Monday, October 27, 2008

தங்கமணியுடன் சிகாகோவிலிருந்து நயாகரா அருவி வரை --

கல்யாணம் ஆன புதுசு, கல்யாணம் ஆன உடனே சண்டையெல்லாம் ஆரம்பிகிறதுக்கு முன்னாடி நயாகரா அருவி போகனுங்கிற எழுதப்படாத விதிப்படி, நாங்களும் நயாகராவுக்கு தயார்.

தங்கமணி வழக்கம் போல அவருக்கு ரோட்டு கடை பர்கர் எல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டு, உங்களுக்கு எத்தனை இட்லி வேணும்,தக்காளி சட்னியா , தேங்காய் சட்னி வேணுமா? புளி சாதமும் கட்டி எடுதுக்குவமா அப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்டு,கடைசில கிடைச்ச ரெண்டு பதில்ல ஒன்னான சாப்பாடு கட்டரதில்ல அப்படிங்கற முடிவோட. மேப்ப எடுத்துக்கிட்டு, காலைல அஞ்சு மணி வாக்குல கார்ல ஏறியாச்சு, 9 மணி நேரம் உத்தேச பயணம்.

சாம்பர்க்லேர்ந்து ஹைவே 90 பிடிச்சு 90 மைல் வேகத்தில சிகாகோ தாண்டி ஹைவே 94 அ பிடிச்சாச்சு.

ஏங்க எனக்கு பசிக்குது இப்ப இட்லி எடுத்துட்டு வந்து இருந்தா நான் கார்லேயே சாப்பிட்டே வருவேன்ல.

சரி விடு அடுத்த எக்ஸிட்ல ஒரு மெக்டோனால்டுல உனக்கு பிடிச்ச ஹேஷ்பிரவுனும் , ஒரு ஆம்லெட் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டிட்டு போவோம்.

ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு 10 மணி வாக்கில டெட்ராய்ட் வந்தாச்சு,

இப்ப ஹைவே 94 லேர்ந்து புது ரோடு எடுக்கனும் போல என்ன ரோடுன்னு பாத்து சொல்லு.

take the provincial route 401 thro Ambassador Bridge St

சரி,

கிட்ட போயாச்சு, ஆகா இது கனடா வழியா இல்ல போகுது.

கனடா போகனும்னா H1 ல இருக்கிறதுனால பாஸ்போர்ட்,விசாவெல்லாம் தெவையாச்சே?

பாஸ்போர்ட் எடுத்துட்டு வந்தமா என்ன?

இல்ல , வரும்போதே மேப்ப படிக்க மாட்டீங்களா?

படிக்கல, நான் கனடா வழியா போகும்னு நெனச்சு கூட பாக்கல

இப்ப என்ன பண்ணலாம்.

சரி அந்த கேஸ் ஸ்டேசன்லெ விசாரிக்கலாம்னு போனோப்ப ஒரு டிரக் டிரைவர் வந்தாரு, நாங்க பேசிட்டு இருக்கிறது கேட்டுட்டு நான் வழி சொல்றேன் சொன்னாரு.

இப்படியே இந்த நம்பர் ரோட்டை(சரியா ஞாபகம் இல்ல) பிடிச்சு கனெக்டிக்கெட் பக்கமா ஹைவே 95 ஐ பிடிச்சு அப்படியே ஹைவே 90 பிடிச்சு நியூயார்க் வழியா நயாக்ரா போயிடலாம் , 25 மணி நேரமாவது குறைச்சலா ஆகும்னாரு.

ஆனா நெறயா டோல் பே பண்ணனும் வேணும்னா டோல் அவாய்ட் பண்ற மாதிரி ரோடு சொல்லட்டுமான்னாரு.

ஒரு பேப்பர்ல எழுதியெல்லாம் குடுத்தாரு.

எப்படி 25 மணு நேரம் ஓட்டறது. வீட்டுக்கு திரும்பி போயிடலாமா?சரி எதுக்கும் இன்னோரு வாட்டி கடையில பேசுவோம்னு உள்ள போனப்ப அட்லஸ் கண்ணுல பட்டுச்சு, $5 கொடுத்து வாங்கி பாத்தேன்.

ஹைவே 90 ய பிடிக்க 75 மைல்ல இருக்க டொலிடோ,ஒஹாயோ போயிட்டா பொதும். அப்புறம் நயாகரா போயிடலாம்.
நல்லவேளயா டிரக் டிரைவர் லொடுக்கு பாண்டி சொன்ன ரூட்ல போகல.போயிருந்தா நெனச்சு பாருங்க இத்த ஒத்தை டிரைவர அதுவும் தங்கமணியோட.

