Wednesday, January 13, 2010

மாட்டுப்பொங்கலும் என் பங்காளி தனசேகரனும்.

ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது , என் சொந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடி,அந்த அனுபவம் ஒரு சுகமான அனுபவம்,மாட்டுப்பொங்கல் அன்று எப்படியும் கிரிக்கெட் மேட்ச் இருக்கும். காலையிலேயே எங்க அண்ணனும் நானும் கிளம்பிருவோம்.எங்கண்ணன் வேகப்பந்து வீச்சாளர், நான் விக்கெட் கீப்பர்,விக்கெட் கீப்பிங் பண்ணாட்டி என்ன சேத்துக்கமாட்டாங்க.மோங்கியா மாதிரி கீப்பிங் பண்ணுவேன்,பேட்டிங்கும் அப்படிதான்.ஒரு வழியா விளையாடிட்டு மாலை ஒரு 4 மணிக்கு மேல வீட்டுக்கு வருவோம்.தம்பி மாட்டுக்கு புல் அறுக்க போயிடுவான்.

ஊரில் உள்ள அனைத்து மாடுகளும் ஒரே நேரத்தில் ஏரியில் தண்ணியில் அடிக்கவேண்டும்,பெரும்பாலும் இது மாலை ஆறு மணி அளவில் இருக்கும். கிரிக்கெட் விளையாடிட்டி வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் நல்ல திட்டு கிடைக்கும்.எங்கண்ணனுக்கு கோபம் வரும் நமக்கு அதெல்லாம் கிடையாது உடனே இருக்கிற கறிச்சாப்பாட ஒரு வெட்டு வெட்டிட்டு, மாடு தண்ணில அடிக்க எல்லா மாட்டையும் ஒட்டிட்டு போவோம்.

இந்த நேரம் என் பங்காளி தனசேகரன் அவர் வேலை பார்க்கும் ஊரில் இருந்து ஊர் வந்து சேரும் நேரம்.இவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பதில் முதன்மையானவன் நான்.பொங்கல் அன்று வரமாட்டார் ஆனால் மாட்டுப்பொங்கல் அன்று மாடு தண்ணியில் அடிக்கும் முன் எப்படியும் வந்து விடுவார்.

என்னடா பங்காளி மாடு தண்ணில அடிக்கறப்ப எவனாவது பிரச்சினை பண்றானா? வெட்டிருவோம் வெட்டி சொல்லிட்டே வருவார். ஒரு வழியா மாடுகள் ஏரியில் தெற்கில் இருந்து வடக்காக நீச்சலடிக்க அனுப்பப்படும், முதலில் பசுமாடு கரையேறுமாறு பார்த்துக்கொள்வர்.

அப்படியே வீட்டில் மாடுகளை புதிதாக அடிக்கப்பட்ட அச்சுகளில் கட்டிவிட்டு, வீட்டு வாசலில் மாட்டுக்கு பொங்கல் வைப்போம், இது வெறும் உப்பும் பச்சரிசியும், கூடுதலாக நெல்லிக்காய் வாழைப்பழம்,கரும்பு போன்றவைகளையும் சேர்த்து செய்வது.

மாடுகளுக்கு சோறு ஊட்ட தேவையான தொன்னைகள் பலா இலையில் செய்வோம்.ஆவாரம்பூ இலை,பிரண்டை மற்றும் சில இலைகளை வைத்து மாலை செய்வோம்.

ஒரு வெங்கல சொம்பில் தண்ணீர், இது மாடுகளுக்கு வாய் கழுவ,ஒரு தொன்னையில் குங்குமம்,மஞ்சள்.சற்றே பெரிய தொன்னையில் பொங்கல் எடுத்துக்கொள்வோம். இதற்கு முன்னர் எங்கம்மா அரிசி மாவில் கோலம் போட்டிருப்பார், எங்களுக்கு சகோதரி இல்லை,இருந்திருந்தால் அவர்தான் கோலம் போட்டிருப்பார்.

விவசாயியும் ஒரு கோலம் போடவேண்டும்,அந்தக்கோலம் வீட்டில் இருக்கும் ஏர் கலப்பையின் மோத்தாடியை (மாட்டின் கழுத்தில் பூட்டப்படும் ஒரு உலக்கை போன்ற ஒரு மரம்). உலக்கை என்றால் என்ன? மோத்தாடி என்றால் என்ன?(பழமைபேசி கவனத்திற்கு).வைத்து செங்கல்லின் மூலம் கிடைத்த கோல மாவின் மூலம் ஒரு சதுரம் போட்டு குறுக்காக ஒரு பெருக்கல் குறி இடுவதுதான் கோலம்.இந்தக்கோலம் நான் நன்றாக போடுவேன்.

