Wednesday, January 21, 2009

சர்தார்ஜி நண்பனும் 2012 டிசம்பர் 21ல் அழியப்போகும் உலகமும்.

நானும் இந்த சர்தார்ஜி நண்பனும் 2000 மாவது ஆண்டிலிருந்து 2005 வரை ஒரே புராஜக்டில் வேலை பார்த்தோம். உதவி செய்யும் குணம் அதிகம் உள்ள நல்ல நண்பர்.ஆனால் வம்பிழுப்பதில் அவருக்கு நிகர் அவரே,அதற்கு இடம் ஆளெல்லாம் பார்க்கமாட்டார்.அதே போல பெரிய முன் ஜாக்கிரதை முத்தண்ணாவும் கூட.

சாம்பர்க் இல்லினாய்ஸில் அவருடன் வேலை பார்த்த போது, ஒருநாள் ஜிவெல் ஆஸ்கோ என்ற கடையில் சேர் வாங்கினார்,வழக்கமாக பெரும்பாலான பொருட்களுக்கு வாங்கி பிடிக்கவில்லை என்றால் முப்பது நாட்களுக்குள் திருப்பி கொடுக்கலாம். இவர் சேரை எடுத்துக்கொண்டு தேவைக்கு அதிகமான கேள்விகளை கேட்டதில் இவர் கண்டிப்பாக ரிட்டன் பண்ணப்போறார் என்று நினைத்த அந்த மேனேஜர், ரிட்டன் பண்ணினால் 15% restocking fee applicable. அப்படின்னு பில் போடுற பெண்ணிடம் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.உடனே மேனேஜரிடம் சண்டை போட்டு you are a racisit, you are doing this only because i am wearing turban..

மேனேஜர் பயந்து போயி நீங்க வாங்கிற சேருக்கு 30 day return policy தான் , வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டாரு, இவரு போட்ட சண்டைக்கிடையில் பயந்து போய் நான் பத்து டாலருக்கு தேவையில்லாம ஐஸ் கிரீம் வாங்கிட்டேன்.

எல்லாம் பேசி முடிச்சு தலைவர் சேரே வாங்காம வா போகலாம் அப்படின்னு கூட்டிட்டு வந்துட்டாரு.எனக்கு தேவையில்லாம பத்து டாலர் தண்டம்.

ஆபிஸ்ல வேலை செய்யும்போது தனக்கு தெரியாம எதுவும் நடக்ககூடாதுன்னு நினைப்பாரு.இவரோட தொல்லைக்கு பயந்து நான் ரெண்டு வருசம் மாலை 4 மணிலேர்ந்து அதிகாலை வரை இந்திய நேரத்தில் offshore team கூட வேல பாப்பேன்.அப்படியும் தனக்கு எதிரா ஏதோ சூழ்ச்சி நடக்குதுன்னு அவருக்கு பயம்.யாரு என்ன சொன்னாலும் அதை மறுத்தே கருத்து சொல்வார்.உதாரணமா 2+2 =4 அப்படின்னு சொன்னா. இல்லை 1+1+1+1=4 அப்படிதான் சொல்லனும் அப்படின்னு சொல்வார்.

எங்க உறவு இப்படி நம்பிக்கை இல்லாமல் போயிட்டே இருந்தது.ஒருநாள் எங்களோடு வேலை பார்த்த ஒரு தெலுகுப்பெண்,என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு டெஸ்டிங் மெசின்ல நான் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே எந்தக்கேள்வியும் கேக்காமல் கீ போர்டை இழுத்து அவருக்கு தேவையான வேலையை செய்ய முயன்றார். யம்மா நீங்க பர்மிசன் வாங்கனும், இது நாகரிமில்லைன்னு சொல்லிட்டிருந்தேன், வாய்த்தகறாரு முற்றி மேனேஜரிடம் சென்றது.அவர் ஒரு மாதிரியாக சமாளித்து அனுப்பிவிட்டார்.