ஒருவழியா 2 மணி நேரம் கூடுதலா ட்ரைவ் பண்ணி அன்னைக்கு சாயந்திரமே நயாகரா அருவி போய் ஒரு இண்டியன் ரெஸ்டாரண்ட்லெ சாப்பிட்டு , என்னங்க சாப்பாடு நல்லாவே இல்லன்னு சொன்னதுக்கபுறம்தான் தங்கமணிக்கு திருப்தி.

பி:கு : 2002 ல் ஜிபிஸ் இருந்தாலும் எனக்கு தெரிந்திருக்காது.

42 comments:

ILA (a) இளா said...

ஆகா

மொக்கைச்சாமி said...

நயாகரா கொஞ்சம் உஷாரா போகணும். கொஞ்சம் தப்பினாலும், கனேடியன் பார்டர் வாசல்ல "பே"ன்னு நிக்கணும்.

நசரேயன் said...

நீங்க காருல போனியாலா இல்ல கட்ட வண்டியா?

கயல்விழி said...

:) ரொம்ப நல்லா இருந்தது

//என்னங்க சாப்பாடு நல்லாவே இல்லன்னு சொன்னதுக்கபுறம்தான் தங்கமணிக்கு திருப்தி.//
:) :)

புதுசா வந்தவங்களுக்கு(சாப்பாடு கட்டுவதால் புதுசா வந்தவர்களாக தான் இருக்கனும்) கஷ்டமே இந்த சாப்பாடுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

பழமைபேசி said...

நம்பளுக்கு இந்த நயாகரான்னாலே ஒரு ஒவ்வாமை.... டொரன்டோவில வேற இருந்தமா, வாறவன் போறவன் எல்லாம் வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லி.... கொடுமைடா சாமி!

வல்லிசிம்ஹன் said...

நீங்க ஷாம்பர்கிலயா இருக்கீங்க.
நாங்க நேப்பர்வில்.
தெரியாமப் போச்சே.

எப்படியோ நயகரா முழுத் தொலைவும் காரில ஒரே நாள்ள போறது அசதிதான்.

துளசி கோபால் said...

உண்மையைச் சொன்ன தங்கமணியை ஏன் இப்படிக் கோச்சுக்கறீங்க????

உலகெங்கும் 'இண்டியன் ரெஸ்டாரெண்டு'கள் இப்படித்தான் 'ச்சீ'ன்னு இருக்கு.

அதுக்காக ஊர் ஊருக்கு சரவணபவன் வேணுமுன்னா எப்படி? ஹூம்......

நசரேயன் said...

ஒ.. அப்ப நீங்க சிகாகோவில்தான் மாடு மேய்கிறீர்களா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ila

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி மொக்கைச்சாமி

// நயாகரா கொஞ்சம் உஷாரா போகணும். கொஞ்சம் தப்பினாலும், கனேடியன் பார்டர் வாசல்ல "பே"ன்னு நிக்கணும்.//

அப்படிதான் ஆச்சு. நல்ல வேளை 2 மணி நேரத்தில டொலிடோ இருந்தது

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நசரேயன்

// நீங்க காருல போனியாலா இல்ல கட்ட வண்டியா?//

மாடு இல்ல அதுனால காருலதான் போனோம்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
கயல்விழி

:) ரொம்ப நல்லா இருந்தது

//என்னங்க சாப்பாடு நல்லாவே இல்லன்னு சொன்னதுக்கபுறம்தான் தங்கமணிக்கு திருப்தி.//
:) :)

புதுசா வந்தவங்களுக்கு(சாப்பாடு கட்டுவதால் புதுசா வந்தவர்களாக தான் இருக்கனும்) கஷ்டமே இந்த சாப்பாடுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

எப்பவுமே இட்லி மேல உள்ள பாசம். :)

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி

//நம்பளுக்கு இந்த நயாகரான்னாலே ஒரு ஒவ்வாமை.... டொரன்டோவில வேற இருந்தமா, வாறவன் போறவன் எல்லாம் வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லி.... கொடுமைடா சாமி//

கனடா பக்கம் நயாகரா அருவி நீர் விழும் இடத்தை வருக வருக என்று தமிழில் வரவேற்று எழுதியிருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இந்த புரளி உண்மையா?

