Friday, October 31, 2008

தங்கமணி ஸ்பெசல் டீ.

என்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...
டீ வேணுமா , காபியா.

டீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.

சரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க

காலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க

ம்ம்ம்
எடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..

வெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..

அது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.

வெச்சிட்டேன்.

ரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.

ம்ம்ம்ம்

பால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்

2 நிமிடம்.

1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.

சரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

உங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..

எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

டீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..

ரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..

மெதுவா கீழ கொட்டாம..

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு


பி: கு : இது ஒரு கற்பனை டீ.

36 comments:

ஆயில்யன் said...

//இது ஒரு கற்பனை டீ.//

நான் நம்பிட்டேன்ப்பா :)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஆயில்யன்

//இது ஒரு கற்பனை டீ.//

நான் நம்பிட்டேன்ப்பா :)//


உண்மையாவே கற்பனை தாங்க.

கோவி.கண்ணன் said...

//என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு
//

நாலு வார்த்தைப் பாராட்டிச் சொன்ன உடனேயே, அந்த பெருமையை ஊர் முழுக்க, உறவு முழுக்க போன் போட்டுச் சொல்லும் போது அந்த போனுக்கான பணத்தை யார் கொடுப்பது ? :)

//பி: கு : இது ஒரு கற்பனை டீ. //

:) சுவைதான் !

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்
// நாலு வார்த்தைப் பாராட்டிச் சொன்ன உடனேயே, அந்த பெருமையை ஊர் முழுக்க, உறவு முழுக்க போன் போட்டுச் சொல்லும் போது அந்த போனுக்கான பணத்தை யார் கொடுப்பது ? :)
//

அண்ணே எங்க வீடல தங்கமணிதான் அதிகம் சம்பாதிக்கறாங்க. அவங்க எதிர் பார்க்கிறது ஒரு பாராட்டு. நமக்குதான் எப்படி பாராட்டுரதுன்னு தெரியல :)

கோவி.கண்ணன் said...

//அண்ணே எங்க வீடல தங்கமணிதான் அதிகம் சம்பாதிக்கறாங்க. அவங்க எதிர் பார்க்கிறது ஒரு பாராட்டு. நமக்குதான் எப்படி பாராட்டுரதுன்னு தெரியல :)//

:)

அட, நீங்களும் நம்ம கட்சி ! இங்கேயும் வரிமாறாமல் அதே தான் !

புதுகை.அப்துல்லா said...

பி: கு : இது ஒரு கற்பனை டீ.
//

குப்புற விழுந்தேன் ஆனானானானானா மீசையில மண்ணு ஓட்டலன்னு சொல்றீங்க சரி நானும் நம்பிட்டேன்
:))))))))))))))))

சந்தனமுல்லை said...

:-))..இதே டெம்ப்ளேட் தானா, சாப்பாட்டுக்கும்?

Unknown said...

:)))))

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா ஹா ஹா ஹா ஹா

பழமைபேசி said...

அண்ணே! இது என்ன ஒப்புதல் வாக்குமூலமா? அப்படீன்னு கேக்க மாட்டேன்.

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர்...

//பி: கு : இது ஒரு கற்பனை டீ. //

இத நாங்க நம்மனுமாக்கும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கற்பனைக் கதையெல்லாம் இங்க வேணாம்.

பச்சை ஜீன்ஸ் பதிவில் சொன்ன உண்மைக்கான (?)
தண்டனை தானே இது.

சொல்லியது மௌஸ் அளவு, சொல்லாத்து கீ போர்ட் அளவா.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி புதுகை.அப்துல்லா

பி: கு : இது ஒரு கற்பனை டீ.
//

குப்புற விழுந்தேன் ஆனானானானானா மீசையில மண்ணு ஓட்டலன்னு சொல்றீங்க சரி நானும் நம்பிட்டேன்
:))))))))))))))))//

அதுக்குதான் நான் மீசையை எடுத்து பல வருடங்கள் ஆயிடுச்சு.

ஆனாலும் பின் குறிப்பு உண்மைதாங்க.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை
//

:-))..இதே டெம்ப்ளேட் தானா, சாப்பாட்டுக்கும்?

//

சமையலறை பக்கமே என்ன உட மாட்டங்க, ஏன்னா நானும் பொண்ணும் சேந்தா எந்த இடத்தையும் குப்பை ஆக்குவதில் வல்லவர்கள்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஸ்ரீமதி


வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா//

// ஹா ஹா ஹா ஹா ஹா

என்னய்யா சிரிப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாலை 2நிமிஷம் வைச்சு பொங்கவிடறவரா நீங்க சரிதான்..அதுக்கு உங்க தங்கமணி எப்படி விட்டாங்க?
(கற்பனைங்கிறதை நான் நம்பவில்லையா?என கேட்கிறீர்களா?இங்கேயும் அந்த கதைதான் அதுதான்)

கயல்விழி said...

:) :)

சுவையான தேநீர் :)

சின்னப் பையன் said...

:-)))))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி

//அண்ணே! இது என்ன ஒப்புதல் வாக்குமூலமா? அப்படீன்னு கேக்க மாட்டேன்.//

அப்படியெல்லாம் ஒன்னும் கேக்கவேண்டாம், நீங்க போயி வீட்ல சிறப்பு தேநீர் அருந்துங்கள்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நான் ஆதவன்

// சூப்பர்...

//பி: கு : இது ஒரு கற்பனை டீ. //

இத நாங்க நம்மனுமாக்கும்..
//
இந்த பின் குறிப்பை நான் போடாமலேயே விட்டிருக்கலாமோ

குடுகுடுப்பை said...

