Monday, June 29, 2009

அந்த மூன்று சகோதர டாக்டர்கள் , கூடுதலாக ஒரு மொள்ளமாறி.

குடுகுடுப்பை: காலில் வெட்டிய மம்பட்டியும் தையல் போட்ட டாக்டரும்.

இந்த மூன்று சகோதர டாக்டர்களில் மூத்தவர் , கிராமப்புற மக்களின் அறியாமையை பயன்படுத்தி வயிற்று வலி வந்தால் ஊதிக்கல் எடுக்கிறேன் என்று வாயில் புல்லாங்குழல் போன்ற ஒன்றை வைத்து ஊதி இத்தனைக்கல் , வெங்காயத்தோல் , தக்காளித்தோல் எடுத்தேன் இனி சரியாகிவிடும் என்று கூறி கொடுக்கும் காசை வாங்கிக்கொள்வார். இவர் மருந்தெல்லாம் கொடுப்பதில்லை அந்த வகையில் நல்லவர்.! . காலப்போக்கில் இந்த மாதிரி ஏமாற்று வேலைகலை மக்கள் நம்பாமல் போனதால் இவருடைய வயிற்றுப்பிழைப்பும் மிகவும் சிரமமான நிலையிலேயே இருந்தது.

இரண்டாவது சகோதர டாக்டர், உருவான விதம் குறித்து எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் கூறியது, அன்றாட வாழ்க்கையில் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஏதோ ஒரு வேலைக்கான(சரியாக ஞாபகம் இல்லை) படிப்பும் , ஒரு வருடத்திற்கும் மேலான பயிற்சியும் எடுத்தவர். பின்னர் இவரும் ஏதோ RMP என்று தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டார், அது நிஜமாக படிச்சி வாங்கினதா அடிச்சி வாங்கினதா என்பதெல்லாம் தெரியாது. எங்கள் பகுதியில் மருத்துவம் செய்யத்தொடங்கினார், காய்ச்சல், வெட்டுக்காயம், பாம்புக்கடி என்று அனைத்துக்கும் மருத்துவம் பார்த்தவர். ஏழ்மை நிலையில் இருந்து வந்ததினால் மூன்றிலிருந்து ஐந்து ரூபாய்தான் வசூலிப்பார், சற்று பணக்காரர்களிடம் இருபது ரூபாய் வரை வாங்குவார். இவருடைய மருத்துவமனையில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்காவது மருத்துவம் பார்ப்பார். மக்கள் இப்படி இவரிடம் போய் மருத்துவம் பார்க்கிறார்களே MBBS படித்த டாக்டர்களிடம் செல்லாமல் என்று நினைப்பதுண்டு, MBBS படித்த டாக்டர்கள் அங்கு யாரும் இல்லை,இருந்தாலும் மக்கள் அங்கே சென்றிருப்பார்களா என்பதும் சந்தேகமே.ஆனால் இவர் தன் எல்லை மீறி மருத்துவம் பார்ப்பதில்லை, உடனடியாக பக்கத்து நகரில் குறைந்தது MBBS ஆவது படித்த மருத்துவரிடம் அனுப்பிவிடுவார். இவரின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இரண்டு வருட காலம் மருத்துவம் செய்யவில்லை, அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சுரத்திற்கு ஊசி போட கூட ஆளில்லாமல் தவித்தபோதுதான் அவரின் அருமை புரிந்தது. உடல்நிலை தேறிய பின் மீண்டும் மருத்துவத்தை ஆரம்பித்தார்.

மூன்றாவது சகோதரர் அதே பகுதியில் ஆனால் வேறு ஊரில் , கிளினிக் வைத்திருந்தார், இவர் மேல் மக்களுக்கு அவ்வளவாக நம்பகத்தன்மை இல்லை, பெரும்பாலும் சைக்கிளில் ஊர் ஊராக சென்று வயோதிகர்களுக்கு ஊசி போட்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். இவர் நகரில் சில டாக்டர்களிடம் கருக்கலைப்பு செய்வதில் உதவியாளராக சில காலம் பணி புரிந்திருக்கிறார். பின்னர் இதே வேலையை தனியாக செய்ததாக அரசல் புரசலாக செய்தி உண்டு, திருட்டு கருக்கலைப்பு செய்பவர்கள் உள்ளூரில் செய்ய மாட்டார்கள் அல்லவா அதனால் இவரைத்தேடி 100 கி.மீட்டர் தொலைவில் இருந்து இரவில் ஆள் வருவார்கள் என்ற வதந்தியும் உண்டு.

இந்த மூவரில் மூன்றாமவர் ஒருநாள் திடீரென்று மாரடைப்பில் காலமானார், இவர் இறக்கும்போது நாற்பது வயது இருக்கும்.குடும்பமும் குழந்தைகளும் பிழைக்க வழியில்லாமல் அவர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.

