Monday, January 26, 2009

சீனாவில் நான் பார்த்த தமிழ் பேசிய பாகிஸ்தானி மற்றும் சில இடங்கள்.

குடுகுடுப்பை: சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

முந்தைய பதிவுகளில் உணவு,சீன மருத்துவம்,மற்றும் சில பார்த்த மக்கள் பார்த்தோம், நான் மஸாஜ் எடுத்துக்கொண்ட சீன மருத்துவமனையில் தமிழ் நன்றாக தமிழ் பேசக்கூடிய ஒரு பாகிஸ்தானியரை சந்தித்தேன்,அவருடைய அம்மா தமிழ்நாட்டைச்சேர்ந்தவர், அப்பா பாகிஸ்தானியர், கத்தாரில் இருக்கிறார்கள் நன்றாக தமிழ் பேசுகிறார், இட்லி தோசை ரொம்ப பிடிக்குமாம், ஒருமுறை கூட தமிழ்நாட்டிற்கு வந்ததில்லை என்றார். அவர் கத்தாரில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்க்கிறார், அதனாலோ என்னவோ சீனர்களிடம் எப்படியாவது எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்.அரபு நாட்டில் உள்ள இரண்டு மனைவி கதைகளெல்லாம் சீனர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சீனர்களுக்கு குழந்தையே ஒன்றுக்கு மேல் கூடாதாம் இதில் இரண்டு மனைவி எங்கே, கண்டிப்பாக அவர்களுக்கு புரியவில்லை என்றே தோன்றியது.தமிழ் பேசும் என்னைக்கண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி,அரேபியரிடம் பேசுவதை விட என்னிடம் பேசுவதையே விரும்பினார், தாய்மொழியை பேச சீனாவில் கிடைத்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக்கொண்டோம்.அவர் கொண்டு வந்திருந்த கத்தாரி மிக்ஸ் சுவையாக இருந்தது.


முதலில் சென்ற இடம் பெய்ஜிங் பாடலிங் பகுதியில் உள்ள கிரேட்வால்(great wall of china).காரில் ஒரு மணி நேர பயணம், பெய்ஜிங் சாலைகள் அமெரிக்கவை நகரைவிட 15 வருடம் பின் தங்கியுள்ளது, இந்தியாவைவிட 15 மடங்கு முன்னேறியுள்ளது, பாடாலிங் செல்லும சாலை நல்ல தரத்திலேயெ இருந்தது.

இந்த வாத்து நான் சாப்பிட்டாச்சு


நான் சென்ற நேரம் கொஞ்சம் மேக மூட்டமாக இருந்தது, கீழ்
மட்டத்திலிருந்து நடந்து மேலே செல்லலாம்,அல்லது ரோப்காரில் ஒரு குறிப்பிட்ட தூரம் செல்லலாம், முதல் முயற்சியை சில காரணங்களால் நான் தேர்ந்தெடுக்கவில்லை.ரோப்காரில் இருந்து கீழே பார்த்த போது கொள்ளை பயம் அதுவும் இறங்கி வரும்போது.மிக அழகாக கண்ணுக்கு எட்டிய தூரம் கட்டியிருக்கிறார்கள்.ரசித்துக்கொண்டே உச்சியை படிகளில் ஏறி அடைந்தேன். அங்கே ஒரு போட்டோ எடுத்து உச்சியை அடைந்ததற்கு ஒரு சர்டிபிகேட் கொடுத்தார்கள் 30யுவானுக்கு.அடிமைகள் இருந்தால் தேவையில்லாமல் இப்போது கூட இப்படி கட்டலாம் தேவையில்லாத சுவர்களை.

இன்னொரு நாள் நான் சென்றது பீஜிங் பேலஸ் இதுவும் பார்க்க நன்றாக இருந்தது, நுழைவாயிலில் சுற்றி ஒரு நீர்வழிப்பாதை ராணிகள் நீராட போல அதில் ஒரு சுற்று படகில் சென்றேன்.பின்னர் அரண்மனையை சுற்றிப்பார்க்க சிறிய மலை நிறைய படிக்கட்டுகள் ஏறினேன்,அழகான கட்டடக்கலை ரசிக்கும்படியாக இருந்தது. அங்கே ஒரு பெரிய புத்தர் சிலை மற்றும் சில புத்த மத விக்கிரகங்கள் இருந்தது ஒரே ஒரு சீனப்பெண் கையை மேலே தூக்கி இந்தியர்கள் கும்பிடுவது போலவே கும்பிட்டு வழிபட்டார்.
மன்னர் குடுகுடுப்பைபீஜிங் பேலஸ்

