Sunday, January 18, 2009

மொக்கை கெமிஸ்ட்ரியும் தேர்வு மொக்கையும்

கல்லூரி கால தேர்வு அனுபங்களில் முதலாண்டு கெமிஸ்ட்ரி தேர்வு ரொம்ப மறக்கமுடியாத ஒன்னு. காலேஜ்ல இந்த பாடத்துக்கு மோகன் அப்படிங்கற ஆசிரியர் எழுதுன ஒரு புத்தகம் கொடுத்தாங்க கட்டுன காசுக்கு.ஆனா விசாரிச்சப்ப ஜெயின் @ ஜெயின் புத்தகம் தரமானது அப்படின்னாங்க.நாமதான் கெட்டாலும் மேன்மக்கள் ஜாதியாச்சே பாலகிருஷ்ணா நடிச்ச தெலுங்கு டப்பிங் படத்தை கூட பால்கனிலதான் உக்காந்து பாப்போம். ஜெயின் @ ஜெயின் வாங்கியாச்சு அத ஹாஸ்டல்ல வெச்சு நான் படிக்கிறத பாத்து எல்லாருக்கும் ஒரு பொறாமை குறிப்பா ரூம்மேட் பதிவர் நாநா,நெட்டையன் மற்றும் ரிக்சாவுக்கும் ரொம்ப அதிகம்.

தேர்வு நானும் ஜெயின் @ ஜெயின் படிச்சுட்டு கொஸ்டின் பேப்பர வாங்கி பாத்தா ஒன்னுமே புரியல மினிமம் 30 நிமிசம் இருக்கனும்.முத ஆளா தேர்வு ஹால விட்டு எந்திரிச்சு ஓடி வந்துட்டேன். 0/100 வாங்கிட்டேன்.

பசங்க எனக்கு வெச்ச பேரு ஜெயின் @ ஜெயின், அப்புரம் எப்படியோ மூனாவது செமஸ்டர்ல மரியாதையா மோகன் எழுதுன புத்தகத்தை படிச்சு எழுதிட்டேன். இதுல ஒரு கேள்வி கேட்டிருந்தான் paint of paint? அப்படின்னு நெனக்கிறேன். நானும் ஒரு நாலு பக்கம் விடை எழுதினேன்.எதுக்கும் ஒரு சந்தேகம் கடைசில வெச்சி கட்டிட்டேன். ஹாஸ்டலுக்கு போய் மோகன ரெபர் பண்ணா ஒரு பெரிய சதுரம் அளவுக்கு
CH
|
CH-CH-CHO---
|
OH

இப்படி ஒரு பார்முலா போட்டிருந்தான்.என்னடா இது இந்த வாட்டியும் சங்குதானான்னு.நல்லவேளை எப்படியோ தப்பிட்டேன்.கடைசி நாலு பக்கத்தை முன்னாடி வெச்சி கட்டிருந்தா ஒருவேளை கடைசி வரைக்கும் என்ன பாஸ் போட்டிருக்கமாட்டங்க.

சரி இப்போ இந்த பதிவு எதுக்கு,பதிவர் சந்தனமுல்லை ஒரு கெமிஸ்ட்ரி கேள்வி கேட்டாங்க,சித்திரக்கூடம்: கெமிஸ்ட்ரி பத்தி உங்களுக்கு என்னத் தெரியும்?நானும் கேட்டிருக்கேன் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க.

எலெக்சன் காமெடி மாதிரி ரெண்டு தேர்வு காமெடி.

தேர்வுக்கு செல்லும் மாணவனை வாழ்த்தி many more happy returns of the day.
--------------------------------------------------------------

குகு: மாப்பிள்ளை பரிட்சை எப்படிடா எழுதிருக்க?

பாரிஸ்: வாழ்க்கையே போர்க்களம்,போர்க்களம் மாறலாம் போர்கள் மாறுமா?
----------------------------------------------------------------------
கணேஷ்: டேய் எப்படிடா கொஸ்டின் பேப்பர் ஈஸியா கஷ்டமா?