வெகு சிறிது காலத்தில் இரண்டாமவரும் மாரடைப்பில் காலமானார், ஆனால் இவர் தன் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சொந்த வீடும் சிறிது சொத்தும் சேகரித்திருந்தார்.

முதாலாமவரும் பின்னர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.ஆனால் உண்மையா எனத்தெரியாது. மூன்று சகோதரர்களும் ஐம்பது வயதிற்கு முன்பாகவே மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்கள் என்ன காரணமாக இருக்கும்
.....

இன்னோரு மிகப்பெரிய மொள்ள மாறி இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஊர்ப்பகுதியில் மருத்துவம் பார்க்க வந்தார், இவர் வைத்தியத்தில் இவரேதான் மாத்திரை கொடுப்பாராம், ஒருநாள் அவரிடம் வேலை பார்த்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் அவர் கூற்றின் படி, இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)போட்டு இதுதான் மாத்திரை என்று சொல்லி விவசாயக்கூலி செய்யும் ஏழைகளிடம் விற்றிருக்கிறார். எப்படியோ தெரிந்து கிராம மக்கள் இவரை அடித்து துரத்திவிட்டனர். 4 வருடங்களுக்கு முன் ஒரு நாள் ஜீனியர் விகடனில் படித்தேன் இவர் ஏதோ மாந்திரீகம் அப்படி இப்படி என்று செய்வதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டதாக.

42 comments:

மயாதி said...

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமே , ஒரு கணக்கெடுப்பின் படி கள்ள வைத்தியர்களே பலமடங்கு அதிகமாக இருக்கிறார்கள், பயிற்றப் பட்ட வைத்தியர்களை விட...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒண்ணும் சொல்ரதுக்கு இல்லை..

பழமைபேசி said...

ப்ச்

♫சோம்பேறி♫ said...

அடக் கொடுமையே!

ஏழை விவசாயிகளிமுமா? :-(

Unknown said...

சிறு நகரங்களில் கூட மெடிக்கல் ஷாப்பில் உடல் கோளாறுகளுக்கு மருந்து வாங்கிச் செல்லும் பலர் இருக்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் சாதாரண உடல் கோளாறுகளுக்கு மருத்துவரிடம் செல்வதில்லை. அவர்களால் வீட்டு வைத்தியம் பார்த்து சரியாகத போது தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றி மருந்து கொடுக்கும் இவர்களை யார் கண்டிப்பது? கிராமத்தில் சென்று வேலை பார்க்க அன்பு மணி சொன்னால் போக மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்ன சொல்வது?

அது சரி(18185106603874041862) said...

மாரடைப்பு வர பல்வேறு காரணங்கள் உண்டு...சில வகை ஜீன்ஸினால் பரம்பரை பரம்பரையாக வருவது...எனக்கு தெரிந்து இதுவரை இதை குணப்படுத்த வழியில்லை...ப்ரீகாஷன் தான் உண்டு...

ஆனால் இதற்கு காரணமான ஜீன்ஸை இப்பொழுது பிரித்து கண்டறிந்து இருப்பதாக தெரிகிறது...இதை ம்யூடேட் செய்து பலமிழக்க செய்யமுடியுமா என்று தீவிர் ஆராய்ச்சி நடந்து வருகிறது...

எப்பொழுதோ படித்தது...முடிந்தால் லின்க் கண்டுபிடித்து இணைக்கிறேன்...

அது சரி(18185106603874041862) said...

//
இவரின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இரண்டு வருட காலம் மருத்துவம் செய்யவில்லை, அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சுரத்திற்கு ஊசி போட கூட ஆளில்லாமல் தவித்தபோதுதான் அவரின் அருமை புரிந்தது.
//

ஊருல இருக்க ஒரே வைத்தியருக்கும் நோய் வந்துட்டா அவர் எந்த வைத்தியருக்கிட்ட போய் வைத்தியம் பார்ப்பார்?? அதான் ரெண்டு வருஷம் ஆயிடுச்சி...:0)))

அது சரி(18185106603874041862) said...

குக்குக்குக்குக்கிராமத்திலருந்து வந்து, அமெரிக்கா போயி, குஜமுக பொதுச்செயலாளாராகி, இன்னிக்கி தமிழ்நாட்டையே கலக்குற பொதுச் செயலாளர் குடுகுடுப்பையாருக்கு ஒரு ஓ போடுங்கப்பா! :0)))

அப்படியே ஓட்டும் போடுங்க...இதுல கூடவா கஞ்சத்தனம்?? :0)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

குக்குக்குக்குக்கிராமத்திலருந்து வந்து, அமெரிக்கா போயி, குஜமுக பொதுச்செயலாளாராகி, இன்னிக்கி தமிழ்நாட்டையே கலக்குற பொதுச் செயலாளர் குடுகுடுப்பையாருக்கு ஒரு ஓ போடுங்கப்பா! :0)))

அப்படியே ஓட்டும் போடுங்க...இதுல கூடவா கஞ்சத்தனம்?? :0)))
June 29, 2009 3:33 PM //

தமிழ்மணத்தில நீங்க ஒரு ஓட்டு நான் ரெண்டு ஓட்டு, இதுக்கு மேல என்னா கஞ்சத்தனம்.