குடுகுடுப்பை said...

வாங்க வல்லிசிம்ஹன்

//நீங்க ஷாம்பர்கிலயா இருக்கீங்க.
நாங்க நேப்பர்வில்.
தெரியாமப் போச்சே.

எப்படியோ நயகரா முழுத் தொலைவும் காரில ஒரே நாள்ள போறது அசதிதான்.//

5 வருடம் அங்கதான் இருந்தேன், லைல் லூசண்ட் ல 2 வருடம் போல வேல பாத்திருக்கேன். இப்போ டாலஸ்ல இருக்கேன்.


ஆமா ரொம்ப அசதிதான்.

குடுகுடுப்பை said...

வாங்க துளசி கோபால்

//உண்மையைச் சொன்ன தங்கமணியை ஏன் இப்படிக் கோச்சுக்கறீங்க????//

உலகெங்கும் 'இண்டியன் ரெஸ்டாரெண்டு'கள் இப்படித்தான் 'ச்சீ'ன்னு இருக்கு.

இததான் தங்கமணி மூலமா சொன்னேன். தங்கமணி மேல கோபம் எல்லாம் இல்ல டீச்சர்.

// அதுக்காக ஊர் ஊருக்கு சரவணபவன் வேணுமுன்னா எப்படி? ஹூம்//

நாக்கு ஊறுதே

பழமைபேசி said...

//வாங்க பழமைபேசி

//நம்பளுக்கு இந்த நயாகரான்னாலே ஒரு ஒவ்வாமை.... டொரன்டோவில வேற இருந்தமா, வாறவன் போறவன் எல்லாம் வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லி.... கொடுமைடா சாமி//

கனடா பக்கம் நயாகரா அருவி நீர் விழும் இடத்தை வருக வருக என்று தமிழில் வரவேற்று எழுதியிருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இந்த புரளி உண்மையா?//

அண்ணே, அங்க தமிழ்ல இது மட்டும் இல்ல, இனியும் நிறைய சொல்லும்படியா இருக்கு. விமானநிலையத்துல இறங்கின உடனே, தமிழ் வழிகாட்டி, தமிழ் குடியேற்றக் குறிப்புன்னு சகலதும் தமிழ்ல இருக்கு. தமிழ் ஓட்டுனர் தேர்வு இப்படி நிறைய.

குடுகுடுப்பை said...

//நசரேயன் said...

ஒ.. அப்ப நீங்க சிகாகோவில்தான் மாடு மேய்கிறீர்களா//

இப்ப மாடும் மாடு சார்ந்த மாகணத்தில்.

தமிழ் அமுதன் said...

இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லி
இருக்கலாம்.டக்குன்னு முடிசிட்டிங்க!

அதோட போகும்போது ''டைகர் ரைஸ்''
கொஞ்சம் கொண்டு போய் இருக்கலாம்!


டைகர் ரைஸ் =புளி சாதம்

கயல்விழி said...

//அதோட போகும்போது ''டைகர் ரைஸ்''
கொஞ்சம் கொண்டு போய் இருக்கலாம்!//

டைகர் ரைஸ்?

இது நல்லா இருக்கே :)

துளசி கோபால் said...

எங்க வீட்டுலே இதுக்கு டைகர் பாம் ன்னு பெயர்:-)

மகள் குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் சொல்லுவாள்.

எங்க வீட்டுப் பழக்கச் சொல்,

பாம்= சாதம்:-)

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

தருமி said...
இப்படித்தாங்க நானும் நயாகரா போகும்போது ...

ம்ம்..ம்.. சரி, சரி அத உடுங்க ...


அமெரிக்காகாரவுகளா பேசிக்கிட்டு இருக்கிற இடத்தில எனக்கு என்ன வேலை ..!

வெண்பூ said...

கனடா விசா வாங்கியிருக்கலாமே! ஒரு ஆளுக்கு 65 டாலர்தான் (சிங்கிள் என்ட்ரி). எந்த கேள்வியும் இல்லாம ஈஸியா கெடச்சுடும். ஆனா அமெரிக்காவில் இருந்து ஆறுமாசம் எத்தனை தடவை வேணும்னா போயிட்டு வரலாம். நயாகராவிலிருந்து 2 மணிநேரத்துல ரொரொன்டோ போயிடலாம். மற்ற இடங்களும் நல்லாத்தான் இருக்கும். இப்ப அதுக்கான கரெக்டான சீசன் கிடையாது. கனடாவில வின்ட்டர் அமெரிக்காவைவிட மோசமா இருக்கும். அதனால அடுத்த சம்மர்ல டிரை(வ்) பண்ணுங்க..