அடுத்து நான் சென்ற இடம் forbidden city, இதற்கு எதிரில் உள்ள இடம்தான் டியானன்மென் ஸ்கொயர் பகுதி,600 ஆண்டுகளுக்கு முன் வரை அரண்மனை, இப்போது அருங்காட்சியகம் ஆகிவிட்டது, கிட்டத்தட்ட இரண்டு மைல் சுற்றளவு இருக்கும், அவ்வளவு பெரிய இடம், நடந்து எல்லா பகுதிகளையும் பார்ப்பது ஒரு நாளில் சாத்தியமில்லை என்று சொன்னார்கள்.நான் சென்ற பொழுது ஸ்டார்பக்ஸ் காபி கடை உள்ளே இருந்தது, இப்போது இல்லை.நான் பார்த்ததில் மிகவும் பிடித்த இடம் இதுதான் மன்னர்களின் அந்தப்புரம், அரசவை, சாமி கும்பிட கோவில் சாப்பிட அறை, பொதுமக்களை பார்வையிட என் நூற்றுக்கு மேற்பட்ட அறைகள்.

கடைசி படம் தியானென்மென் சதுக்கம்.


.

44 comments:

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா வாரேன்

இராகவன் நைஜிரியா said...

ஆங்கிலம் பேசுவதற்கே ஆள் கிடைக்காத ஊர்ல தமிழ் பேச ஆள் கிடைச்ச உமக்கு உடம்பு முழுக்க மச்சமய்யா..

கடைசி சில படங்கள் எடிட் பண்யிருக்கீங்களே...

என்ன எதாவது எடாகூட விசயமா?

Anonymous said...

"சீனர்களுக்கு குழந்தையே ஒன்றுக்கு மேல் கூடாதாம் இதில் இரண்டு மனைவி எங்கே,"


அங்கே போய் இஸ்லாத்துக்கு மாறினாலும் சான்ஸ் கிடையாதா? என்ன சார் அநியாயம்?
இதெல்லாம் பின் லாடன் சார் கவனிக்கவே மாட்டாரா?


குடுகுடுப்பை சார்! தெரியாம‌த் கேக்கிறேன். 2க்கு கூட‌ வ‌ச‌தி இல்லாத‌ நாட்டை ந‌ல்ல‌ நாடு என‌ எழுத எப்ப‌டி சார் ம‌ன‌சு வ‌ருது. வாத்துக் க‌றி ம‌ட்டும் இருந்தா போதுமா? நீங்க ஒரு சுத்த‌ வாத்து ......ஆக‌ இருப்பீங்க‌ போல‌த் தெரியுது!!

புள்ளிராஜா

குடுகுடுப்பை said...

Anonymous said...

"சீனர்களுக்கு குழந்தையே ஒன்றுக்கு மேல் கூடாதாம் இதில் இரண்டு மனைவி எங்கே,"


அங்கே போய் இஸ்லாத்துக்கு மாறினாலும் சான்ஸ் கிடையாதா? என்ன சார் அநியாயம்?
இதெல்லாம் பின் லாடன் சார் கவனிக்கவே மாட்டாரா?


குடுகுடுப்பை சார்! தெரியாம‌த் கேக்கிறேன். 2க்கு கூட‌ வ‌ச‌தி இல்லாத‌ நாட்டை ந‌ல்ல‌ நாடு என‌ எழுத எப்ப‌டி சார் ம‌ன‌சு வ‌ருது. வாத்துக் க‌றி ம‌ட்டும் இருந்தா போதுமா? நீங்க ஒரு சுத்த‌ வாத்து ......ஆக‌ இருப்பீங்க‌ போல‌த் தெரியுது!!

புள்ளிராஜா
//

அமெரிக்காவில் கூடத்தான் கிடையாது.உங்களுக்கு முடிஞ்சுதுன்னா ரெண்டு கல்யாணம் பண்ணி இடிபடுங்க புள்ளிராஜா. ஆனா பாத்து இருங்க அப்புரம் புள்ளிராஜாவுக்கு...

பழமைபேசி said...

படங்க எல்லாம் நல்லா இருக்கு.... உங்க முகத்தைக் கொஞ்சம் காட்டுறது? அந்த மரத்துல தொங்கினாப்புல ஒரு படம்...அதைப் போடுங்க...