குடுகுடுப்பை said...

மயாதி said...

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமே , ஒரு கணக்கெடுப்பின் படி கள்ள வைத்தியர்களே பலமடங்கு அதிகமாக இருக்கிறார்கள், பயிற்றப் பட்ட வைத்தியர்களை விட...//

கனக்கெடுத்து என்ன பண்றாங்க? எதுக்கு கணக்கு எடுக்குறாங்க?

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

கனக்கெடுத்து என்ன பண்றாங்க? எதுக்கு கணக்கு எடுக்குறாங்க?

June 29, 2009 4:28 PM
//

தமிழ்நாட்ல மொத்தம் ஏழு லட்சத்து பதினாறாயிரத்த்து முன்னூத்து பதினேழு புள்ளி அஞ்சி டாக்டருங்க...அதுல எம்பிபிஎஸ் படிச்சவங்க ரெண்டு லட்சத்து முப்பத்தி மூனாயிரத்து அறுவத்தேழு...எம்.எஸ் படிச்சவங்க அறுவத்தேழாயிரத்து பத்தொம்பது...நாட்டு வைத்தியம் படிச்சவங்க ஒரு லட்சத்து இருவத்தி மூனாயிரத்து நூத்தி இருவத்தொன்னு...நாட்டு வைத்தியம் படிச்சதா சொல்லிக்கிறவங்க அம்பத்தேழாயிரத்து எரனூத்தி எழுவத்தி ஆறு...எழுதப்படிக்க தெரியாதவங்க ஒரு லட்சத்தி பதிமூனாயிரத்து ஐனூத்து அஞ்சி....கலைச்சேவைக்காக டாக்டர் பட்டம் வாங்குனவங்க மூனாயிரத்து நானுத்து அம்பத்தேழு...


Gapடன் படத்து கிளைமாக்ஸ் புள்ளி வெவரம்லாம் எங்கருந்து வருதுன்னு நினைக்கிறீங்க?? அதுக்குத் தான் :0)))

நட்புடன் ஜமால் said...

கூற்றின் படி, இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)\\


யப்பா! மக்கா!

பீதிய கிளப்புறியளே ...

குடுகுடுப்பை said...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஒண்ணும் சொல்ரதுக்கு இல்லை..//

குறை ஒன்றும் இல்லை ன்னு சொல்லிட்டீங்க உங்களுக்கு ரவா மாத்திரைக்கூட தேவைப்படாது

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

ப்ச்//

அடுத்த தொவையல் ஹீரோ நீங்கதான்

குடுகுடுப்பை said...

♫சோம்பேறி♫ said...

அடக் கொடுமையே!

ஏழை விவசாயிகளிமுமா? :-(//

ஏமாறும் அனைவரிடமும்

குடுகுடுப்பை said...

முகிலன் said...

சிறு நகரங்களில் கூட மெடிக்கல் ஷாப்பில் உடல் கோளாறுகளுக்கு மருந்து வாங்கிச் செல்லும் பலர் இருக்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் சாதாரண உடல் கோளாறுகளுக்கு மருத்துவரிடம் செல்வதில்லை. அவர்களால் வீட்டு வைத்தியம் பார்த்து சரியாகத போது தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றி மருந்து கொடுக்கும் இவர்களை யார் கண்டிப்பது? கிராமத்தில் சென்று வேலை பார்க்க அன்பு மணி சொன்னால் போக மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்ன சொல்வது?//

கிராமப்புற சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு புத்துயிர் கொடுக்க புது சிந்தனை தேவை.

மயாதி said...

குடுகுடுப்பை said...

கனக்கெடுத்து என்ன பண்றாங்க? எதுக்கு கணக்கு எடுக்குறாங்க?
//

என்ன தல இதெல்லாம் அரசியலில சகஜமப்பா!

இன்னொன்று தெரியுமோ, இந்திய நாடாளு மன்றில் குற்றப் பின்னணியோடு 22வீதம் உறுப்பினர்கள் இருப்பதாக கணக்கெடுத்து தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது..

அதுசரி, வெறுமனே கணக்கெடுத்து மானத்தை வாங்குவதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல்தான்..
ரகசிய முட்டாள்களாக கௌரவமாக வாழ்வோம்!

S.A. நவாஸுதீன் said...