குகு: !?!!!!!!???!!!(இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது,பாடத்து பேர தவிர எதுவுமே தெரியாம)

இதையும் பாருங்க

வருங்கால முதல்வர்: தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

குடுகுடுப்பை: நகைச்சுவை ஆடல்/பாடல்

27 comments:

நட்புடன் ஜமால் said...

கெமிஸ்ட்ரி பாடம் மட்டும் தான் மொக்கை ...

ஆனா சின்னத்திரையில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி ....................
.....................

KarthigaVasudevan said...

கெமிஸ்டிரின்னா இதானாக்கும்...நான் கூட என்னவோ ...ஏதோனு நினைச்சுட்டேன்.

நீங்க கெமிஸ்ட்ரி தேர்வு எழுதின லட்சணம் சூப்பரா இருக்கு குடுகுடுப்பை...இன்னும் மாத்ஸ்...பிசிக்ஸ்...எல்லாம் எப்படி எழுதுனீங்கனும் ஒரு தொடர் பதிவை போட்டு கலக்கிருங்க.ராஜ பேதி கீரையே வேணாம்!சிரிச்சே எல்லாம் சரி ஆயிடும்.

வேத்தியன் said...

கெமிஸ்ட்ரில ஆக நினைப்போம் 'ஹீரோ'
ஒழுங்கா படிக்கலைன்னா ஆகிடுவோம் 'ஜீரோ'
(இதை டீ.ஆர். ஸ்டைலுல படிங்க) :)

அத்திரி said...

// நட்புடன் ஜமால் said...

கெமிஸ்ட்ரி பாடம் மட்டும் தான் மொக்கை ...
ஆனா சின்னத்திரையில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி ....................//

அத்திரி said...

// நட்புடன் ஜமால் said...

கெமிஸ்ட்ரி பாடம் மட்டும் தான் மொக்கை ...
ஆனா சின்னத்திரையில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி ....................//

சின்னத்திரை கெமிஸ்ட்ரி குஜாலானது...........ஆங்!!!!!!!!!!!!!!!

அன்புடன் அருணா said...

//தேர்வுக்கு செல்லும் மாணவனை வாழ்த்தி many more happy returns of the day.//

hahhahahahah... nice wishes...lol...
anbudan aruna

அது சரி(18185106603874041862) said...

//
பாலகிருஷ்ணா நடிச்ச தெலுங்கு டப்பிங் படத்தை கூட பால்கனிலதான் உக்காந்து பாப்போம்
//

பாலகிருஷ்ணா படத்தை எல்லாம் பாதுகாப்பான தொலைவுல உக்காந்து பாக்கறது நல்லது தான்...இல்லாட்டி அவரு விக்கு கழண்டு நம்ம மேல விழுந்துடும் :0))

அது சரி(18185106603874041862) said...

//
0/100 வாங்கிட்டேன்.
//

ஆஹா. என்னா தெறம...என்னா தெறம...பின்னிட்டேள் போங்கோ!

ஆயில்யன் said...

சில பார்முலாக்களை மனப்பாடம் செய்து எழுதிக்களைத்துப்போன வேதி இயல் சம்பவங்கள் மீண்டும் கொஞ்சமாய் எட்டிப்பார்த்தது! தியரி எக்ஸாமினை விட லேப் செம டெரராக இருந்துச்சுங்க எனக்கு!

ரிசல்ட் கரீக்ட்டா வருமா? நாம போட்ட மிக்ஸ் சரியா? லைட் ரோஸ் ஆகணுமா இல்ல இன்னும் கொஞ்சம் ஊத்திகிலாமன்னு ஏகப்பட்ட சோதனைகள் கடந்து ஜெயிக்கணும் அந்த பரீட்சையில :)))))

ஆயில்யன் said...