//நசரேயன் said...
உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா வாரேன்
//

அண்ணன் வீட்டுக்கு வரும்போது உள்ள போட்டுட்டுதான் வரணுமா, என்ன?

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

ஆங்கிலம் பேசுவதற்கே ஆள் கிடைக்காத ஊர்ல தமிழ் பேச ஆள் கிடைச்ச உமக்கு உடம்பு முழுக்க மச்சமய்யா..

கடைசி சில படங்கள் எடிட் பண்யிருக்கீங்களே...

என்ன எதாவது எடாகூட விசயமா?//

என் மொகரகட்டை எடாகூட விசயமா?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

படங்க எல்லாம் நல்லா இருக்கு.... உங்க முகத்தைக் கொஞ்சம் காட்டுறது? அந்த மரத்துல தொங்கினாப்புல ஒரு படம்...அதைப் போடுங்க...

//நசரேயன் said...
உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா வாரேன்
//

அண்ணன் வீட்டுக்கு வரும்போது உள்ள போட்டுட்டுதான் வரணுமா, என்ன?

//
கண்டிப்பா அடுத்த பதிவில போட்டுருவோம்.

துளசி கோபால் said...

பதிவு நல்லா இருக்கு. ஆனால்....

முகம் காமிக்க இவ்வளோ பயமா?

சேச்சே..... தமிழனுக்கு வீரம் வேணாமா?

என்னவோ போங்க!!!!

Anonymous said...

//பெய்ஜிங் சாலைகள் அமெரிக்கவை நகரைவிட 15 வருடம் பின் தங்கியுள்ளது, இந்தியாவைவிட 15 மடங்கு முன்னேறியுள்ளது, பாடாலிங் செல்லும சாலை நல்ல தரத்திலேயெ இருந்தது.//

அமெரிக்க லோக்கல் சாலைகளின் குண்டு குழிகளில் கார் ஏறி இறங்கும் போதெல்லாம் தோன்றும் அட சென்னையில் இதை விட பெட்டர் சாலைகள் இருக்குதே என.எம்புட்டு பெரிய குழி என்றாலும இந்த ஊர்கார்னுவ வேகத்தை குறைக்கவே மாட்டானுவ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...

கடைசி சில படங்கள் எடிட் பண்யிருக்கீங்களே...

என்ன எதாவது எடாகூட விசயமா?//


:-))))))))

☀நான் ஆதவன்☀ said...

என்னங்க இது ஷகீலா படத்துல பிட்ட மறைச்ச மாதிரி ஆகிடுச்சுங்க.....படத்தை போடுங்க :)

மன்மதக்குஞ்சு said...

அட! கத்தாரிலிருந்த பாகிஸ்தானியர் தமிழ் பேசியதும், கத்தாரி மிக்ஸ் (அப்படின்னு ஒண்ணு கிடையாது) கொடுத்ததும் ஆச்சரியமான விஷயங்கள்.
சங்கர்ர்லால், தோஹா, கத்தார்.

அ.மு.செய்யது said...

//இந்த வாத்து நான் சாப்பிட்டாச்சு//

நையாண்டிக்கு நிகர் குடுகுடுப்பையே தான்...

நட்புடன் ஜமால் said...

வாத்து ரொம்ப சாப்பிடாதீங்கோ. நல்லதில்லை.

அப்புறம் போட்டோ மேட்டர் இன்னா.

ராஜ நடராஜன் said...

மீண்டும் வருகிறேன் உள்நோக்கி வாங்க.

RAMYA said...

படங்கள் எல்லாம் அருமை
இருங்க படிச்சுட்டு வாரேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவும் ப்டமும் நல்லா இருந்தது... பதிவு போடபோறோம்னு தான் தெரியுமே முதல்லேயே .. உங்களை வச்சு எடுத்த இடங்களை.. நீங்கள் இல்லாம ஒரு முறை என்று எப்போதுமே எடுத்து வைச்சுக்குங்க.. பதிவில் போட..படத்தின் அழகே அந்த வெள்ளைக்கட்டங்களால்போகிறதே...

நானெல்லாம் அப்படித்தான் இரண்டு இரண்டு படம் எடுப்பேன்..குடும்பத்தை நிறுத்தி ..அப்பரம் அந்தப்பக்கம் போங்கன்னு எல்லாரையும் விரட்டிட்டு பதிவுக்காக ஒண்ணுன்னு .. :))

Anonymous said...

