Wednesday, July 14, 2010

ராவணன் மணிரத்ணம்.

ராவணன் மட்டமான இதிகாச ரீமிக்ஸ் முதல் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராவணன் என்று கிழித்துப்போட்ட படம், கொடுத்த ஆறு டாலருக்கு நானும் ஒரு பதிவு போட்டு என் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்கிறேன்.

மணிரத்னம் மேட்டுக்குடிகளுக்கான இயக்குனர் , அவரின் படத்தின் பார்வையாளர்களுக்கு தான் சொல்ல வந்ததை அவருடைய பாணி சினிமாவில் சொல்லியிருக்கிறார்.

அனுமன் வேடத்தில் நடித்த கார்த்திக்/கோவிந்தாவை குரங்கு போலவே நடிக்க வைத்து எரிச்சல் ஆக்கிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு, மற்றும் பல இராமாயண கதா பாத்திரங்களை காட்ட வெளிப்படையான அடையாளத்தை வைத்து ராமனை சில வசனங்கள் செயல்கள் மூலம் விமர்சித்து இதிகாச ராவணன் நல்லவன் என மேட்டுக்குடி மக்களுக்கு புரியவைக்க முயன்றிருக்கிறார். இதற்கு ஏன் தூதுவனை குரங்கு போல் காட்டவேண்டும், காட்டாவிட்டாலும் புரியுமே என்பது பலரின் கேள்வி, ரோஜா சத்தியவான் சாவித்திரியின் ரீமேக், மவுனராகம் வேறு ஏதோ இதிகாச ரீமேக் என்று அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள், ஆனால் படம் பார்த்த மேட்டுக்குடிகளுக்கு இது தெரியாது, ஆனால் இங்கே இதிகாச ராவணனை நல்லவன் என்று காட்ட ராமாயண கதாபாத்திரங்களின் தோற்றங்கள் உதவும் என்று நினைத்திருக்கலாம்(ராவண் என்ற பெயர் ஒன்றே போதுமா என்று எனக்குத்தெரியவில்லை). குறிப்பாக வட இந்தியர்களுக்கு.

ராமனின் தந்திரங்களை காட்டிய அளவுக்கு, ராவணன் , ராமனின் மனைவியை கவர்வதற்கு இன்னும் அழுத்தமாக காரணம் காட்டியிருக்கலாம். மணிரத்தினம் பெரும்பாலும் கணவன் மனைவியை பிரிப்பதில்லை , அதே போல இந்தப்படத்திலும் ராமன் மனைவியை சந்தேகப்படுவதாக சதி செய்து ராவணனை கொல்வதாகக் காட்டியிருக்கிறார். பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.

தன்னுடைய பயத்தினால் / அல்லது வியாபார பயத்தினால் பதுங்கியதால்,ராவணன் சரியாக மேட்டுக்குடிகளிடம் சேரவில்லை, முயற்சியில் தோற்றிருந்தாலும் ராவணன் நல்லவன் என்று வட இந்தியர்களுக்கு காட்டந்துணிந்த மணிரத்ணம் பாராட்டுக்குறியவரே.

9 comments:

vasu balaji said...

பொதுசிந்தனை, முதலாளித்துவம், கார்ப்பொரேட், மேட்டுக்குடி முடிஞ்சது. இன்னும் மிஞ்சியிருக்கிறது பார்ப்பனீயமும், ஆணாதிக்கம். நாளைக்கு டாபிக் எதுன்னு ஆக்டபஸ்ஸ கேக்கலாமா:)).

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
பொதுசிந்தனை, முதலாளித்துவம், கார்ப்பொரேட், மேட்டுக்குடி முடிஞ்சது. இன்னும் மிஞ்சியிருக்கிறது பார்ப்பனீயமும், ஆணாதிக்கம். நாளைக்கு டாபிக் எதுன்னு ஆக்டபஸ்ஸ கேக்கலாமா:)).
//
இட ஒதுக்கீடு மிச்சமிருக்கு.

கலகலப்ரியா said...

//பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.//

thodaa.. anthalu innum rendu moonu twist vachu...sita & rama va searthu vaippaaru... =))

north indians ta intha film epdi reach aachu nu enakkum rosanaiyaathan irukku..

Anonymous said...

கலகலப்ரியா said...
//பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.//

thodaa.. anthalu innum rendu moonu twist vachu...sita & rama va searthu vaippaaru... =))

north indians ta intha film epdi reach aachu nu enakkum rosanaiyaathan irukku..

//

பாலச்சந்தர் பற்றிய உங்கள் புரிதலே சரி.

Anonymous said...

மேலே உள்ள அனானி குடுகுடுப்பையாகிய நானே

Ravichandran Somu said...

Please forward your e-mail address to vssravi@gmail.com

கலகலப்ரியா said...

||Anonymous said...
மேலே உள்ள அனானி குடுகுடுப்பையாகிய நானே||

அடப்பாவிங்களா... இப்டி வேறயா...

வில்லன் said...

//கொடுத்த ஆறு டாலருக்கு நானும் ஒரு பதிவு போட்டு என் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்கிறேன்//

யோவ் நீறு கொடுத்தது வெறும் ஆறு டாலரு... நான் கொடுதாது முப்பத்தாறு டாலரு (தங்கமணி மற்றும் சின்னமணியை சேத்து) ...பாவி பசங்க என்கிட்டே மட்டும் ஒரு ஆளுக்கு பனிரெண்டு டாலருன்னு கணக்குபண்ணி வாங்கிபுட்டாங்க....

வில்லன் said...

/

கலகலப்ரியா said...

||Anonymous said...
மேலே உள்ள அனானி குடுகுடுப்பையாகிய நானே||

அடப்பாவிங்களா... இப்டி வேறயா...//
குடுகுடுப்பை ராவணனை விட ரொம்ப நல்லவரு... பலதரப்பட்ட மக்களின் (நசரேயன், அதுசரி போன்றவர்களால்)..... தவறான பிரசாரத்தால் வேட்டி கிழிந்து தெருவில் அலைகிறார்...பாவம்.... அவரது உண்மையான நெலமையை யாரு படம் புதிது பதிவுலகத்துக்கு காட்ட போறாங்கலோ தெரியல..