Sunday, January 11, 2009

வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

அயன் பார்த்த பின் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை என்ற முடிவினால், வேட்டைக்காரன் திரைவிமர்சனம் இல்லை. அதனால் வில்லு விமர்சனம் மறுபதிவு.

வலையுலகில் முதன் முதலாக ஒரு திரைப்பட விமர்சனம் மீள்பதிவாகிறது.

சனிக்கிழமை இரவு எதிர்பாராமல் டாலஸில் கடுங்குளிர், கடுங்குளிரைவிட எதிர்பாராத முடிவு - இரவு 9:30 காட்சி வில்லுக்கு செல்வதென்று தீர்மானித்தது. ஏற்கனவே குருவியால் கொடூரமாக கொத்தப்பட்டிருந்தாலும் விதி வலியது என்பது நிரூபிக்கப்பட்டது.

படத்தில் நான் புரிந்து கொண்ட கதை இதுதான், கொள்ளை கூட்டக்காரர்கள் வழக்கம் போல எதையோ கடத்துகிறார்கள், வருகிறார் டாக்டர் வில்லு - நீரில் பறக்கும்/மூழ்கும் படகாய் வந்து கொள்ளை கோஷ்டியின் ஒரு தலையை சாய்க்கிறார்.

இப்போது கொள்ளை கூட்டத்தை விட்டு கிராமத்தில் ஒரு கல்யாணத்திற்கு போகிறார். அங்கே துணி பஞ்சத்தில் கஷ்டப்படும் அழகி நயன்தாராவுடன் கொஞ்சல், டான்ஸ், பாட்டு. இடையிடையே வடிவேலு வந்து அடி வாங்கிக் கொள்கிறார்.

நிற்க அனைவரும் எதிர்பார்த்தபடி டாக்டர் விஜயின் வித்தையில் சொத்தையாகிறார் நயன். இன்னோரு எதிர்பார்த்த திருப்பம் நயன்தாரா ஒரு கொள்ளை கூட்ட பாஸின் மகள்.

நமக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி கொள்ளை கூட்ட பாஸ்கள் பிரகாஷ்ராஜும்,தேவராஜும் அறிமுகப்படுத்தப்படும் போது ஏற்படும் திருப்பங்கள். இரண்டு தெலுங்கு,கன்னட மசாலா படத்தை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி. கொள்ளை கூட்டப் படம் அப்படித் தான் இருக்கும் போல. இது முன் பழமைத்துவத்தின் அடிப்படை.

கொள்ளை கூட்ட பாஸ் தேவராஜின் மகன் தான் விஜய் என்று மற்றொரு திருப்பம். அப்பனும்,மகனும் பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தில் பயணம் செய்யும் போது, தேவராஜை விமானத்திற்குள்ளேயே பறந்து, டைவ் அடித்து, சண்டை போட்டு, இறக்கையை பிடித்தி தொங்கி விமானத்தின் அடிப்பகுதி வழியாக விமானத்தின் உள்ளே இருக்கும் தேவராஜை கத்தியால் குத்தி கொல்கிறார் டாக்டர் விஜய். இப்போது விஜய் உண்மையிலேயே தேவராஜின் மகன் இல்லை என பயங்கர ஹேர்பின் திருப்பம் வேறு.

அப்படியே விமானத்தில் இருந்து சரியாக நயன்தாரா பயணம் செய்யும் படகில் பாராசூட் மூலம் குதிக்கிறார் டாக்டர். போடுறா பாட்டை- ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும். இப்படி ஒரு ஏழெட்டு பாட்டு, அதே அளவு சண்டை.

நயனின் தந்தையும், கொள்ளை கூட்ட பாஸ்களில் ஒருவருமான பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இருவரின் அதிரடி சந்திப்புகள், திருப்பங்கள் என போகிறது. அடுத்து டாக்டர் விஜய் கண்ணாடியை கழற்ற கொள்ளை கூட்ட பாஸில் ஒருவரான ஆனந்த்ராஜ் உட்பட பலர் சாகிறார்கள்.

நல்ல கொள்ளை கோஷ்டிப்படம் என்று நினைக்கையில் அடுத்த திருப்பம் விஜயின் அப்பா விஜய் ராணுவத்தில் மேஜராம்,மேற்கண்ட கொள்ளை கோஷ்டித்தலைவர்களாக இதுவரை நாம் நினைத்துக்கொண்டிருந்த அனைவரும் ராணுவத்தில் வேலை பார்த்தவர்களாம். இவர்கள் நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர், அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர். இவர்களை மகன் விஜய் பழிவாங்குறாராம் அதுதான் கதையாம்.இது சோல்ஜர் இந்திப்படத்தோட கதியாம் இன்னோரு பதிவில படிச்சேன்.