முத்தக்கா சொன்ன மாதிரி ரெண்டு போட்டோ எடுத்திருக்கலாம். ஆனாலும் சீனாவுல தமிழ் பேசின பாகிஸ்தான்காரரா, ஏதோ சினிமா பாத்த மாதிரி இருக்கு :)

அமுதா said...

பதிவும் படங்களும் நன்றாக இருந்தன...

சந்தனமுல்லை said...

சுவாரசியம்! படங்கள் அருமை..குடுகுடுப்பை மன்னரைச் சொல்கிறேன்..lol!

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

பதிவு நல்லா இருக்கு. ஆனால்....

முகம் காமிக்க இவ்வளோ பயமா?

சேச்சே..... தமிழனுக்கு வீரம் வேணாமா?

என்னவோ போங்க!!!!//
நன்றி டீச்சர். உங்களையெல்லாம் பயமுறுத்தவேண்டாம்னுதான்.

வீரமாகலாமான்னு யோசிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

Anonymous said...

//பெய்ஜிங் சாலைகள் அமெரிக்கவை நகரைவிட 15 வருடம் பின் தங்கியுள்ளது, இந்தியாவைவிட 15 மடங்கு முன்னேறியுள்ளது, பாடாலிங் செல்லும சாலை நல்ல தரத்திலேயெ இருந்தது.//

அமெரிக்க லோக்கல் சாலைகளின் குண்டு குழிகளில் கார் ஏறி இறங்கும் போதெல்லாம் தோன்றும் அட சென்னையில் இதை விட பெட்டர் சாலைகள் இருக்குதே என.எம்புட்டு பெரிய குழி என்றாலும இந்த ஊர்கார்னுவ வேகத்தை குறைக்கவே மாட்டானுவ...//

நன்றி அனானி.

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

//இராகவன் நைஜிரியா said...

கடைசி சில படங்கள் எடிட் பண்யிருக்கீங்களே...

என்ன எதாவது எடாகூட விசயமா?//


:-))))))))//

நன்றி டிவியார்

குடுகுடுப்பை said...

நான் ஆதவன் said...

என்னங்க இது ஷகீலா படத்துல பிட்ட மறைச்ச மாதிரி ஆகிடுச்சுங்க.....படத்தை போடுங்க :)//

நான் ஷகீலா:))

நன்றி நான் ஆதவன்

குடுகுடுப்பை said...

மன்மதக்குஞ்சு said...

அட! கத்தாரிலிருந்த பாகிஸ்தானியர் தமிழ் பேசியதும், கத்தாரி மிக்ஸ் (அப்படின்னு ஒண்ணு கிடையாது) கொடுத்ததும் ஆச்சரியமான விஷயங்கள்.
சங்கர்ர்லால், தோஹா, கத்தார்.

//
அவர் இன்னும் என்னுடன் சாட் பண்ணுவார். கத்தாரி மிக்ஸ் நம்மூரு டெல்லி ஸ்வீட்ஸ் மாதிரி இனிப்பும் காரமும் கலந்தது

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//இந்த வாத்து நான் சாப்பிட்டாச்சு//

நையாண்டிக்கு நிகர் குடுகுடுப்பையே தான்.//

நன்றி செய்யது

உண்மையாவே அந்த வாத்து நான் சாப்பிட்டதுதான்.

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...

வாத்து ரொம்ப சாப்பிடாதீங்கோ. நல்லதில்லை.

அப்புறம் போட்டோ மேட்டர் இன்னா.

//நன்றி ஜமால்

சும்மா குகு படத்தை போட்டு பயமுறுத்த வேண்டாம்னுதான்

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

மீண்டும் வருகிறேன் உள்நோக்கி வாங்க.

வருகிறேன்

குடுகுடுப்பை said...

RAMYA said...

படங்கள் எல்லாம் அருமை
இருங்க படிச்சுட்டு வாரேன்

அதசெய்யுங்க முதல்ல

குடுகுடுப்பை said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பதிவும் ப்டமும் நல்லா இருந்தது... பதிவு போடபோறோம்னு தான் தெரியுமே முதல்லேயே .. உங்களை வச்சு எடுத்த இடங்களை.. நீங்கள் இல்லாம ஒரு முறை என்று எப்போதுமே எடுத்து வைச்சுக்குங்க.. பதிவில் போட..படத்தின் அழகே அந்த வெள்ளைக்கட்டங்களால்போகிறதே...