பியூரெட்ல இருக்கறதை தொறந்துவிட்டுட்டு வேடிக்கை பார்த்தீனா கோனிகல் நிறம் மாறிடு செவப்பாகிடும் பிறகு பிப்பெட் எடுத்து ஊதிக்க வேண்டியதுதான்! கெமிஸ்டிரி லேப் ஒஹயா ஒஹயா போங்கய்யன்னு !- இது எனக்கு முன்னாடி போய் பரீட்சை எழுதுன நண்பன் தந்த அட்வைஸ் !:)))))

அது சரி(18185106603874041862) said...

அதெல்லாம் சரி....ஆனா

CH
|
CH-CH-CHO---
|
OH

ச் ச் ச் சோ அப்புறம் ஓ

ஏங்க இப்படி சோவை வம்புக்கு இழுக்கறீங்க? :0))

கபீஷ் said...

அது சரி said...
//
பாலகிருஷ்ணா நடிச்ச தெலுங்கு டப்பிங் படத்தை கூட பால்கனிலதான் உக்காந்து பாப்போம்
//

பாலகிருஷ்ணா படத்தை எல்லாம் பாதுகாப்பான தொலைவுல உக்காந்து பாக்கறது நல்லது தான்...இல்லாட்டி அவரு விக்கு கழண்டு நம்ம மேல விழுந்துடும் :0))

:-):-):-)

தேவன் மாயம் said...

இப்ப கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகுதா?இஃஹி!
இஃஹி!!!

அ.மு.செய்யது said...

பழைய நினைவுகளில் மூழ்கினேன். உங்க பதிவை படிச்சுட்டு..

எனக்கும் +2 ல அரையாண்டு வரைக்கும் கெமிஸ்ட்ரினா ஏதோ வேற்றுகிரகத்து உயிரினம் மாதிரி தோணும்.அப்புறம், என் நண்பன் ஊக்கம் கொடுத்து, படிக்க ஆரம்பிச்சி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மேல ஒரு காதலே வந்துடுச்சு...அப்புறம் ரோட்ல போகும்போதெல்லாம் அவன் ஈகுவேஷன் சொல்வான்..நான் மீடியம் சொல்வேன்..இப்படி பைத்தியமா அலைஞ்சோம்...+2 ஆரம்பித்தல பார்டர் ல பாஸ் பன்னிட்ருந்த நான் அரசு பொதுத் தேர்வில 187 மார்க் வாங்க என் நண்பன் தான் காரணம்.அந்த நாட்களை சட்டுனு நினைவு படுத்திடுச்சி உங்க பதிவு..
நான் அப்ப‌ ஈகுவேஷ‌ன் எழுதிப் பார்த்த பேப்ப‌ர்க‌ளை 6 வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கும் இன்னும் ப‌த்திர‌மா பொக்கிஷ‌மா வ‌ச்சிருக்கேன்..அவ்ளோ காத‌ல் கெமிஸ்ட்ரி மேல‌...

பழமைபேசி said...

குடுகுடுப்பையாரின் வேதிமாற்றங்களை வரவேற்கிறேன்... இஃகிஃகி!

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...

கெமிஸ்ட்ரி பாடம் மட்டும் தான் மொக்கை ...

ஆனா சின்னத்திரையில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி ....................//

அப்படின்னா என்னங்க...

குடுகுடுப்பை said...

மிஸஸ்.டவுட் said...

கெமிஸ்டிரின்னா இதானாக்கும்...நான் கூட என்னவோ ...ஏதோனு நினைச்சுட்டேன்.

நீங்க கெமிஸ்ட்ரி தேர்வு எழுதின லட்சணம் சூப்பரா இருக்கு குடுகுடுப்பை...இன்னும் மாத்ஸ்...பிசிக்ஸ்...எல்லாம் எப்படி எழுதுனீங்கனும் ஒரு தொடர் பதிவை போட்டு கலக்கிருங்க.ராஜ பேதி கீரையே வேணாம்!சிரிச்சே எல்லாம் சரி ஆயிடும்.//

அப்புரம் நானெல்லாம் எப்படி பதிவு எழுதறது.