படம் ஜெர்மனி, ஸ்விஸ், சென்னை அப்படின்னு போகுது. திடீர்னு ஒரு புளுரே டிஸ்க் தேடுறாங்க, ரஜினியோட ஒரிஜினல் பில்லாவுல தேடுன டைரி, தலயோட பில்லாவில் தேடுன பென் டிரைவை விட லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கணும்னு உத்தரவு போட்டது டாக்டர் விஜயா இல்லை தெலுங்கு சூப்பர் ஹிட் டைரக்டர் பிரபு தேவாவின் சுய மூளையான்னு சத்தியமா எனக்கு தெரியல.

கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டுரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.

ஆனாலும் குருவியை தாக்க புறப்பட்ட வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு தவறி படம் பார்த்தவர்களை பதம் பார்த்து விட்டது. ஆக இன்னும் குருவி தான் உயரத்தில் தான் பறக்கிறது. அடுத்த படத்திலாவது குருவியின் சாதனையை டாக்டர் விஜய் முறியடிப்பார் என நம்பலாம்.

படத்தின் ஒரே ஒரு குறை என்றால் கொள்ளை கோஷ்டித் தலைவர் ஆனந்தராஜுக்கு வைத்த மாதிரி தாடியை பிரகாஷ்ராஜ், தேவராஜ் மற்றும் சில அல்லக்கைகளுக்கும் ஒட்ட வைத்திருக்கலாம். படத்தின் நம்பகத்தன்மையாவது இன்னும் கொஞ்சம் கூடியிருக்கும்.

மேலும் பெட்டி மாற்றும் சீன், LIC க்கு எத்தனை மாடி, வாழைப்பழத்தை எப்படி சாப்பிடணும் போன்ற ரகசிய சொற்கள் வைத்திருந்தால் இன்னும் கொள்ளை கோஷ்டி கதையின் சுவை கூடியிருக்கும்.

இவ்வளவு திருப்பங்கள் நிறைந்த இந்த படத்தில் திருப்பவே முடியாத ஒன்றும் உண்டு, அது குஷ்பூவின் நடனம்.


S.Ve.சேகர் அவருடைய காதுல பூ நாடகத்தை தெலுங்கு டப்பிங் பட டைரக்டர்களுக்கு அர்ப்பணித்திருப்பார். அது போல நான் இந்த பட விமர்சனத்தை அவரோட "காதுல பூ" நாடகத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.

50 comments:

நட்புடன் ஜமால் said...

\\படத்தில் நான் புரிந்து கொண்ட கதை இதுதான்\\

அண்ணேன் இதுக்கே உங்களுக்கு விருது கொடுக்கோணும் ...

அ.மு.செய்யது said...

கொஞ்சம் சீக்கிராமாகவே வில்லு விமர்சனம் தந்ததால் படம் பார்க்கும் முன் பல பேரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.

ந‌ன்றி குகு யாரே !!

வேத்தியன் said...

//கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.\\

அருமை அருமை...
கலக்கீட்டீங்க...

புதியவன் said...

வில்லு விமர்ச்சனத்துக்கு
உங்களுக்கு தனியா ஒரு விருது
கொடுக்கலாம் போலா...

முபாரக் said...

//தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.//

செம சிரிப்புங்க.

Paheerathan said...

ஆஹா உண்மையிலேயே நம்ம கத மாதிரி இருக்குதே :)


http://bakeera.blogspot.com/2009/01/blog-post_11.html

KarthigaVasudevan said...

நிஜமாவே இதான் வில்லு படக் கதையா? அப்போ நான் படம் பார்க்கறதா இல்லை .ஆனாலும் என்னை மாதிரி உங்கள மாதிரி அப்பாவி பொதுஜனங்கள் மேல இந்த சினிமாக்காரங்களுக்கு ஏன் இத்தனை கொலை வெறி!!!நன்றி குடுகுடுப்பையாரே!

ஷாஜி said...

//கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.\\

சீக்கிராமாகவே வில்லு விமர்சனம் தந்ததால் படம் பார்க்கும் முன் பல பேரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்..

வாளர்க உங்கள் தொண்டு...

நசரேயன் said...

