும் அறிவியலையும் இணைத்து உரிமை கொண்டாடும் சில கருத்துக்களை வைத்து உருவாக்கின மொக்கை.

32 comments:

அது சரி(18185106603874041862) said...

//
நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கண்ணிப்பெண்.
கண்டதும் மையல் கொண்டான்
பழமைபேசி நிலாநீர் மேல் --- பழமை 3.4.1
//

பழமைபேசி இதெல்லாமா சொன்னாரு?? மோசமான ஆளா இருப்பாரு போலருக்கே :0)))))))))

அது சரி(18185106603874041862) said...

//
நாந்தான் அப்பவே சொன்னேனே , மூன்ல தண்ணி இருக்கு, இங்கே யாரும் நதிநீர் பிரச்சினைக்கு அடிச்சிக்காதேள்னு, நானே நாளைக்கு நிலாவுக்கு போய் நிலா நதி, பூமி நதி நீர் இணைப்பை உறுதிப்படுத்துகிறேன். நிலாவிலேந்து நேரடியா எல்லா நதியிலும் இணைச்சிட்டா சுற்றுப்புறச்சூழல் பத்தி ராகுல் காந்தி அறிக்கை விடாம பண்ணிறலாம், அறிக்கைன்னா அது நான் மட்டும்தான் விடனும்.
//

இது மொக்கையா?? சூனா சானா இப்பிடி அறிக்கை விடமாட்டாருன்னு என்ன நிச்சயம்?? :0))

பழமைபேசி said...

//கண்ணிப்பெண்//

அடச் சே, என்னோட பாட்டை ஏப்பா இப்படிக் கொலை செய்யுறீங்க? அவ்வ்வ்......

அது சரி(18185106603874041862) said...

//
நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கண்ணிப்பெண்.
//

ஒரு சின்ன டைப்போ இருக்கு பாருங்க.. அது ரெண்டு சுழி "கன்னி"...கண்ணிப் பெண்ணுன்னும் சொல்லலாம்...அது கண் ரொம்ப அழகா இருந்தா மட்டும் :0)))

பழமைபேசியார் பார்த்தா பட்டைய கெளப்பிட போறாரு :0))

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//கண்ணிப்பெண்//

அடச் சே, என்னோட பாட்டை ஏப்பா இப்படிக் கொலை செய்யுறீங்க? அவ்வ்வ்......

September 28, 2009 5:41 PM
//

இப்ப தான் சொன்னேன்...அதுக்குள்ள வந்திட்டீங்க....பிழைதிருத்தம் செய்ய நேரம் கொடுக்கக்கூடாதா?? :0)))

பழமைபேசி said...

இஃகிஃகி....

நசரேயன் said...

அண்ணே நிலவிலே என்ன சரக்கு கிடைக்குமுன்னு அதுசரி கேட்குறாரு,நல்ல சரக்கு கிடைத்தால் அவரோட அடுத்த கதைய நிலவுக்கு ௬ட்டிட்டு போகலாமுன்னு சொல்லுறாரு

கோவி.கண்ணன் said...

அருமையாக இருக்கு.

டிஸ்கி (பிகு) போடாமல் எழுதி இருக்கலாம், உங்கள் கருத்தைச் சொல்ல யாருக்கோ விளக்கம் கொடுப்பது தேவையற்றது.

உங்களைக் கேட்டு யாரும் எதுவும் எழுதுவதில்லை, அந்த உரிமை உங்களுக்கும் உண்டு.

புண்பட்டேன், வருத்தப்பட்டேன் என்று படிப்பவர்கள் ஒரு வேளை அப்படிப் பட்டால் சொல்ல பின்னூட்டப் பெட்டி இருக்கிறதே.
:)

குடுகுடுப்பை said...

நன்றி பழமை திருத்திவிட்டேன். மேலும் சில கூடுதலாக சேர்க்கிறேன்

அரசூரான் said...

அமெரிக்கால உட்காந்திண்டு யாரோ குடுகுடுப்பையாம்... என் பேர்ல அறிக்கை விடறா... தப்புண்ணு சொன்னா கு.ஜ.மு.க-ன்னு சொல்லி சில பேர் நிலவுலேருந்து வந்த தூத்தம்ன்னு ஆஸிட வீசிட்டு போரா... அட்லாண்டவில் இருக்குற அரசூரான் இதைல்லாம் தட்டி கேட்க்கப்படாதோ?

பித்தனின் வாக்கு said...

