Thursday, October 2, 2008

வருங்கால முதல்வர் யார் ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
நாட்டாமை சரத்குமார்
நவரச நாயகன் கார்த்திக்
டாக்டர். விஜய்.
சகலகலாவல்லவன் விஜய.டி.ராஜேந்தர்.
புரட்சிப்புயல் வடிவேலு
புரட்சித்தமிழன் சத்தியராஜ்
புரட்சி நாயகி திரிசா
தாராள நாயகி நயந்தாரா
வறட்சி நாயகி சினேகா

இவங்க எல்லாம் வருங்கால முதல்வர் ஆகுறாங்களோ இல்லையோ
ஆனா நான் ஆயிட்டேன்

இதோ


இங்கே

21 comments:

செல்வ கருப்பையா said...

வருங்கால முதல்வர், புரட்சி செம்மல், மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டே யோசிப்போர் சங்கத் தலைவர் அவர்களுக்கு அகில உலக ம.ப.வி.பா.யோ எடின்பரோ கிளைக் கழகச் செயலாளர் செல்வ கருப்பையாவின் வாழ்த்துகள்.

சாரா பாலின் மாதிரி ஒரு துணை முதல்வர் கிடைக்கவும் வாழ்த்துக்கள்!

thamizhparavai said...

//அட இத பார்ரா ??

ஒ.. இப்படி கூட பதிவு போடலாமா??
தெரியாம போச்சே??
அண்ணன் முந்திகிட்டரே??//
இப்படி கூட நாங்க ரிப்பீட்டுவோம்...

thamizhparavai said...

யாருங்க அது சாரா பாலின்...?

அது சரி said...

உண்மைய சொல்றேன். உங்கள்ட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை. சில பேரு இப்பிடியெல்லாம் செய்றாங்க, நீங்க ரொம்ப நல்லவரு, அப்பிடியெல்லாம் செய்ய மாட்டீங்கன்னு நெனச்சேன்.. இப்பிடி பண்ணிட்டீங்களே!

எப்பிடிங்க, எங்க ஜே.கே.ஆர லிஸ்டுல சேக்காம விட்டீங்க?? இப்பிடி உள் கட்சி துரோகம் செய்யலாமா??

இதை நான் வன்மையாக கண்டனம் செய்கிறேன்! விரைவில் ஆட்டோவுடன் வருகிறேன்!

இவண்,

உதவி துணை பொது செயலாளர்,

அ.ஜே.மு.க.

அண்ணன் ஜே.கே.ஆர் முன்னேற்ற கழகம்,

சவுத் ஆஃப் நோவேர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல்வர் ஆக முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது..வாழ்த்துகள்

குடுகுடுப்பை said...

வருகைக்கும் பொருமைக்கும் அனைவருக்கும் நன்றி

/
உண்மைய சொல்றேன். உங்கள்ட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை. சில பேரு இப்பிடியெல்லாம் செய்றாங்க, நீங்க ரொம்ப நல்லவரு, அப்பிடியெல்லாம் செய்ய மாட்டீங்கன்னு நெனச்சேன்.. இப்பிடி பண்ணிட்டீங்களே!
/

இத நானே எதிர்பார்க்கல. எல்லாம் இந்த டவ் ஜோன்ஸ் அடிக்கிற டைவுல கடுப்பாயிதான். 2002 க்கு அப்புரம் தம் அடிகிற பழக்கமும் இல்லை அதுனால் ஏதோ ஒரு வெருப்புல இப்படி நடந்து போச்சு, அனைவரும் மன்னிக்கவும். இனிமே இப்படியெல்லாம் நடக்காது

நசரேயன் said...

உங்க பட்டியல்ல நமிதாவை சேக்காதது ரெம்ப வருந்த தக்க விஷயம்

நையாண்டி நைனா said...

இன சார்பட்ற, மொழி சார்பட்ற, மத சார்பட்ற, வயது சார்பட்ற குறிப்பாக எந்த திரை மறைவு வாழ்வும் தனக்கில்லை... எல்லாம் மக்கள் முன்னே என்று வாழ்கிற எங்கள் தலைவி, ஷகிலாவே அடுத்த முதல்வர் என்று ஆணித்தரமாக அறிவித்து... குடு... குடு.... குடு... குடு... என்று குடுகுடுப்பையை முழக்கி என் வீர உரையை முடிக்கிறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணாத்த.. பின்னூட்டம் போட்டா அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டும்..

பண்ணலனா அப்புறம் பின்னோட்டம் போட மாட்டேன்..