நம்ம சர்தார்ஜி எனக்கு சொன்ன அட்வைஸ் என்னன்னா,ஒரு பெண்ணிடம் சண்டை போடாதே அதுவும் அமெரிக்காவில், ஏன்னா செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்ன்னு சொல்லி உன்ன மாட்டி விட முடியும்,ஏற்கனவே அந்த கம்பெனியில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் எடுத்துக்காட்டாக கூறினார். உன்னிடம் நான் சண்டை போடுவது போல அந்த பெண்ணிடம் போட மாட்டேன் என்றார். எனக்கும் ஒரளவிற்கு அவரின் எச்சரிக்கை உதவியாக இருந்தது.

இன்னொரு நாள் சர்தார்ஜி தன் மனைவி மற்றும் மூன்று வயது மகன், 6 மாத குழந்தையை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.இப்ப சர்தார்ஜி என்ன பண்ணாருன்னா, லுப்தான்சா பிராங்பர்ட் டிரான்ஸிட்ல பையன் தொலஞ்சு போகாம இருக்க பையனோட கொண்டை முதல் உடலில் கிட்டத்தட்ட பத்து இடங்களில் இவருடைய போன் நம்பர்,இந்திய வீட்டு போன் நம்பர் ஒட்டி வைத்துவிட்டேன் என்றார்.நல்ல யோசனை அப்படின்னு சொன்னேன்,அவரு உடனே இது மட்டும் இல்லை 6 மாத குழந்தைக்கும் அதே அளவு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கேன் அப்படின்னார்.ஏன் குழந்தை எங்க ஓடப்போகுது அம்மாதானே தூக்கி வெச்சிருப்பாங்க.இல்ல பெரியவன் ஓட ஆரம்பிச்சா அவங்க அம்மா குழந்தைய எங்கனா வெச்சிட்டு பின்னாடியே ஓடினா என்ன பண்றது, அதுனால சின்ன குழந்தைக்கும் ஸ்டிக்கர் அப்படின்னாரு.நாம இவ்வளவு எச்சரிக்கையா இருப்போமா?

முந்தா நாள் திடீர்னு போன் பண்ணாரு, பேசிட்டிருக்கும்போது நான் சீக்கிரம் இந்தியா போயி செட்டில் ஆகப்போறேன் அப்படின்னேன்.

ஏன் 2012 டிசம்பர் 21 தான் காரணமா? அப்படின்னாரு ஏன் அந்த தேதிக்கு என்ன ஆச்சு.அதுக்கு அவரு மாயன் காலண்டர் படி உலகம் அழியப்போகுது நான் முழுமையா நம்புறேன்,நானும் இந்தியாவில் பெற்றோர்களுடன் வசிக்க ஆசைப்படுறேன், உனக்கு அதே காரணம்னு நினைச்சேன் அப்படின்னாரு.

எச்சரிக்கைத்தனத்தின் உச்சத்தை என்னவென்று சொல்வது. நீங்களும் பின்னூட்டம் போட்டிட்டு 2012 டிசம்பர் 21க்குள்ள உங்களுக்கு புடிச்சத செய்யுங்க....ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க ....................................

முந்தைய பதிவு

அமெரிக்க டவுசர்

51 comments:

நசரேயன் said...

உள்ளேன் போட்டுகிறேன், திரும்பி வாரேன்

நசரேயன் said...

எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

நசரேயன் said...

/*
ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க
*/
கறி சோறு போடுங்க சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு

SPIDEY said...

thala read this
http://life-iz-boring.blogspot.com/2008/12/2012-see-this-in.html

RAMYA said...

நானும் உள்ளேன் போட்டுக்கறேன்!!!

RAMYA said...

எனக்கு 4 நாற்காலி வேணும்
அதுவும் உங்க சர்தார்ஜி
நண்பரோட போயி வாங்கனும்

என்னா சரியா இது எங்க அக்காவோட
வேண்டுகோள் !!!

RAMYA said...

நசரேயன் said...
/*
ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க
*/

கறி சோறு போடுங்க சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு

//


அலைச்சல் கொஞ்சம் ஓவரா இல்லே ???

RAMYA said...

//
நசரேயன் said...
எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

//

ம்ம்ம் அது வேணாம் ஏன்னா
ஏற்கனவே ஆணி பிடுங்கியாச்சு

அது காயலான் கடையிலே கொண்டு போடுங்க!!!