அடப்பாவமே. ரொம்ப கொடுமையால்ல இருக்கு

ttpian said...

மஞ்சல் துண்டு மருந்து கடை:
தமிழன் ரத்தத்தை உரின்சி வாழும் ஈனப்பிரவி நான்:
எவன் வாழ்ந்தலும்/செத்தாலும்,நான்/எனது குடும்பம் வாழவேண்டும்:
அடிதொண்டயில் பேசி ஆளை ஏமாற்றுவேன்

Dr.ராம் said...

முகிலன் said...

சிறு நகரங்களில் கூட மெடிக்கல் ஷாப்பில் உடல் கோளாறுகளுக்கு மருந்து வாங்கிச் செல்லும் பலர் இருக்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் சாதாரண உடல் கோளாறுகளுக்கு மருத்துவரிடம் செல்வதில்லை. அவர்களால் வீட்டு வைத்தியம் பார்த்து சரியாகத போது தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றி மருந்து கொடுக்கும் இவர்களை யார் கண்டிப்பது? //

மன்னிக்கவும். இங்கு பேசப்பட்டு இருப்பது போலி டாக்டர்கள் பற்றியது. நீங்கள் ஏதோ mbbs படித்த டாக்டர்கள் கேப்ஸ்யுலில் ரவை போட்டு கொடுப்பது போல் தொனியில் கருது வெளியிட்டுள்ளீர்கள். எந்த அலோபதி டாக்டரும் சொந்தமாக மருந்துகளை செய்வதில்லை..

//கிராமத்தில் சென்று வேலை பார்க்க அன்பு மணி சொன்னால் போக மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்ன சொல்வது?//

கிராமத்தில் சென்று வேலை பார்க்க மாட்டோம் என்று டாக்டர்கள் போராட்டம் செய்யவில்லை..அரசு வேலை கொடுத்து கிராமத்திற்கு அனுப்புங்கள் என்றுதான் டாக்டர்கள் போராட்டம் செய்கின்றனர் ..அன்புமணி .அதற்கு பதிலாக 6000 or 8000 உதவித்தொகை மட்டுமே கொடுத்து mbbs சான்றிதழ் இல்லாமல் கிராமத்திற்கு போக சொல்வதைத்தான் டாக்டர்கள் எதிர்கிறார்கள் என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.

Dr.ராம் said...

பதிவர் அவர்கள் போலி மருத்துவர்களை பற்றிய இந்த பதிவில் mbbs படித்த டாக்டர்களை குறிப்பது போன்ற அர்த்தம் வருவதால் தலைப்பினை மாற்ற பரிசீலிக்க வேண்டும் ..பதிவின் நோக்கம் சிறந்தது.. நன்றி..

Thomas Ruban said...

//இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)\\

உப்புமா டாக்டர்.

குடுகுடுப்பை said...

ttpian said...

மஞ்சல் துண்டு மருந்து கடை:
தமிழன் ரத்தத்தை உரின்சி வாழும் ஈனப்பிரவி நான்:
எவன் வாழ்ந்தலும்/செத்தாலும்,நான்/எனது குடும்பம் வாழவேண்டும்:
அடிதொண்டயில் பேசி ஆளை ஏமாற்றுவேன்
///
பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் இங்கு தேவையா நண்பரே

குடுகுடுப்பை said...

ராம் said...

பதிவர் அவர்கள் போலி மருத்துவர்களை பற்றிய இந்த பதிவில் mbbs படித்த டாக்டர்களை குறிப்பது போன்ற அர்த்தம் வருவதால் தலைப்பினை மாற்ற பரிசீலிக்க வேண்டும் ..பதிவின் நோக்கம் சிறந்தது.. நன்றி..//

எனக்குத்தெரிந்து உங்களுக்கு மட்டும்தான் அப்படித்தோன்றி இருக்கிறது.கிராம மக்களுக்கு அவர்கள் டாக்டர்களே கிராமத்திற்கு மருத்துவச்சேவை கிடைக்கும் வரை. நான் mbbs மருத்துவர்களை குறை கூற மாட்டேன். ஒட்டு மொத்த சமூக/அரசியல் குறைபாடு அது.

Dr. சாரதி said...

ரெம்ப நல்ல இருக்கு......

குடுகுடுப்பை said...

Thomas Ruban said...

//இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)\\

உப்புமா டாக்டர்.
//
:))))))))))

Dr.ராம் said...

//எனக்குத்தெரிந்து உங்களுக்கு மட்டும்தான் அப்படித்தோன்றி இருக்கிறது.கிராம மக்களுக்கு அவர்கள் டாக்டர்களே கிராமத்திற்கு மருத்துவச்சேவை கிடைக்கும் வரை. நான் mbbs மருத்துவர்களை குறை கூற மாட்டேன். ஒட்டு மொத்த சமூக/அரசியல் குறைபாடு அது.//

உங்கள் நோக்கம் சரிதான் எனினும் தலைப்பை பார்த்து அரைகுறையாக புரிந்து கொள்பவர்களுக்கு...உண்மையான டாக்டர்களை திட்டுவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக கூடாது என்பதே என் எண்ணம்.. உதாரணம் முகிலனின் மறுமொழி..