இப்போது மாட்டுக்கு சோறு ஊட்டுதல், ஒவ்வொருவரும் ஒரு தொன்னை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்,பக்கத்து வீட்டு சிறுவர்களும் வருவார்கள்.தாம்பலத்தை எடுத்து இசை முழங்க பொங்கலோ பொங்கல்,கோவிந்தா கோவிந்தா என்று மாட்டுக்கு சோறு ஊட்டுவோம். நான் சிறுவனாக இருக்கும்போது பக்கத்து வீட்டு கோவிந்தா, அடுத்த வீட்டு கோவிந்தா என்று கூறியும் இருக்கிறேன்.

இப்ப மாட்டுக்கு சோறு ஊட்டியாச்சு, மாலையை போட்டிட்டு அப்படியே புல்லையும் சாப்பிட கொடுத்திட்டு. நாங்க சாப்பிட போகனும்.

என்ன சாப்பாடுன்னா ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்

குடுகுடுப்பைக்காரார் இதையெல்லாம் சாப்பிடனும்.பங்காளி தனசேகரனின் சாகசங்களோட மீண்டும் சந்திப்போம்.

33 comments:

நசரேயன் said...

இப்பதானே தெரியுது நீங்க நல்லா மாடு மெயப்பீங்கன்னு

நசரேயன் said...

/*ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்*/
சாப்பாடு மிச்சம் இருந்தா சொல்லி அனுப்புங்க, நானும் வாரேன், இறைச்சி சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு

அ.மு.செய்யது said...

வயலும் வாழ்வும் பார்த்த எஃபெக்ட்ங்கோ...ஆனா இண்ட்ரஸ்டிங்..

வில்லன் said...

//எங்கண்ணனுக்கு கோபம் வரும் நமக்கு அதெல்லாம் கிடையாது //

ரொம்ப சரி அண்ணாச்சி இல்லன்ன நம்மளால இங்க குப்பை கொட்ட முடியாது. மூஞ்சில துப்பினாலும் தொடச்சிட்டு போய்டனும். இல்ல காலம் தள்ள முடியாது. ஏன்னா நாம எல்லாம் இங்க பொழைக்க வந்தவங்க. வந்தான் வரதட்டி.

உங்க அண்ணன் கண்டிப்பா நம்மூருல தான் இருப்பார். சரிதானா.

கபீஷ் said...

//மோங்கியா மாதிரி கீப்பிங் பண்ணுவேன்,பேட்டிங்கும் அப்படிதான்//

அவரை கிண்டல் பண்றீங்களா இல்ல உங்களை பெருமையா சொல்றீங்களா?:-):-):-)

பழமைபேசி said...

அண்ணே, இன்னைக்கு எனக்கு Wells-Wachoviaல வேலை. வீட்டுக்குப் போயி, நிறைய எழுதுறேன். நீங்க நிறைய விசயங்களக் கிளறி விட்டுட்டீங்க....

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

அண்ணே, இன்னைக்கு எனக்கு Wells-Wachoviaல வேலை. வீட்டுக்குப் போயி, நிறைய எழுதுறேன். நீங்க நிறைய விசயங்களக் கிளறி விட்டுட்டீங்க....//

எழுதுங்க ஆனா Wells-Wachovia பழசாயிருச்சுன்னு எழுதிறாதீங்க

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//மோங்கியா மாதிரி கீப்பிங் பண்ணுவேன்,பேட்டிங்கும் அப்படிதான்//

அவரை கிண்டல் பண்றீங்களா இல்ல உங்களை பெருமையா சொல்றீங்களா?:-):-):-)//

ரெண்டுமே இருக்கே

குடுகுடுப்பை said...

வில்லன் said...

//எங்கண்ணனுக்கு கோபம் வரும் நமக்கு அதெல்லாம் கிடையாது //

ரொம்ப சரி அண்ணாச்சி இல்லன்ன நம்மளால இங்க குப்பை கொட்ட முடியாது. மூஞ்சில துப்பினாலும் தொடச்சிட்டு போய்டனும். இல்ல காலம் தள்ள முடியாது. ஏன்னா நாம எல்லாம் இங்க பொழைக்க வந்தவங்க. வந்தான் வரதட்டி.

உங்க அண்ணன் கண்டிப்பா நம்மூருல தான் இருப்பார். சரிதானா.//

ஆமாம்வே

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

வயலும் வாழ்வும் பார்த்த எஃபெக்ட்ங்கோ...ஆனா இண்ட்ரஸ்டிங்..

//
நன்றிங்கண்ணா

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*ஆட்டுக்கறி, மீன்,கோழி,கருவாட்டுகுழம்பு,முட்டை இவை அனைத்தும் இருக்கும் கூடுதலாக ஒரு வெண்பொங்கலும்,அதற்கென வைத்த ஒரு குழம்பும் இருக்கும்*/
சாப்பாடு மிச்சம் இருந்தா சொல்லி அனுப்புங்க, நானும் வாரேன், இறைச்சி சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு//

யோவ் போய் ஆட்டுகறிய வாங்குங்க சீக்கிரம்

Jackiesekar said...

