Saturday, January 10, 2009
புதிய வண்ணத்துப்பூச்சி விருது
எனக்கு விருது கொடுத்த பதிவர் சந்தனமுல்லைக்கு நன்றி. எனக்கு தெரிந்த அனைவரும் இந்த விருதை வாங்கிவிட்டமையால்.நானே ஒரு புது விருதை உருவாக்கி பல பேர் பதிவு நடத்த காரணமாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த விருதை வழங்குகிறேன்.
பட்டாம் பூச்சி விருது யாரோ விளையாட்டுக்காக ஆரம்பித்த ஒரு தொடர் பதிவாக எனக்கு தோன்றினாலும் நண்பர்களின் எழுத்துத்திறமையை பாராட்டும் விதம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது.
குழந்தைகளின் படிப்பிற்கு கொடுக்கும் ஊக்கம் அளவிற்கு நாம் அவர்களின் மற்ற திறமைக்கு கொடுப்பதில்லை.ஆகவே குழந்தைகளிடம் இருக்கும் தனிப்பட்ட திறமை கண்டறிந்து அதற்கும் ஊக்கமளிப்போம்.
முடிந்தால் உங்கள் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமையை பதிவாக்கி, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விருதாக/தொடர்பதிவாக தொடருங்கள்.
நான் சில பதிவர்களின் குழந்தைகளுக்கு அளிக்கிறேன். அவர்கள் அவர்கள் குழந்தைகளின் தனித்திறமையை விருதாக தொடரலாம்.
பப்பு - சந்தனமுல்லை
பாப்பு - மிஸஸ் டவுட்
நசரேயனின் மகள்
சின்ன அம்மினி பழமைபேசி
அமிர்தவர்ஷினி, அமிர்தவர்ஷினி அம்மா.
சகானா - ச்சின்னபையன்
செல்லம்ஸ் - தாரணிபிரியா வின் ரங்கமணியின் அண்ணன் குழந்தைகள்.
பி:கு பழமைபேசி,நசரேயன்,ச்சின்னபையன் வீட்டில் அவர்களுக்கு கிடைக்கப்போகும் விருதுகளுக்கு நான் பொறுப்பல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
விருந்து கொடுங்க விருது வாங்கினதுக்கு
விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
அதனை அழகாக மற்ற குழந்தைககளுக்கென்று கொடுத்தது அருமை.
அக்குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
அழகுங்க...நன்றிங்க...மகிழ்ச்சிங்க!
//நான் சில பதிவர்களின் குழந்தைகளுக்கு அளிக்கிறேன். அவர்கள் அவர்கள் குழந்தைகளின் தனித்திறமையை விருதாக தொடரலாம்.
பப்பு - சந்தனமுல்லை
பாப்பு - மிஸஸ் டவுட்
நசரேயனின் மகள்
சின்ன அம்மினி பழமைபேசி
அமிர்தவர்ஷினி, அமிர்தவர்ஷினி அம்மா.
சகானா - ச்சின்னபையன்
செல்லம்ஸ் - தாரணிபிரியா வின் ரங்கமணியின் அண்ணன் குழந்தைகள்.//
நன்றி குடுகுடுப்பையாரே,
எழுத வந்த சில நாட்களில் என்னோடு என் பாப்புவுக்கும் சேர்த்து விருதெல்லாம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை,விருதுக்கு எங்களைத்தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி
உங்களுக்கும் விருது பெற்ற குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்..
நல்ல முயற்சி குடுகுடுப்பையாரே !!!
விருது பெற்ற உங்களக்கு என் வாழ்த்துக்கள்!!!
பெற்ற விருதை குழந்தைகளுக்கு
பிரித்து கொடுத்ததிற்கு மிக்க மகிழ்ச்சி
விருது வாங்கிய எல்லா குழந்தைகளுக்கும்
எனது அன்பு வாழ்த்துக்கள் !!!
//
நசரேயன் said...
விருந்து கொடுங்க விருது வாங்கினதுக்கு
//
Repeeeeeeeeeeeeetai
வாழ்த்துக்கள்!
குடுகுடுப்பையாரே ..
இந்த வருடத்தின் இரண்டாவது விருது வாங்கிடீங்க..
வாழ்த்துக்கள்...
அதனையும் அழகாக குழைந்தைகளுக்கு பிரித்து கொடுத்தது மிக அழகு.
மேன் மேலும் பல விருது வாங்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
:)
நசரேயன் said...
விருந்து கொடுங்க விருது வாங்கினதுக்கு//
விருந்து உங்க வீட்டிலே இந்நேரம் கிடைத்திருக்கவேண்டுமே.
நட்புடன் ஜமால் said...
விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
அதனை அழகாக மற்ற குழந்தைககளுக்கென்று கொடுத்தது அருமை.
அக்குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி நட்புடன் ஜமால்
பழமைபேசி said...
அழகுங்க...நன்றிங்க...மகிழ்ச்சிங்க!//
சரிங்க சிரிங்க
வாவ்..இதுவல்லவோ அருமையான் வண்ணத்துப் பூச்சி! மிக்க நன்றி பப்பு சார்பாக! நல்ல துவக்கத்தை தந்தமைக்கு நன்றிகள்!!
சூப்பர். வாழ்த்துகள் உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும்
வருகைக்கு நன்றி
மிஸஸ்.டவுட்
ராகவன்
ஜீவன்
செய்யது
ரமயா
பூர்ணிமா சரன்
சந்தனமுல்லை
அமுதா
ஓ. சூப்பர். வாழ்த்துக்கள் குகு. சஹானாவையும் தேர்ந்தெடுத்தற்கு நன்றி...
எனக்கு யாரு கொடுப்பா விருது.
நானும் ஆரம்பிக்க வேண்டியது தான். நல்ல பின்னுட்டம் எழுதுறவங்களுக்கு விருதுன்னு. என்ன பண்ண. ஒரு போட்டி இருந்தாதான நல்ல இருக்கும்.
விருது பேரு "வெட்டி (பசங்க) விருது". யாருக்கு கொடுக்கலாம் மொதல்ல.
நன்றி குடுகுடுப்பையாரே. இது உண்மையாகவே எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. கயல், நரேன் சார்பில் நன்றிகள். பொங்கல் அன்று இந்த விருதை பத்திரமா வெச்சு இருந்து தந்திடறேன். கயலிடம் போன் செய்து சொன்னேன். உனக்கு ஒரு அவார்ட் கிடைச்சு இருக்குடா என்று. அவளுக்கு அவ்வளவு சந்தோசம். நன்றி நன்றி
விருது பெற்ற மற்ற குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
மிகவும் அழகான அருமையான செயல் இது. ஒரு எதிர்பாராத ஆச்சர்யம் போலிருக்கிறது. ஒரு வயதே ஆகும் என் மகளுக்கு நீங்கள் கொடுத்த இந்த முதல் விருது என் வாழ்நாளில் மறக்க முடியாது. நன்றிகள் பல.
valthukkal kudukuduppayar avargale!
valthukkal kudukuduppayar avargale!
http://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_27.html - இங்கே ஒரு பதிவு போட்டிருக்கிறேன்! நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்!! பப்பு வெர்ஷ்ன் ஆப் பட்டாம்பூச்சி!
Post a Comment