பழமைபேசி said...

//வாய்த்தகறாரு முற்றி//

உங்களுக்கு அவ்ளோ தைரியம்? நம்பிட்டேன்... இஃகிஃகி!

பழமைபேசி said...

//நான் சீக்கிரம் இந்தியா போயி செட்டில் ஆகப்போறேன் அப்படின்னேன்.
//

நானுந்தாண்ணே!

பழமைபேசி said...

நீங்க இங்க வரவே இல்ல... ஞேஏஏஏஏஏ

http://maniyinpakkam.blogspot.com/2009/01/blog-post_20.html

முரளிகண்ணன் said...

:-))))))))

S.R.Rajasekaran said...

சர்தார்ஜி கிட்ட எந்த உலகம்ன்னு கொஞ்சம் கேட்டு சொன்ன நல்லா இருக்கும்

S.R.Rajasekaran said...

RAMYA
-------
எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கே

KarthigaVasudevan said...

:):):)

Vishnu... said...

உண்மையா குடுகுடுப்பை???

..ஏன்... இப்படி... என்னாச்சு ???


அன்புடன்
விஷ்ணு

நசரேயன் said...

/*பழமைபேசி said...
//நான் சீக்கிரம் இந்தியா போயி செட்டில் ஆகப்போறேன் அப்படின்னேன்.
//

நானுந்தாண்ணே!
*/
நானுந்தாண்ணே!

கபீஷ் said...

//வாய்த்தகறாரு முற்றி//

யூ மீன் ரொம்ப வழிஞ்சு?

அ.மு.செய்யது said...

//வேலை பார்த்த ஒரு தெலுகுப்பெண்,என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள //

இந்த வரியை கொஞ்சம் நான் மாத்திப் படிச்சிட்டேன்..சாரிங்க..

ஹா ஹா நல்லாருக்குங்க உங்க சர்தார் கலாய்ப்பு

பழமைபேசி said...

//கபீஷ் said...
//வாய்த்தகறாரு முற்றி//

யூ மீன் ரொம்ப வழிஞ்சு?

//

அடங் கொப்புரான...இந்த விசியம் லண்டன் வரைக்குந் தெரிஞ்சி போச்சா? எனக்கு மட்டுந்தேன் தெரியுமுன்னல்ல‌ இருந்தேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

ஷாஜி said...

//வாய்த்தகறாரு முற்றி//

-அவ்லோ சப்ப ஃபிகரா?

புதியவன் said...

//வருங்கால முதல்வர் said...
நசரேயன் said...

எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

//

நீங்களூம் சும்மாதானே இருக்கீங்க//

இது கலக்கல்...

குடுகுடுப்பை said...

புதியவன் said...

//வருங்கால முதல்வர் said...
நசரேயன் said...

எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

//

நீங்களூம் சும்மாதானே இருக்கீங்க//

இது கலக்கல்...
//

ஆமா அவரு அப்படிதான் இருக்காரு

சந்தனமுல்லை said...

:-)) இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன், ஸ்டிக்கர் ஒட்டுனதை நினைச்சு!

// நசரேயன் said...
எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?///

:-))))) தாங்க முடியலை!//2012 டிசம்பர் 21க்குள்ள உங்களுக்கு புடிச்சத செய்யுங்க....ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க //

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!!

அமுதா said...

:-)))

வேத்தியன் said...

ஐயா இப்ப எனக்கு 20 தான் ஆவுதுங்க...
2012ல எனக்கு 23 வயசு தான் இருக்கும்...
நான் என்ன பண்ணட்டும்???
:-)

குடுகுடுப்பை said...

SPIDEY said...

thala read this
http://life-iz-boring.blogspot.com/2008/12/2012-see-this-in.html

// படிக்கிறேன் ஸ்பைடி

வருகைக்கு நன்றி ரம்யா
வருகைக்கு நன்றி பழமைபேசி
வருகைக்கு நன்றி முரளிகண்ணன்
வருகைக்கு நன்றி S.R.ராஜசேகரன்
வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்
வருகைக்கு நன்றி Vishnu...

