Tuesday, October 14, 2008

சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)

அழைத்த துக்ளக் மகேஷ்க்கு நன்றி

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது சரியாக ஞாபகம் இல்லை, என் தாத்தா வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம், என்னையும் என் சித்தி மகனையும் என்னுடைய சின்ன சித்தி இரண்டு படத்திற்கு ஒரே நாளில் கூட்டிச்சென்றார். முதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா? படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம், தங்கமணியும்,பாப்பாவும் இந்தியா வந்துட்டாங்க, தனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேட்டையாடு விளையாடு, நல்லாதான் இருந்துச்சு, இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

குருவி,சிட்டிசன்,கேப்டன்,வால்டர் வெற்றிவேல் இன்னும் சில தெலுங்கு டப்பிங் படங்கள். ஆனாலும் குருவி தாக்கிய அளவிற்கு இனிமேலும் யாரும் தாக்குவார்களா என்று தெரியல.


மிகவும் பாதிச்ச படம்னா - தேவர்மகன் , இந்தப்படத்தில சிவாஜியுடைய நடிப்பு பாதித்தது.கமல் தேவர் இன மக்களின் தவறுகளை வஞ்சப்புகழ்ச்சியா காண்பித்த படம். சண்டை போடுவதை விட்டுவிட்டு திருந்த சொல்லி எடுத்த படம்.இந்த படத்தை பார்க்க இராமநாதபுரம் தங்கம் தியேட்டருக்கு தேவர் இன மக்கள் கைத்தடி போன்ற ஆயுதங்களோடு வந்து பார்த்தார்கள். படத்தின் கருத்து ஈர்த்ததோ இல்லையோ ஆனால் தலைப்பு ஈர்த்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.

எம்ஜியார் என்ற மந்திரச்சொல். எங்கள் ஊரில் உள்ள ஒரு விவாசாயக் கூலி ஒருவரின் ஆறு அல்லது ஏழு வயது மகன் தன்னுடைய 3 அல்லது 4 மாத தம்பியை 'எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு' என்று கொஞ்சுவார். அப்போது கோபம் வரும். இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அவ்வளவாக் எனக்கு இதில் அறிவு இல்லை.

வல்லரசு போன்ற படங்களில் விஜயகாந்த் போடும் தொழில் நுட்பம் மிகுந்த சண்டைக்காட்சிகள் மிகவும் தாக்கியது.:)

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு தேவை என்ற அளவில் உறுத்தாமல் இருந்த குள்ள கமல்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எல்லா கருமத்தையும் படிப்பது உண்டு. இப்போ தமிழ்மணம் என்னை பாதித்த காரணத்தால் நிறைய கிசுகிசுக்கள் தெரிவதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவா சினிமா அதிகம் பார்ப்பதில்லை. தாக்கிய ஆங்கில படம். மேட்ரிக்ஸ் 2, சத்தம் தாங்க முடியாமல் பாதியோட ஓட்டம்.

தாரே ஜமீன் பர் - நல்ல படம் , என் மகள் படத்தின் இரண்டாவது பாதியை நிறைய முறை பார்த்தார். என் மகள் கேட்ட கேள்வி ஏன் பெண் மாணவர்களே இல்லை? இந்த கேள்வியை யாராவது அமீர்கானிடம் கேட்டு சொல்லுங்கள்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டிப்பாக இல்லை. ஒருவீளை இருந்திருந்தால் என் நீண்ட கால ஆசைக்கு உதவியாக இருந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படம் பாக்கிறது ரொம்ப குறைவு, ஆனாலும் உலகமயமாக்கள் பெரிய செலவில் வெளிநாட்டுப்படங்களை போன்று காப்பி அடிக்க உதவும். ஆனாலும் நல்ல படங்கள் வரும். என்னைவிட என் சந்ததி அறிவாளிகள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், அடுத்து சினிமா நாடகம் வரும்வரை நான் உட்பட.


இப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க

அது சரி
நசரேயன்
அமிர்தவர்ஷினி
தமிழ் சினிமா
ஜீவன்

23 comments:

பழமைபேசி said...

குடுகுடுப்பையார், ரொம்ப சுறுசுறுப்புன்னு தெரியுது. காலைல கொக்கி! மாலைல பதிவு!! கலக்குங்க!!!

அது சரி said...

நான் வந்துட்டேன்!

நசரேயன் said...

கேள்வியும் நீங்க பதிலும் நீங்களா?
கேள்வி நீங்க பதில் நாங்களா?
கேள்வி நாங்க பதில் நீங்களா?
எப்படி என் கொக்கி? :):):)

நசரேயன் said...

நானும் கொக்கியை போட்டாச்சு

அது சரி said...

//
முதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா? படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.
//

சங்கே மொழங்கா? அப்ப குடுகுடுப்பை அங்க இருந்து தான் வந்திச்சா? அப்பலயிருந்து சங்கையும் விட்றதில்ல, குடுகுடுப்பையையும் விட்றதில்ல போல!