என் கதையை எடுத்து இருந்தால் படம் ஹிட் ஆகி இருக்கும்
http://yesuvadian.blogspot.com/2008/08/blog-post_27.html

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர்,//

அண்ணோவ்.. இது தாய்நாடு படமுங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர்.//


இது தீ படமுங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இன்னோரு எதிர்பார்த்த திருப்பம் நயந்தாரா ஒரு கொள்ள கோஷ்டிதலைவரின் மகள்.//

அறுபதுக்கும் எழுபதுக்கும் நடுவில் வந்த எல்லா படத்திலும் இந்த எதிர்பாராத திருப்பம் இருக்குமுங்க.. வெணும்ணா முரளிக்கண்ணன் சாருக்கு போன் போட்டு கேட்டுக்குங்க..

Sathis Kumar said...

சிரித்துக்கொண்டே படித்தேன்.. :))

குடுகுடுப்பை said...

ஷாஜி said...

//கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.\\

சீக்கிராமாகவே வில்லு விமர்சனம் தந்ததால் படம் பார்க்கும் முன் பல பேரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்..

வாளர்க உங்கள் தொண்டு...
//

வருகைக்கு நன்றி ஷாஜி

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
சுரேஷ்
சதீசு குமார்

Anonymous said...

//பில்லாவில் தேடுன பென் டிரைவை விட லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கனும்னு டாக்டர் உத்தரவா, பிரபு தேவாவின் சுய மூளையான்னு தெரியல.//


இந்த வசனமே உங்கள காட்டிக் கொடுத்துவிட்டது. நீங்க தலயோட விசிறிதானே?! அதுதான் இப்படி எழுதியிருக்கீங்க..

கபீஷ் said...

விஜய் நடிப்பு பத்தி ஒண்ணும் சொல்லலை?

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

விஜய் நடிப்பு பத்தி ஒண்ணும் சொல்லலை?
//
காதலுக்கு மரியாதைல நல்லா நடிச்சிருந்தாரு.

அது சரி(18185106603874041862) said...

சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறதுன்னு கேள்விப்பட்டுருக்கேன்...ஆனா அதைக்கூட டிக்கட் வாங்கி வச்சிக்கணுமா??

அது சரி(18185106603874041862) said...

//
நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர், அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர்.
//

படத்தோட கதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே....ஒரு பழைய ரஜினி படம் இருக்கு...சுஜாதா அம்மா....ரஜினி அப்பா ராணுவ அதிகாரி....அவரு கூட நண்பனா இருக்க அதிகாரிங்க துரோகம் செஞ்சிட்டு அதை ரஜினி அப்பா மேல போட்ருவாங்க...அப்புறம் ரஜினி அதுக்கு பழிவாங்குவாரு...

படம் பேரு ஞாபகம் இல்ல.. கொடி பறக்குது??

அது சரி(18185106603874041862) said...

பின் நவீனத்துவம், நவீனத்துவம், முன் நவீனத்துவம் எல்லாம் போயி இப்ப முன் பழமைத்துவம் தான் புது ட்ரெண்டா?? :0))

வில்லன் said...

//படத்தில் நான் புரிந்து கொண்ட கதை இதுதான்//

அப்ப இனி விஜய் படமும் கமல் படம் போல பல முறை பாத்தா தான் புரியுமா? ரொம்ப கஷ்ட காலம்.

ரசிகர்கள பலமுறை படம் பக்க வைக்க புதுமுரையோ? ஒண்ணுமே புரியலப்பா

வில்லன் said...

//கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.//

ரொம்ப ரசிக்கும் படி இருக்கு. தயாரிச்சவன் நெலமைய நினைதேன் கண்ணீர் வடித்தேன்!!!!!!!!!!!!!!!!!! பாவம் தலைல துண்ட போட்டுருப்பாரு. உசுரோட இருக்காரோ என்னவோ தெரியல.

தமிழன்னு ஒருபடம் எடுத்து தற்கொல பண்ணிக்கிட்டாரு தயாரிப்பாளர் ஜீ.வீ.

இந்த புண்ணியவான் என்ன பண்ண போறாரோ. எதுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு பண்ணுறது நல்லது.

வில்லன் said...

//நசரேயன் said...

என் கதையை எடுத்து இருந்தால் படம் ஹிட் ஆகி இருக்கும்
http://yesuvadian.blogspot.com/2008/08/blog-post_27.html////

நசறேயனுக்கு கிடைத்த ரெண்டாவது வெற்றி.

மொதல்ல வானரம் ஆயீரம்னு ஒரு படத்த பத்தி எழுதி ஊத்தி மூட வச்சாரு. இப்ப ரெண்டாவது வெற்றி. வாழ்க நசரேயன்.

அப்படியே எல்லா பெரிய தலை படங்களுக்கும் முன்னோட்டம் போட்டு ஊத்த வச்சா ரொம்ப புண்ணியமா போகும்.