வெண்பூ said...

நாங்க பஃபல்லோல இருந்ததாலயும், கனடா விசா இருந்ததாலயும் போதும் போதும்ன்ற அளவுக்கு நயாகராவை பாத்தாச்சி.. (நயாகரா கனடா சைடில இருந்து பாக்குறதுதான் அழகா இருக்கும்).. வீக் எண்ட்ல போர் அடிச்சா காரை எடுத்து ஒரு அழுத்து, அரை மணிநேரத்துல ஃபால்ஸ்ல இருக்கலாம்.. :))

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆகா

ஆகா


ஆகா


ஆகா

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் 25

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்
/
இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லி
இருக்கலாம்.டக்குன்னு முடிசிட்டிங்க!/

ஆரம்பத்தில டெட்ராய்ட்ல டவுசர் பாண்டி அப்படிதான் எழுதலாம் நு இருந்தேன். அப்புறம் தங்கமணிய கதையில சேத்தேன்.வரும் காலங்களில் கதையை சுவராசியம் ஆக்க முயற்சி செய்கிறேன்.

அதிகம் சொல்லப்போய் பி.வாசு மாதிரி ஆயிருச்சுன்னா என்ன பண்றது கவலை வேற இருக்குங்கோ:)

அதோட போகும்போது ''டைகர் ரைஸ்''
கொஞ்சம் கொண்டு போய் இருக்கலாம்!

டைகர் ரைஸ் =புளி சாதம்//

//

அதுக்கு பயந்துதான் எடுப்பு சாப்பாடே வெண்டாம்கிறது

குடுகுடுப்பை said...

வாங்க தருமி அய்யா

தருமி said...
இப்படித்தாங்க நானும் நயாகரா போகும்போது ...

ம்ம்..ம்.. சரி, சரி அத உடுங்க ...


அமெரிக்காகாரவுகளா பேசிக்கிட்டு இருக்கிற இடத்தில எனக்கு என்ன வேலை ..!//

என்னதான் இருந்தாலும் மதுரைக்கு ஈடாகுமா? மதுரைல எனக்கு நெறய அனுபவம் இருக்கு. கல்லூரி சாலை அப்படின்னு விரைவில் வரும்

குடுகுடுப்பை said...

வாங்க வெண்பூ

// கனடா விசா வாங்கியிருக்கலாமே! ஒரு ஆளுக்கு 65 டாலர்தான் (சிங்கிள் என்ட்ரி). எந்த கேள்வியும் இல்லாம ஈஸியா கெடச்சுடும். ஆனா அமெரிக்காவில் இருந்து ஆறுமாசம் எத்தனை தடவை வேணும்னா போயிட்டு வரலாம். நயாகராவிலிருந்து 2 மணிநேரத்துல ரொரொன்டோ போயிடலாம். மற்ற இடங்களும் நல்லாத்தான் இருக்கும். இப்ப அதுக்கான கரெக்டான சீசன் கிடையாது. கனடாவில வின்ட்டர் அமெரிக்காவைவிட மோசமா இருக்கும். அதனால அடுத்த சம்மர்ல டிரை(வ்) பண்ணுங்க..//

பாஸ்போர்ட் எடுத்துட்டி போகலியே.

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா
ஆகா


ஆகா


ஆகா வந்துட்டாரு அண்ணன்

நாநா said...

ஆமா தங்கமணி இந்த பதிவ படிச்சாங்களா?

குடுகுடுப்பை said...

நாநா said...

ஆமா தங்கமணி இந்த பதிவ படிச்சாங்களா?

படிப்பாங்க

RAMYA said...

குடுகுடுப்பையரே!!

ஜீவன் என்ற நண்பருக்கு ரொம்ப குறும்பு, டைகர் சாதம் எல்லாம் ஐடியா கொடுக்கிறார். ஒன்று மட்டும் நிச்சயம் நிஜமாகவே நயாகரா விற்கு சென்ற களைப்பு உடம்பிற்கும், பார்த்த சந்தோசம் மனதிற்கும் இதமாக இருந்தது. ம்ம்ம் ரொம்ப சந்தோசம் நீங்க ரொம்ப தூரம் டிரைவ் பண்ணிணதிற்கு. தங்கமணி படிப்பார்கள் என்று நம்புகிறேன். இருங்க கரண்டியாலே அடி பின்ன போறாங்க.

