Wednesday, October 27, 2010

எப்போதோ கேட்ட உரையாடல்.

இடம் : அலுவலகத்தில் இருக்கும் ஓய்வு அறை/சாப்பிடும் அறையில் மதிய சாப்பாட்டு நேரம்.

"என்ன அயித்தான் புதுசா இன்னைக்கு சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கிய, எப்பயும் சைக்கிள் எடுத்துட்டு போயி வீட்ல இருக்கிற பழைய சோறுதானே சாப்பிடுவிய"

"இன்னைக்கு உங்கக்கா இட்டிலி பண்ணிருக்கா, அதனாலதான் எல்லாருமா சாப்பிடுங்கன்னு கட்டி கொடுத்திருக்கா, நான் பழைய சோறு திங்கறேன்னு பேசறே , உன் வீட்ல என்னத்த திங்கிற நீ "

"பழைய சோறு நம்ம அகராதிலயே கிடையாது,நான் காலைல டிபனுக்கு டிரை பிஷ்ஸ ஃபிரை பண்ணு ராகி மால்ட்தான் தினமும் "

"என்னமோ சொல்ற , சரி உன் மதிய சோத்து மூட்டை எங்கடா?"

"இன்னைக்கு எங்கக்கா இட்டிலி கட்டி கொடுக்கும்னு தெரிஞ்து என் பொண்டாட்டி சோத்து மூட்டைய கட்டலை போலருக்குத்தான்"

"சரி இந்தா நீ ரெண்ட முழுங்கு"

"என்னத்தான் இது கருப்புக்கலர்ல இட்டிலி, கருக்காய் குருணைல மாவு அரைச்சு இட்டிலி சுட்டியலா கஞ்சப்பிசினாறித்தனமா? "

"சோறு கொண்டு வர வக்கில்லை, பேச்சுக்கு ஒன்னும் கொறச்ச இல்லை உனக்கு"

"கருப்பு/சிகப்புல இட்டிலி சுட்டிருந்தா உங்க தலைவரு கலைஞரு எதவாது பண்ணிருப்பாருத்தான்"

"கலைஞர நோண்டலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே, கலைஞரோட குசுவில் கூட தமிழ் மணக்கும்டா"

"ஆமா இவருக்கு அதுல தமிழ் மணக்குதா இல்லையான்னு மோந்து பாக்கிறதுதான் தினம் வேலை"

"உங்கள மாதிரி உண்டி குலுக்கிகளுக்கு நாங்கள் தேவலாம்டா"

"நாங்க உண்டியோ குண்டியோ குலுக்குறோம், மோந்து பாக்கிற வேலையெல்லாம் நாங்க பாக்கிறதில்லை"

"தேர்தல் வரட்டும் அப்ப பாத்துக்குறோம் நீங்க யாரு குசுவ குடிக்கிறியன்னு"

அநத நேரத்தில் சக ஊழியர் உள்ளே வருகிறார்

"என்னய்யா என் டிபன் கேரியர் காலியா இருக்கு"

அயித்தானும், மச்சானும் கோரஸாக

"பேச்சு சுவராஸ்யத்துல உங்க சாப்பாட்ட சாப்பிட்டோம், இந்தாங்க அக்கா வீட்டு இட்டிலி இருக்கு சாப்பிடுங்க"

பிகு: இது அரசியல் பதிவல்ல, மாமன் மச்சான் உரையாடலில் அரசியலும் வருகிறது

4 comments:

vasu balaji said...

இப்பதான் புரியுது. நீர் ஏன் தலைவரா இருக்கீருன்னு:))

Unknown said...

பாலா சாரை ரிப்பீட்டேய்ய்

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
இப்பதான் புரியுது. நீர் ஏன் தலைவரா இருக்கீருன்னு:))
//

நான் அந்த சக அலுவலர் மாதிரி சொந்த சாப்பாட்டை பறிகொடுத்தவன்

பழமைபேசி said...

//இது அரசியல் பதிவல்ல, மாமன் மச்சான் உரையாடலில் அரசியலும் வருகிறது
//

ங்கொய்யால, அரசியல்வாதிகளை விட நீங்க பெரிய ஆளுக போலிருக்கே?!