Tuesday, January 6, 2009

வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

இப்பதிவு வி.பி.சிங்கின் ஆட்சி/அரசியல் பற்றிய விமர்சனமோ அல்ல,மாறாக அவரது அரசியல்/ஆட்சியினால் ஏற்பட்ட அரசியல் சமூக பின்விளைவுகள் என்ன என்று என் பார்வையில் ஒரு சிறிய அலசல்.

ராஜிவ் காந்தியுடன் ஏற்பட்ட கோபத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து அனைத்து நகைச்சுவை ஜனதா கட்சிகளை ஒன்றினைத்து ஜனதாதளம் என்ற கட்சியை உருவாக்கி,கம்யூனிஸ்ட்,வாஜ்பாய் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் நடிகர்களிடம் தோற்றுக்கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சி அனைத்தும் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து வெற்றி பெற்றார்.

பாரதீய ஜனதா பின்வாங்கியது, பின்னர் நகைச்சுவை ஜனதாதளத்தின் சார்பில் சந்திரசேகர்,கவுடா,குஜ்ரால் என மாதக்கணக்கில், இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள் என்று சொல்வதை விட பிரதமராக இருந்தார்கள்.நகைச்சுவை ஜனதாதளமும் இன்றையவரை உடைந்துகொண்டிருக்கிறது. நேரு சாகும் வரை பிரதமராக இருந்ததும் இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறையே.

சமூக ரீதியாக மத்திய அரசு நிறுவணங்களில் மண்டல் கமிசன் பரிந்துரை எந்த அளவுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு பயன் அளிக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அரசியல் ரீதியாக ஒரு எழுச்சி நடந்தது.

ஜனதாவின் மிச்சங்களான லல்லு எவ்வளவுதான் கோமாளித்தனம் செய்தாலும்,ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சியை பீகார் மாநிலத்தில் அமைக்க முடியும் என்று நிரூபித்தவர்.காங்கிரஸ் முதல்வர்கள் போல் அல்லாமல் தனியாக முடுவெடுக்க முடியும் என்று நிரூபித்தவர்.பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆளலாம் என்ற எண்ணத்தை வட மாநிலங்களில் விதைத்தவர். இது கண்டிப்பாக இந்திய ஜனநாயகத்தின் வெற்றியே. வி.பி.சிங்கின் பின்விளைவாகவே இதை கருதுகிறேன்.

என்னதான் கன்ஷிராம் பல வருடங்களாக தலித் கட்சி நடத்திக்கொண்டிருந்தாலும் ஆட்சியை பிடிப்பது நடக்கவில்லை, ஆனால் மாயாவதி அந்த நேரத்தில் நடந்த குழப்பங்களில் விளைவாக காங்கிரஸ் அல்லாத ஒரு தலித் பெண் நாடாள முடியும் என நிரூபிக்கமுடிந்தது.இவர் மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் யார் மேல் இல்லை. ஊழல் இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது குறைய இன்னும் நாள் ஆகும். மாயாவதி நாடாள முடிந்ததும் வி.பி.சிங் ஆட்சியின் பின்விளைவாகவே கருதுகிறேன்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த எழுச்சியாக இருந்திருக்கவேண்டிய இந்த பின்விளைவுகள் சாதிக்கட்சி என்ற பெயரில் மிக மோசமான ஒரு பின்விளைவையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.உதாரணம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் மட்டும் எத்தனை கட்சி.

காங்கிரஸ் மட்டுமே வெல்லமுடியும் என்ற விசித்திரமான நிலை போய், பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றது,அதே அளவில் மாநில கட்சிகளும் ஆங்காங்கே வலுப்பெற்றது. ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு சம பலம் வாய்ந்த கட்சிகள் தேவை.பாரதீய ஜனதா கட்சியின் விரைவான வளர்ச்சி அதனை நோக்கியே செல்வதாக நான் கருதுகிறேன்.இதுவும் வி.பி,சிங் ஆட்சியின் பின்விளைவாகவே கருதுகிறேன்

வலுவான காங்கிரஸ் கட்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு தேவை,ஆனால் வேண்டாம் என்று ஒதுங்கிப்போன நேரு குடும்பத்தினர் இல்லாமல் இந்த கட்சி இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கிய அதன் தொண்டர்கள்/தலைவர்களை என்ன செய்ய. இந்த கட்சி எவ்வளவோ நல்ல தலைவர்களை உருவாக்கியிருக்கலாம், ஆனால் உட்கட்சி ஜனநாயகம் இல்லாத மன்னர் கட்சியையே இவர்கள் விரும்புகிறார்கள்,இக்கட்சியின் முதல்வர்கள் காமராசர் போன்று எப்போது தனித்து இயங்குவது.இந்த நிலை எப்போது மாறும்.?

பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் அக்கட்சி வெற்றியின் மூலம் இந்தியாவின் பிரதமராகவும் ஆக முடியும் என்ற நிலையை அந்தக்கட்சி உருவாக்கவேண்டும்.

வி.பி.சிங் ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம், எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லாமலேயே இருந்திருக்கும்.இவர் ஏற்படுத்திய கலகம் நன்மைக்கே. வலுவான காங்கிரஸ், வலுவான பாரதீய ஜனதா, வலுவான மாநிலக்கட்சிகள் எல்லாம் இந்திய ஜனநாயகத்துக்கு தேவை வரும் காலத்தில் இவை எல்லாம் வலுப்பெற்று ஊழல்கள் குறைந்து ஜாதிக்கட்சிகள் ஒழிந்து ஒரு ஆரோக்கியமான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தனி நபர் வழிபாடு குறைந்த வலிமையான மக்களாட்சியாக இந்தியா மாறும் என நம்புவோம்.

33 comments:

Mahesh said...

அண்ணே... கலக்கிட்டீங்க... சொல்ல வந்ததை ரொம்ப தெளிவா பதிஞ்சுருக்கீங்க... ஆனா குடுகுடுப்பைதான் இவ்வளவு சீரீசா எழுதியிருக்காரான்னு ரெண்டு மூணு தடவை கேட்டுக்கிட்டேன் :))))

அ.மு.செய்யது said...

//ஊழல்கள் குறைந்து ஜாதிக்கட்சிகள் ஒழிந்து ஒரு ஆரோக்கியமான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தனி நபர் வழிபாடு குறைந்த வலிமையான மக்களாட்சியாக இந்தியா மாறும் என நம்புவோம். //

ஏண்ணே இந்த பகல் கனவு ????

SPIDEY said...

வி.பி.சிங் ஏற்படுத்திய இன்னொரு பின்விளைவு இந்த பதிவு

SPIDEY said...

மேலும் பல பின்விளைவுகளுக்கு
http://kudukuduppai.blogspot.com/2008/09/blog-post_25.html

இராகவன் நைஜிரியா said...

//ஊழல் இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது குறைய இன்னும் நாள் ஆகும். //

இதுதான் இந்தியாவை இன்னும் வாழ வச்சுகிட்டு இருக்கு.

நம்பிக்கை..நம்பிக்கை .. வண்டியில் ஒரு நாள் ஓடம் ஏறும், ஒடத்தில் ஒரு நாள் வண்டியும் ஏறும்..

காலம் மாறும், காத்திருப்போம்...

CA Venkatesh Krishnan said...

//
என்ன ஆச்சு. வொய் வாட் ஹேப்பண்ட். நல்லாதானே இருந்தீங்க. கம்பெனில ஏதாவது கடுதாசு கிடுதாசு?

இது உங்க ரெகுலர் பதிவுக்கு.

//

இந்த பதிவு 'சீரியசா' நல்லா இருந்துச்சு. (பதிவும் சீரியஸ், கமென்டும் சீரியஸ். பதிவு சீரியசா, சீரியசா நல்லா இருந்துச்சுன்னு படிக்கணும்)

மொத்தத்துல ஜனங்களுக்கு மட்டுமில்ல. ஜன நாயகத்திற்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்னு சொல்றீங்க. நல்லா இருக்கு.

Anonymous said...

இந்தியாவின் முன்னேற்றத்தை ஒரு பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விட்ட புண்ணியவான் இந்த ஆள் வி.பி.சிங்.

ers said...

நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

http://india.nellaitamil.com/

சந்தனமுல்லை said...

அரசியல் அவ்வளவு பரிச்சயமில்லையென்றாலும், ஒரு புரிதலாக இருந்தது இப்பதிவு!!

குடுகுடுப்பை said...

Anonymous said...

இந்தியாவின் முன்னேற்றத்தை ஒரு பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விட்ட புண்ணியவான் இந்த ஆள் வி.பி.சிங்.
//
ராஜிவ்காந்தி தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியா வேகமாக முன்னேறியிருக்கும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த ஜனநாயக குழப்பத்தில் வாஜ்பாயியும்,குப்பனும்,சுப்பனும், மாயாவதியும் முன்னேற்றத்தில் பங்கெடுக்கலாம் என்ற விழிப்புணர்வுதான் நான் சொல்லவருவது.

