Tuesday, July 13, 2010

முதலாளித்துவத்தை விமர்சிப்போம்


கடந்த பதிவில் விவசாயத்தை அடிப்படையாக வைத்து என் மனதில் தோன்றியதை எழுதியதை , ஏழரை மென்மையாக விமர்சித்திருந்தார், முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள எனக்கு உடனடியாக பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை, அதனால் தாமதமாகஇந்தப்பதிவு.விவசாயமோ , பெட்டிக்கடையோ முதலாளித்துவமல்ல , கார்ப்பரேட்திருடர்கள்தான் முதலாளித்துவம் என்றும் கூறியிருந்தார்.

ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் பொதுவுடமைத் தத்துவத்தின் கீழ் கண்டிப்பாக வரமுடியாது என்பதால் இவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் வருபவர்களே என்பது என் புரிதல்.

முதலாளித்துவம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும் இடம், முதலாளித்துவம் கண்டிப்பாக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். கார்ப்பரேட்டுகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டும். விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.

உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியான வழியான வழியில் செயல்படுத்துவதும் உழைப்புதான், இந்த உழைப்பை சுரண்டுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும் திருடர்களும் இங்கே அதிகம், இவர்கள் கடைசி வரையிலும் இருப்பார்கள், ஆனால் அதையும் மீறி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முதலாளித்துவத்தால் முடியும் என்றே கருதுகிறேன்.

பொது உடமை தத்துவம் மனிதனின் இயல்பான ஆசைகளுக்கு எதிரானது, ஆசையே துன்பத்திற்கு காரணம் , ஆனால் அதுதான் இன்பத்திற்கும் காரணம், அந்த ஆசை இல்லாவிட்டால் இந்த பிளாக்கர் இருந்திருக்காது, இண்டர்நெட், மின்சாரம் எதுவும் இருந்திருக்காது, இவைகளெல்லாம் பொது உடமையின் கீழ் சாத்தியமாக்க இயலாது. எல்லாம் பொது உடமை நீ இப்படி உழைக்கனும் , அப்படி உழைக்கனும் என்று பீரோவுக்குள் இருந்து கட்டுப்பாடுகள் போட்டால் ஒன்றும் நடக்காது. நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூகத்தின் பொருளாதார முன்னேற்றதிற்கு பாடுபடுதலே சரியான விடைதரும்.

முதலாளித்துவ விதிகள் விமர்சிக்கப்பட்டு மாறிக்கொண்டேதான் இருக்கும், ஏழை, பணக்காரன், ஆண்டி, போண்டியெல்லாம் மாறி மாறி வந்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்காக வாழத்தான் எனக்கும் ஆசை, ஆனால் அதற்கு முதலாளித்துவமும் தேவையில்லை, எல்லாவற்றையும் விமர்சித்து எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளாத பீரோவுக்குள் முடிவெடுக்கப்படும் இசங்களும் தேவையில்லை.

17 comments:

பழமைபேசி said...

காசா, பணமா... நல்லா விமர்சியுங்க அண்ணே!!!

நசரேயன் said...

//தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்காக வாழத்தான்
எனக்கும் ஆசை,//

செவ்வாய் கிரகத்திலே இடம் இருக்காம்

நசரேயன் said...

மணி அண்ணன் முந்திகிட்டாரே

நசரேயன் said...

உம்ம இம்சைக்கும் அதுதான் காரணமா ?

நசரேயன் said...

//நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூகத்தின் பொருளாதார முன்னேற்றதிற்குபாடுபடுதலே சரியான
விடைதரும்//

கூகிள் ஆண்டவரா ?

Unknown said...

நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம் கும்மலாமா?

குடுகுடுப்பை said...

முகிலன் said...
நசரண்ணே? இந்தப் பதிவுல கொஞ்ச நேரம் கும்மலாமா?

//

மணியின் யோசனையில் மணி கொடுத்து மணிப்பிரியாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவினால் வீட்டில் கும்மல் நடந்துகொண்டிருக்கிறது, போட்டுக்கொடுத்தவர் வில்லன் மற்றும் வில்லி- ஆலோசகர் குடிகெடுப்பை

Unknown said...

//மணியின் யோசனையில் மணி கொடுத்து மணிப்பிரியாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவினால் வீட்டில் கும்மல் நடந்துகொண்டிருக்கிறது, போட்டுக்கொடுத்தவர் வில்லன் மற்றும் வில்லி- ஆலோசகர் குடிகெடுப்பை//

வாயோரம் ஜொள்ளு வடிய போஸ் குடுக்கும்போதே நினைச்சேன். யாராவது வீட்டுல போட்டுக் குடுக்கப் போறாங்கன்னு...

Robin said...

//விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.// என் நிலையம் இதுதான். கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவமே சிறந்தது.

ஆரூரன் விசுவநாதன் said...

இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????

ஏழரையின் விமர்சனத்திற்கான பகடியா?, பொதுவுடமை தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சித்ததன் விளைவாக எழுந்த கேள்விகளா?, அல்லது அவற்றை புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமா?.

podang_maan said...

//ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் பொதுவுடமைத் தத்துவத்தின் கீழ் கண்டிப்பாக வரமுடியாது என்பதால் இவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் வருபவர்களே என்பது என் புரிதல்.