அது சரி said...

//
என்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.
//

உங்களப் பாத்து எனக்கு பயமாயிருக்கு! ஒரு "துணை மொதல்வரு" பதவியாவது குடுங்க தலைவா.. இல்லீனா, பொதுப்பணித் துறைய கொடுங்க!

அது சரி said...

//
இப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க

அது சரி
நசரேயன்
அமிர்தவர்ஷினி
தமிழ் சினிமா
ஜீவன்
//

எவ்வளவு நாளா இந்த சதித் திட்டம்? :)

சரி, நம்மளையும் மதிச்சி எதுனா கருத்து சொல்லுபான்னு சொல்லிருக்கீங்க.. இன்னிக்கி நேரமாயிடுச்சி.. அதனால, நாளைக்கு எழுதறேனே!

Mahesh said...

சொன்ன ஒடனே எழுதினதுக்கு நன்றி.... நல்லாவே இருக்கு !!

அமிர்தவர்ஷினி அம்மா said...

short & sweet ஆ எழுதிட்டீங்க. நெஜம்மா நான் கொஞ்சம் சிரிக்கலாம்னு நெனைச்சுதான் வந்தேன்.

ஆனா அழுதுட்டேன். என்னிய கோத்துவுட்டுடீங்க இல்ல.

தமிழ் அமுதன் said...

நல்லாத்தான் எழுதி இருகீங்க!

இப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க

அது சரி
நசரேயன்
அமிர்தவர்ஷினி
தமிழ் சினிமா
ஜீவன்

என்னையும்,கூப்பிட்டதுக்கு நன்றி!!

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருக்குது

http://urupudaathathu.blogspot.com/ said...

தனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.///

:-)))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அது சரி
/
உங்களப் பாத்து எனக்கு பயமாயிருக்கு! ஒரு "துணை மொதல்வரு" பதவியாவது குடுங்க தலைவா.. இல்லீனா, பொதுப்பணித் துறைய கொடுங்க!
/
உங்களுக்கும் ஓட்டுரிமை இல்லயா, அப்ப கண்டிப்பா உண்டு

http://urupudaathathu.blogspot.com/ said...

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், ///

இப்படி ஒரு நல்லது நடந்தா, அந்த காலம் சீக்கிரம் வரட்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.////

உண்மைய சொல்லுங்க, அவங்க அடி வாங்கிருப்பாங்க, நீங்க தப்பிச்சு இருப்பீங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நசரேயன்.
//கேள்வியும் நீங்க பதிலும் நீங்களா?
கேள்வி நீங்க பதில் நாங்களா?
கேள்வி நாங்க பதில் நீங்களா?
எப்படி என் கொக்கி? :):):)//

கூப்புடுரா விசயகாந்த

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி மகேஷ்,

// சொன்ன ஒடனே எழுதினதுக்கு நன்றி.... நல்லாவே இருக்கு !!//

நன்றிங்க நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு:)

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி AMIRDHAVARSHINI AMMA

// short & sweet ஆ எழுதிட்டீங்க. நெஜம்மா நான் கொஞ்சம் சிரிக்கலாம்னு நெனைச்சுதான் வந்தேன்.//

சிரிக்கமுடியலயா. ஏன் என்ன ஆச்சு.

// ஆனா அழுதுட்டேன். என்னிய கோத்துவுட்டுடீங்க இல்ல.//
உங்க ரங்கமணிய எழுத சொல்லிருங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஜீவன்

//நல்லாத்தான் எழுதி இருக்கீங்க!//
உண்மையாவா? இல்ல ஊர்ப்பாசமா?

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா

//படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.////

உண்மைய சொல்லுங்க, அவங்க அடி வாங்கிருப்பாங்க, நீங்க தப்பிச்சு இருப்பீங்க//

இல்லங்க சித்திக்கு கல்யாணம் ஆன புதுசு, அதுனால அடி எங்களுக்குதான்

குடுகுடுப்பை said...

அணிமா சொன்னது
//இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், ///

இப்படி ஒரு நல்லது நடந்தா, அந்த காலம் சீக்கிரம் வரட்டும்//

நல்ல காலம் பொறக்கனும் அது தான் நம்ம ஆதங்கம்

Anonymous said...

//என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.//

ஒரு முடிவோடு தான் இருக்கீங்களோ! என்ன என்ன திட்டம் வச்சி இருக்கீங்க. அதை சொல்லுங்க பர்ஸ்ட்டு. மத்ததெல்லாம் நெக்ஸ்டு

குடுகுடுப்பை said...

வாங்க pathivu

//என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.//

ஒரு முடிவோடு தான் இருக்கீங்களோ! என்ன என்ன திட்டம் வச்சி இருக்கீங்க. அதை சொல்லுங்க பர்ஸ்ட்டு. மத்ததெல்லாம் நெக்ஸ்டு

//
சும்மா ஒரு பதிவு போட்டேன் பதிவு.