நசரேயன் said...

என்ன ஒரு ஆழமான அலசல், அருமை..அருமை

நசரேயன் said...

வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத்துல தெரியுது, இப்படி அடிக்கடி நடந்தா இந்த மாதிரி நல்ல நல்ல பதிவுகள் கிடைக்குமா?

குடுகுடுப்பை said...

Mahesh said...

அண்ணே... கலக்கிட்டீங்க... சொல்ல வந்ததை ரொம்ப தெளிவா பதிஞ்சுருக்கீங்க... ஆனா குடுகுடுப்பைதான் இவ்வளவு சீரீசா எழுதியிருக்காரான்னு ரெண்டு மூணு தடவை கேட்டுக்கிட்டேன் :))))

//

நன்றி மகேஷ்

அடுத்தது மொக்கைதான்

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//ஊழல்கள் குறைந்து ஜாதிக்கட்சிகள் ஒழிந்து ஒரு ஆரோக்கியமான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய தனி நபர் வழிபாடு குறைந்த வலிமையான மக்களாட்சியாக இந்தியா மாறும் என நம்புவோம். //

ஏண்ணே இந்த பகல் கனவு ????//

நன்றி அ.மு.செ
ராத்திரிலதான் எழுதினேன்.

குடுகுடுப்பை said...

SPIDEY said...

வி.பி.சிங் ஏற்படுத்திய இன்னொரு பின்விளைவு இந்த பதிவு//

இல்லாட்டி ஒரு பதிவு குறைச்சலா இருந்திருக்கும்.

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

//ஊழல் இந்திய ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது குறைய இன்னும் நாள் ஆகும். //

இதுதான் இந்தியாவை இன்னும் வாழ வச்சுகிட்டு இருக்கு.

நம்பிக்கை..நம்பிக்கை .. வண்டியில் ஒரு நாள் ஓடம் ஏறும், ஒடத்தில் ஒரு நாள் வண்டியும் ஏறும்..

காலம் மாறும், காத்திருப்போம்...//

நன்றி ராகவன்

காத்திருப்போம்

குடுகுடுப்பை said...

இளைய பல்லவன் said...

//
என்ன ஆச்சு. வொய் வாட் ஹேப்பண்ட். நல்லாதானே இருந்தீங்க. கம்பெனில ஏதாவது கடுதாசு கிடுதாசு?

இது உங்க ரெகுலர் பதிவுக்கு.

//

இந்த பதிவு 'சீரியசா' நல்லா இருந்துச்சு. (பதிவும் சீரியஸ், கமென்டும் சீரியஸ். பதிவு சீரியசா, சீரியசா நல்லா இருந்துச்சுன்னு படிக்கணும்)

மொத்தத்துல ஜனங்களுக்கு மட்டுமில்ல. ஜன நாயகத்திற்கும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்னு சொல்றீங்க. நல்லா இருக்கு.//

ஜனநாயக மாற்றம்தான் என் பதிவின் நோக்கம்.

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

அரசியல் அவ்வளவு பரிச்சயமில்லையென்றாலும், ஒரு புரிதலாக இருந்தது இப்பதிவு!!//

எனக்கும்தான், ஆனாலும் எனக்கு புரிஞ்சத எழுதி இருக்கேன்.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

வீட்டுல பயங்கர அடியோ கோபம் எழுத்துல தெரியுது, இப்படி அடிக்கடி நடந்தா இந்த மாதிரி நல்ல நல்ல பதிவுகள் கிடைக்குமா?//

இதுல எங்க கோபமா எழுதியிருக்கேன்னு சொல்லுங்க நெல்லையாரே

RAMYA said...

நல்லா இருக்கு அரசியல் அவ்வளவா
தெரியாது ஆனா நீங்க சொல்லி
இருப்பது அருமையான கருத்து
அருமை அருமை அருமை!!!

RAMYA said...

எந்த தலைப்பு எடுத்தாலும்
அதில் ஒரு அருமையான்
சிந்தனை திறமை தெரியுது

அலசி ஆராய வைக்கும் திறமையும்
உங்களுக்கு இருக்கு
இது போல் நிறைய எழுதவும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!

குடுகுடுப்பை said...

RAMYA said...

நல்லா இருக்கு அரசியல் அவ்வளவா
தெரியாது ஆனா நீங்க சொல்லி
இருப்பது அருமையான கருத்து
அருமை அருமை அருமை!!!

நன்றி ரம்யா

Anonymous said...

ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட மிட்டாய் கொடுப்பாங்க, சர்பத் கொடுபாங்க. இப்பல்லாம் 5000 ரூபாய் கொடுக்கிறார்கள் (நன்றி திருமங்கலம் இடைதேர்தல். கொடுத்து வச்ச வாக்காளர்கள். எல்லாருக்கும் அந்த அதிஷ்டம் இல்லையே. என்ன பண்ண) முன்னேற்றம் தானே. பாராட்டப்பட வேண்டிய ஒன்னு.

பழமைபேசி said...

Toaster -- ரொட்டி வாட்டும் கருவி

நுண்மின்னலை உலைன்னா என்ன?

குடுகுடுப்பை said...

வில்லன் said...

ஆமா. ஆமா. முன்னல்லாம் ஓட்டுபோட மிட்டாய் கொடுப்பாங்க, சர்பத் கொடுபாங்க. இப்பல்லாம் 5000 ரூபாய் கொடுக்கிறார்கள் (நன்றி திருமங்கலம் இடைதேர்தல். கொடுத்து வச்ச வாக்காளர்கள். எல்லாருக்கும் அந்த அதிஷ்டம் இல்லையே. என்ன பண்ண) முன்னேற்றம் தானே. பாராட்டப்பட வேண்டிய ஒன்னு.//

பொதுத்தேர்தல் வரைக்கும் காத்திருக்கவும்

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

Toaster -- ரொட்டி வாட்டும் கருவி

நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?

கபீஷ் said...

//நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?//

பழமைபேசி, எதாவது கமெண்ட் போடணும்னு போட்டுருக்காரோ, இது அரசியல் பதிவுன்றதால :-):-)

கபீஷ் said...

///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் //

லக்‌ஷ்மண்- ன்னு ஒருத்தர் தலைமைப் பதவியில இருந்தாரே.

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//நுண்மின்னலை உலைன்னா என்ன?//

அய்யா இந்த கேள்வி என்கிட்டயா கேக்கறீங்க?//

பழமைபேசி, எதாவது கமெண்ட் போடணும்னு போட்டுருக்காரோ, இது அரசியல் பதிவுன்றதால :-):-)
//

இருக்கலாம், இல்ல அது எதுவும் கட்சி பேரோ என்னவோ

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

///பாரதீய ஜனதா கட்சி ஓரளவு உட்கட்சி ஜனநாயகத்தை கடைபிடிக்கிறது, ஆனால் உயர் சாதிக்காரர்களின் கட்சி என்ற நிலை மாறி மாயாவதி போன்ற வலிமை மிக்க தலித்துக்களும் அதன் தலைமை பீடத்தையும் //

லக்‌ஷ்மண்- ன்னு ஒருத்தர் தலைமைப் பதவியில இருந்தாரே.//
பொம்மைகள் வேணாம்.வாஜ்பாயி மாதிரி ஒருவரை உருவாக்க வேண்டும்.அல்லது உருவாக விட வேண்டும்.

கபீஷ் said...

ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா? வலுக்கட்டாயமா, சம்பிரதாயத்துக்காக எதை செய்தாலும், அதாவது யாரை பதவியில் வைத்தாலும், மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் எப்படி செயல்பட முடியும்.

லக்‌ஷ்மணன் ஊழல் வழக்குல சிக்குனது தெரியும் தானே?
மொத்தத்துல எந்த ஜாதியா இருந்தாலும் நல்லவங்க, ஆளுமைத் திறன் உள்ளவங்க தலைமைப் பொறுப்புக்கு வரணும்

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

ஐ! வாஜ்பாயி பொம்மை இல்லேன்றீங்களா? வலுக்கட்டாயமா, சம்பிரதாயத்துக்காக எதை செய்தாலும், அதாவது யாரை பதவியில் வைத்தாலும், மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் எப்படி செயல்பட முடியும்.

லக்‌ஷ்மணன் ஊழல் வழக்குல சிக்குனது தெரியும் தானே?
மொத்தத்துல எந்த ஜாதியா இருந்தாலும் நல்லவங்க, ஆளுமைத் திறன் உள்ளவங்க தலைமைப் பொறுப்புக்கு வரணும்//

பொம்மை தலைவர்கள் வேண்டாம் சார். பாஜகவில் ஒரு ஒபாமா.

கபீஷ் said...

//பொம்மை தலைவர்கள் வேண்டாம் சார். பாஜகவில் ஒரு ஒபாமா.//

இதுக்கு ஒரு வரில பதில் சொல்ல முடியாது. மெயில் அனுப்பறேன் உங்களுக்கு