Wednesday, January 7, 2009

நடிகர் விவேக்குடன் விஜயகாந்த் பேட்டி

வழக்கம் போல ஒரு கற்பனை பேட்டி நகைச்சுவை பேட்டி.யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.

விவேக்: வணக்கம் கேப்டன், வலைத்தளத்திற்கு உங்களிடம் ஒரு கற்பனை பேட்டி எடுக்க சொல்லி குடுகுடுப்பையின் ஒரு கோடி ரசிகர்கள் உத்தரவு போட்டிருக்காங்க பேட்டிய தொடங்கலாமா விஜயகாந்த்.

வி.ரசிகர்கள்: கேப்டன பேரு சொல்லி கூப்புடதா அப்புரம் டப்பா டான்ஸ் ஆடிடும்.

விஜயகாந்த்: தொண்டர்களே நமது கட்சியில் வன்முறைக்கு இடமில்லை அதனை புரிந்து நீங்கள் நடந்துகொள்ளுங்கள் ,விவேக் வன்முறையை தூண்டும் வகையில் இனி பேசமாட்டார்.

விவேக்: (மனதினுள்)பேர சொல்றது வன்முறையை தூண்டுறதா?நான் வழக்கமா எல்லாரையும் மரியாதை இல்லாம பேசிதான் காமெடி பண்ணுவேன் அதுக்கே மக்கள் சிரிக்கதான் செஞ்சாங்க ,ஆனா நேர்ல ஒழுங்கா பேசினா வன்முறைங்கிறாங்க.

விவேக்: உங்களை கேப்டன்னு கூப்பிடனுமா புரட்சிக்கலைஞர்னு கூப்பிடனுமா?

விஜயகாந்த்: ரெண்டையும் சொல்லி கூப்பிட்டா என்ன தப்பு, புரட்சிகலைஞர்னு கூப்பிட்டா கலைஞர வம்புக்கிழுக்கிறேன் திமுககாரங்க சண்டைக்கு வருவாங்க வரட்டும். கேப்டன் புரட்சிக்கலைஞர்னு கூப்பிடறதான் மேடம் விரும்புறாங்க.

விவேக் :கேப்டன் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் என்ன பிரச்சினை,ஏன் எங்கள மாதிரி நகைச்சுவை நடிகர்கள் கூட உங்களுக்கு பிரச்சினை?

விஜயகாந்த்: முதல்ல நகைச்சுவை நடிகர்கள் உங்கள மட்டும் நீங்க சொல்லிக்கறதே தப்பு, என்னோட நடிப்ப பாத்து மக்கள் சிரிக்கலையா? நானும் நகைச்சுவை நடிகன் தான், வல்லரசு படத்த இந்த குடுகுடுப்பை அவரோட நண்பரோட உக்காந்து கிளைமாக்ஸ் சீன் வரைக்கும் சிரிச்சது உண்மையில்லயா? அவரோட நண்பர் அந்த படத்த அஞ்சு வாட்டி பாத்தது எதுக்காக? நகைச்சுவை நடிகர்களோட எனக்கு பிரச்சினை அப்படின்னா எனக்கே எங்கூட பிரச்சினைதான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கு.


விவேக் : 10% கேக்குறீங்களே நீங்க என்ன தேமுதிகவான்னு செந்தழல் ரவி கேக்குறாரே? இந்தக்க்குற்றச்சாட்டுக்கு என்ன சொல்றீங்க?