ரம்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

புளி சாதமும் கட்டி எடுதுக்குவமா அப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்டு,கடைசில கிடைச்ச ரெண்டு பதில்ல ஒன்னான சாப்பாடு கட்டரதில்ல

எப்படியிருந்தாலும் சாப்பாடு நீங்கதான் செஞ்ஜாகனும்னு தப்பிக்க இப்படி ஒரு பதில் சொல்லீட்டீங்க.

சரியான்னா.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி RAMYA
// குடுகுடுப்பையரே!!

ஜீவன் என்ற நண்பருக்கு ரொம்ப குறும்பு, டைகர் சாதம் எல்லாம் ஐடியா கொடுக்கிறார். ஒன்று மட்டும் நிச்சயம் நிஜமாகவே நயாகரா விற்கு சென்ற களைப்பு உடம்பிற்கும், பார்த்த சந்தோசம் மனதிற்கும் இதமாக இருந்தது. ம்ம்ம் ரொம்ப சந்தோசம் நீங்க ரொம்ப தூரம் டிரைவ் பண்ணிணதிற்கு. தங்கமணி படிப்பார்கள் என்று நம்புகிறேன். இருங்க கரண்டியாலே அடி பின்ன போறாங்க.

ரம்யா
//

:)

குடுகுடுப்பை said...

வாங்க AMIRDHAVARSHINI AMMA

// புளி சாதமும் கட்டி எடுதுக்குவமா அப்படின்னு ஆயிரம் கேள்வி கேட்டு,கடைசில கிடைச்ச ரெண்டு பதில்ல ஒன்னான சாப்பாடு கட்டரதில்ல

எப்படியிருந்தாலும் சாப்பாடு நீங்கதான் செஞ்ஜாகனும்னு தப்பிக்க இப்படி ஒரு பதில் சொல்லீட்டீங்க.

சரியான்னா.//

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுக்குபோய் என்ன சிரிப்பு. உண்மைய ஒத்துக்கவேண்டியதுதானே

ICE BRIYANI = தண்ணிசாதம் (பழையது)

மன்மதக்குஞ்சு said...

தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தொடரட்டும்.

Anonymous said...

எப்படிங்க இதெல்லாம்.என்னதான் நல்ல ரோடு, நல்ல வண்டி என்றாலும், 11 மணி நேரம் வண்டியிலே உட்கார்ந்து போறதே ரொம்ப கஷ்டம், இதுல 11 மணி நேரம் வண்டி ஓட்டினீங்கன்னா... தெய்வமே.. பெரிய ஆள்தான் நீங்க..

Anonymous said...

"கனடா பக்கம் நயாகரா அருவி நீர் விழும் இடத்தை வருக வருக என்று தமிழில் வரவேற்று எழுதியிருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன், இந்த புரளி உண்மையா?"

நான் பார்த்தவரை அங்கே தமிழில் போர்டு இல்லை, இது வெறும் புருட, இங்கு நிறைய இலங்கை தமிழர் அகதிகளாக வருவதால் பெரும்பாலும் இவர்களுக்கு அங்கிலம் தெரியாததால் ஏர்போர்டில் Information booklets தமிழில் வைத்துள்ளனர் இது கிட்டதட்ட 24 மொழியில் இருக்கிறது

Anonymous said...

...ஆனால் Torontoவில் சங்கானை சந்தை, யாழ் சந்தைன்னு நிறைய உண்டு சந்தைனா நீங்க நம்ம ஊரில் மாடு கட்டி விற்பாகளே அது மாதிரி நினசிடதிங்க நாம்ம ஊரு முருகன் ஸ்டோர் மாதிரி கடைக்கு அப்பிடித்தான் இலங்கை தமிழர் பெயர் வைகிறாங்க மற்றபடி தமிழ் FM தமிழ் பேப்பர் ன்னு நிறையுண்டு. இந்த புரளி வந்திருக்கும் வாய்ப்பு NIAGRA கனடா-அமெரிக்கா பாடர் என்பதால் இந்த PORT OF ENTRY IL நிறைய இலங்கை தமிழர் நுழைவார்கள் அங்கே உள்ள Immigration ஆபீஸ்ல் "புதிதாக கனடாவிற்கு குடிபெயபவர்களே வருக" என்று அங்குள்ள information booklet stand il பார்த்திருக்கிறேன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ராகவன், மன்மதன் மற்றும் அனானி