நான் இந்த பதிவை கடுமையாக வரவேற்க்கின்றேன், தமிழ் நாட்டுல தண்ணீர் பஞ்சம் தீர நிலாவில் இருந்து தண்ணீர் கொண்டுவர சுமார் முப்பதாயிரம் கோடியில் ஒரு திட்டம் தீட்டப்படும் என நமது அரசியல் தலைவர்களே அல்லது கு.ஜ.மு.க தலைவர் அறிவிக்காதது ஏன் என மக்கள் மன்றத்தில் கேட்டுக்கொள்கின்றேன். இதுபற்றிய அறிவிப்பை வருங்கால முதல்வர் அறிவிப்பார் என்றும், அந்த காண்ட்டிராக்டை எனக்கு அளிப்பார் எனவும் மிக்க மகிழ்வுடன் தெரிவித்துகொள்கின்றேன்(கொல்கின்றேன்).

Robin said...

:)

ராஜ நடராஜன் said...

அந்தக் கிழவி எத்தனை வருசமா உட்கார்ந்து வடை சுட்டுகிட்டு இருக்குது.தண்ணியில்லாம வடையா?என்னமோ நாசா புதுசா கண்டுபிடிச்ச மாதிரி!

ஆமா!மொதல்வரே! மாதங்களுக்கு கால் ஒடிஞ்சதால மதங்கள் வந்திருக்குமோ!
துவக்க மாதங்களான சித்திரை,ஜனவரி,மொகரம் அனைத்தும் ஒவ்வொரு இன மொழிகளின் பின் மதங்களின் அடையாளம்.

(மொக்கை போடற இடத்தில இதென்னன்னு கேட்கறதுக்கு முன்னாடி எஸ்கேப்!)

வால்பையன் said...

சூப்பரு!

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி.

தருமி said...

//ஆர்குட் போன்ற தளங்களில் மதத்தையும் அறிவியலையும் இணைத்து உரிமை கொண்டாடும் சில கருத்துக்களை வைத்து உருவாக்கின மொக்கை. //

அப்டி வேற இருக்கா? ஒண்ணு ரெண்டு அனுப்புங்க. பார்க்கணும் .......

சென்ஷி said...

:-)

அசத்தல்!

RAMYA said...

சும்மா சொல்லக் கூடாது கற்பனை அசத்தல் ரகம்..

நீங்களே பாட்டு எழுதிட்டு பழமைபேசி அண்ணாவை போட்டு தள்ளிட்டீங்களே:))

நல்ல கற்பனைத்திறன் உள்ள எழுத்தாளர்தான் நீங்க!

அப்புறம் எதுக்கு டிஸ்கி ??

RAMYA said...

//
நசரேயன் said...
அண்ணே நிலவிலே என்ன சரக்கு கிடைக்குமுன்னு அதுசரி கேட்குறாரு,நல்ல சரக்கு கிடைத்தால் அவரோட அடுத்த கதைய நிலவுக்கு ௬ட்டிட்டு போகலாமுன்னு சொல்லுறாரு
//

இது அதுசையா இல்லே நண்பர் நசரேயனோட கருத்துவும் கலந்து இருக்கா :))

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அனைவருக்கும் நன்றி
//

எனக்கு :))

அஹோரி said...

அருமை. கலக்கல்.

மருதநாயகம் said...

புத்திய ரொம்ப தீட்டீட்டிங்க போல

குடுகுடுப்பை said...

மருதநாயகம் said...

புத்திய ரொம்ப தீட்டீட்டிங்க போல
//

இத எழுத என்ன புத்தி வேண்டி இருக்கு.
அதுவும் நாம படிச்சப்பவே புத்தி இல்லாதவங்க

குடுகுடுப்பை said...

Blogger அது சரி said...

//
நிலாநீர் ஓடிவர கொங்கைகள் ஆட
ஆடிவந்தாள் கண்ணிப்பெண்.
//

ஒரு சின்ன டைப்போ இருக்கு பாருங்க.. அது ரெண்டு சுழி "கன்னி"...கண்ணிப் பெண்ணுன்னும் சொல்லலாம்...அது கண் ரொம்ப அழகா இருந்தா மட்டும் :0)))

பழமைபேசியார் பார்த்தா பட்டைய கெளப்பிட போறாரு :0))//

கெளப்பிட்டாரு

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

அருமையாக இருக்கு.

டிஸ்கி (பிகு) போடாமல் எழுதி இருக்கலாம், உங்கள் கருத்தைச் சொல்ல யாருக்கோ விளக்கம் கொடுப்பது தேவையற்றது.

உங்களைக் கேட்டு யாரும் எதுவும் எழுதுவதில்லை, அந்த உரிமை உங்களுக்கும் உண்டு.