ப்படியே வீட்டில் மாடுகளை புதிதாக அடிக்கப்பட்ட அச்சுகளில் கட்டிவிட்டு, வீட்டு வாசலில் மாட்டுக்கு பொங்கல் வைப்போம், இது வெறும் உப்பும் பச்சரிசியும், கூடுதலாக நெல்லிக்காய் வாழைப்பழம்,கரும்பு போன்றவைகளையும் சேர்த்து செய்வது.

மாடுகளுக்கு சோறு ஊட்ட தேவையான தொன்னைகள் பலா இலையில் செய்வோம்.ஆவாரம்பூ இலை,பிரண்டை மற்றும் சில இலைகளை வைத்து மாலை செய்வோம்.//


பழைய ஞாபங்களை கிளரி வி்ட்டு விட்டிர்கள். நீங்கள் என் பங்காளிதான் எப்படி என்று கேட்கிறீர்களா? என் பெயரும் தனசேகரன்தான்

பழமைபேசி said...

//வில்லன் said... //

எங்க அண்ணாச்சி, கடைப்பக்கம் ஆளவே காணோம்?

புதியவன் said...

ராஜ்கிரண் படம் பார்த்த மாதிரி இருக்கு பதிவு...
நான் கிராமத்தில வள்ர்ந்ததில்லை, ஆனா இந்தப் பதிவு கற்பனையா கிராமத்துக்கே கூட்டிட்டு போயிடுச்சு...

பழமைபேசி said...

//மாட்டின் கழுத்தில் பூட்டப்படும் ஒரு உலக்கை போன்ற ஒரு மரம்). உலக்கை என்றால் என்ன? மோத்தாடி என்றால் என்ன?(பழமைபேசி கவனத்திற்கு).//

அண்ணே, நன்றிங்க! நுகம், முகட்டுத் தடி, ஏர்க் குச்சி, மூக்காணி, சவாரித்தப்பைன்னு ஒரு பதிவுக்கு வழி காமிச்சிட்டீங்க... நல்லா இருங்க!

துளசி கோபால் said...

ஏம்ப்பா அது நுகத்தடி இல்லையா?

உலக்கையாட்டம் நின்னா எப்படி?

இப்பப் புரிஞ்சுருக்குமே:-))))

குடுகுடுப்பை said...

jackiesekar said...

ப்படியே வீட்டில் மாடுகளை புதிதாக அடிக்கப்பட்ட அச்சுகளில் கட்டிவிட்டு, வீட்டு வாசலில் மாட்டுக்கு பொங்கல் வைப்போம், இது வெறும் உப்பும் பச்சரிசியும், கூடுதலாக நெல்லிக்காய் வாழைப்பழம்,கரும்பு போன்றவைகளையும் சேர்த்து செய்வது.

மாடுகளுக்கு சோறு ஊட்ட தேவையான தொன்னைகள் பலா இலையில் செய்வோம்.ஆவாரம்பூ இலை,பிரண்டை மற்றும் சில இலைகளை வைத்து மாலை செய்வோம்.//


பழைய ஞாபங்களை கிளரி வி்ட்டு விட்டிர்கள். நீங்கள் என் பங்காளிதான் எப்படி என்று கேட்கிறீர்களா? என் பெயரும் தனசேகரன்தான்//

பங்காளி இரண்டாம் பாகம் படிங்க, மத்தபடி இது மாற்றுப்பெயர்தான்

குடுகுடுப்பை said...

புதியவன் said...

ராஜ்கிரண் படம் பார்த்த மாதிரி இருக்கு பதிவு...
நான் கிராமத்தில வள்ர்ந்ததில்லை, ஆனா இந்தப் பதிவு கற்பனையா கிராமத்துக்கே கூட்டிட்டு போயிடுச்சு...//

அடுத்த பாகத்தையும் படிச்சிருங்க..

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//மாட்டின் கழுத்தில் பூட்டப்படும் ஒரு உலக்கை போன்ற ஒரு மரம்). உலக்கை என்றால் என்ன? மோத்தாடி என்றால் என்ன?(பழமைபேசி கவனத்திற்கு).//

அண்ணே, நன்றிங்க! நுகம், முகட்டுத் தடி, ஏர்க் குச்சி, மூக்காணி, சவாரித்தப்பைன்னு ஒரு பதிவுக்கு வழி காமிச்சிட்டீங்க... நல்லா இருங்க!///

பதிவ போட்டுத்தாங்குங்க

குடுகுடுப்பை said...