விஜயகாந்த்: உலக அரசியல் தெரிஞ்சவரா இருந்தா 10 % கேக்கறீங்களே நீங்க என்ன ஆசிப் அலி சர்தாரியான்னு கேட்டிருப்பார், ஆனா தேமுதிக வில் அமைப்பு ரீதியா எல்லா பதவிகளும் சரியாகவே நடக்கிறது, அதற்கான புள்ளிவிவரங்கள் நான் கொடுப்பேன் நெனச்சுதான் நீங்க இந்த கேள்விய கேக்கறீங்க, சினிமான்னா லியாகத் அலிகான் நம்பர் சொல்வாரு வசனமா பேசிரலாம். அரசியலுக்கு பண்ருட்டியார்தான் இந்த வேலையை பண்றது, டாக்டர் பலாப்பழம் சாப்பிடவேணாம்னு சொன்ன ஒரே காரணத்திக்குகாக என் ஊரு பலாப்பழத்தை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதுக்கு டாக்டர் யார்னு முழுசா சாப்பிட்டுட்டு இப்ப அவர் மருத்துவமனைல இருக்கார். அவரு வந்தவுடன் புள்ளிவிவரம் வங்கி கணக்குகள் எல்லாம் வலை மன்றத்தில வெக்கத்தான் போறேன்.அப்போ பாப்போம் அந்த செந்தழல் ரவியா இல்ல இந்த செங்கண்ணு விஜயகாந்தான்னு.

விவேக்: டாக்டர் சொன்னா கேட்டுக்கவேண்டியதுதானே? ஏன் அப்படி பண்ணார்?

விஜயகாந்த்: அவரு டாக்டர் ராமதாஸ் சொன்னார்னு நினைச்சு அப்படி பண்ணிட்டார்.

விவேக்: இப்பவே நிறைய குடும்ப அரசியல் பண்றீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு,பதவிக்கு வந்தா உங்கள் குடும்பத்தின் தலையீடு ஆட்சியில் இருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

விஜயகாந்த்: யாரு குடும்ப அரசியல் பண்ணலை, குடுகுடுப்பைக்கு பதிவு போட ஒன்னும் இல்லண்ணா என் மகளின் பதிவு,பெற்றோருக்கு பரிசு,ஓவியங்கள் ஒரு குடும்ப பதிவு போடலியா, பதிவர் வாசகர் சந்திப்புன்னு பதிவு போடலியா? அதையெல்லாம் நீங்க கேட்டீங்களா?எல்லாத்தையும் மக்கள் படிச்சிட்டுதான் இருக்காங்க.

விவேக் : கறுப்பு எம்ஜியார்?

விஜயகாந்த்: ஏன் கூப்பிடக்கூடாது, வடிவேல கறுப்பு நாகேஷ்னு கூப்பிடலாம் என்ன கறுப்பு எம்ஜியார்னு கூப்பிடக்கூடாதா?இதுல என்ன அரசியல் ஏன் காழ்ப்புணர்ச்சி.

விவேக் : சன் டிவி காரங்க திரும்ப திமுக வோட ஐக்கியமாயிட்டாங்க? நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

விஜயகாந்த்: சன்னும்,கலைஞரும் சேந்தா மாதிரி நானும் திமுக கூட்டணில சேரலாம், ஆனா என்னை முதலவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்படி நடந்தால் எந்தக்கட்சியும் எங்களுடன் கூட்டணி சேரலாம்.

விவேக்: தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் அப்படின்னு பேரு வெச்சிருக்கீங்க? அப்ப மத்த கட்சில உள்ளவங்கெல்லாம் பிற்போக்கு திராவிடர்களா?

விஜயகாந்த்: யாரு தூண்டிவிட்டு பேசறீங்கண்ணு எனக்கு நல்லாவே தெரியும், அடிச்சன்னா தெரியுமா?

விவேக்: அடிவாங்க நான் என்ன வடிவேலா? அதுக்கெல்லாம் நான் அல்லக்கை கொட்டாங்குச்சிய வெச்சிருக்கேன் அடிங்க?

விஜயகாந்த்: ஏய் கை வலிக்குதுப்பா?

விவேக்: பின்ன கொட்டாங்க்குச்சில அடிச்சா கை வலிக்கத்தான் செய்யும் கேப்டன்.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..

விஜயகாந்த்: எங்க போயிருவே ஒரு நாள் நீயும் கட்சி ஆரம்பிச்சி என்கிட்ட கூட்டணிக்கு வரத்தானே போற...அப்ப வெச்சுக்கறேன்.

நானும் ஒரு அரசியல் பதிவு போட்டிருக்கேன், அப்படியே இதையும் படிங்க
குடுகுடுப்பை: வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

32 comments:

நசரேயன் said...

கலக்கல் குடுகுடுப்பையாரே

நசரேயன் said...