நானெல்லாம் அப்படித்தான் இரண்டு இரண்டு படம் எடுப்பேன்..குடும்பத்தை நிறுத்தி ..அப்பரம் அந்தப்பக்கம் போங்கன்னு எல்லாரையும் விரட்டிட்டு பதிவுக்காக ஒண்ணுன்னு .. :))

நன்றி கயல்

இந்த படங்கள் எல்லாம் 2006 ல் எடுத்தது,அப்போதெல்லாம் பதிவெழுதும் எண்ணம் எனக்கில்லை,இனிமேல் உங்கள் ஆலோசனைப்படி தனித்தனி போட்டோஸ்தான்

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

முத்தக்கா சொன்ன மாதிரி ரெண்டு போட்டோ எடுத்திருக்கலாம். ஆனாலும் சீனாவுல தமிழ் பேசின பாகிஸ்தான்காரரா, ஏதோ சினிமா பாத்த மாதிரி இருக்கு :)

நன்றி சின்ன அம்மினி

இது விசயகாந்த படம் இல்லீங்க

குடுகுடுப்பை said...

அமுதா said...

பதிவும் படங்களும் நன்றாக இருந்தன..
//
நன்றி அமுதா

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

சுவாரசியம்! படங்கள் அருமை..குடுகுடுப்பை மன்னரைச் சொல்கிறேன்..lol!//

நன்றி சந்தனமுல்லை

செந்தழல் ரவி என்னை அமைச்சராக்க பாத்தாரு அதுதான் நான் மன்னர் ஆயிட்டேன்.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
தாரணி பிரியா said...

கவிதை சூப்பர் குடுகுடுப்பை. ஆனாலும் என்னோட கை பரபர அப்படின்னு இருந்ததாலதான் இந்த கும்மி. இதையெல்லாம் தப்பா நினைக்காதீங்க‌//

தாராளமா கும்மி அடிங்க
//

வீட்ல நடக்குறமாதிரி, குனிய வெச்சு அடிக்காம இருந்தா சரி....

நசரேயன் said...

மறுஉள்ளேன், பதிவை படிச்சதுக்காக

புதியவன் said...

//தமிழ் பேசும் என்னைக்கண்டதில் அவருக்கு பயங்கர மகிழ்ச்சி,அரேபியரிடம் பேசுவதை விட என்னிடம் பேசுவதையே விரும்பினார், //

இது தமிழுக்குக் கிடைத்த பெருமை...

பயணக் கட்டுரை அருமை...தொடருங்கள்...

வேத்தியன் said...

அனுபவத்தை நல்லா எழுதியிருக்கீங்க...
பாஷை புரிஞ்சுதாங்க???
புரிவதற்கு ரொம்ப கஷ்டம்ன்னு நினைக்கிறேன்...

பழமைபேசி said...

//நசரேயன் said...
உள்ளேன் போட்டுகிறேன், அப்புறமா வாரேன்
//

தப்பு தப்பா சொல்லாதீங்க.... வெளியேன் இது!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
புதியவன்
வேத்தியன்

ராஜ நடராஜன் said...

சிங்கிலீஷ் பதிவு போட்ட கையோடு கடைசி படத்துக்கு விளக்கம் வேண்டுமென்றால் குடுகுடுப்பையாரைக் கேளுங்கள் என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்.நீங்களும் வந்து பார்த்துட்டு அர்த்தம் சொன்னீங்கன்னா பதிவு பக்கம் வர்ற மகராசங்களுக்கு உதவியாயிருக்கும்.நன்றி.

சந்தனமுல்லை said...

புதிய பதிவுகள் இல்லையா?

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

புதிய பதிவுகள் இல்லையா?//

வேலை அதிகம். இன்னும் இரண்டு வாரம் கழித்துதான்.

வில்லன் said...

கடைசி படம் தியானென்மென் சதுக்கம். படத்துக்கு மேல உள்ள படத்துல யாரு உங்க சீன பெண் நண்பரா???????????????

Mahesh said...

ம்ம்ம்... பா.கே.ப. அந்துமணி மாதிரி மூஞ்சிய மறச்சு போட்டோ போடுறீங்க. நீங்க கண்டிப்பா யூத்துதான்... ஒத்துக்கிடறோம்... மூஞ்சியக் காமியுமேன்....

பதிவு சூப்பர்... நான் சுத்த சைவம்... கோழி வாத்து விஷயமெல்லாம் போக மீதியெல்லாம் போய் பாத்துடறேன்...