குடுகுடுப்பை said...

ராம் said...

//எனக்குத்தெரிந்து உங்களுக்கு மட்டும்தான் அப்படித்தோன்றி இருக்கிறது.கிராம மக்களுக்கு அவர்கள் டாக்டர்களே கிராமத்திற்கு மருத்துவச்சேவை கிடைக்கும் வரை. நான் mbbs மருத்துவர்களை குறை கூற மாட்டேன். ஒட்டு மொத்த சமூக/அரசியல் குறைபாடு அது.//

உங்கள் நோக்கம் சரிதான் எனினும் தலைப்பை பார்த்து அரைகுறையாக புரிந்து கொள்பவர்களுக்கு...உண்மையான டாக்டர்களை திட்டுவதற்கு இதனை ஒரு வாய்ப்பாக கூடாது என்பதே என் எண்ணம்.. உதாரணம் முகிலனின் மறுமொழி..//

முகிலனின் புரிதலில் இந்த பதிவில் வருபவர்கள் யாரும் உண்மையான டாக்டர்கள் இல்லையென்று தெரிந்துதான் எழுதியிருக்கிறார். முந்திய பதிவின் அவரின் பின்னூட்டம் பார்க்கவும்.

தனியாக MBBS படித்த டாக்டர்கள் கிராமங்களில் இல்லாததால்தான் இந்த நிலை என்பதால் அவர்களின் அன்புமணி திட்ட எதிர்ப்பை சாடுகிறார்.

தனிப்பட்ட முறையில் அனைவரும் நல்ல வாய்ப்பு தேடுபவர்களே, அதனால் நான் டாக்டர்களை குறை கூற விரும்பவில்லை, கிராம நகர இடைவெளி குறைபாடு குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கிராமிய வேலை வாய்ப்பை டாக்டர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

Unknown said...

//Ram said..
முகிலன் said...

சிறு நகரங்களில் கூட மெடிக்கல் ஷாப்பில் உடல் கோளாறுகளுக்கு மருந்து வாங்கிச் செல்லும் பலர் இருக்கிறார்கள். கிராமத்தில் உள்ளவர்கள் சாதாரண உடல் கோளாறுகளுக்கு மருத்துவரிடம் செல்வதில்லை. அவர்களால் வீட்டு வைத்தியம் பார்த்து சரியாகத போது தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றி மருந்து கொடுக்கும் இவர்களை யார் கண்டிப்பது? //

மன்னிக்கவும். இங்கு பேசப்பட்டு இருப்பது போலி டாக்டர்கள் பற்றியது. நீங்கள் ஏதோ mbbs படித்த டாக்டர்கள் கேப்ஸ்யுலில் ரவை போட்டு கொடுப்பது போல் தொனியில் கருது வெளியிட்டுள்ளீர்கள். எந்த அலோபதி டாக்டரும் சொந்தமாக மருந்துகளை செய்வதில்லை..

//கிராமத்தில் சென்று வேலை பார்க்க அன்பு மணி சொன்னால் போக மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்ன சொல்வது?//

கிராமத்தில் சென்று வேலை பார்க்க மாட்டோம் என்று டாக்டர்கள் போராட்டம் செய்யவில்லை..அரசு வேலை கொடுத்து கிராமத்திற்கு அனுப்புங்கள் என்றுதான் டாக்டர்கள் போராட்டம் செய்கின்றனர் ..அன்புமணி .அதற்கு பதிலாக 6000 or 8000 உதவித்தொகை மட்டுமே கொடுத்து mbbs சான்றிதழ் இல்லாமல் கிராமத்திற்கு போக சொல்வதைத்தான் டாக்டர்கள் எதிர்கிறார்கள் என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.//