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

//வாய்த்தகறாரு முற்றி//

யூ மீன் ரொம்ப வழிஞ்சு?//

அ.மு.செய்யது said...

//வேலை பார்த்த ஒரு தெலுகுப்பெண்,என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள //

உங்க ரெண்டு பேருக்கும் ஏன் இந்த கொலவெறி

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
ஷாஜி said...

//வாய்த்தகறாரு முற்றி//

-அவ்லோ சப்ப ஃபிகரா?//

அவங்க வீட்டுக்காரர்கிட்ட கேளுங்க,எங்கியோ பெங்களூர்ல தான் இருப்பாரு.(அவரும் ஏன் டீமில் வேலை பார்த்தவர் பேச்சிலராக)

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...

:-)) இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன், ஸ்டிக்கர் ஒட்டுனதை நினைச்சு!

// நசரேயன் said...
எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?///

:-))))) தாங்க முடியலை!//2012 டிசம்பர் 21க்குள்ள உங்களுக்கு புடிச்சத செய்யுங்க....ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க //

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!!//

நல்லா சிரிங்க உடம்பு குறையும், ஆனா ரெண்டாவது கருத்தையும் செஞ்சீங்கண்ணா??

அமுதா said...

:-)))

நன்றி அமுதா

குடுகுடுப்பை said...

வேத்தியன் said...

ஐயா இப்ப எனக்கு 20 தான் ஆவுதுங்க...
2012ல எனக்கு 23 வயசு தான் இருக்கும்...
நான் என்ன பண்ணட்டும்???
:-)//

ஒரு பத்து பொண்ணுக்கு லைன் போடுங்க.2012 சொல்லி

பழமைபேசி said...

மகேசு அண்ணன் பதிவு போட்டதின் விளைவு, இதுதான் கடைசிப் பின்னூட்டம் அடுத்த பின்னூட்டம் போடும் வரை. கண்டிப்பா, இனி ஒரு வாரத்துக்கு பதிவு கிடையாது, போதுமா? போதுமா??!

வேத்தியன் said...

//குடுகுடுப்பை said...
ஒரு பத்து பொண்ணுக்கு லைன் போடுங்க.2012 சொல்லி//

ஆகட்டும் ஐயா...
நாளைக்கே தொடங்குறேனுங்க...

தேவன் மாயம் said...

என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..

குடுகுடுப்பை said...

thevanmayam said...

என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..//

நன்றி

அறிவுரை நானு..........

எம்.எம்.அப்துல்லா said...

:))))

ராஜ நடராஜன் said...

உங்களைத்தான் தேடிகிட்டு இருந்தேன்.பழமையின் இளையராஜாவின் திருவாசகமா கேள்வியிலிருந்து துரத்திகிட்டி இங்கே வந்தேன்.தேன்கூட்டைக் கலைத்து ஜாவாவைத் தூக்குங்கன்னு சொல்லியிருந்தீங்க.எந்த ஸ்கிரிப்ட் தொந்தரவு செய்துன்னு சொன்னீங்கன்னா ஒட்ட நறுக்கிடலாம்.

இனி சர்தார்ஜி என்ன சொல்றாருன்னு பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

2000 யிரத்திலேயே உலகம் அழிஞ்சிடுமுன்னு சொன்னாங்க.2009ம் வந்துடுச்சு.இனி 2012 தவணையா?

ராஜ நடராஜன் said...

//எச்சரிக்கைத்தனத்தின் உச்சத்தை என்னவென்று சொல்வது. நீங்களும் பின்னூட்டம் போட்டிட்டு 2012 டிசம்பர் 21க்குள்ள உங்களுக்கு புடிச்சத செய்யுங்க....ஆடு கோழிய அடிச்சு சாப்புடுங்க .//

முதலில் ஒரு சிரிப்பான் சொல்லிக்கிறேன்:)

ஆடு,கோழி அடிச்சு சாப்பிட்டு அழுத்துப் போயிடுச்சு.பிசா,கெண்டக்கி உவ்வே...சைனீஸ் அஜ்னமோட்டோ வாசம்.மாத்தி ஏதாவது சொல்லுங்க.