எதாவது படத்த ஊத்தி மூட வைக்கனும்னா நசறேயன முன்னுட்டோம் போட சொல்ல வேண்டியது தான்.

தலைவா கண்டிப்பா "எந்திரன்" உங்க தலைவர் படம் பத்தி முன்னுட்டம் போடவும். அந்த படம் ஊதனும்னு என்னோட ரொம்ப நாள் ஆசை. ப்ளீஸ் தலைவா. சீக்கிரம் போடுங்க.

ஸ்வாதி said...

ராஜபக்ஸேயிடம் பெட்டி வாங்கியிருப்பாரோ வில்லு பட இயக்குனர்? இல்லாவிட்டால் தமிழினத்தை பைத்தியமாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இப்படி ஒரு படம் எடுத்திருப்பாரா என்ன? புரியவில்லையே??? நல்ல வேளை உங்கள் விமர்சனம் என்னைக் காப்பாற்றிவிட்டது. நான் இனிமேல் விஜயின் எந்தப் படமும் பார்ப்பதாக இல்லை.. நன்றி!

சந்தனமுல்லை said...

குடுகுடுப்பையார்...கலக்கிட்டீங்க

//கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.\\

rotfl!!

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமை. விஜயின் எந்தப் படமும் பார்ப்பதாக இல்லை.. நன்றி!


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர், அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர்.
//

படத்தோட கதை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே....ஒரு பழைய ரஜினி படம் இருக்கு...சுஜாதா அம்மா....ரஜினி அப்பா ராணுவ அதிகாரி....அவரு கூட நண்பனா இருக்க அதிகாரிங்க துரோகம் செஞ்சிட்டு அதை ரஜினி அப்பா மேல போட்ருவாங்க...அப்புறம் ரஜினி அதுக்கு பழிவாங்குவாரு...

படம் பேரு ஞாபகம் இல்ல.. கொடி பறக்குது??//

தாய்வீடுங்கிறாங்க, தீ அப்படிங்கிறாங்க ஒன்னும் புரியல

குடுகுடுப்பை said...

Anonymous said...

//பில்லாவில் தேடுன பென் டிரைவை விட லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கனும்னு டாக்டர் உத்தரவா, பிரபு தேவாவின் சுய மூளையான்னு தெரியல.//


இந்த வசனமே உங்கள காட்டிக் கொடுத்துவிட்டது. நீங்க தலயோட விசிறிதானே?! அதுதான் இப்படி எழுதியிருக்கீங்க..//

அய்யா தயவு பண்ணி அப்படி நெனச்சு ஏகன் டிவிடி,சிட்டிசன் டிவிடி எல்லாம் அனுப்பிச்சிராதீங்க

செல்வம் said...

குடுகுடுப்பை....இப்படத்தின் கதையை இவ்வளவு பொறுமையாக எழுதியுள்ளீர்கள்...சாதனைதான்.
:-)

பரிசல்காரன் said...

செம நக்கலு நண்பா உங்களுக்கு!

//பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தில்//

ROFTL!!!!

Unknown said...

மூணு வருடத்துக்கு முன்னே மூணாவது படிக்கிற வாண்டு இந்த கதையை எங்கிட்ட சொல்லுச்சு. ஒழுங்கா பாஸ் பண்ணித் தொலைச்சிருந்தா அது ஆறாவது படிக்கும். அது கிட்ட சொல்லி டைரக்டர் மேல கேஸ் போடச் சொல்வோமா..

ஊர்சுற்றி said...

//கொள்ள கோஷ்டிப்படம்//

அப்படியே என்னோட சின்ன வயசில பெரிய அண்ணங்க கிட்ட கதை கேட்டது போல இருந்தது - இந்த வார்த்தையை படித்ததும்.

தங்கள் எச்சரிக்கைக்கு நன்றி.

பழமைபேசி said...

நன்றி!

வில்லு பற்றிய எனது மாறுபட்ட பார்வைக்கு இங்க வாங்க!! இஃகிஃகி!!

butterfly Surya said...

அப்பா... முடியலை...

மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????

கடவுளே... இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..

இராகவன் நைஜிரியா said...

//மேலும் பெட்டி மாற்றும் சீன், LIC க்கு எத்தனை மாடி, வாழைப்பழத்தை எப்படி சாப்பிடணும் போன்ற ரகசிய சொற்கள் வைத்திருந்தால் இன்னும் கொள்ளை கோஷ்டி கதையின் சுவை கூடியிருக்கும். //

படம் பார்த்து ரொம்ப நொந்து போயீட்டீங்கன்னு நினைக்கின்றேன்..