அன்னைக்கு எழுதினா பரீட்சை இன்னைக்கு எழுதினா பதிவு.

குடுகுடுப்பை said...

வேத்தியன் said...

கெமிஸ்ட்ரில ஆக நினைப்போம் 'ஹீரோ'
ஒழுங்கா படிக்கலைன்னா ஆகிடுவோம் 'ஜீரோ'
(இதை டீ.ஆர். ஸ்டைலுல படிங்க) ://

வர்றாரு குறளரசன் சாக்கிரதை

குடுகுடுப்பை said...

அத்திரி said...

// நட்புடன் ஜமால் said...

கெமிஸ்ட்ரி பாடம் மட்டும் தான் மொக்கை ...
ஆனா சின்னத்திரையில் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி ....................//

அல்வா வேணுமா சாமி

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
பாலகிருஷ்ணா நடிச்ச தெலுங்கு டப்பிங் படத்தை கூட பால்கனிலதான் உக்காந்து பாப்போம்
//

பாலகிருஷ்ணா படத்தை எல்லாம் பாதுகாப்பான தொலைவுல உக்காந்து பாக்கறது நல்லது தான்...இல்லாட்டி அவரு விக்கு கழண்டு நம்ம மேல விழுந்துடும் :0))//

டான்ஸ்ங்கிற பேருல உதை கூட குடுப்பாருங்க..

CA Venkatesh Krishnan said...

இதனாலதான் சயின்சே எடுக்கல. நமக்கும் சயின்சுக்கும் ரொம்ப தூஊஊஊரம்.

எனக்குத் தெரிஞ்ச கெமிஸ்டிரி - 'கெமிஸ்ட் அண்ட் ட்ரக்கிஸ்ட்'தான்:))

புதியவன் said...

//குகு: மாப்பிள்ளை பரிட்சை எப்படிடா எழுதிருக்க?

பாரிஸ்: வாழ்க்கையே போர்க்களம்,போர்க்களம் மாறலாம் போர்கள் மாறுமா?//

இது கலக்க்கல்...

குடுகுடுப்பை said...

ஆயில்யன் said...

சில பார்முலாக்களை மனப்பாடம் செய்து எழுதிக்களைத்துப்போன வேதி இயல் சம்பவங்கள் மீண்டும் கொஞ்சமாய் எட்டிப்பார்த்தது! தியரி எக்ஸாமினை விட லேப் செம டெரராக இருந்துச்சுங்க எனக்கு!

ரிசல்ட் கரீக்ட்டா வருமா? நாம போட்ட மிக்ஸ் சரியா? லைட் ரோஸ் ஆகணுமா இல்ல இன்னும் கொஞ்சம் ஊத்திகிலாமன்னு ஏகப்பட்ட சோதனைகள் கடந்து ஜெயிக்கணும் அந்த பரீட்சையில :)))))//

என்னா ஊத்தினாலும் பாஸ் மார்க் மேல தாண்டாது.அதுனால என்ன கலர் வந்தாலும் சரிதான்:


-000000000)))))))))

குடுகுடுப்பை said...

அன்புடன் அருணா said...

//தேர்வுக்கு செல்லும் மாணவனை வாழ்த்தி many more happy returns of the day.//

hahhahahahah... nice wishes...lol...
anbudan aruna//

நன்றி அன்புடன் அருணா

குடுகுடுப்பை said...

அது சரி said...

அதெல்லாம் சரி....ஆனா

CH
|
CH-CH-CHO---
|
OH

ச் ச் ச் சோ அப்புறம் ஓ

ஏங்க இப்படி சோவை வம்புக்கு இழுக்கறீங்க? :0))//

நல்ல கண்டுபிடிப்பு

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கபீஷ்
thevanmayam
செய்யது
பழமைபேசி

நசரேயன் said...

நீங்க ரெம்ப அறிவாளி என்னை விட