வாங்க AMIRDHAVARSHINI AMMA

// இந்தக் கற்பனைக் கதையெல்லாம் இங்க வேணாம்.
//
எதுங்க கற்பனை எல்லாமே உண்மைங்க :)
/பச்சை ஜீன்ஸ் பதிவில் சொன்ன உண்மைக்கான (?)
தண்டனை தானே இது.
சொல்லியது மௌஸ் அளவு, சொல்லாத்து கீ போர்ட் அளவா.
/
நானெல்லாம் நம்பியார் மாதிரி நலலவங்க.

குடுகுடுப்பை said...

//T.V.Radhakrishnan said...

பாலை 2நிமிஷம் வைச்சு பொங்கவிடறவரா நீங்க சரிதான்..அதுக்கு உங்க தங்கமணி எப்படி விட்டாங்க?
(கற்பனைங்கிறதை நான் நம்பவில்லையா?என கேட்கிறீர்களா?இங்கேயும் அந்த கதைதான் அதுதான்)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிவீஆர்.

அப்படி போடுங்க அருவாள

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கயல்விழி

:) :)

// சுவையான தேநீர் :)//

வருணுக்கும் போட்டுக்கொடுங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

நசரேயன் said...

கற்பனை டீ ரெம்ப ஸ்ட்ராங்

குடுகுடுப்பை said...

நன்றி நசரேயன்

//கற்பனை டீ ரெம்ப ஸ்ட்ராங்//

உங்களுக்கு மட்டும் தான் கனவில தென்படுமா என்னா?

அது சரி said...

கற்பனைன்னு கற்பனை பண்ணி சொன்னா, அதையெல்லாம் நம்ப நாங்க என்ன கற்பனைலயா மெதக்குறோம்?

அத விடுங்க.. பாத்திரத்தை எடுங்க..அடுப்ப ஆன் பண்ணுங்க..தண்ணி ஊத்துங்க...பால் வைங்க...

இப்பிடி ஒண்ணு ஒண்ணா சொன்னாதான் நீங்க செய்வீங்களோ?? ரொம்ப ஸ்லோவா இருக்கே?

ஒழுங்கா ஒரு டீ போடுறதுக்கே இம்புட்டு நேரம் ஆச்சின்னா, நீரு எல்லாம் எப்பிடி சுண்ட கஞ்சி காச்சி...என்னத்த சொல்றது..

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

/ கற்பனைன்னு கற்பனை பண்ணி சொன்னா, அதையெல்லாம் நம்ப நாங்க என்ன கற்பனைலயா மெதக்குறோம்?//

யாருமே என்னுடைய பி:கு வை நம்பல என் தங்கமணி உட்பட :)

வெண்பூ said...

என்னமோ போங்க.. இவ்ளோ கஷ்டப்பட்டு அவங்க டீ போட்டு தந்தா பாராட்டகூட மனசில்லாத ஆணியவாதி (ஆணி இல்லைங்க ஆண் + இயல் + வாதி) குடுகுடுப்பைக்கு எதிராக பெண்ணியவாதிகள் சங்கம் ஆட்டோ அனுப்ப உள்ளதாக தெரிகிறது :))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி வெண்பூ

/என்னமோ போங்க.. இவ்ளோ கஷ்டப்பட்டு அவங்க டீ போட்டு தந்தா பாராட்டகூட மனசில்லாத ஆணியவாதி (ஆணி இல்லைங்க ஆண் + இயல் + வாதி) குடுகுடுப்பைக்கு எதிராக பெண்ணியவாதிகள் சங்கம் ஆட்டோ அனுப்ப உள்ளதாக தெரிகிறது :))))//

அய்யோ ஆட்டோவெல்லாம் அனுப்பாதீங்க நான் பாவம்.

மற்றபடி இன்னக்கி டீக்கு பதிலா காபி:)

Anonymous said...

:)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்

அமுதா said...

:-))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அமுதா

ராஜ நடராஜன் said...

குடுகுடுப்பையாரே வணக்கம்.இப்பத்தான் பழம கிட்ட பழமைபேசிட்டு வாறேன்.குடுகுடுப்பையில என்ன சங்கதி சொல்றீங்கன்னு பாக்கலாமுன்னு வந்தேன்.

அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.குடுகுடுப்பையாரும்,வருங்கால முதல்வரும் ஒத்தையா ரெட்டையான்னு சொன்னீங்கன்னா பின்னூட்டம் போட வசதியாயிருக்கும்.

நான் அப்புறமா வாரேன்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன் said...

குடுகுடுப்பையாரே வணக்கம்.இப்பத்தான் பழம கிட்ட பழமைபேசிட்டு வாறேன்.குடுகுடுப்பையில என்ன சங்கதி சொல்றீங்கன்னு பாக்கலாமுன்னு வந்தேன்.

அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.குடுகுடுப்பையாரும்,வருங்கால முதல்வரும் ஒத்தையா ரெட்டையான்னு சொன்னீங்கன்னா பின்னூட்டம் போட வசதியாயிருக்கும்.

நான் அப்புறமா வாரேன்.//

ஆமாம் நாந்தான் வருங்கால முதல்வர் பிளாக் உருவாக்கினேன் இந்த பதிவுக்காக. இப்ப அப்படியே ஒரு குழவா அதுவும் நடக்க்குது, நீங்களும் கலந்துக்கங்க.விளம்பரத்துக்காக அந்த பேர்லயும் பின்னூட்டம் போடுவேன்