ராம் அவர்களே, இந்த பதிவில் சொல்லப்பட்டு இருப்பது போலி டாக்டர் களை மட்டுமே என்பதைப் புரிந்துதான் நான் பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். கிராம மக்களுக்கு அவர் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டரா இல்லை போலி டாக்டரா என்பது எல்லாம் தெரிந்திருப்பதில்லை. அவர் மூன்று ரூபாய் மட்டுமே வாங்கினாலும் கூட அவர்கள் அவ்வளவு எளிதில் மருத்துவரிடம் சென்று விட மாட்டார்கள். தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்தும் நோய் தீராத பட்சத்தில் தான் ஒரு மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றும் இந்த போலி டாக்டர்களைத் தான் நான் சாடுகிறேன். அதே நேரத்தில், சர்டிபிகேட் இல்லாமல் 6000, 8000 த்துக்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார் என்று போராட்டம் நடத்தும் இந்த "எம்.பி.பி.எஸ்" படித்த மருத்துவர்களை என்னால் மன்னிக்கவும் முடியாது. சர்டிபிகேட் கொடுத்து போக சொன்னால் மட்டும் போய் விட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள். எம்.சி.ஏ படிப்பில் ஆறு மாதம் industrial training இருப்பது போல ஆறு மாதம் கிராமப்புறங்களில் வேலை பார்த்தால் தான் சர்டிபிகேட் என்று சட்டம் கொண்டு வந்தாலும் தப்பில்லை. அப்படியாவது அப்பாவி கிராம மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். ரவை மாத்திரை சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ தேவலாம்.

Unknown said...

குடுகுடுப்பை said ...
// தனிப்பட்ட முறையில் அனைவரும் நல்ல வாய்ப்பு தேடுபவர்களே, அதனால் நான் டாக்டர்களை குறை கூற விரும்பவில்லை, கிராம நகர இடைவெளி குறைபாடு குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கிராமிய வேலை வாய்ப்பை டாக்டர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்வர். //

மற்ற தொழில்களுக்கும் மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவை தொழில் அல்ல. சேவை. சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த பணிக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது மற்ற தொழில்கள்? எந்த சாப்ட்வேர் இன்ஜிநீயரையும் யாரும் பார்த்து "அய்யா நீங்க தான் எங்க தெய்வம்" என்று சொல்வதில்லை. காசு வாங்கியே வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமானவுடன் மருத்துவர்களை நாம் தெய்வத்துக்கு சமமாக வைத்துப் பார்க்கிறோம். அப்படிப் பட்ட குடுப்பினை மற்ற தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பதில்லை. இந்த கோணத்தில் பார்த்தல் நல்ல வாய்ப்பு தேடுவது என்பது அடி பட்டு போய் விடுகிறது.

குடுகுடுப்பை said...

முகிலன் said...

குடுகுடுப்பை said ...
// தனிப்பட்ட முறையில் அனைவரும் நல்ல வாய்ப்பு தேடுபவர்களே, அதனால் நான் டாக்டர்களை குறை கூற விரும்பவில்லை, கிராம நகர இடைவெளி குறைபாடு குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கிராமிய வேலை வாய்ப்பை டாக்டர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்வர். //

மற்ற தொழில்களுக்கும் மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவை தொழில் அல்ல. சேவை. சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த பணிக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது மற்ற தொழில்கள்? எந்த சாப்ட்வேர் இன்ஜிநீயரையும் யாரும் பார்த்து "அய்யா நீங்க தான் எங்க தெய்வம்" என்று சொல்வதில்லை. காசு வாங்கியே வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமானவுடன் மருத்துவர்களை நாம் தெய்வத்துக்கு சமமாக வைத்துப் பார்க்கிறோம். அப்படிப் பட்ட குடுப்பினை மற்ற தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பதில்லை. இந்த கோணத்தில் பார்த்தல் நல்ல வாய்ப்பு தேடுவது என்பது அடி பட்டு போய் விடுகிறது.//

ராம், புருனோ சீக்கிரம் வாங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:) -:)))))

வில்லன் said...

படிக்கவே மனசு கணக்கு சார்.... MBBS படிச்சா எல்லாரும் கண்டிப்பா ஒரு வருஷம் கிராமத்துல சேவை செஞ்சே ஆகனும்னு கண்டிப்பா சட்டம் கொண்டு வந்தே தீரனும்....ஒரிசா பீகார் ரொம்ப மோசம். ஏன் நான் இருந்த NOIDA (டெல்லி பக்கம்) வே ரொம்ப மோசம். ஒரு கிலோமீட்டர் ரிச்சாவுல உயிரை குடுத்து கொண்டு போயி சேத்தா ரெண்டு ரூவா குடுக்க முக்காலா அழுவாங்க வடக்கூர் காரங்க... பாக்கவே பாவமா இருக்கும். நாங்க பத்து ரூவா கொடுப்போம். அதுக்கு கண்ணா பின்னானு கத்துவாங்க. தெக்கூர் காரங்க வந்து ரொம்ப கேடுகிறங்கன்னு ...

வில்லன் said...

//முகிலன் said...