முதலாளித்துவம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும் இடம், முதலாளித்துவம் கண்டிப்பாக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். கார்ப்பரேட்டுகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டும். விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.//

முதலாளித்துவம் என்றால் என்ன(சொத்துடமையும், உழைப்புச் சுரண்டலும் மட்டுமே முதலாளித்துவம் அல்ல),
பொதுவுடமை என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? பொதுவுடமைவாதியின் கடமை என்ன? (பொதுவுடமை சமூகத்தை அமைப்பது அல்ல முதனமைக் கடமை. இருக்கின்ற சமூகத்தை அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்ல ஒரு மருத்துவ தாதி போல உதவுவதே கம்யூனிஸ்டின் கடமை)

இதெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் நகைப்புக்கிடமான ஒரு கோமாளி போன்றே தோற்றம் தருவீர்கள். நடிகர் விஜய் போன்ற கோமாளிகளுக்கு கூட்டம் சேர்வது போல உங்களுக்கும் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

உங்களது படிப்புக்கு நான் ப்ரிந்துரை செய்யும் புத்தகம்:
'பொதுவுடமைதான் என்ன?' ராகுல் சங்கிருத்தியாயன்

Anonymous said...

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வழி. ஆனால் முதலாளித்துவம் ஆசையை அடக்குவதற்கு பெரும்பான்மை மக்களுக்கு பயிற்றுவிப்பது உங்களது கண்களுக்கு படவில்லையா. ? சோசலிச சமூகத்தில் ஆசைப்படுவது தவறு என்றெல்லாம் கிடையாதே! ஆசையின் அவசியம் பற்றியும் சமூகத்தின் ஆசை பற்றிய முன்னுரிமையும் கம்யூனிச சமூகத்தில் சாத்தியமாக்கும் பொழுது புரிந்து கொள்ள தக்க ஒன்றுதானே...

-mani

vasu balaji said...

/உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியான வழியான வழியில் செயல்படுத்துவதும் உழைப்புதான், இந்த உழைப்பை சுரண்டுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும் திருடர்களும் இங்கே அதிகம், இவர்கள் கடைசி வரையிலும் இருப்பார்கள், ஆனால் அதையும் மீறி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முதலாளித்துவத்தால் முடியும் என்றே கருதுகிறேன்.
/

YES!

குடுகுடுப்பை said...

ஆரூரன் விசுவநாதன் said...
இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????

ஏழரையின் விமர்சனத்திற்கான பகடியா?, பொதுவுடமை தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சித்ததன் விளைவாக எழுந்த கேள்விகளா?, அல்லது அவற்றை புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமா?//

பொது உடமை தத்துவங்களை ஸ்டாலின் போன்றவர்கள் புரிந்துகொண்டார்கள். முதலாளித்துவம் சீர்ப்படுத்தப்பட்டால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தனி மனித ஆர்வங்களை ஊக்குவிக்க பொது உடமை உதவாது என்பது என் கருத்து.

குடுகுடுப்பை said...

vinodh said...

முதலாளித்துவம் என்றால் என்ன(சொத்துடமையும், உழைப்புச் சுரண்டலும் மட்டுமே முதலாளித்துவம் அல்ல),
பொதுவுடமை என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? பொதுவுடமைவாதியின் கடமை என்ன? (பொதுவுடமை சமூகத்தை அமைப்பது அல்ல முதனமைக் கடமை. இருக்கின்ற சமூகத்தை அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்ல ஒரு மருத்துவ தாதி போல உதவுவதே கம்யூனிஸ்டின் கடமை)

இதெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் நகைப்புக்கிடமான ஒரு கோமாளி போன்றே தோற்றம் தருவீர்கள். நடிகர் விஜய் போன்ற கோமாளிகளுக்கு கூட்டம் சேர்வது போல உங்களுக்கும் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

உங்களது படிப்புக்கு நான் ப்ரிந்துரை செய்யும் புத்தகம்:
'பொதுவுடமைதான் என்ன?' ராகுல் சங்கிருத்தியாயன்
//

நான் எதையும் படித்ததில்லை, படிக்கப்போவதுமில்லை, கோமாளியாகவே இருந்துவிடுகிறேன், ஸ்டாலின், மாவோ மற்றும் கோச்சிமின் போன்றவர்கள் போலெல்லாம் சரித்திரத்தில் இடம் பெறும் ஆசை எனக்கில்லை.பொது உடமை தத்துவம் பேசும் நாடுகள்./ நீங்கள் சிலாகிப்பவர்கள், அவர்களால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை பட்டியலிடுங்கள். முதலாளித்துவம் குறைகள் உள்ளது ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரம் ஓப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. என் புரிதல் பற்றிய உளறல்களை பயமில்லாமல் உளற முடிந்த நாட்டில் வசிப்பதால் என் கோமாளித்தனங்கள் தொடரும்.

உங்களின் பார்வையில் ஸ்டாலின் மருத்துவ தாதி, ஆனால் பேசண்ட் செத்துப்போயிட்டாங்களே, கம்யூனிச மருந்து சரியானதா ?

குடுகுடுப்பை said...

Anonymous said...
ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வழி. ஆனால் முதலாளித்துவம் ஆசையை அடக்குவதற்கு பெரும்பான்மை மக்களுக்கு பயிற்றுவிப்பது உங்களது கண்களுக்கு படவில்லையா. ? சோசலிச சமூகத்தில் ஆசைப்படுவது தவறு என்றெல்லாம் கிடையாதே! ஆசையின் அவசியம் பற்றியும் சமூகத்தின் ஆசை பற்றிய முன்னுரிமையும் கம்யூனிச சமூகத்தில் சாத்தியமாக்கும் பொழுது புரிந்து கொள்ள தக்க ஒன்றுதானே...

-mani//

நடைமுறை சாத்தியமானது அல்ல, உதாரணம் க்யூபா.

ஈரோடு கதிர் said...

||ஆரூரன் விசுவநாதன் said...

இந்தப் பதிவு எதைச் சொல்கிறது?????||

எங்க தலைவர பின்னூட்டம் போடச்சொல்லிடுச்சுல்ல!