Friday, October 10, 2008

பச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன். பாகம் 2

முதல் பாகம் இங்கே

இல்லடா வேண்டாம் ஒரு 50 ரூபா குடு நாங்க திருச்சி கெளம்புறோம்.

மாப்ளே பாத்து ரொம்ப நாள் ஆச்சு, சரி காட் வேணாம் பஸ்ல வாந்தி வரும் பீர உடுவோம். அப்படியே போய் ஒரு பிரியாணிய சாப்புடுவோம்.

இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

பீர்,பிரியாணி எல்லாம் முடிஞ்சது, வீரன் புதுசா கட்டிக்கொண்டு இருக்கிற தன் வீட்டை சுத்திக்காட்டினான். இந்த வேலை முடிஞ்சதுன்னா ஹாஸ்டலலேயே இருக்கலாம் மாப்ள அப்படினு ஒரு பீளா வேற.

டேய் வீரா ஆறு மணி ஆச்சுடா 50 ரூபா கொடுறா நாங்க கெளம்புறோம்.

தரேண்டா பச்ச,இப்ப நம்ம கோரிப்பாளயம் போறோம் வாங்கடா, கோரிப்பாளயத்தில ஒரு லாட்ஜ் பேர சொல்லி இங்க தங்கிட்டு காலைல போகலாம்னான்.

இல்லடா நாங்க போகனும், வீட்ல போயி மெஸ் பில்லு, செலவுக்கு பணம் வாங்கிட்டு இன்னும் ரெண்டு நாள்ல ஹாஸ்டல் போகனும்.

சும்மா ஜீவக் குடுக்காதீங்கடா, ஹாஸ்டல்ல போய் என்ன பண்ண போறீங்க, சுருட்டண்ணன் கடை புளிச்ச கள்ள குடிச்சிட்டு தூங்க போறீங்க, என்னமோ காலேஜ் போயி படிக்க போற மாதிரி சும்ம ரவுச குடுக்கீறீங்க, நானாவது வீடு கட்ட துணையா இருக்கேன்.

சரி நீங்க இருங்கடா வரேன்னு சொல்லிட்டு போனான். ரோட்டு ஒரமா நாங்களும் ஒரு அரை மணி நேரமா காத்திட்டு இருக்கோம் ,கையில டீ குடிக்க கூட காசில்லாம.

என்னடா இதுவரை 300 கு மேல செலவு பண்ணிட்டான் ஒரு 25 ரூபா கொடுத்தான்னா ஊருக்கு போயிராலமேடா. கொடுப்பானா இல்ல சங்குதானா.கொடுக்கல்லண்ணா எப்படியாவது மேலூர் போயி அழகு வீட்ல ரெண்டு நாளு ஓட்ட வேண்டியதுதான்.

ஒரு 45 நிமிடம் கழித்து வீரன் கொஞ்சம் தளர்ந்து போய் வந்தான்.

மக்கா மதுரையில பக்காவான அந்த தியேட்டர்ல ஸ்பீல்பெர்க் மாதிரி ஒரு டைரக்டர் எடுத்த கன்னட டப்பிங் படம் ஓடுது, தியேட்டரோட சவுண்டு எபெக்டுக்காகவே பாக்கலாம் வாங்கடா போலாம்.

தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம். ஆண்டவா ஒரு ரிக்சா எடுத்துட்டு போய் வயிர கழுவுனதுக்கு இவ்வளவு பெரிய சோதனையா?

வெளியே வந்தவுடன் மக்கா 30 ரூபாய் தாண்டா மிச்சம் இருக்கு இந்தாங்க அப்படின்னு கொடுத்தான்.

ஒரிவழியா தப்பிச்சு அதிகாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தோம்.

தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.

முற்றும்

21 comments:

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

இரண்டாவது
அத்தியாயம்
வெடித்துவிட்ட
வெடியது!

அடுத்த
வெடிக்கு
ஆயத்தமானது
காத்திருப்பு!!

நசரேயன் said...

ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொடரட்டும்

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது முற்றுமா??
அப்போ அடுத்த பாகம் வராதா??

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னாச்சு ?? கதை முடிஞ்சு போச்சா??

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏன் இப்படி சட்டு புட்டுனு முடிச்சிட்டீங்க??
நான் இன்னும் எதிர் பார்த்தேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

இருந்தாலும் இரண்டு பாகங்களும் நன்றாக இருந்தது..
தொடரட்டும்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி

//இரண்டாவது
அத்தியாயம்
வெடித்துவிட்ட
வெடியது!

அடுத்த
வெடிக்கு
ஆயத்தமானது
காத்திருப்பு!!//

பின்னூட்ட கவிதை நல்லாருக்கு. ஆனால் இந்த அனுபவம் இப்போதைக்கு முற்றும்

பழமைபேசி said...

:-)

அது சரி said...

//
தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம்.
//

இது எந்த தியேட்டர்? இந்த படத்துக்கு ஸ்பீல்பெர்க்குன்னு பில்டப்பு வேறயா? மதுரக்காரய்ங்க அளும்பு தாங்க முடியலப்பா.

//
தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.
//

தஞ்சாவூரு போறேன்னுட்டு நீஙக் செம்பட்டு பஸ்ல என்ன பண்றீங்க? அது எப்படி தஞ்சாவூரு போகும்?