ராம் அவர்களே, இந்த பதிவில் சொல்லப்பட்டு இருப்பது போலி டாக்டர் களை மட்டுமே என்பதைப் புரிந்துதான் நான் பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். கிராம மக்களுக்கு அவர் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டரா இல்லை போலி டாக்டரா என்பது எல்லாம் தெரிந்திருப்பதில்லை. அவர் மூன்று ரூபாய் மட்டுமே வாங்கினாலும் கூட அவர்கள் அவ்வளவு எளிதில் மருத்துவரிடம் சென்று விட மாட்டார்கள். தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து பார்த்தும் நோய் தீராத பட்சத்தில் தான் ஒரு மருத்துவரிடம் செல்கிறார்கள். அப்படி வருபவர்களை ஏமாற்றும் இந்த போலி டாக்டர்களைத் தான் நான் சாடுகிறேன். அதே நேரத்தில், சர்டிபிகேட் இல்லாமல் 6000, 8000 த்துக்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார் என்று போராட்டம் நடத்தும் இந்த "எம்.பி.பி.எஸ்" படித்த மருத்துவர்களை என்னால் மன்னிக்கவும் முடியாது. சர்டிபிகேட் கொடுத்து போக சொன்னால் மட்டும் போய் விட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள். எம்.சி.ஏ படிப்பில் ஆறு மாதம் industrial training இருப்பது போல ஆறு மாதம் கிராமப்புறங்களில் வேலை பார்த்தால் தான் சர்டிபிகேட் என்று சட்டம் கொண்டு வந்தாலும் தப்பில்லை. அப்படியாவது அப்பாவி கிராம மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். ரவை மாத்திரை சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ தேவலாம்.//


சரியான கருத்து... கண்டிப்பாக இந்த மாற்றம் தேவை சட்டத்தில்....

வில்லன் said...

//முகிலன் said...
மற்ற தொழில்களுக்கும் மருத்துவம், ஆசிரியர் போன்ற தொழில்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இவை தொழில் அல்ல. சேவை. சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த பணிக்கு வர வேண்டும். மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது மற்ற தொழில்கள்? எந்த சாப்ட்வேர் இன்ஜிநீயரையும் யாரும் பார்த்து "அய்யா நீங்க தான் எங்க தெய்வம்" என்று சொல்வதில்லை. காசு வாங்கியே வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமானவுடன் மருத்துவர்களை நாம் தெய்வத்துக்கு சமமாக வைத்துப் பார்க்கிறோம். அப்படிப் பட்ட குடுப்பினை மற்ற தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பதில்லை. இந்த கோணத்தில் பார்த்தல் நல்ல வாய்ப்பு தேடுவது என்பது அடி பட்டு போய் விடுகிறது.//

நூறு சதவிகிதம் உண்மை....... எனக்கு தெரிஞ்சி மருத்துவம், ஆசிரியர் மற்றும் போலீஸ் வேலை தொழில் அல்ல. சேவை..... சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தான் இந்த பணிக்கு வர வேண்டும்.

எங்க அப்பா அம்மா மொன்று அண்ணிகள் எல்லாரும் ஆசிரியர். எங்க அப்பாவுக்கு எவளவோ ஆசை நான் ஆசிரியர் ஆகனும்னு. ஆனா நான் சம்மதிக்கவே இல்லை. கூலி வேலை பாத்தாலும் பப்பேனே தவிர ஆசிரியர் வேலை பக்க மாட்டேன்னு... ஏன்னா ஆசிரியர் வேலை பாக்க ரொம்ப பொறுமை கனிவு எல்லாம் தேவை. அது எதுவுமே என்கிட்டே கெடையாது. ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு முன்மாதிரி.... அதுனால என்னோட கணக்குபடி ஆசிரியர் வேலைக்கு வருபவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஒழுங்கீனர்களாக இருந்தால் எப்படி மாணவர்கள் ஒழுக்கமாக வருவார்கள். யார் எப்படியோ எனக்கு விருப்பமே இல்லை அதினால ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்ப்பட்டது எனக்கு... அதேர்க்காக நான் வருத்தப்படவில்லை... ஆனால் எங்க அப்பாவே பின்பு ஒருநாள் சாகுறதுக்கு முன்னாடி அத பாராட்டினார்.....

Dr.ராம் said...

முகிலன் said...

//அதே நேரத்தில், சர்டிபிகேட் இல்லாமல் 6000, 8000 த்துக்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார் என்று போராட்டம் நடத்தும் இந்த "எம்.பி.பி.எஸ்" படித்த மருத்துவர்களை என்னால் மன்னிக்கவும் முடியாது. சர்டிபிகேட் கொடுத்து போக சொன்னால் மட்டும் போய் விட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்//