ஹா...ஹா....

நான் தப்பிச்சுக்கிட்டேன்...

துளசி கோபால் said...

ஆமாம். இது தமிழ் சினிமாவில் இதுவரை வராத கதை யாமே!!!!
நெசமாவா?

Mahesh said...

பேசாம நசரேயன் கிட்ட அசிஸ்டெண்டா சேந்துடுங்க..... இல்ல அவரைஇ உங்க அசிஸ்டெண்டா சேத்துக்கோங்க...

ரெண்டு பேரும் நல்லா படம் போடறீங்களே...

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜமால்
செய்யது
வேத்தியன்
புதியவன்
முபாரக்
Paheerathan
மிஸஸ்.டவுட்
வில்லன்
அது சரி
கபீஷ்

சந்தனமுல்லை
ஸ்வாதி
உழவன்.
துளசி கோபால்
செல்வம்
பரிசல்காரன்
சுல்தான்.
ஊர் சுற்றி
பழமைபேசி
வண்ணத்துபூச்சியார்
நசரேயன்
இராகவன்
மகேஷ்
மற்றும் வருகை புரிந்து "வில்லு"க்கு வெற்றி தேடிந்தந்த அனைவருக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

பழமை வீட்டுக்கு போனபோது பழமைத்துவ காவிய இணைப்பு கண்ணுல பட்டுது.நான் எதுக்கும் படம் எங்காவது ரிலிஸாகியிருக்குதான்னு பார்த்துட்டு (படம்) திரும்பவும் வருகிறேன்.

Anonymous said...

//படத்தின் ஒரே ஒரு குறை என்றால் கொள்ளை கோஷ்டித் தலைவர் ஆனந்தராஜுக்கு வைத்த மாதிரி தாடியை பிரகாஷ்ராஜ், தேவராஜ் மற்றும் சில அல்லக்கைகளுக்கும் ஒட்ட வைத்திருக்கலாம்.

ச்ச, ஒரு அருமையான படம் இந்த ஒரு சிறு குறையால் அதன் முழு நம்பக தன்மையை(!) இழந்திருப்பது வருத்தத்துக்கு உரியது !!

CA Venkatesh Krishnan said...

குடுகுடுப்பை சார் குடுகுடுப்பை சார்,

ஒரு சின்ன சந்தேகம். டாக்டர் விஜய் டாக்டர் விஜய்ன்றீங்களே, இந்தப் படத்துல விஜய் டாக்டரா வர்றாரா சார்?

கொஞ்சம் தெளிவு படுத்தறீங்களா???

குடுகுடுப்பை said...

படிக்காதவன் இங்கே
வேத்தியனின் பக்கம்: திரைவிமர்சனம் - படிக்காதவன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ராஜ நடராஜன்
புவனேஷ்
இளைய பல்லவன்

பிருந்தன் said...

//ஸ்வாதி said...
ராஜபக்ஸேயிடம் பெட்டி வாங்கியிருப்பாரோ வில்லு பட இயக்குனர்? இல்லாவிட்டால் தமிழினத்தை பைத்தியமாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இப்படி ஒரு படம் எடுத்திருப்பாரா என்ன? புரியவில்லையே??? நல்ல வேளை உங்கள் விமர்சனம் என்னைக் காப்பாற்றிவிட்டது. நான் இனிமேல் விஜயின் எந்தப் படமும் பார்ப்பதாக இல்லை.. நன்றி//

நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் கடைசி வரை முயற்சி செய்யவும்.

Vidhya Chandrasekaran said...

உங்க விமர்சனத்த படிச்சப்பறமும் படத்த பார்க்கிற தைரியம் எனக்கில்ல.

கோவி.கண்ணன் said...

//இரண்டு தெலுங்கு,கன்னட மசாலா படத்தை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி. //

சூப்பர், சும்மா நச்சின்னு இருக்கு.

பொம்மலாட்டத்தையும் எழுதிடுங்க

P T Chenthil kumar said...

Very Nice....

ayya sami naan thappichen

butterfly Surya said...

ஹேய் ராமா ராமா ராமாகிட்ட வில்ல கேட்டேன்
ஹேய்பீமா பீமா பீமாகிட்ட கதைய கேட்டேன்......


ஆடியன்ஸ்:: அதெல்லாம் சரி டைரக்டர் கிட்ட கதைய கேட்டயா?

Thekkikattan|தெகா said...

:)) அடப் பாவத்தே! இந்தப் படத்திற்கெல்லாம் இங்க காசு 'வேற' கொடுத்துப் போயி பார்ப்பீங்களா... கொடும சாமீ.