Friday, July 24, 2009

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.

மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கு.ஜ.மு.க போட்டியிடுவதில்லை என்று கு.ஜ.மு.க பொதுக்குழு கூடி முடிவெடுத்துள்ளது.

நிறைய உருப்படியான வேலைகள் இருக்கும் இந்த நேரத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.

குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

22 comments:

மருதநாயகம் said...

அதற்குள் தோல்வி பயம் வந்துவிட்டதா

தினேஷ் said...

முடியாது கழகம் புறக்கணிச்சாலும் சுயேச்சையாக போட்டியிடுவதென்று முடிவெடுத்துருச்சு . சன்னுக்கு எது சண்டே(ஹி ஹி சூரியனுங்கோ நானு)..

அதனால் கழக கட்டுப்பாட்டை மீறியதாக என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவோ இல்ல கழக உறுப்பினர்கள் என்னோடு தொடர்பை துண்டிக்கவோ நீங்கள் அறிக்கை விட்டால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று உங்களுக்கு அரிவாளுடன் சீ அன்புடன் வழக்கி சீ விளக்கி கொள்கிறேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இந்த முடிவு ஜக்கம்மாவுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளதால் கட்சி அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறீர்கள்!!!

பழமைபேசி said...

நானுங்கூட வீட்ல சமைக்கிறதுல இருந்து புறக்கணிப்போன்னு வந்தேன்... :-0(

அ.மு.செய்யது said...

ஓக்கே !!!!

அ.மு.செய்யது said...

//முடியாது கழகம் புறக்கணிச்சாலும் சுயேச்சையாக போட்டியிடுவதென்று முடிவெடுத்துருச்சு . சன்னுக்கு எது சண்டே(ஹி ஹி சூரியனுங்கோ நானு)..

அதனால் கழக கட்டுப்பாட்டை மீறியதாக என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கவோ இல்ல கழக உறுப்பினர்கள் என்னோடு தொடர்பை துண்டிக்கவோ நீங்கள் அறிக்கை விட்டால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று உங்களுக்கு அரிவாளுடன் சீ அன்புடன் வழக்கி சீ விளக்கி கொள்கிறேன்.//

மூச்சிரைக்க‌ பேசியிருக்கீங்க‌...ஒரு ஜோடா குடிச்சிக்கிங்க‌ த‌ல‌..

நட்புடன் ஜமால் said...

ஹி ஹி ஹி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்களிடம் போதுமான பணம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நீங்க எல்லாம் அரசியலுக்கே லாயக்கு இல்லை.

Anonymous said...

இதுவும் ஏதாவது தங்கமணிப்பதிவோன்னு நினைச்சேன். :)

தினேஷ் said...

//மூச்சிரைக்க‌ பேசியிருக்கீங்க‌...ஒரு ஜோடா குடிச்சிக்கிங்க‌ த‌ல‌.//

தேங்க்ஸுப்பா..

சந்தனமுல்லை said...

:-)))))

Sanjai Gandhi said...

இதை ச.கா.மு.க ஏக மனதாக ஆதரிக்கிறது. :)

வெற்றி-[க்]-கதிரவன் said...

குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
துணை பொதுசெயலாளர்
சைடு பொதுசெயலாளர்
பொருளாளர்
தலைவர்
துணைத்தலைவர்
கொ.ப.செ
தொண்டன்

குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

அது சரி(18185106603874041862) said...

பொது தேர்தல்லயும் போட்டியிட சான்ஸு குடுக்கலை...இப்ப இந்த தேர்தல்லயும் எனக்கு சான்ஸு இல்லன்னு ஆயிப் போச்சி....யாரை கேட்டு இந்த முடிவெடுத்தீங்க??

அடுத்து வர்ற தேர்தல்ல எனக்கு சீட் குடுக்காட்டி, இந்தியாவே அதிரும்....ஒங்க கட்சியை ரெண்டா ஒடைச்சி, அகுஜமுக (அதுசரி குஜமுக) ஆரம்பிச்சிடுவேன்...குண்டர்கள் ச்சீ தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் தான்னு ஒங்களுக்கே தெரியும்...

மொதல்ல பொதுக்குழுவை கூட்டுங்கய்யா..அங்க காட்றேன் நான் யாருன்னு!

அது சரி(18185106603874041862) said...