தவறான புரிதல்......tnpsc மூலம் டாக்டர்கள் தேர்வு கிராமங்களுக்கு என்றே எடுக்கப்படுகின்றது..அரசு அழைக்கும் 300 காலிஇடங்களுக்கு 3000 திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுதுகின்றனர்..இவர்கள் கிராமத்தில் வேலை செய்வோம் என்று தெரிந்துதான் ஆர்வத்துடன் அந்த தேர்வை எழுதுகின்றனர்..அதனால் போக மறுக்கின்றனர் என்பது தவறான குற்றச்சாட்டு..அரசு கட்டாய சேவைக்கு பதிலாக அவர்களுக்கு வேலை தந்து ஏன் கிராமத்திற்கு அனுப்ப கூடாது.? மேலும் இந்த திட்டம் தனியார் மருத்துவ கல்லோரிகளுக்கு பொருந்தாது( அங்குதான் அரசியவாதிகள், தொழிலதிபர்களின் பிள்ளைகள் பல லட்சம் நன்கொடை கொடுத்து படிக்கிறார்கள்)..அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்போர் பெரும்பாலோர் மத்திய தர வர்க்கத்தினர். .. அவர்கள் நல்ல ஊதியம் தந்தால் கிராமங்களுக்கு செல்ல தயாராகவே இருக்கின்றனர்.

Dr.ராம் said...

முகிலன் said...
//காசு வாங்கியே வைத்தியம் பார்த்தாலும் நோய் குணமானவுடன் மருத்துவர்களை நாம் தெய்வத்துக்கு சமமாக வைத்துப் பார்க்கிறோம். அப்படிப் பட்ட குடுப்பினை மற்ற தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்பதில்லை. இந்த கோணத்தில் பார்த்தல் நல்ல வாய்ப்பு தேடுவது என்பது அடி பட்டு போய் விடுகிறது.//

மன்னிக்கவும்.. இப்போது எந்த டாக்டரையும் மக்கள் கடவுளாக பார்ப்பதில்லை...காசே வாங்காமல் மருத்துவம் பார்த்தால் அவர் மேல் மக்களுக்கு நம்பிக்கை வருவதில்லை..நல்ல வாய்ப்பு என்பது மத்திய தர வர்க்கதிலிர்ந்தும், கிராமங்களில் இருந்தும் உருவாகும் மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் மட்டுமே..அதனை கொடுத்தால் இந்த வகையினர் எந்த கிராமங்களுக்கும் செல்ல தயாராகவே இருக்கின்றனர்.. அதனை அரசுதான் ஏற்படுத்தி தரவேண்டும்..

குடுகுடுப்பை said...
ராம், புருனோ சீக்கிரம் வாங்க..//

vanthachu thalaivare..

RAMYA said...

//
கூற்றின் படி, இவர் மாத்திரை கேப்சூலில் வெறும் ரவையை (நல்லவேளை வெறும் ரவை)
//

படிக்கவே ரொம்ப பயமாவகவும், பாவமாகவும் இருக்கு குடுகுடுப்பையாரே.

இந்த பதிவு முழுவதும் படிக்க படிக்க அந்த மூணு பேரையும் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ரெண்டாமவர் பரவாஇல்லை.

புருனோ Bruno said...

// கிராமத்தில் சென்று வேலை பார்க்க அன்பு மணி சொன்னால் போக மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்ன சொல்வது?
//
என்ன சொல்வதா
உண்மையை சொல்லுங்கள்

http://www.payanangal.in/2008/04/150.html

படித்தால் உங்களுக்கு உண்மை தெரியும்

புருனோ Bruno said...

//தனியாக MBBS படித்த டாக்டர்கள் கிராமங்களில் இல்லாததால்தான் இந்த நிலை என்பதால் அவர்களின் அன்புமணி திட்ட எதிர்ப்பை சாடுகிறார்.
//

http://www.payanangal.in/2008/04/150.html மற்றும் அதைத்தொடர்ந்த இடுகைகளை ஒரு முறை வாசித்தால் உங்களுக்கே உண்மை புரியும்

புருனோ Bruno said...

//அதே நேரத்தில், சர்டிபிகேட் இல்லாமல் 6000, 8000 த்துக்கு மருத்துவம் பார்க்க சொல்கிறார் என்று போராட்டம் நடத்தும் இந்த "எம்.பி.பி.எஸ்" படித்த மருத்துவர்களை என்னால் மன்னிக்கவும் முடியாது. சர்டிபிகேட் கொடுத்து போக சொன்னால் மட்டும் போய் விட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்//

5000 பேர் தயாராக இருக்கிறார்கள்

ஆதாரம் http://www.payanangal.in/2008/04/150.html உள்ளது

படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

//படிக்கவே மனசு கணக்கு சார்.... MBBS படிச்சா எல்லாரும் கண்டிப்பா ஒரு வருஷம் கிராமத்துல சேவை செஞ்சே ஆகனும்னு கண்டிப்பா சட்டம் கொண்டு வந்தே தீரனும்...//

ஏன் நீங்கள் வாழ்நாள் முழுக்க அவர்கள் வேலை செய்ய நிரந்திர வேலை அளிக்க வேண்டியது தானே