இது எச்சரிக்கை... அது

http://urupudaathathu.blogspot.com/ said...

வறட்சி நாயகி சினேகா ??

ஆமா இதுல எதுனா உள்குத்து இருக்கா ??

குடுகுடுப்பை said...

வாங்க கருப்பையா
//வருங்கால முதல்வர், புரட்சி செம்மல், மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டே யோசிப்போர் சங்கத் தலைவர் அவர்களுக்கு அகில உலக ம.ப.வி.பா.யோ எடின்பரோ கிளைக் கழகச் செயலாளர் செல்வ கருப்பையாவின் வாழ்த்துகள்.//

நான் உங்களையும் வருங்கால முதல்வர் ஆக்கலாமுன்னு இருக்கேன்.எல்லாத்தகிதியும் இருக்குண்ணெ

//சாரா பாலின் மாதிரி ஒரு துணை முதல்வர் கிடைக்கவும் வாழ்த்துக்கள்!//

டிபேட் பாத்தேன், அந்தம்மா ரொம்ப பேசுது. நெஜமாவே ஐஸ்வர்யா அம்மா மாதிரி தான் இருக்காங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தமிழ்பறவை,அதுசரி,டிவிஆர்

//யாருங்க அது சாரா பாலின்...?//
ஐஸ்வர்யா பச்சனோட பழைய அம்மாங்க
(துணை ஜனாதிபதி வேட்பாளாருங்க)

//முதல்வர் ஆக முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது..வாழ்த்துகள்//
வேண்டாம் அய்யா, நான் கடைசி வரைக்கும் வருங்கால முதல்வராவெ இருக்கேன்

குடுகுடுப்பை said...

வாங்க நையாண்டி நைனா
/இன சார்பட்ற, மொழி சார்பட்ற, மத சார்பட்ற, வயது சார்பட்ற குறிப்பாக எந்த திரை மறைவு வாழ்வும் தனக்கில்லை... எல்லாம் மக்கள் முன்னே என்று வாழ்கிற எங்கள் தலைவி, ஷகிலாவே அடுத்த முதல்வர் என்று ஆணித்தரமாக அறிவித்து... குடு... குடு.... குடு... குடு... என்று குடுகுடுப்பையை முழக்கி என் வீர உரையை முடிக்கிறேன்//

எனக்கு எதிரா ஆள நெறுத்திபுட்டு என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
//உங்க பட்டியல்ல நமிதாவை சேக்காதது ரெம்ப வருந்த தக்க விஷயம்//

ந்மீதாவை நீங்க சேத்துக்கங்க:)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அணிமா
//வறட்சி நாயகி சினேகா ??

ஆமா இதுல எதுனா உள்குத்து இருக்கா ??//
அப்படின்னா? சும்மா ரைமிங்பா

குடுகுடுப்பை said...

//அண்ணாத்த.. பின்னூட்டம் போட்டா அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டும்..

பண்ணலனா அப்புறம் பின்னோட்டம் போட மாட்டேன்..

இது எச்சரிக்கை... அது//

கண்ணு முழிச்சு பாருங்க, ஆட்டோல இருக்கிற்தெல்லாம் நம்ம ஆளுங்கதான்.

கொஞ்ச நாளைக்கி பதிவு கெடயாதுன்னே. கொஞ்சம் வேல அதிகம்.

பழமைபேசி said...

அண்ணே, உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு..... நடத்துங்க! நடத்துங்க!!

மோகன் காந்தி said...

வருக..வருக...வருங்கால முதல்வரே?

அது சரி said...

உங்க தென் தமிழ்னாடு பத்தின பதிவையும், இந்த பதிவையும் ஒண்ணா படிச்சி பாத்தா....


நீங்க தமிழ் நாட்டு முதல்வர் பதவி மேல ஒரு கண்ணா இருக்கா மாதிரி தெரியுது... வேணாம்..மோதாதீங்க...வடிவேலு பத்தி ஒங்களுக்கு தெரியாது..

குடுகுடுப்பை said...

//நீங்க தமிழ் நாட்டு முதல்வர் பதவி மேல ஒரு கண்ணா இருக்கா மாதிரி தெரியுது... வேணாம்..மோதாதீங்க...வடிவேலு பத்தி ஒங்களுக்கு தெரியாது.//

எனக்கு முதல்வர் பதவி ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் எப்பவுமே நிரந்தர 'வருங்கால முதல்வர்' தான்:)

இவன் said...

ஆஹா நல்லாத்தான்யா போடுறாங்க பதிவு :P