வில்லன் said...

//ஏன் 2012 டிசம்பர் 21 தான் காரணமா? அப்படின்னாரு ஏன் அந்த தேதிக்கு என்ன ஆச்சு.அதுக்கு அவரு மாயன் காலண்டர் படி உலகம் அழியப்போகுது நான் முழுமையா நம்புறேன்//

நானும் கேள்விபட்டேன் எதோ 2012 டிசம்பர் 21 உலகம் அழியப்போகுதுன்னு. எங்க வீட்டு தங்கமணி எதோ டிவில பதங்கலம். ஒடனே போன் போட்டு அப்டேட் (நான் மீடிங்க்ள இருக்கேன்னு சொல்லியும் கூட).

வில்லன் said...

// thevanmayam said...
என் அறிவியல் பதிவு
பற்றி
அறிவுரை
வழங்க வருக..//

எங்களுக்கு அறிவியல் அறிவு கொஞ்சம் கம்மி. மிகை படுத்திட்டு வரோம் உங்க கடைக்கு.

வில்லன் said...

@@!! நசரேயன் said...
/*பழமைபேசி said...
//நான் சீக்கிரம் இந்தியா போயி செட்டில் ஆகப்போறேன் அப்படின்னேன்.
//

நானுந்தாண்ணே!
*/
நானுந்தாண்ணே! @@!!

நானுந்தாண்ணே!

வில்லன் said...

// வேத்தியன் said...
//குடுகுடுப்பை said...
ஒரு பத்து பொண்ணுக்கு லைன் போடுங்க.2012 சொல்லி//

ஆகட்டும் ஐயா...
நாளைக்கே தொடங்குறேனுங்க...//

யோவ் குடுகுடுப்பை, எப்ப தொழில மாதிநீறு. சொல்லவே இல்லையே. பொட்டி தட்டுறத விட்டாச்சா அப்ப.

வில்லன் said...

// புதியவன் said...
//வருங்கால முதல்வர் said...
நசரேயன் said...

எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

//

நீங்களூம் சும்மாதானே இருக்கீங்க//

இது கலக்கல்...//

அதுக்காக தலைவர உங்க வீட்டுக்கு கொண்டுபோய் வச்சுக்க போறிங்களா!!!!! சோறு போட்டு கட்டுபுடி ஆகாது. பாத்து.

வில்லன் said...

//வேலை பார்த்த, என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தெலுகுப்பெண்//

வாட் டூ யு மீன்!!!!!!!!!!!!!!! நெஞ்களும் நசரேயன் மாதிரி தானா ச!!!!!!!!

வில்லன் said...

// RAMYA said...
//
நசரேயன் said...
எங்க வீட்டுல நாலு சேர் சும்மா தன் இருக்கு வேணுமா?

//

ம்ம்ம் அது வேணாம் ஏன்னா
ஏற்கனவே ஆணி பிடுங்கியாச்சு

அது காயலான் கடையிலே கொண்டு போடுங்க!!!//


வெளில குப்பைக்கு வச்சாரு. குப்பைகாரன் எடுக்க மாட்டேன்னுட்டான். அதனால மறுபடியும் வீட்டுல மூலைல இருக்கு. குப்பைகாரன் எடுகதத யாருடயாவது தள்ளிவிட முயற்சி பண்ணுறாரு தலைவர். ஏமாந்துராதிங்க

Anonymous said...

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட். நன்றி

தாரணி பிரியா said...

பதிவோட ஆரம்பத்துல சிரிக்க ஆரம்பிச்சது பின்னூட்டம் வரைக்கும் சிரிச்சுட்டே இருக்கேன்

அதுவும் ஸ்டிக்கர் ஒட்டினது சூப்பர்


சூப்பர் குடுகுடுப்பையாரே

TamilBloggersUnit said...

நல்ல பதிவு நண்பரே!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நாளானா மாதிரி இருக்கு இந்த மாதிரி ஒரு பதிவ உங்ககிட்ட இருந்து நான் படிச்சு

நல்லா சிரிச்சேன்