/*
எங்க போயிருவே ஒரு நாள் நீயும் கட்சி ஆரம்பிச்சி என்கிட்ட கூட்டணிக்கு வரத்தானே போற...அப்ப வெச்சுக்கறேன்
*/
நடந்தாலும் நடக்கலாம்

அது சரி(18185106603874041862) said...

//
நகைச்சுவை நடிகர்களோட எனக்கு பிரச்சினை அப்படின்னா எனக்கே எங்கூட பிரச்சினைதான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கு.
//

இது சூப்பர் :0))))

Anonymous said...

எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

பழமைபேசி said...

குடுகுடுப்பை நல்லா ஆடுதுங்கோய்...குடுகுடூ, குடுகுடூன்னு... இஃகிஃகி!

குடுகுடுப்பை said...

Anonymous said...

எதிர் பார்த்த அளவுக்கு இல்லை.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
//

நன்றி அனானி.இந்த முயற்சியை இனிமே கை கழுவிடுறேன்

Anonymous said...

நல்லா இருக்கு ராசா. அப்படியே என்ன பத்தியும் கொஞ்சம் எழுதுறது.

Anonymous said...

//வல்லரசு படத்த இந்த குடுகுடுப்பை அவரோட நண்பரோட உக்காந்து கிளைமாக்ஸ் சீன் வரைக்கும் சிரிச்சது உண்மையில்லயா? அவரோட நண்பர் அந்த படத்த அஞ்சு வாட்டி பாத்தது எதுக்காக?//

எதுக்காக? எதாவது வேல வெட்டி இருந்திருக்காது. தங்கமணி ஊருக்கு போனதால பொழுது போகாம வாடகைக்கு எடுத்த சத் வீனாபோக கூடாதுன்னு திரும்ப திரும்ப போட்டு பாத்திருக்கலாம்?

இல்ல ஆபீஸ்ல வேல இல்லாம மொக்கை போட்டுட்டு இன்டர்நெட் ல ஓசில பாத்திருக்கலாம்.

யாருக்கு தெரியும். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கோவி.கண்ணன் said...

இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதி இருக்கலாம், ரொம்ப சீரியஸாக இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\\கோவி.கண்ணன் said...
இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதி இருக்கலாம், ரொம்ப சீரியஸாக இருக்கு///

repeateyyyyy

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல முயற்சி குடுகுடுப்பைக்காரரே! நல்லா இருக்கு!!

அ.மு.செய்யது said...

நல்ல கற்பனை குடுகுடுப்பையாரே !!!

வெகுவாக ரசித்தேன்....தமிழ்நாட்டு அரசியல்..பதிவர் அரசியல்...கலக்குறீங்க போங்க !!!!

Subha said...

நல்ல குடுகுடுப்பை:)

சந்தனமுல்லை said...

http://sandanamullai.blogspot.com/2009/01/blog-post_08.html - இப்பதிவில் உங்களுக்கொரு விருது!!

Mahesh said...

ஏன் இந்த கொலவெறி? :))))

நல்லா சிரிச்சேன்....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உலக அரசியல் தெரிஞ்சவரா இருந்தா 10 % கேக்கறீங்களே நீங்க என்ன ஆசிப் அலி சர்தாரியான்னு கேட்டிருப்பார்,//

ரொம்பத்தெளிவு சாரே....

குடுகுடுப்பை said...

சில பின்னூட்டங்களை நீக்கிவிட்டேன்.நகைச்சுவை தாண்டி எதுவும் வேண்டாம் என்பதால்

Jackiesekar said...

சார் நல்ல கற்பனை

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

கலக்கல் குடுகுடுப்பையாரே

//
நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

Blogger அது சரி said...

//
நகைச்சுவை நடிகர்களோட எனக்கு பிரச்சினை அப்படின்னா எனக்கே எங்கூட பிரச்சினைதான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கு.
//

இது சூப்பர் :0))))
நன்றி அது சரி

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

குடுகுடுப்பை நல்லா ஆடுதுங்கோய்...குடுகுடூ, குடுகுடூன்னு... இஃகிஃகி!//

பழைய சிரிப்பா இருந்தாலும் புதுசா இருக்கு

குடுகுடுப்பை said...