//
பித்தன் said...
குடுகுடுப்பை
பொதுச்செயலாளர்
துணை பொதுசெயலாளர்
சைடு பொதுசெயலாளர்
பொருளாளர்
தலைவர்
துணைத்தலைவர்
கொ.ப.செ
தொண்டன்
குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

July 25, 2009 12:44 PM
//

ஒன்றிய செயலாளர், வட்டச் செயலாளர்,மாவட்ட செயலாளர்,பொதுக் குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், போஸ்டர் ஓட்டுபவர், வரவேற்பு குழு தலைவர், வரவேற்பு வளையம் அமைப்பவர், தலைமை கழக பேச்சாளர், பேச்சுக்கு கைதட்டி ரசிப்பவர்...

இது போன்று இன்னும் ஏகப்பட்ட பதவிகளை அண்ணன் குடுகுடுப்பையார் வகிக்கிறார் என்று அவர் சார்பில் அடக்கத்துடன் தெரிவிக்கப்படுகிறது.

இப்படிக்கு,

குடந்தை குடுகுடுப்பையார்,

பொ.செ மற்றும் கொ.ப.செ,

குஜமுக,

பழைய எண் 116, புதிய எண் 200000018492

அம்மையப்பன் மூணாவது குறுக்கு சந்து,

டெக்ஸாஸ் மாகாணம்,

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்.

குடுகுடுப்பை said...

அது சரி said...
பொது தேர்தல்லயும் போட்டியிட சான்ஸு குடுக்கலை...இப்ப இந்த தேர்தல்லயும் எனக்கு சான்ஸு இல்லன்னு ஆயிப் போச்சி....யாரை கேட்டு இந்த முடிவெடுத்தீங்க??

அடுத்து வர்ற தேர்தல்ல எனக்கு சீட் குடுக்காட்டி, இந்தியாவே அதிரும்....ஒங்க கட்சியை ரெண்டா ஒடைச்சி, அகுஜமுக (அதுசரி குஜமுக) ஆரம்பிச்சிடுவேன்...குண்டர்கள் ச்சீ தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் தான்னு ஒங்களுக்கே தெரியும்...

மொதல்ல பொதுக்குழுவை கூட்டுங்கய்யா..அங்க காட்றேன் நான் யாருன்னு//

கு.ஜ.மு.க உடைக்க எந்த சக்தியாலும் முடியாது.அதற்கான காரணம் கு.ஜ.மு.க தெரிந்த அனைவரும் அறிந்ததே.

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி. நேரமின்மை காரணமாக இன்னும் சில நாட்கள் கட்சிப்பணிகளில் ஈடுபட முடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mahesh said...

ஏற்கெனவே கட்சிப்பணிகள்ல சுணக்கமா இருக்கீங்கன்னு புகார்... இப்ப தற்காலிக விலக்கம் வேறயா?

எங்க... இந்தியா பயணமா? போய் வாங்க....

வித் தங்கமணி... என்சாய் !!

வால்பையன் said...

இது ஜனநாயக விரோதம்!

வில்லன் said...

//இடைத்தேர்தலில் போட்டியிடுவது கால விரயம் என்று கு.ஜ.மு.க பொதுக்குழு ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.//

நல்ல முடிவு. கண்டிப்பாக வரவேற்க கூடிய ஒன்றே...

அப்படியே எலெஷெந்ல நின்னுட்டளும்...... எல்லாரும் உங்க ஜக்கம்மா கழகத்துக்கு ஓட்டு போட்டுட்டு தான் மறுவேலை பாப்பாங்க..........

வில்லன் said...

//சட்டமன்ற இடைத்தேர்தல் கு.ஜ.மு.க புறக்கணிப்பு.//

அதெல்லாம் முடியாது. ஸ்ரீவைகுண்டம் என்னோட தொகுதி. கு.ஜ.மு.க சார்பா நிக்குறதா பணமெல்லாம் கட்டியாச்சு. பிரசாரத்துக்கு வந்தே ஆகனும்.... இல்ல நான் பேச மாட்டேன்... அருவா தான் பேசும்.

ஒழுங்கா ஓட்டு மொத்த சனமும் (செயலாளர் பொருளாளர் தலைவர் தோளான் துடுக்கி எல்லாரும்) வந்தாகணும் எங்க ஊருக்கு பிரசாரத்துக்கு......

Unknown said...

இது பொதுக்குழு உண்மைத் தொண்டர்களின் கருத்தை கேட்காமல் தனித்து எடுத்த முடிவு. வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்கள் 20 பேர் (என்னது அஞ்சு தொகுதில தான் தேர்தலா?) இருக்கும்போது இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு, பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் நாளை நான் கட்சியில் சேர்ந்த பின்னால் கணக்கு (?!) கேட்பேன் என்று ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன்.