Sunday, December 27, 2009

டாலஸில் ஸ்னோமேன்.



டெக்ஸாஸ் மாகாணத்திற்கு வேலைக்கு வந்து நான்கு வருடங்களில் இதுவரை இவ்வளவு பனி பெய்ததில்லை, இவ்வருடம் கிறிஸ்ட்மஸ் டெக்ஸாஸ் காரர்களுக்கு
வெள்ளை கிறிஸ்துமஸாக அமைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னுடைய மகளும் ஸ்னோவில் விளையாட்டு என்று வெள்ளைக்கிறிஸ்தமஸை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
என்னையும் ஸ்னோமேன் செய்ய அழைத்தார் , கிறிஸ்துமஸீக்கு முந்தின நாள் திடீரென்று ஏற்பட்ட முதுகுப்பிடிப்பினால் படுக்கையை விட்டு எழ முடியாததால்
என்னாலும் உதவமுடியவில்லை.

நல்லவேலையாக எதிர்வீட்டு சீனர் ஒரு பனிமனிதன் செய்தார், என் மகள் அதனைப்பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார், அப்படியே அந்த ஸ்னோமேன் படம் எனக்கு ஒரு பதிவுக்கும் ஆகிறது.

பிகு:

13 comments:

குடுகுடுப்பை said...

பிகு: பிகு பழக்கதோசத்துல போட்டாச்சு.

Unknown said...

இங்கே ஸ்னே பெய்யலைன்னாதான் நியூஸ்..

எஞ்சாய் தி விண்ட்டர்

நட்புடன் ஜமால் said...

என் மகள் அதனைப்பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்]]

அழகு - இப்படி அழைப்பது.

கலகலப்ரியா said...

=)) இந்தப் பதிவில இப்டி ஒரு பி.கு. வா? முடியல.. ! சுட்டிப்பொண்ணு குட்டி ஆம்ஸ்ட்ராங் மாதிரி இருக்கா.. cute..!

வால்பையன் said...

யார் சாயலில் செய்தார் அந்த பனிமனிதனை!?

Thekkikattan|தெகா said...

உங்க ஊர்லயே ஸ்நொவா? நம்ம முடியவில்லை, வில்லை... :)

எஞ்சாய் !

குடுகுடுப்பை said...

நெசமாதான் தெகா என்னாலும் நம்ப முடியவில்லை.

Sanjai Gandhi said...

பிகு காலியா இருக்கே.. காக்கா தூக்கிட்டுப் போய்டிச்சா? :))

ரிஷபன்Meena said...

டெக்சாஸ் ஆயில் வளமிக்க மாநிலம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்

வில்லன் said...

//கிறிஸ்துமஸீக்கு முந்தின நாள் திடீரென்று ஏற்பட்ட முதுகுப்பிடிப்பினால் படுக்கையை விட்டு எழ முடியாததால்
என்னாலும் உதவமுடியவில்லை.//

படுக்கையையே பனில போட்டு சல்சா பண்ணிருக்க்கலாம்ள.....
அப்படியே அடுத்த நாள் ஒன்னு முதுகுபிடிப்பு போயிருக்கும் இல்ல ஒரு ஹோச்பிடல்ல படுக்கைய போட்டுருக்கலாம்........

வில்லன் said...

அப்ப மாடும் மாடு சார்ந்த இடம் பனியும் பனிசார்ந்த எடமா மாறிட்டுன்னு சொல்லும்......

வில்லன் said...

//ரிஷபன் said...


டெக்சாஸ் ஆயில் வளமிக்க மாநிலம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்//

மாட்டு வளம் மிக்க மாநிலம் கூட(TEXAS வாழ்மக்கள் அந்த மாநிலத்த நாடுன்னு (TEXAS COUNTRY)சொல்லுவாங்க.... மேலும் அவங்கள அமெரிகன்னு சொல்லிக்க மாட்டாங்க TEXANனு சொலுவாங்க..)

மாதேவி said...

பனி மனிதன் வடிவாக இருக்கிறது.

குட்டிப்பெண் பனியில் நிற்கும் படம் ரொம்ப அழகு.