துளசி கோபால் said...

ஏம்ப்பா அது நுகத்தடி இல்லையா?

உலக்கையாட்டம் நின்னா எப்படி?

இப்பப் புரிஞ்சுருக்குமே:-))))//

நுகத்தடிதான்,ஆனா விவசாயிகள் மோத்தடின்னுதான் சொல்வாங்க எங்க ஊர்ல.உலக்கையாட்டம் நின்னா எப்படி?//

கோபால் சாருக்கும் எனக்கும் புரிஞ்சிருச்சு

துளசி கோபால் said...

கோபால் சாருக்கு 'குதிர்'போல், குந்தாணி போல நான் நிற்பது புரியும்:-))))

நானானி said...

//கோபால் சாருக்கு 'குதிர்'போல், குந்தாணி போல நான் நிற்பது புரியும்:-))))//
நல்ல தன்னிலை விளக்கம்!

உங்க மாட்டுப் பொங்கல் நல்லருந்துச்சு..குடுகுடுப்பை!
சுழன்றும் ஏர் பின்னது...தானே? ஏரை விட்டுட்டீங்களே? நுகத்தடி மாட்டு வண்டியில் பூட்டுவது. சரிதானே?

நானும் எங்க வீட்டு மாட்டுப்பொங்கல்
பதிஞ்சிருக்கேன். வந்து பாருங்க...நல்ல வார்த்தை சொல்லுங்க.

சந்தனமுல்லை said...

ஹிஹி...கொசுவத்தி நல்லா இருக்கு..நசரேயன் எழுதியிருந்தா கொஞ்சம் துண்டு போட்டு கரி போட்டு கொசுவத்தி சுத்தியிருப்பார்:)))

அவ்வ்வ்....கோலம் போட்டதை கேட்டதிலேயே எனக்கு மயக்கம் வந்துடுச்சி..எவ்ளோ கஷ்டமப்பா! :))

துபாய் ராஜா said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் நோக்கால் (நுகக்கால்) என்று கூறுவோம்.

அப்படியே பிரபாகரைப் போன்ற தலைப்பும்,எழுத்துநடையும்.... :))

ராஜ நடராஜன் said...

இந்த வருசத்து முதல் போகம்.

ராஜ நடராஜன் said...

நசரேயன் முதல் போணியும் செய்துட்டு உங்களுக்கு போட்டியாவும் களத்துல.என்னான்னு பார்த்துட்டு வாரேன்.

Anonymous said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் :))

Unknown said...

மறு ஒளிபரப்பா? அதான் நம்ம கண்ணுல மிஸ் ஆயிடுச்சி..

Unknown said...

//நான் விக்கெட் கீப்பர்,விக்கெட் கீப்பிங் பண்ணாட்டி என்ன சேத்துக்கமாட்டாங்க.மோங்கியா மாதிரி கீப்பிங் பண்ணுவேன்,பேட்டிங்கும் அப்படிதான்.//

நானும் விக்கெட் கீப்பர்தான். ஆனா ஓப்பனிங் பேட்ஸ்மேன். எங்க டீம்ல ஜெயசூர்யா மாதிரி அடிச்சி ஆடுற ஒருத்தன் இருந்தான். அதுனால அவனுக்குத் துணையா என்னை ஓப்பனிங்க் எறக்கி விட்டாங்க - ஜெயசூரிய கலுவித்தரன வாம்.. :)))

Unknown said...

நல்லா இருந்துச்சு உங்க மாட்டுப் பொங்கல் விவரணை.

மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்.

வில்லன் said...

//ஆனால் மாட்டுப்பொங்கல் அன்று மாடு தண்ணியில் அடிக்கும் முன் எப்படியும் வந்து விடுவார்.//

இனம் எனத்தோட தான சேரும் ;)

வில்லன் said...

//ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது , என் சொந்த கிராமத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடி,//

ஏன் இப்ப இருக்குற எடம் மாடும் மாடு சார்ந்த எடமும் தான.... போயி நல்ல கொண்டாடிற வேண்டியது தான்........ எவன் கேப்பான்..........

கொங்கு நாடோடி said...

கொங்கு நாட்டில் மாட்டுபொங்கல் அன்றும் சைவம்தான்.. வட்டார பழக்கவழக்கம் என்று நினைக்கிறேன். பழமைபேசி ஒரு இடுகை போடுவறென்று நினைக்கிறேன். அன்று சாப்பிடும் மொச்சைகொட்டை கத்தரிக்காய் கொழம்பு, அரசானிகாய் பொறியல்( pumkin and Thanksgiving) .... இன்றும் நினைவில் இருக்கிறது,
அடுத்தநாள் திருமூர்த்திமலைக்கு ரேக்ள கட்டிக்கொண்டு போவது...