Anonymous சீ போங்க said...

நல்லா இருக்கு ராசா. அப்படியே என்ன பத்தியும் கொஞ்சம் எழுதுறது.

//

நீங்க யாரு சீ போங்க

குடுகுடுப்பை said...

வில்லன் said...

//வல்லரசு படத்த இந்த குடுகுடுப்பை அவரோட நண்பரோட உக்காந்து கிளைமாக்ஸ் சீன் வரைக்கும் சிரிச்சது உண்மையில்லயா? அவரோட நண்பர் அந்த படத்த அஞ்சு வாட்டி பாத்தது எதுக்காக?//

எதுக்காக? எதாவது வேல வெட்டி இருந்திருக்காது. தங்கமணி ஊருக்கு போனதால பொழுது போகாம வாடகைக்கு எடுத்த சத் வீனாபோக கூடாதுன்னு திரும்ப திரும்ப போட்டு பாத்திருக்கலாம்?

இல்ல ஆபீஸ்ல வேல இல்லாம மொக்கை போட்டுட்டு இன்டர்நெட் ல ஓசில பாத்திருக்கலாம்.

யாருக்கு தெரியும். ஆண்டவனுக்கே வெளிச்சம்.//

பீதிய கெளப்பாதீங்க வில்லன் சார்.

Anonymous said...

//நல்லா இருக்கு ராசா. அப்படியே என்ன பத்தியும் கொஞ்சம் எழுதுறது.

//

நீங்க யாரு சீ போங்க//

நான்தான். நான்தான்நா நான்தான்.
காத்திருந்தேன் கதவ தெறந்து உள்ளுக்கு வாடி

குடுகுடுப்பை said...

சீ போங்க said...

//நல்லா இருக்கு ராசா. அப்படியே என்ன பத்தியும் கொஞ்சம் எழுதுறது.

//

நீங்க யாரு சீ போங்க//

நான்தான். நான்தான்நா நான்தான்.
காத்திருந்தேன் கதவ தெறந்து உள்ளுக்கு வாடி/

சீ போங்க வில்லன்

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதி இருக்கலாம், ரொம்ப சீரியஸாக இருக்கு

January 7, 2009 6:51 PM
Blogger T.V.Radhakrishnan said...

\\\கோவி.கண்ணன் said...
இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக எழுதி இருக்கலாம், ரொம்ப சீரியஸாக இருக்கு///

repeateyyyyy//

நன்றி கோவி,
டிவீஆர்.

அடுத்த முறை முயற்சி பண்றேன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
ஜோதிபாரதி
அ.மு.செய்யது
சுபாஷினி
சந்தனமுல்லை

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
மகேஷ்
சுரேஷ்
ஜாக்கி சேகர்

goma said...

பேட்டியி,விஜயகாந்த் பாணி வெளியானது போல் விவேக் நக்கல் நையாண்டி வெளிவரவில்லையே....

RAMYA said...

குடுப்பையாரே ரொம்ப
நல்லா எழுதி இருக்கீங்க
என்னா தாமதமா வந்தாலும்
ரசனை ஒன்றுதானே நண்பா?

RAMYA said...

உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வந்தாலும் தனி நபரின் ஆளுமையும்

இதன் விளக்கம்:

விவேக் பேசும்போது அந்த இடத்தில் விவேக் மாதிரியே குடுகுடு தெரியராறு

கேப்டன்: விஜயகாந்த் பேசும்போது அவரு மாதிரியே குடுகுடு தெரியராறு

நல்லா இருக்கு, நல்ல முயற்சி

இது போல் நிறைய பேட்டி எடுங்கோ
வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

goma said...

பேட்டியி,விஜயகாந்த் பாணி வெளியானது போல் விவேக் நக்கல் நையாண்டி வெளிவரவில்லையே....//

பேட்டி என்பதால் கேள்வி கேட்பதில் சறுக்கிவிட்டேன்.
மேம்படுத்திக்கொள்கிறேன்
நன்றி