சிம்கோ பஸ்சுல ஏறினா, பெரியார் மணியம்மை கேர்ள்ஸ் ஸ்கூலு இருக்கு, அதனால ஏறிட்டாரு போலருக்கு..

அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?

அது சரி said...

அது என்ன அதுக்குள்ள முற்றும்?

தஞ்சாவூரு போக வேண்டிய ஆளு செம்பட்டு பஸ்ஸில ஏறி எங்க போனீங்க? பச்ச எதுக்கு சிம்கோ போகணும்?

கதையே இனிமே தான் ஆரம்பிக்கும் போலருக்கு, அதுக்குள்ள "வணக்கம்"னு கார்டு போட்டா எப்பிடி??

குடுகுடுப்பை said...

தில்லை நகரில் இருக்கிற அக்காவை பாக்கப்போறேன்னு சொன்ன பச்ச ஜீன்ஸ் ஏனோ செம்பட்டு போற பஸ்ல ஏறி உட்காந்து இருந்தான்.சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை அவன் பாத்தானுன்னு எனக்கு தெரியாது.

//தஞ்சாவூரு போக வேண்டிய ஆளு செம்பட்டு பஸ்ஸில ஏறி எங்க போனீங்க? பச்ச எதுக்கு சிம்கோ போகணும்?//

ஆள மாத்தீட்டீங்க, அது சரி. கடைசி பாராவை நல்லா குடிச்சிட்டு படிங்க

அது சரி said...

//
சிம்கோ போற டவுன் பஸ்லேர்ந்து நான் பாத்ததை..
//

இதுக்கு என்ன அர்த்தம்? நீங்க செம்பட்டு போற டவுன் பஸ்ல இருந்ததான அர்த்தம்?

குடிச்சா மட்டுமில்ல, குடிக்காட்டியும் நாங்கெல்லாம் ரொம்ப தெளிவு!

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...முற்றுமெல்லாம் ஏத்துக்க மாட்டோம்..

குடுகுடுப்பை said...

வருகைகு நன்றி நசரேயன்

//ரெண்டு சூப்பர்.. கலக்கல் தொடரட்டும்//

அனுபவங்கள் தொடரும்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா
// என்னது முற்றுமா??
அப்போ அடுத்த பாகம் வராதா??//

அடுத்த அனுபவம் வரும், பச்ச இருப்பார்.

குடுகுடுப்பை said...

//உருப்புடாதது_அணிமா said...

இருந்தாலும் இரண்டு பாகங்களும் நன்றாக இருந்தது..
தொடரட்டும்//

நன்றி அணிமா. இந்த அனுபவம் முற்றும். இதில் கடைசி பாரா கூட சும்மா ஒரு கிக்குக்கு சேத்தது தான்.

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

//
தியேட்டர் டிக்கெட் கவுண்டரில் கட்டியிருந்த மாடுகள்,சாணத்தை தாண்டி டிக்கெட் எடுத்து செகண்ட் ஷோ, கழுகு மாதிரி ஒரு கிராபிக்ஸ் நடிச்ச கன்னட டப்பிங் படம். யாரோ குடிகாரன் எடுத்த வாந்தி நாத்தத்துடன் முழுப்படத்தையும் பாத்தோம்.
//

இது எந்த தியேட்டர்? இந்த படத்துக்கு ஸ்பீல்பெர்க்குன்னு பில்டப்பு வேறயா? மதுரக்காரய்ங்க அளும்பு தாங்க முடியலப்பா.

//
தியேட்டர் பேரு மறந்து போச்சு,ஆனா சாணி வாடை இன்னும் இருக்கு
//

குடுகுடுப்பை said...

//அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?//

"அது சரி" அது சரி ஒரு மார்க்கமாதான் இருக்கிறீர்

/எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...முற்றுமெல்லாம் ஏத்துக்க மாட்டோம்..//

கடைசி பாராவே ஒரு சுவராஸ்ய செருகல். ஆனால் வேறு சில அனுபவங்கள் தொடரும்

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//அந்த ஸ்கூலுக்கு யூனிஃபார்மு? ஹி ஹி வெள்ளை தாவணி..பச்சை பாவாடை சட்டை..இப்ப புரியுதா மேட்டரு?//

"அது சரி" அது சரி ஒரு மார்க்கமாதான் இருக்கிறீர்

//

பச்சை பாவாடை சட்டை இருக்க பொண்ணுங்க ஸ்கூலுக்கு பச்சை ஜீன்ஸ் போட்டுக்கிட்டு பஸ் ஏறுனது யாரு? நானா?

ஏ தமிழகமே..எனக்கு நீதி வழங்கு...இந்த அநியாயம், அக்கிரமத்தை கேட்பார் இல்லையா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

ஐயோ

என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA

// இல்ல வீரா பீரு வேணாம், குடுகுடுப்பை கால் பீருக்கே சாஞ்சுருவான், நான் எட்டு / ஒம்போது அடிப்பேன். ஏற்கனவே என்ன பீர்பால்னு கூப்பிடறாங்க.
குடுகுடுப்பை உடுக்கை அடிச்சி காலேஜ் புல்லா சொல்லிருவான்.

ஐயோ

என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க//

நீங்க சிரிக்கறதுக்காக தானே இப்படியெல்லாம் எழுதுறோம். மத்தபடி நான் எல்லாம் நம்பியார் மாதிரி ரொம்ப நல்லவன்