Friday, April 3, 2009

தொவையல் - பெட்ரோல் விலை ஏறப்போகுது.

பரிசல்காரன் அவியல் போடுறார், பழமைபேசி பள்ளயம் போடுறார், மகேஷ் கூட்டாஞ்சோறு செஞ்சு எல்லாத்தையும் அவரே சாப்பிடுறார். நானும் ஒரு தொவையல் போடுறேன்.

தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) சாப்பிடும்போதோ, குடிக்கும்போதோ நாக்குக்கு ருசியா இருக்க நாம சாப்பிடுறதான். கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.

அழுக்கு ஜட்டியையும் ,புதுத்துணியவும் ஒன்னா சேத்து துவைச்சு கழுவி இரண்டையும் வீணாக்குனாலும் தொவையல்தான் என்னோட இந்த தொவையல் எந்த ரகமா வேணுமானலும் இருக்கும்.

1. G20 மாநாடு நல்லபடியா முடிஞ்சு உலகப்பொருளாதாரம் கீழே விழாம முட்டுக்கொடுக்க 1 டிரில்லியன் $ க்கு மேல உலக நாடுகள் நிதி ஒதுக்கி இருக்காங்க.இதுனால உலகப்பொருளாதாரம் உயருதோ இல்லையோ, ஆனால் பெட்ரோல் விலைய இந்தக்கோடைக்காலத்துக்குள்ள பழையபடி 1 Gallon $4 க்கு கொண்டு வந்துருவாங்க போலருக்கு அதுக்கான அறிகுறிகள் இப்பவே தெரிய ஆரம்பிக்குது, ஜூலை, ஆகஸ்ட் மாத வாக்கில திரும்பவும் அறிக்கையா விடுவாங்க பொருளாதார முன்னேற்றம் எதிர்பாராத பெட்ரோல் விலை உயர்வால் தடைபட்டுவிட்டது.

2. அவரைக்காய் பச்சை மற்றும் அரக்கு ஆகிய இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும், இது கொடியில் காய்க்கும். வீட்டின் முன்னால் பந்தல் போட்டு இதனை வளர்க்கலாம்.இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி தேங்காய் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம், சாம்பாரில் போட்டால் சாம்பாரின் சுவை கூடும். அவரைக்காய் புளிக்குழம்பும் நல்ல சுவையாக இருக்கும், இதன் சுவையில் நாளு வாய் சோறு அதிகமாக சாப்பிடலாம்.

கேள்வி: அவரைப்பூவின் படம் வரைந்து பாகங்களை குறி?

இந்தக்கேள்விக்கு என்னோட படித்த ஒரு நண்பர் எழுதிய விடையின் சாரம்தான் மேலே உள்ளது.

34 comments:

நட்புடன் ஜமால் said...

\\கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.\\

ஆஹா! சுவையோ சுவை.

மணிகண்டன் said...

தொவையல் நல்லா இருக்கு குடுகுடுப்பை. துவைச்சு போடுங்க இனிமே

பழமைபேசி said...

//நாளு //

இஃகிஃகி!

ஷண்முகப்ரியன் said...

//தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்//
எங்க கோயமுத்தூரு பக்கமும் இதே துவையலுதாங்க.

அவரைக்காய் பெட்ரோல் விலையால் தீஞ்சு போகாமே இருக்கனும்ன்னு அருள்வாக்குச் சொல்லுங்க குடுகுடுப்பைக்காரரே.
உங்க பேரை அடிக்கறதுக்கு நான் குடுகுடுப்பையே அடிச்சுடலாம்.

சந்தனமுல்லை said...

அவரைக்காய் ஆன்ஸர் ROTFL!

அய்யே..அம்மியை கழுவாம அரைச்சு சாப்பிடறதா...அரைக்கும்போது மட்டும் பார்த்திருக்கீங்கன்னு தெரியுது!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்! யாரையோ தொவைச்சு காயப் போட்டுட்டீங்கன்னு ஓடிவந்தேன், நம்ம பழங்கஞ்சி தொவையலா! நன்னா இருக்குமே!

வெற்றி-[க்]-கதிரவன் said...

டேய் பித்தா, குடுகுடுப்பை வலைபூவுக்கு போகதனு சொன்னேன் கேட்டியா ?

நல்ல வேணும் உனக்கு

எம்.எம்.அப்துல்லா said...

//வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //

அன்னவாசலில் மட்டும் அல்ல புதுகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெஞ்சனம் என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் உண்டு.

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

//தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்//
எங்க கோயமுத்தூரு பக்கமும் இதே துவையலுதாங்க.

அவரைக்காய் பெட்ரோல் விலையால் தீஞ்சு போகாமே இருக்கனும்ன்னு அருள்வாக்குச் சொல்லுங்க குடுகுடுப்பைக்காரரே.
உங்க பேரை அடிக்கறதுக்கு நான் குடுகுடுப்பையே அடிச்சுடலாம்.
//

சினிமாக்காரங்களும், சாப்ட்வேர்காரங்களுக்கும் காப்பி அடிக்கத்தெரியனுமே சார். ctl+c then ctrl+v

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//
//வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //

அன்னவாசலில் மட்டும் அல்ல புதுகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெஞ்சனம் என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் உண்டு. //

அத்திவெட்டியிலும் வழங்கப்படுது சாமியோவ்!

குடுகுடுப்பை said...

எம்.எம்.அப்துல்லா said...

//வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) //

அன்னவாசலில் மட்டும் அல்ல புதுகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெஞ்சனம் என்ற வார்த்தை இன்றும் புழக்கத்தில் உண்டு.//

எங்க தோப்பில் முன்னர் குடியிருந்த ஒரு குடும்பம் அன்னவாசலை சேர்ந்தது அதை வெச்சுத்தான் எனக்குத்தெரியும்.

குடுகுடுப்பை said...

மணிகண்டன் said...

தொவையல் நல்லா இருக்கு குடுகுடுப்பை. துவைச்சு போடுங்க இனிமே//

நன்றிங்கண்ணா

குடுகுடுப்பை said...

பித்தன் said...

டேய் பித்தா, குடுகுடுப்பை வலைபூவுக்கு போகதனு சொன்னேன் கேட்டியா ?

நல்ல வேணும் உனக்கு
//
என்னா ஆச்சு?

Mahesh said...

வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே !!

குடுகுடுப்பை said...

Mahesh said...

வெஞ்சனம் காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே !!
//
ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.

அது சரி(18185106603874041862) said...

//
கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.
//

ஏன், அம்மியை கழுவி அரைச்சா ருசி கொறஞ்சிடுமா? :0))

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.

April 3, 2009 1:39 PM
//

லீவெல்லாம் வேலை பார்க்கிறவங்களுக்கு தான கொடுப்பாங்க...உங்களுக்கு எப்படி?? :0))

எதுனா ஊர் நாட்டு பக்கம் போற ஐடியா இருக்கா?

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

அவரைக்காய் ஆன்ஸர் ROTFL!

அய்யே..அம்மியை கழுவாம அரைச்சு சாப்பிடறதா...அரைக்கும்போது மட்டும் பார்த்திருக்கீங்கன்னு தெரியுது!!
//

கழுவுவாங்கன்னு தெரியும், அந்த மிளகாய்த்துவையல்ல வருகிற வாசனை /சுவை அம்மியில் உள்ள மிச்சம் என்றே என் நினைப்பு, மிக்ஸி தொவையல் அரைச்சா அந்த டேஸ்ட் வராது.

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
ஒன்னுமில்லாம பதிவு போட்டான் அப்படித்தான் ஆகும், அப்புரம் நான் ஒரு மூனு வாரம் லீவு.

April 3, 2009 1:39 PM
//

லீவெல்லாம் வேலை பார்க்கிறவங்களுக்கு தான கொடுப்பாங்க...உங்களுக்கு எப்படி?? :0))

எதுனா ஊர் நாட்டு பக்கம் போற ஐடியா இருக்கா?
//

லீவு பதிவுக்கு சாமி.

குடுகுடுப்பை said...

ஜோதிபாரதி said...

ம்ம்ம்! யாரையோ தொவைச்சு காயப் போட்டுட்டீங்கன்னு ஓடிவந்தேன், நம்ம பழங்கஞ்சி தொவையலா! நன்னா இருக்குமே!//

நான் என்னையே தொவைச்சாதான் உண்டு.

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//நாளு //

இஃகிஃகி!//

மாத்திடுறேன்.

வில்லன் said...

பழைய சோறும் (முந்தின நாள் சோறும்) தொவையலும் ருசியோ தனி தலைவா

வில்லன் said...

ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨ சம்மந்தமே இல்லாம இருக்கே என்ன. இன்னும் வெயில் அதிகமாகலையே என்ன ஆச்சு...... வீட்டுல எதாவது அடிதடி சண்டை!!!!!!! வேணாம்ப்பா வம்பு. இன்னும் ரெண்டு வாரத்துல சந்திகிறதா இருகோம்.... கொறஞ்சது காப்பி தண்ணியாவது கெடைக்கணும்... அத கெடுத்துக்க விருப்பம் இல்ல....

குடுகுடுப்பை said...

வில்லன் said...

பழைய சோறும் (முந்தின நாள் சோறும்) தொவையலும் ருசியோ தனி தலைவா
//

இப்பயும் பழைய சோறுதானே சாப்புடுறீங்க சுட வெச்சு

குடுகுடுப்பை said...

Blogger வில்லன் said...

ஆமா பாயிண்ட் ௧ அண்ட் ௨ சம்மந்தமே இல்லாம இருக்கே என்ன. இன்னும் வெயில் அதிகமாகலையே என்ன ஆச்சு...... வீட்டுல எதாவது அடிதடி சண்டை!!!!!!! வேணாம்ப்பா வம்பு. இன்னும் ரெண்டு வாரத்துல சந்திகிறதா இருகோம்.... கொறஞ்சது காப்பி தண்ணியாவது கெடைக்கணும்... அத கெடுத்துக்க விருப்பம் இல்ல....//

இது ஜட்டியும், புது சட்டையும் தொவையல்

அது சரி(18185106603874041862) said...

//
வருங்கால முதல்வர் said...

லீவு பதிவுக்கு சாமி.

April 3, 2009 4:09 PM
//

ஏன், என்ன ஆச்சு?? தேர்தல் சமயத்துல வருங்கால முதல்வர் விடுமுறையில போறது அடுக்குமா??

லீவை உடனே கேன்சல் செய்யும் படி பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது! இதை மறுக்கும் பட்சத்தில், பொதுக் குழு மீண்டும் கேட்டுக் கொள்ளும்!

நசரேயன் said...

தொவையலை தொவைங்க

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
வருங்கால முதல்வர் said...

லீவு பதிவுக்கு சாமி.

April 3, 2009 4:09 PM
//

ஏன், என்ன ஆச்சு?? தேர்தல் சமயத்துல வருங்கால முதல்வர் விடுமுறையில போறது அடுக்குமா??

லீவை உடனே கேன்சல் செய்யும் படி பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது! இதை மறுக்கும் பட்சத்தில், பொதுக் குழு மீண்டும் கேட்டுக் கொள்ளும்!
//
குஜமுக விற்கு வேட்பாளர் அறிவிப்பு கொடுத்தாச்சு வ.முல போய் பாருங்க

புதியவன் said...

//இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி தேங்காய் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம், சாம்பாரில் போட்டால் சாம்பாரின் சுவை கூடும். அவரைக்காய் புளிக்குழம்பும் நல்ல சுவையாக இருக்கும், //

என்ன இது சமையல் குறிப்பு மாதிரி இருக்கு...

வெற்றி-[க்]-கதிரவன் said...

குஜமுக ல எனக்கு ஒரு பதவி தரபடாதா ?

குடந்தை அன்புமணி said...

பழைய சாதத்துக்கு தொவையல் அருமையா இருக்கும். ஆனா கழுவாத அம்மியில்... உவ்வே... பெட்டரோல் விலை இந்தியாவில் இப்போது உயர்தப்படமாட்டாது. ஏன்னா... இது தேர்தல் காலங்கோ!

Unknown said...

G20 மாநாட்டுக்கும் அவரைக்கயிக்கும் என்ன சம்பந்தம்னு யாரவது சொல்லுங்க..

தேவன் மாயம் said...

தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) சாப்பிடும்போதோ, குடிக்கும்போதோ நாக்குக்கு ருசியா இருக்க நாம சாப்பிடுறதான். கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.////

ஏங்க!
துவையலில் மூழ்குபவர்களில் காரைக்குடிக்காரங்களும் அதிகமுங்கோ!

வில்லன் said...

இப்பவே ஊரு பக்கம் அம்மிய பாக்குறது ரொம்ப கஷ்டம். அதுவும் நம்ம புள்ளங்க காலத்துல அம்மிய முசெயும்ல (MUSEUM) தான் பாக்கலாம் போல.... காலம் ரொம்ப கெட்டுபோச்சு