புண்பட்டேன், வருத்தப்பட்டேன் என்று படிப்பவர்கள் ஒரு வேளை அப்படிப் பட்டால் சொல்ல பின்னூட்டப் பெட்டி இருக்கிறதே.
:)//

மதங்களை என்கிட்ட யாரும் கேள்வி கேட்டா நான் எங்கப்போவேன். அதுக்குதான் டிஸ்கி.

குடுகுடுப்பை said...

அரசூரான் said...

அமெரிக்கால உட்காந்திண்டு யாரோ குடுகுடுப்பையாம்... என் பேர்ல அறிக்கை விடறா... தப்புண்ணு சொன்னா கு.ஜ.மு.க-ன்னு சொல்லி சில பேர் நிலவுலேருந்து வந்த தூத்தம்ன்னு ஆஸிட வீசிட்டு போரா... அட்லாண்டவில் இருக்குற அரசூரான் இதைல்லாம் தட்டி கேட்க்கப்படாதோ?//

கேளுங்கோ, ஆனா அட்லாண்டாவிலே நீங்க என்ன பண்றேள், இட்லி அரிசில தோசை பண்ணி சாப்பிடறேள். இதெல்லாம் சரி இல்லை. அதிபர் கிட்ட உடனே பேசறேன்

குடுகுடுப்பை said...

பித்தன் said...

நான் இந்த பதிவை கடுமையாக வரவேற்க்கின்றேன், தமிழ் நாட்டுல தண்ணீர் பஞ்சம் தீர நிலாவில் இருந்து தண்ணீர் கொண்டுவர சுமார் முப்பதாயிரம் கோடியில் ஒரு திட்டம் தீட்டப்படும் என நமது அரசியல் தலைவர்களே அல்லது கு.ஜ.மு.க தலைவர் அறிவிக்காதது ஏன் என மக்கள் மன்றத்தில் கேட்டுக்கொள்கின்றேன். இதுபற்றிய அறிவிப்பை வருங்கால முதல்வர் அறிவிப்பார் என்றும், அந்த காண்ட்டிராக்டை எனக்கு அளிப்பார் எனவும் மிக்க மகிழ்வுடன் தெரிவித்துகொள்கின்றேன்(கொல்கின்றேன்).//

கு.ஜ.மு.க தலைவர் ஜக்கம்மாவிடம் கேட்கிறேன்.

குடுகுடுப்பை said...

நன்றி ராபின்.

------------------------------

ராஜ நடராஜன் said...

அந்தக் கிழவி எத்தனை வருசமா உட்கார்ந்து வடை சுட்டுகிட்டு இருக்குது.தண்ணியில்லாம வடையா?என்னமோ நாசா புதுசா கண்டுபிடிச்ச மாதிரி!

ஆமா!மொதல்வரே! மாதங்களுக்கு கால் ஒடிஞ்சதால மதங்கள் வந்திருக்குமோ!
துவக்க மாதங்களான சித்திரை,ஜனவரி,மொகரம் அனைத்தும் ஒவ்வொரு இன மொழிகளின் பின் மதங்களின் அடையாளம்.

(மொக்கை போடற இடத்தில இதென்னன்னு கேட்கறதுக்கு முன்னாடி எஸ்கேப்!)//

புதுக்கதையா இருக்கு

குடுகுடுப்பை said...

Blogger தருமி said...

//ஆர்குட் போன்ற தளங்களில் மதத்தையும் அறிவியலையும் இணைத்து உரிமை கொண்டாடும் சில கருத்துக்களை வைத்து உருவாக்கின மொக்கை. //

அப்டி வேற இருக்கா? ஒண்ணு ரெண்டு அனுப்புங்க. பார்க்கணும் ......

orkut.com சேந்து எல்லா மதங்களையும் தேடுங்க சுவாரசியமா இருக்கும். ரொம்ப மனச்சோர்வு ஏற்பட்ட அங்கே போய் எதையாவது படிச்சு சிரிக்கிறது.

குடுகுடுப்பை said...

நன்றி

சென்ஷி
ரம்யா
அஹோரி

Mahesh said...

"நீர் ஒரு மத வெறியர் போலும் !!"

:)))))))))))))

Unknown said...

டிஸ்கி போடுறதுல தப்பே இல்லை. டிஸ்கி மட்டும் போடலன்னு வச்சிக்கிங்க, இப்ப எதுக்கு டிஸ்கி எதுக்கு டிஸ்கின்னு கேக்குறவங்கள்லாம் நம்ம முதுகுல டின் கட்டும்போது கைய கட்டிட்டு பாப்பாங்கள்லா.